Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
"கட்டமைப்புப் பொறியாளர் என்பவர் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை டிசைன் செய்து, சரி பார்த்து கட்டுவதில் தொழில்முனைவர் ஆவார். இவர்கள், கற்றுக்கொண்ட கணிதம், இயற்பியல் மற்றும் பொறியியல் கொள்கைகளைப் பயன்படுத்தி, இந்த கட்டமைப்புகளின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வார்கள்.
ஆர்கிடெக்ட்ஸ், கான்ட்ராக்டர்கள் மற்றும் பிற தொழில்முறை நிபுணர்களுடன் இணைந்து வேலை செய்து, சரியான முறையில் கட்டிடங்களை அமைக்க டிசைன் செய்வார்கள். கட்டுமானத் துறையில் கட்டமைப்புப் பொறியியல் பல வகையான பயன்களை வழங்குகிறது, ஏனெனில் கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் இருக்கிறதா என்று இதன் மூலம் தான் உறுதி செய்ய முடியும். "
கட்டமைப்புப் பொறியாளரின் முதன்மையான பொறுப்புகளில் ஒன்று கட்டிடத்தின் கட்டமைப்புக் கூறுகளை டிசைன் செய்வதாகும். அந்த டிசைன் அனைத்து பாதுகாப்பு விதிகள், நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்து, கட்டமைப்பை நிலையாக நிற்க வைக்கிறதா, ஒருங்கினைக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள்.
நவீன ஸாஃப்ட்வேர்ஸ் மற்றும் பகுப்பாய்வு கருவிகளைப் பயன்படுத்தி சிக்கலான கட்டமைப்புக் கூறங்கள் மற்றும் பொருட்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் சரி பார்ப்பார்கள். வெவ்வேறு பலன்களுக்கும் விசைகளுக்கும் இந்த கட்டமைப்பு எப்படி செயல்படும் என்பதை கணக்கீடுகள் மற்றும் சிமுலேஷன்கள் மூலம் சரி பார்ப்பார்கள்.
கட்டுமானத்துறையில் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், கட்டமைப்புப் பொறியாளர்கள் தற்போதுள்ள கட்டுமானத்திலோ அல்லது முன்பே இருந்த கட்டமைப்பிலோ பாதுகாப்பு மதிப்பீடுகளைச் செய்வார்கள். கட்டமைப்பின் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்து, அது எப்போது பாதிக்கப்படும் என்ற விவரத்தையும், அதை சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் கொடுப்பார்கள்.
ஒரு கட்டுமானப் ப்ராஜெக்டிற்குத் தேவையான பொருட்களின் அளவையும் செலவுகளையும் மதிப்பீடு செய்வதில் கட்டமைப்புப் பொறியாளர்கள் திறமையானவர்கள். ப்ராஜெக்டின் விவரங்கள், பொருட்கள் எவ்வாறு இருக்கிறது, கட்டமைப்பின் தேவைகள் என்ன, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சரியான மதிப்பீடுகளைச் செய்து, கட்டமைப்புக்கான பட்ஜெட் போட்டு மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இவர்கள் உதவுகிறார்கள்.
"கட்டுமானம் நடக்கும் போது, அது கட்டுமான டிசைன் படி, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் விவரக்குறிப்புகளின் படி கட்டப்படுகிறதா என்பதை கட்டமைப்புப் பொறியாளர்கள் சரி பார்ப்பார்கள். அவர்கள் அடிக்கடி கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு சென்று கட்டுமானம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை கவனிப்பார்கள்."
கட்டமைப்புப் பொறியாளர்கள் ஆர்கிடெக்ட்ஸ், கான்ட்ராக்டர்கள் மற்றும் கட்டுமானச் செயல்முறையில் ஈடுபட்டுள்ள பிற தொழில்முறை நிபுணர்களுடன் இணைந்து வேலை செய்வார்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு திட்டத்தின் அழகையும் செயல்பாடையும் சமநிலைப்படுத்தி, கட்டுமானத்தின் பாதுகாப்பையும் வலிமையையும் உறுதிப்படுத்தும் டிசைன்களை உருவாக்குவார்கள்.
உங்கள் கட்டுமானப் ப்ராஜெக்டிற்கான சரியான கட்டமைப்புப் பொறியாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். சரியாக தேர்வு செய்வதற்கு சில டிப்ஸ்:
நீங்கள் மேற்கொள்ளும் ப்ராஜஜெக்டிற்கு ஏற்ற அனுபவமும், தேவையான கல்வித் தகுதியும் கொண்ட கட்டமைப்புப் பொறியாளரைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களுடைய கல்வி, தொழில்முறை சான்றுகள் மற்றும் முந்தைய ப்ராஜெக்ட்களின் அனுபவத்தை தெரிந்துக்கொள்ளவும்.
நீங்கள் தேர்வு செய்யும் கட்டமைப்புப் பொறியாளர், ஆர்கிடெக்ட்ஸ் மற்றும் கான்ட்ராக்டர்களுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக இருக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான ப்ராஜெக்டிற்கு நல்ல பேச்சு வார்த்தைகளும், ஒத்துழைப்பும் மிக முக்கியம்.
கட்டமைப்புப் பொறியாளருடன் ப்ராஜெக்டின் செலவுகள் மற்றும் பட்ஜெட் குறித்து பேச வேண்டும். அவர்களின் கட்டணங்கள் மற்றும் சேவைகளின் விரிவான விபரங்களைப் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். உங்கள் ப்ராஜெக்டுக்கான விலையும் நீதமாக இருக்க வேண்டும், அதே சமையம் தேர்வு செய்யும் கட்டமைப்பு பொறியாளரும் அனுபவசாலியாக இருக்க வேண்டும்.
கட்டமைப்புப் பொறியாளரின் தொழில்நுட்பத் திறனை சரி பார்க்க வேண்டும். புதிய ஸாஃப்ட்வேர்ஸ் மற்றும் பகுப்பாய்வு கருவிகள் பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். கொஞ்சம் கடினமான ப்ராஜெக்ட்கள் அல்லது புதுமையான ப்ராஜெக்ட்களுக்கு இது மிக மிக அவசியம்.
இந்த டிப்ஸை பயன்படுத்தி, சரியான முறையில் ஆய்வு செய்து , உங்கள் ப்ராஜெக்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் சரியான கட்டமைப்புப் பொறியாளரைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிவடையும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கட்டிடங்களின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவது கட்டமைப்புப் பொறியாளர்கள் தான். டிசைன் செய்வது, பகுப்பாய்வு செய்வது, பாதுகாப்பை சரிபார்ப்பது, குறைந்த விலையில் வேலையை முடிப்பது, போன்றவற்றை இவர்கள் தான் செய்வார்கள். டிசைன் செய்வது, பாதுகாப்பு மற்றும் கம்மி செலவில் ப்ராஜெக்டை முடிப்பதில் இந்த கட்டமைப்புப் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வீடு கட்டுவதில் ஆர்கிடெக்ட்கள் மற்றும் பொறியாளர்கள் எந்தளவு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.