Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
குளியலறை ஃப்ளோர் வாட்டர்ப்ரூஃபிங் என்பது தண்ணீரினால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் குளியலறை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படிநிலை ஆகும். இந்த படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குளியலறையின் நீண்ட ஆயுளை நீங்கள் உறுதி செய்யலாம்.
உண்மையான குளியலறை அல்லது டாய்லெட் வாட்டர்ப்ரூஃபிங் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், குளியலறையை முறையாகத் தயார் செய்வது அவசியமாகும். அடுத்த படிநிலைக்குச் செல்வதற்கு முன், ஏற்கனவே உள்ள ஃப்ளோரிங்கை நீக்கிவிட்டு, மேற்பரப்பு சுத்தமாகவும், உலர்வாகவும், எந்தவொரு குப்பையோ அல்லது அழுக்கோ இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்.
ஏற்ற வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியலைத் தேர்வு செய்வது உங்கள் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும். சந்தையில், வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேன்கள், லிக்விட் வாட்டர்ப்ரூஃபிங் காம்பவுண்ட்கள் மற்றும் சிமெண்ட் சார்ந்த பூச்சுகள் போன்ற பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட நன்மைகள் மற்றும் பயன்பாட்டு முறைகள் உள்ளன, எனவே உங்கள் குளியலறையின் தேவைகள் மற்றும் உங்கள் திறமைக்கு ஏற்ற வாட்டர்ப்ரூஃபிங் பூச்சைத் தேர்வு செய்வது அவசியமாகும்.
குளியலறை ஃப்ளோருடன் வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியல் நன்றாக ஒட்டிக்கொள்வதை உறுதி செய்ய பிரைமர் பூசுவது அவசியமாகும். பிரைமர், மேற்பரப்பு மற்றும் வாட்டர்ப்ரூஃபிங் லேயருக்கு இடையே பிணைப்பை உருவாக்கி, அதன் திறனை அதிகரிக்கிறது. பிரைமரைப் பூசும்போது உற்பத்தியாளரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அடுத்த செயல்முறைக்கு செல்வதற்கு முன் அதை முழுமையாக உலர அனுமதிக்கவும்.
ஃப்ளோர் மற்றும் சுவர்களுக்கு இடையிலான ஜாயிண்ட்கள் தண்ணீர் எளிதாக ஊடுருவக்கூடிய பகுதிகளாகும். நீங்கள் இந்த ஜாயிண்ட்களை நன்கு சீல் செய்ய வாட்டர்ப்ரூஃப் சீலண்ட் அல்லது டேப்பைப் பயன்படுத்த வேண்டும். மூலைகள் மற்றும் டிரைனேஜ் அல்லது பைப்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவை பொதுவாக நீர் கசிவு ஏற்படக்கூடிய பகுதிகள் ஆகும்.
குளியலறை வாட்டர்ப்ரூஃபிங் செயல்முறையை முடித்த பிறகு, அதன் திறனை உறுதி செய்வதற்காக தண்ணீர் சோதனையை மேற்கொள்வது அவசியமாகும். குளியலறை ஃப்ளோரில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் அதை அப்படியே விடவும். நீர் கசிவின் எதாவது அறிகுறிகள் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். எதாவது பிரச்சனைகள் இருந்தால், டைல்ஸ் அல்லது மற்ற ஃப்ளோர் கவரிங் இன்ஸ்டலேஷனுக்கு முன், பிரச்சனை உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, தேவையான பழுதுபார்த்தலை மேற்கொள்ள வேண்டும்.
குளியலறை வாட்டர்ப்ரூஃபிங் என்பது ஃப்ளோர் வாட்டர்ப்ரூஃபிங்கிற்கு இணையான முக்கியத்துவம் கொண்டதாகும். குளிப்பதினால் ஏற்படும் ஈரப்பதம் சுவர்களுக்குள் எளிதாகக் கசிந்து, பூஞ்சை வளர்ச்சி, பெயிண்ட் உரிதல் மற்றும் கட்டமைப்பு சேதத்திற்கு வழிவகுக்கலாம். உங்களின் குளியலறை சுவர்களைத் திறம்பட வாட்டர்ப்ரூஃப் செய்வதற்கு இந்த படிநிலைகளைப் பின்பற்றவும்:
ஏற்ற சுவர் வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியலைத் தேர்வு செய்வது வெற்றிகரமான முடிவைப் பெறுவதற்கு முக்கியமானதாகும். பொதுவாக இந்த நோக்கத்திற்காகப் வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன, இவை சுவர்களில் தண்ணீர் நுழைவதைத் தடுப்பதற்கான அரணை உருவாக்குகின்றன. தேர்வு செய்யப்பட்ட மெட்டீரியல் உங்கள் குளியலறையில் உள்ள சுவர் மேற்பரப்பு வகைக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஃப்ளோரைப் போலவே, சுவர் வாட்டர்ப்ரூஃபிங்கிலும் ப்ரைமரைப் பூசுவது அவசியமாகும். பிரைமர், சுவர் மேற்பரப்பில் வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியலை நன்றாக ஒட்ட அனுமதித்து, அதன் திறனை அதிகரிக்கிறது. பிரைமரைப் பூசுவதற்கு முன், சுவர்களை நன்றாகச் சுத்தம் செய்து, எதாவது விரிசல்கள் அல்லது துளைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்யவும்.
வாட்டர்ப்ரூஃப் பெயிண்ட் என்பது வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேனுக்கு மேல் பூசப்படக்கூடிய கூடுதல் பாதுகாப்பு லேயர் ஆகும். இந்த பெயிண்ட், தண்ணீருக்கு எதிரான துணை அரணாகச் செயல்பட்டு, சுவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. குளியலறை பயன்பாட்டிற்கென்று குளிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள உயர்தரமான வாட்டர்ப்ரூஃப் பெயிண்ட்டைத் தேர்வு செய்யவும்.
சுவர்களுக்கான குளியலறை வாட்டர்ப்ரூஃபிங் செயல்முறையை முடித்த பிறகு, நன்றாகச் சோதனை செய்து பார்க்கவும். சுவர்களின் மேல் தண்ணீர் தெளித்து, எதாவது தண்ணீர் கசிகிறதா என்று பார்க்கவும். மூலைகள், விளிம்புகள் மற்றும் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கவனம் செலுத்தவும், ஏனெனில் அவை பொதுவாக நீர் கசிவு ஏற்படக்கூடிய பகுதிகள் ஆகும். எதாவது கசிவு கண்டறியப்பட்டால், தேவையான பழுதுபார்த்தலை மேற்கொண்டு, சுவர்கள் முழுமையாக வாட்டர்ப்ரூஃப் ஆகும் வரை மீண்டும் மீண்டும் சோதனை செய்யவும்.
குளியலறை வாட்டர்ப்ரூஃபிங் என்பது சுகாதாரமான வீட்டு சூழலை ஊக்குவித்து, உங்கள் குளியலறையின் கட்டமைப்பு மற்றும் மேற்பரப்புகளைப் பாதுகாத்து, உங்கள் வீட்டின் ஒட்டுமொத்த மதிப்பைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான முதலீடு ஆகும். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றி குளியலறை சுவர்களை வாட்டர்ப்ரூஃபிங் செய்வதன் மூலம், வாட்டர்ப்ரூஃபிங் இரசாயனங்களைப் பயன்படுத்தி, தண்ணீரினால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் குளியலறையை நீங்கள் திறம்படப் பாதுகாத்து, உங்கள் குளியலறையை ஒரு சௌகரியமான மற்றும் செயல்படும் இடமாக மாற்றலாம். வாட்டர்ப்ரூஃபிங்குடன் சேர்த்து, உங்கள் வீட்டிற்கான இணக்கமான சுற்றுச்சூழலை உருவாக்க குளியலறை மற்றும் டாய்லெட்டிற்கான வாஸ்துவையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
ஆம், கசிவுகளால் ஏற்படும் நீர் சேதத்திற்கு எதிராக உங்கள் குளியலறைச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய டைல் போடுவதற்கு முன் உங்கள் குளியலறை ஃப்ளோரை வாட்டர்ப்ரூஃப் செய்வது அவசியமாகும்.
அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய, ஷவர், ஃப்ளோர்கள் மற்றும் சுவர்கள் உட்பட மொத்த குளியலறை பகுதியையும் வாட்டர்ப்ரூஃப் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த குளியலறை பகுதியையும் வாட்டர்ப்ரூஃப் செய்வது, சேதம் மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தண்ணீர் கசிவைத் தடுக்கிறது.
ஆம், தண்ணீரினால் ஏற்படும் சேதத்திற்கு எதிராக பாதுகாக்கவும், உங்கள் குளியலறையின் உறுதியைப் பராமரிக்கவும் குழாய்களைச் சுற்றி வாட்டர்ப்ரூஃப் செய்வது முக்கியமாகும். குழாய்களைச் சுற்றி சீல் செய்வது மேற்பரப்பில் தண்ணீர் ஊடுருவி சேதம் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
ஆம், ஏற்கனவே உள்ள குளியலறை டைல்ஸை வாட்டர்ப்ரூஃப் செய்ய முடியும். எனினும், மேற்பரப்பில் வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியல் சரியாக ஒட்டிக்கொள்வதை உறுதி செய்வதற்காக டைல்ஸை முறையாகச் சுத்தம் செய்து பழுது பார்க்க வேண்டும்.
குளியலறை வாட்டர்ப்ரூஃபிங்கின் திறனானது, பயன்படுத்தப்படும் வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியலின் வகை, தண்ணீர் படும் அளவு மற்றும் இன்ஸ்டலேஷனின் தரம் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்ததாகும். பொதுவாக, வாட்டர்ப்ரூஃபிங் அரணின் உறுதியை உறுதி செய்வதற்காக முறையான பராமரிப்பு மற்றும் ஆய்வு மூலம், இதன் திறன் 5-10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.