வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வீடு கட்டுவதற்கான பட்ஜெட் வீடு கட்டும் செலவுகளைச் சிக்கனமாக திட்டமிடுதல்

நீங்கள் உங்கள் கனவு வீட்டைப் கட்டிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பட்ஜெட்டை புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள்! கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்கள், கட்டுமான பட்ஜெட்டின் முக்கிய கூறுகள், மற்றும் உங்கள் பட்ஜெட்டிற்குள் கட்டுமானத்தை மேற்கொள்ள உதவும் நிபுணர்களின் சிறந்த ஆலோசனைகளை, எங்கள் விரிவான வழிகாட்டியில் கூறியுள்ளோம்.

Share:


உங்கள் கனவு வீட்டை கட்டுவது சிறந்த பயணமாக இருந்தாலும் , இதற்காக வரவு செலவுகளை திட்டமிடுவது மிகவும் அவசியம் உங்கள் ப்ராஜெக்ட் திட்டமிட்டபடி குறைந்த பட்ஜெட்டில் செயல்படுவதற்கு, சிறப்பான கட்டுமான பட்ஜெட் மிகவும் அவசியமானது. இந்தப் பதிவில், கட்டுமானத்தின் கட்டங்கள், கட்டுமான பட்ஜெட்டின் முக்கியத்துவம், கட்டுமான பட்ஜெட்டில் அடங்கும் கூறுகள், மற்றும் சில கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றைப் பற்றி பார்க்க போகிறோம். நீங்கள் புதிய வீட்டைக் கட்டுவதாக இருந்தாலும் பழைய வீட்டைப் புதுப்பிப்பதாக இருந்தாலும், அதை எந்த குழப்பமுமின்றி வெற்றிகரமாக கட்டி முடிப்பதற்கு, பட்ஜெட் பற்றி புரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

 

 



கட்டுமானத்தின் கட்டங்கள் மற்றும் மொத்த செலவின் சதவீதம்.



ஒரு சரியான கட்டுமான பட்ஜெட்டை உருவாக்க, கட்டுமானத்தின் பல கட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவை மொத்த செலவுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  கட்டுமான இடத்தை தயார் செய்தல், அடித்தளம் அமைத்தல், கட்டமைத்தல், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் வேலை, இன்டீரியர் வேலைகள், மற்றும் தோட்டம் அமைத்தல் இவையெல்லாம் கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டங்கள் ஆகும்.  மொத்த செலவிலிருந்து கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டத்துக்கும் சில சதவிகித செலவுகள் இருக்கும்.  உதாரணத்திற்கு , கட்டுமான இடத்தை தயார் செய்ய மொத்த பட்ஜெட்டிலிருந்து சுமார் 5% வரை செலவாகலாம், அதேசமயம், இன்டீரியர் வேலைகளுக்கு  25% அல்லது அதற்கு மேல் செலவாகலாம்.  இந்த சதவீதங்களைப் புரிந்துகொண்டால், வீடு கட்டுவதற்கு தேவையான செலவை பட்ஜெட் போட்டு ஒதுக்க முடியும்.  

 

 

கட்டுமான பட்ஜெட்டின் முக்கியத்துவம் 

சரியான முறையில் கட்டுமான பட்ஜெட் போதுவது ப்ராஜெக்டின் வெற்றிக்கு வழிவகுக்கும்.  கட்டுமான பட்ஜெட் ஏன் முக்கியம் என்பதற்கான சில காரணங்கள்: 

 

1. நிதியை திட்டமிடல் 

பட்ஜெட் போடுவதால் உங்கள் செலவுகளை திட்டமிட்டு, அதற்கேற்றப் பணத்தை ஒதுக்க முடியும்.   இதை வைத்து இலக்குகளை நிர்ணயிக்க முடியும். மேலும், அதிக செலவைத் தவிர்த்து, பணத்தை சரியாக ஒதுக்க முடியும். 

 

2.   தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்தல்

பட்ஜெட்டை போட்டுவிட்டால், உங்களுக்கு எது தேவை, எது விருப்பம் என்பதை முன் கூட்டியே முன்னிலைப்படுத்தலாம்.  இதன்மூலம் உங்கள் ப்ராஜெக்டின் முக்கிய பகுதிகளுக்கு பணத்தை ஒதுக்கீடு செய்து, மேற்கொண்ட விருப்பங்களை மேம்பாடுகளை முடிவெடுக்கலாம். 

 

3. செலவுகளைக் கட்டுப்படுத்தல் 

உங்கள் பட்ஜெட்டை கண்காணிப்பதன் மூலம், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, செலவை குறைக்கும் வாய்ப்புகளைக் கண்டறிந்து, கட்டுமானம் செய்யும்போது சரியாக முடிவெடுக்க முடியும். 

 

4. பணம் ரீதியான தவறுகளை தவிர்த்தல் 

பட்ஜெட்டை சரியாக போட்டுவிட்டால், எதிர்பாராத செலவுகளைத் தவிர்க்க முடியும்.   இதன்மூலம் கட்டுமானத்தின் போது ஏற்படக்கூடிய தற்செயல்களை முன்கூட்டியே திட்டமிட முடியும். 

 

 

கட்டுமான பட்ஜெட்டில் என்னவெல்லாம் அடங்கும்? 

 விரிவான கட்டுமான பட்ஜெட்டில், கட்டுமானத்தின் போது ஏற்படக்கூடிய அனைத்து செலவுகளும் அடங்கும்.  இவற்றில் அடங்குவது,

 

1. கட்டுமானப் பொருட்கள் 

மரம், கான்க்ரீட், வையரிங், ப்ளம்பிங், ஃப்லோரிங் போன்ற ப்ராஜட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களின் செலவும் இதில் அடங்கும். 

 

2.   தொழிலாளர்களின் கூலி 

கான்ட்ராக்டர்கள், சிறு கான்ட்ராக்டர்கள், திறமையான வேலைக்காரர்கள் அனைவருக்கான கூலியும் இந்த பட்ஜெட்டில் அடங்கும்.  ப்ராஜக்டின் அளவு மற்றும் இயல்பிற்கு ஏற்ப தொழிலாளர்கள் கூலி மாறுபடும். 

 

3. அனுமதிகள் மற்றும் கட்டணங்கள் 

கட்டுமான அனுமதிகள், ஆய்வு கட்டணங்கள், மற்றும் பிற சட்டரீதியான தேவைகளுக்கான செலவுகளும் பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டும். 

 

4. ஆர்க்கிடெக்டுக்கான கட்டணம் 

நீங்கள் ஆர்க்கிடெக்ட்டுடன் பணிபுரிந்தால், அவர்களது கட்டணங்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும். 

 

5.  கட்டுமானத் தளத்தினை தயார் செய்தல்  

கட்டுமானத் தளத்தை சுத்தப்படுத்துதல், கிரேடிங் செய்தல், மற்றும் தரை அமைப்பு போன்ற வேலைகளுக்கான செலவும் பட்ஜெட்டில் இணைக்கப்பட வேண்டும். 



6.  பயன்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு 

தண்ணீருக்கான வழி, மின்சாரம், வாயு, மற்றும் நீர் கழிவுகள் போன்றவற்றை இணைக்கும் செலவுகளையும் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும். 

 

7.  அவசர தேவைக்கான நிதி

கட்டுமானத்தின் போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகளுக்காக அவசர நிதியை ஒதுக்குதல் மிக முக்கியம். 

 

8.  காப்பீடு 

கட்டுமான ஆபத்து காப்பீடு மற்றும் பொறுப்பு காப்பீடு உங்களையும் உங்கள் ப்ராஜெக்டையும் பாதுகாக்க உதவும்.

 

9.  நிதியுதவியின் செலவுகள் 

கட்டுமான லோன் எடுத்திருந்தால், வட்டி செலவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டணங்களையும் பட்ஜெட் கணக்கில் சேர்க்க வேண்டும். 

 

10.  தோட்ட அமைப்பு 

தோட்டம், சாலை, மற்றும் வெளிப்புற அமைப்புகள் போன்றவற்றின் செலவுகலும் பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டும். 



சிறப்பான கட்டுமான பட்ஜெட், உங்கள் வீட்டுக் கட்டுமானத்தை வெற்றிகரமாக முடிக்க உதவும். அனைத்தையும் சீர்ப்படுத்தி, இலக்குகளை நிர்ணயித்து, சரியான முடிவுகளை எடுத்து செயல்பட இது மிகவும் உதவியாக இருக்கும். சரியாக நிதிகளை ஒதுக்கி, செலவுகளை கண்காணித்து வந்தால், போட்ட பட்ஜெட்டில் கட்டுமானத்தை சிறப்பாக முடிக்க முடியும். உங்கள் கனவு வீட்டைக் கட்டி முடிக்க, இந்த சிறந்த பட்ஜெட் தான் அடிப்படை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.




தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....