Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence

Quality of home, will be

no.1, only when the

cement used is no.1


கண்ணோட்டம்

வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முயற்சியில், கட்டிடப் பொருட்கள் அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்குமாறு, அல்ட்ராடெக் சிமென்ட் அல்ட்ராடெக் கட்டிட தயாரிப்புகள் பிரிவை நிறுவியுள்ளது. அல்ட்ராடெக் கட்டிட தயாரிப்புகள் பிரிவு கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புத் தொழிலுக்குத் தொழில்நுட்ப ரீதியாக மறு வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

Image

விரைவான கட்டுமானத்திற்காக இன்று கட்டுமானத் தொழிலுக்கு மரபான தயாரிப்புகளை மட்டுமல்லாமல் மரபுவழி முறைகளையும் மாற்றும் தயாரிப்புகள் தேவைப்படுகின்றன. இந்த சவாலான தேவையை நிறைவுசெய்வதற்காக இது முழு கட்டுமானத் தேவைகளையும் உள்ளடக்கிய முழுமையான தீர்வுகளை அளிக்கிறது.

 

தயாரிப்பு வரம்பில் அடங்குவன: ஓடுகள், பசைகள் (டைல்ஃபிக்சோ-சிடி, டைல்ஃபிக்சோ-விடி, டைல்ஃபிக்சோ-என்டி மற்றும் டைல்ஃபிக்சோ-ஒய்டி), பழுதுபார்ப்பு தயாரிப்புகள் (மைக்ரோகிரீட் மற்றும் பேஸ்கிரீட்), நீர்க்கசிவுக் காப்பு தயாரிப்புகள் (சீல் & டிரை, ஃப்ளெக்ஸ், ஹைஃப்ளெக்ஸ் மற்றும் மைக்ரோஃபில்), தொழில்துறை மற்றும் துல்லிய புரைஅடைப்புகள் (பவர்கிரௌட் என்எஸ்1, என்எஸ் 2 மற்றும் என்எஸ்3), பிளாஸ்டர்கள் (ரெடிபிளாஸ்ட், சூப்பர் ஸ்டக்கோ), கொத்துவேலை தயாரிப்புகள் (ஃபிக்சோபிளாக்), இலகு ரக ஆட்டோகிளேவ்ட் ஏரேட்டட் கான்கிரீட் பிளாக் (எக்ஸ்ட்ராலைட்)



தயாரிப்பு வரம்பு



தயாரிப்பு வரம்பு



அல்ட்ராடெக் டைல்ஃபிக்ஸோ என்பது ஓடுகள், சுவர்கள் மற்றும் தளங்களுக்கு மேல் இயற்கைக் கற்களைப் பொருத்துவதற்காக, உயர் செயல்திறனும், உயர் வலிமையும் கொண்டு உருவாக்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட பாலிமர் மற்றும் சிமென்ட் அடிப்படையிலான உயர்தர பிசின். உட்புற மற்றும் வெளிப்புற, மெல்லிய சாந்து பயன்பாடுகளுக்கு ஏற்றது. வெவ்வேறு பயன்பாட்டிற்கான டைல்பிக்சோவின் நான்கு மாறுபட்ட வகைகள் உள்ளன. 


 

கான்கிரீட் அடித்தளத்தின் மேல் பெரும் அளவிலான தரைத்தளமிடும் தேவைகளுக்கும், சிறியதில் இருந்த நடுத்தரமான செங்குத்து பயன்பாடுகளுக்கும் பரிந்துரைக்கப்படும் தரம்வாய்ந்த பொது பயன்பாடுகளுக்கு ஏற்ற சிமென்ட் அடிப்படை ஓட்டுப் பிசின்கள்.

 

தரை மற்றும் சுவரில் கான்கிரீட் அடித்தளத்தின் மேல் பயன்படுத்துவதற்கான பெரிய படிவ வரம்பிலான விட்ரிஃபைட் மற்றும் பீங்கான் ஓடுகள் மற்றும் செராமிக், விட்ரிஃபைட், மொசைக் மற்றும் இயற்கைக் கல் போன்ற அடித்தளங்கள் மீது ஓடுகளை ஒட்டுவதற்கான பிரீமியம் மாற்றியமைக்கப்பட்ட பாலிமர் ஓட்டுப் பிசின்கள்.

 

கான்கிரீட்டின் மேல் செங்குத்து மற்றும் கிடைமட்ட பயன்பாடுகளுக்கும் பூசப்பட்ட பரப்புகளுக்கு செங்குத்து பயன்பாடுகளுக்கும் கிரானைட் மற்றும் பிற கற்கள் போன்ற பலவகை பெரும் அளவிலான இயற்கைக் கற்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஓட்டுப் பிசின்.

 

இத்தாலிய மற்றும் இந்திய பளிங்கு கல்லுக்கான கான்கிரீட் மீதான அடித்தளத்துக்கும் கல் மீது தரைத்தளம் இடுவதற்குமான பிரீமியம் வெள்ளை சிமென்ட் அடிப்படையிலான சிமென்ட் தன்மையுள்ள மாறியமைக்கப்பட்ட பாலிமர் ஓட்டுப் பிசின்.


பழுதுபார்ப்பும் கட்டமைப்பு வலிமையாக்கமும் தேவைப்படும் பலவீனமான தூண்கள், பீம்கள் மற்றும் மிகவும் ஓட்டை விழுந்த கூரைகளைப் பழுதுபார்க்க பாலிமர் செறிந்த அதிக உரம்வாய்ந்த பழுதுபார்ப்பு சாந்து மற்றும் நுண் கான்கிரீட்.


அல்ட்ராடெக் மைக்ரோகிரீட் என்பது, தூண்கள், விட்டங்கள் மற்றும் கான்கிரீட் ஸ்லாப் பழுதுபார்ப்புகளுக்கான நுண் கான்கிரீட் இடுதல் மற்றும் ஜாக்கெட்டிங் பயன்பாடுகளுக்கான பாலிமர் செறிவூட்டப்பட்ட சிமென்ட் அடிப்படையிலான உயர் செயல்திறன், உயர் வலிமை கொண்ட சுருங்காத உயர் தர நுண் கான்கிரீட் ஆகும். இது துரித மற்றும் நீடித்த பழுதுபார்ப்புக்கு ஏற்றது. சிறப்பு பாலிமர்கள், சேர்க்கைப் பொருட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரப்பிகளைப் பயன்படுத்தி இது உருவாக்கப்படுகிறது. அதிக அளவு பயன்பாடுகளுக்கு 8 மிமீ அளவு வரை கொண்ட கரடுமுரடான ஜல்லிகளைச் சேர்ப்பது சாத்தியமாகும். மைக்ரோகிரீட்டில் மூன்று மாறுபட்ட வகைகள் உள்ளன. 

மைக்ரோகிரீட் – ஹைச் எஸ் 1: 80 எம்பிஏ க்கான வடிவமைப்பு வலிமைக்கு; மைக்ரோகிரீட் – ஹைச் எஸ்2: 60 எம்பிஏ க்கான வடிவமைப்பு வலிமைக்கு; மைக்ரோகிரீட் – ஹைச் எஸ் 3: 40 எம்பிஏ க்கான வடிவமைப்பு வலிமைக்கு

அல்ட்ராடெக் பேஸ்கிரீட் என்பது ஒரு சிமென்டை அடிப்படையாகக் கொண்ட மாற்றியமைக்கப்பட்ட பாலிமரும் உயர் செயல்திறனும் முதலிலேயே குழைக்கப்பட்ட உயர் வலிமையும் உடைய சாந்து . அதிக வலிமை தேவைப்படும் வெளி மற்றும் உட்புற கட்டி பூச்சுக்காக செங்கல்/பிளாக் கட்டுதலில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமானது. பழைய மேற்பரப்பு பழுதுபார்ப்புக்கு மாற்றியமைக்கப்பட்ட பாலிமர் பழுதுபார்ப்பு சாந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம். நீச்சல் குளங்களின் உட்புறம், தண்ணீர்த்தொட்டிகள், அடிப்பகுதிகள் மற்றும் அடித்தளங்களுக்கு சிறந்தது. செங்குத்தான பரப்புகளில் தனித்துவமான/பெரிய அளவு ஓடுகளை ஒட்ட ஓட்டுப் பிசினுக்கு அடியில் தேவைப்படும் அளவுக்கு வலிமையான பூச்சை அளிக்க ஓட்டு பிசினுக்கு அடித்தள பூச்சு அமைக்கவும் பயன்படுத்தப்படலாம்.


உள் மற்றும் வெளிப்புற இடங்களில் தரை ஓடு பதிக்க அடியில் இடுவதற்கான பன்நோக்கு தரைத்தளங்கள். செங்கல் துண்டு கோபா பயன்பாடு இல்லாமல் மழை நீரை வடிப்பதற்கு நீர்க்காப்பு பொருட்களுக்கு மேல் ஒற்றை அல்லது இரட்டை பாகமாக கான்கிரீட் கூரையின் மேல் அதிக தடிமனுக்காக சரிவு அமைப்பதற்கு வலியுறுத்தி பரிந்துரைக்கப்படுகிறது.


அல்ட்ராடெக் ஃபுளோர்கிரீட் என்பது ஒரு சிமென்டை அடிப்படையாகக் கொண்ட மாற்றியமைக்கப்பட்ட பாலிமரும் உயர் செயல்திறனும் முதலிலேயே குழைக்கப்பட்ட உயர் வலிமையும் உடைய சாந்து. இது பன்னோக்கு தரைத்தள பயன்பாட்டுக்கென்றே உருவாக்கப்பட்டது. மாடிப்பகுதிகளில் நீர்க்காப்பு பூச்சுக்கு மேல் இறுதி சமன்படுத்தும் தளம், குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகக் கட்டிடங்கள், வணிக கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் ஆகியவற்றின் தரை, மற்றும் ஓட்டுப் பிசின் மற்றும் எபோக்சி/பியு மற்றும் சிறப்பு தரை அமைப்புகளில் அடித்தளம் ஆகியவற்றிற்குப் பொருத்தமானது.

ஃபுளோர்கிரீட்டில் மூன்று வேறுபட்ட வகைகள் உள்ளன. ஃபுளோர்கிரீட் ஹைச்எஸ் 1 – வடிவமைக்கப்பட்ட வலிமை எம்60 கொண்டது, ஃபுளோர்கிரீட் ஹைச்எஸ் 2 – வடிவமைக்கப்பட்ட வலிமை எம்40 கொண்டது, ஃபுளோர்கிரீட் ஹைச்எஸ் 3 – வடிவமைக்கப்பட்ட வலிமை எம்20 கொண்டது,


மட்டக் கூரை கான்கிரீட், சமையலறை பால்கனிகள், சஜ்ஜாக்கள், சாய்வு கூரைகள் மற்றும் குளியல் அறைகள், கால்வாய் லைனிங், நீச்சல் குளங்கள் ,நீர் தொட்டிகள் போன்ற ஈரமான பகுதிகளில் தேவைப்படும் பயன்பாட்டிற்கான ஒற்றை அல்லது இரட்டைக் கூறு அடித்தளமிடும் நீர்க்காப்புப் பொருட்களாக பாலிமர் / மாற்றியமைக்கப்பட்ட கோ பாலிமர் / அக்ரிலிக் / எஸ்.பி.ஆர் லேடெக்ஸ் சேர்க்கை போன்றவற்றின் பரந்துபட்ட வரம்பு.



இயந்திர அடித்தளம், முன்வார்ப்புக் கூறுகளை இணைத்தல், உயர் செயல்திறன் பாதுகாப்பு வால்ட்ஸ் போன்ற பரந்துபட்ட வகையான பயன்பாடுகளுக்கான விரிவாக்க முடியாத உயர் செயல்திறன் கொண்ட தொழில்துறை குழம்புகள்,


அடித்தள அடிப்படை தகடுகள், இயந்திர அடித்தளங்கள் மற்றும் அதிக ஆரம்ப வலிமையைக் கோரும் பாதுகாப்பு அறை மற்றும் பெட்டகத்துக்கான தடுப்புப் பொருளாக தளப்படுகைகளுக்கு 100 எம்பிஏ வடிவமைப்பு வலிமையுடன் மென்சாந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.

அடித்தள அடித்தகடுகள், இயந்திர அடித்தளங்கள் மற்றும் நுண் அடுக்குகள் மற்றும் அடுக்கு மூடிகள், ஷீர் வால் பாண்ட் பீம்கள், முன் வார்ப்புக் கூறுகளை பொருத்தவும் தாங்கவும், அதிக வலிமையுள்ள பாவும் பொருட்கள் மற்றும் தொகுதிகளை உற்பத்தி செய்ய 80 எம்பிஏ வடிவமைப்பு வலிமையுடன் சாந்துக் கூழிடலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

நுண் அடுக்குகள் மற்றும் அடுக்கு மூடிகள், ஷீர் வால் பாண்ட் பீம்கள், முன் வார்ப்புக் கூறுகளை பொருத்தவும் தாங்கவும், அதிக வலிமையுள்ள பாவும் பொருட்கள் மற்றும் தொகுதிகளை உற்பத்தி செய்ய,தண்டவாளங்கள், நங்கூரங்கள், இணைப்பிகள் போன்றவற்றைப் பொருத்த 60 எம்பிஏ வடிவமைப்பு வலிமையுடன் சாந்துக் கூழிடலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பவர் கிரவௌட் பிஜிஎம் என்பது பம்பால் இரைக்கக்கூடிய கன் தர சாந்து. கான்கிரீட்டில் கட்டுக் கம்பித் துளைகளை/ பிளவுத் துளைகளை, மிவன் ஷட்டரிங் செங்கல் கொத்துவேலை மற்றும் இயற்கை கற்களிளைக் கொண்டு நிரப்ப பயன்படுத்தலாம்.


உள் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கான மெல்லிய மற்றும் அடர்த்தியான பூச்சுப் பயன்பாட்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட பாலிமர் மேற்பரப்பு நேர்த்திக்கான பூச்சுக்கள்


அல்ட்ராடெக் ரெடிபிளஸ்ட் என்பது ஒரு தயார்நிலை கலவை சிமென்ட் பிளாஸ்டர் / உயர்தர பாலிமர் சேர்க்கைகளுடன் /கையால் பூசுவதற்கு ஏற்றவாறு நன்கு தரப்படுத்தப்பட்ட மணல் மற்றும் நிரப்பிகளுடன் அளிக்கப்படுகிறது. உள் மற்றும் வெளிப்புற சுவர்களில் பூச்சிற்கு இதைப் பயன்படுத்தலாம். இது செங்கல், பிளாக், கல் சுவர்கள் மற்றும் கான்கிரீட் மேற்பரப்புகளிலும் திறம்பட பயன்படுத்தப்படலாம். 15 மிமீ வரை அதிகபட்ச தடிமன் கொண்ட பூச்சுடன் நன்கு தயாரிக்கப்பட்ட சுவர்களுக்கு ஏற்றது.

அல்ட்ராடெக் சூப்பர் ஸ்டுக்கோ என்பது ஒரு தயார்நிலை கலவை சிமென்ட் அடிப்படையிலான பாலிமர் ஆகும். இது உயர் தரமான பாலிமர் சேர்க்கைகள், தரப்படுத்தப்பட்ட மணல் மற்றும் மெல்லிய பூச்சு/ கோட் பயன்பாடுகளுக்கான நிரப்பிகளுடன் இணைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட மேற்பரப்பு நேர்த்திப் பொருள்.


ஏஏசி பிளாக், சாம்பல் தூசி செங்கற்கள் மற்றும் கான்கிரீட் பிளாக்குகளுக்கான மெல்லிய பூச்சு இணைக்கும் பொருள்


அல்ட்ராடெக் ஃபிக்சோபிளாக் என்பது 3 மிமீ மெல்லிய படுகைப் பயன்பாடுகளுக்கான பன்பயன்பாட்டு மெல்லிய இணைக்கும் பொருளாகும். உகந்த பிசின் வலிமையுடன் பிளாக்குகளுக்கு இடையில் வலுவான, நீடித்த பிணைப்பை வழங்க இந்த சாந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

அல்ட்ராடெக் சூப்பர் ஸ்டுக்கோ என்பது ஒரு தயார்நிலை கலவை சிமென்ட் அடிப்படையிலான பாலிமர் ஆகும். இது உயர் தரமான பாலிமர் சேர்க்கைகள், தரப்படுத்தப்பட்ட மணல் மற்றும் மெல்லிய பூச்சு/ கோட் பயன்பாடுகளுக்கான நிரப்பிகளுடன் இணைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட மேற்பரப்பு நேர்த்திப் பொருள்.


கொத்துவேலைக் கட்டுமானத்திற்கான குறைந்த எடை பிளாக்


அல்ட்ராடெக் எக்ஸ்ட்ராலைட் என்பது ஒரு இலகுரக ஆட்டோகிளேவ் ஏரேட்டட் கான்கிரீட் பிளாக் ஆகும். சுண்ணாம்பு, சிமென்ட் மற்றும் சாம்பல்தூசி ஆகியவற்றின் விகிதாசார கலவையில் ரைசிங் ஏஜெண்டின் எதிர்வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது.

 

அல்ட்ராடெக் எக்ஸ்ட்ராலைட் என்பது ஒரு இலகுரக ஆட்டோகிளேவ் ஏரேட்டட் கான்கிரீட் பிளாக் ஆகும். சுண்ணாம்பு, சிமென்ட் மற்றும் சாம்பல்தூசி ஆகியவற்றின் விகிதாசார கலவையில் ரைசிங் ஏஜெண்டின் எதிர்வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது.

Loading....