Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
பூஜை அறைக்கான வாஸ்து மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் அவை முழு வீட்டின் ஆரா மற்றும் வாஸ்துவைத் தீர்மானிக்கிறது. வீட்டில் உள்ள பூஜை அறை தான் அந்த வீட்டின் நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்வுகளுக்கான மையப்பகுதியாகச் செயல்படுவதாகவும், அதனால் தான் உங்களின் வீட்டைக் கட்டும்போது பூஜை அறைக்கான வாஸ்துவைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் வாஸ்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
வீட்டில் நேர்மறையான மற்றும் அமைதியான ஆற்றல்களின் மையப்பகுதியாகப் பூஜை அறை செயல்படுகிறது, ஏனெனில் அது உங்கள் வீட்டில் உள்ள தெய்வங்கள் மூலமாகத் தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துகிறது. பெரிதாக அல்லது சிறியதாக இருந்தாலும் சரி, தெய்வங்களுக்காக ஒரு தனி இடத்தை ஒதுக்குவது அதாவது, ஒரு பூஜை அறையை அமைப்பது உங்கள் வீட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும், மேலும், சரியான வாஸ்து அமைதியான, நேர்மறையான ஆற்றலைக் கொண்டுவருவதிலும் உங்களின் வீட்டில் எந்த ஆற்றல் வெளிப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பூஜை அறை உங்களின் வீட்டில் நல்ல அதிர்வுகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தெய்வீக ஆற்றல்களுடன் நீங்கள் இணையவும் உதவுகிறது. வாஸ்து, உங்களின் வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கி, மகிழ்ச்சியும் நேர்மறைகளும் நிறைந்திருக்கச் செய்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் கோட்பாடுகளின்படி பூஜை அறைக்கான சரியான வாஸ்து மூலம் உங்கள் வீட்டில் நேர்மையான மற்றும் தெய்வீக ஆற்ற நிறைந்திருக்க உதவும் சில உதவிக்குறிப்புகள் பின்வருமாறு:
பூஜை அறைக்கான வாஸ்து படி, பூஜை அறையை அமைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு திசையும் சிறப்பான ஒன்றைக் குறிக்கிறது, இதனால் தான் பூஜை அறையை அமைக்கும் இடம் பூஜை அறைக்கான வாஸ்துவின் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
பூஜை அறை மிகவும் புனிதமானதாகும், அதை வாஸ்து படி வைப்பது வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதை உறுதி செய்யும். உங்களின் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், உங்களின் புனிதமான மற்றும் மகிழ்ச்சியான வீட்டில் எதிர்மறை ஆற்றல் இல்லாததை உறுதி செய்யவும் பூஜை அறைக்கான இந்த வாஸ்து உதவிக்குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றவும்.
உங்கள் வீட்டின் பிரதானக் கதவைச் சரியான இடத்தில் வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் நுழையும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி, எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்களின் வீட்டைப் பாதுகாக்கவும்.