வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



மோர்டார் மற்றும் கான்கிரீட்டின் வேறுபாடு

இந்த முழுமையான வழிகாட்டியில், மோர்டார் மற்றும் கான்கிரீட்டின் முக்கிய வேறுபாடுகள், அவற்றின் சேர்மங்கள் முதல் பயன்பாடுகள் வரை, அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

Share:


மோர்டார் மற்றும் கான்கிரீட் இரண்டும் கட்டுமான உலகின் அடிப்படை பொருட்களாக விளங்குகின்றன, பல கட்டமைப்புகள் காலத்திற்கும் நிலைத்து நிற்க உதவுகின்றன. இவை சிமெண்டு, மண், நீர் மாதிரியான சில பொதுவான பொருட்களை பகிர்ந்து கொண்டாலும், இவற்றின் கூட்டமைப்பு, பயன்பாடுகள், மற்றும் அம்சங்கள் முற்றிலும் மாறுபடும். இந்த பதிவில், மோர்டார் மற்றும் கான்கிரீட்டின் அடிப்படை வேறுபாடுகளையும், அவை வலிமை, ஒருங்கிணைவு மற்றும் பயன்பாடுகளில் எப்படி வேறுபடுகின்றன என்பதையும் பார்க்கலாம். இதன்மூலம், செங்கல்கள் மற்றும் கற்களை அடுக்குவது முதல் வலுவான அடித்தளங்கள் மற்றும் பரந்த கட்டமைப்புகளை உருவாக்குவது வரை, எந்த கட்டுமான பணியில் எதை பயன்படுத்த வேண்டும் என்பதில் உங்களுக்கே தெளிவு கிடைக்கும்.

 

 


மோர்டார் என்றால் என்ன?



மோர்டார்  என்பது சிமெண்டு, மணல், மற்றும் நீரால் ஆன கலவை, இது கட்டுமானத்தில் செங்கல்களை அல்லது கற்களை இணைக்க பயன்படுகிறது.  கட்டுமானப் பொருள்களை  ஒன்று சேர்த்து, கட்டமைப்பை வலிமையானதாக மாற்றுவதே இதன் நோக்கம்.  மோர்டார்  மென்மையாக இருக்கும், அதனால், பல வடிவங்களுக்கும் அளவுகளுக்கு ஏற்ப இது பயன்படுத்தப்படும்.  பூசும் வேலைகளுக்கும் இதை பயன்படுத்தலாம். 

 

 

மோர்டரின் நன்மைகள் 

 

1) பாண்டிங் ஏஜன்ட்

செங்கல்கள் அல்லது கற்களுக்கு வலிமையான இணைப்பை மோர்டார்  வழங்குகிறது. 

 

2) நெகிழ்வுத்தன்மை

செங்கல்களின் அளவிலும் வடிவத்திலும் மாற்றங்கள் இருந்தால் அதற்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக் கொடுக்கிறது.

 

3) வானிலை தாங்கும்திறன்

மோசமான வானிலையை எதிர்த்து, நீர் புகுதலை தடுக்கிறது. 

 

4) செயல்திறன்

இந்த மோர்டாரை கலக்குவது மற்றும் பரப்புவது எளிதாக உள்ளதால், செங்கல் கட்டும் செயல்முறை மிகவும் எளிதாக இருக்கும். 

 

 

மோர்டாரின் பயன்பாடுகள் 

 

1)செங்கல் அல்லது கல் சுவர் கட்டுமானம் 

செங்கல்களை அல்லது கற்களை இணைத்து வலிமையான கட்டமைப்புகளை உருவாக்க மோர்டார்  பயன்படுத்தப்படுகிறது. 

 

2)பாயிண்டிங் மற்றும் பழுது சரிசெய்தல்

செங்கல்களுக்கிடையிலான இடைவெளியை நிரப்ப பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வலிமையும், வானிலை எதிர்ப்பும் கிடைக்கும். 

 

3) பிளாஸ்டர் பேஸ்

சுவரில் பிளாஸ்டருக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது, இதனால் பிளாஸ்டர் அல்லது பெயின்ட் நன்றாக ஒட்டும். 

 

4)ஜாயின்ட்களை மூடல்

குழாய்கள், வடிகால்கள் அல்லது பிற கட்டுமான பயன்பாடுகளில் உள்ள இணைப்புகளை மூடி, நீர்ப்புகுதலைத் தடுக்க உதவுகிறது. 

 

 

கான்கிரீட் என்றால் என்ன? 



கான்கிரீட் என்பது சிமெண்டு, மணல், ஜல்லிக்கல், மற்றும் நீரால் ஆன கலவை, இது வலிமையான உறுதியான கட்டுமானப் பொருளாகும். நேரம் போகப்போக,  இவை கடினமாக மாறும், கற்கள் போன்ற தன்மையை அடையும்.  வலிமையையும் பயன்பாடும் அதிகமாக இருப்பதால் இந்த கான்கிரீட்டை பல கட்டுமான ப்ராஜக்டுகளில் பயன் படுத்துகிறார்கள்.  எஃகு கம்பிகள் அல்லது நார்களுடன் பலப்படுத்தி, இதை இன்னும் பல்வேறு கட்டுமானங்களில் பயன்படுத்தலாம். 

 

 

கான்கிரீட்டின் நன்மைகள் 

 

1)அதிக வலிமை

கான்கிரீட் அதிக வலிமை கொண்டது. அதிக பாரம் இருக்கும் கட்டமைப்புகளில் இதைப் பயன்படுத்தலாம் 

 

2) ஆயுள்

கான்கிரீட் காலநிலை, நெருப்பு ஆகியவற்றை எதிர்ப்பதால், இது நீண்ட காலம் உறுதியுடன் இருக்கும்.  

 

3)பல்துறை பயன்பாடு

இதை வெவ்வேறு வடிவங்ககளில் வடிவமைக்கலாம், அந்தளவிற்கு கட்டுமானத்தில் வளைத்துக் கொடுக்கிறது. 

 

4) குறைந்த பராமரிப்பு

கான்கிரீட்டிற்கு குறைந்த பராமரிப்பு இருந்தால் போதும். அதனால் நேரம், பணம், முயற்சி இது அனைத்தையும் சேமிக்க முடியும். 

 

 

கான்கிரீட்டின் பயன்பாடுகள்

 

1)அடித்தளங்கள் மற்றும் ஸ்லாப்கள்:

அடித்தளங்கள் மற்றும் ஸ்லாப்களுக்கு கான்கிரீட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, இது கட்டிடங்களுக்கு வலிமையான அடித்தளத்தைக் கொடுக்கும்.  

 

2)நிலைகள், தூண்கள் மற்றும் சுவர்கள்

தூண்கள் மற்றும் சுவர்கள் போன்ற வலுவான கட்டுமானங்களுக்காக ரீயின்ஃபோர்ஸ்ட் கான்கிரீட்டை பயன் படுத்தலாம்.  

 

3) சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்

இது வலிமையாகவும் உறுதியாகவும் இருப்பதால், அதிக போக்குவரத்து நெரிசல்கள் இருக்கும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு இந்த கான்கிரீட்டை பயன்படுத்தலாம்.

 

4) பாலங்கள் மற்றும் அணைகள்

ரீயின்ஃபோர்ஸ்ட் கான்கிரீட் பெரிய கட்டமைப்புகளான பாலங்கள் மற்றும் அணைகள் கட்டவும் பயன் படுத்தப்படுகிறது. இது அதிக பாரத்தைத் தாங்கி, நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. 


மோர்டார் மற்றும் கான்கிரீட்



  மோர்ட்டர் கான்க்ரீட்
கூட்டமைப்பு சிமென்ட், மண் மற்றும் தண்ணீரால் உருவானது சிமென்ட், மண், ஜல்லி கற்கள் மற்றும் தண்ணீரால் உருவானது
வலிமை கான்க்ரீட் உடன் ஒப்பிடும் போது வலிமை குறைவு வலுவானது மற்றும் நீடித்து உழைக்கக் கூடியது
வளைத்துக் கொடுத்தல் செங்கல்/கல் அளவை பொருத்து பொருந்திக் கொள்ளும் இறுகி கடினமாகி கல் போன்று மாறிவிடும்
பயன்கள் செங்கல்/கல் பிணைப்பிற்கும், பிளாஸ்டரின் அடிக்கலவையாகவும் பயன்படுகிறது கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவற்றில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது
வேலைப்பாடுகள் எளிதாக பரவும் என்பதால், இடைவெளிகளை நிரப்ப பயன்படுத்தப்படுகிறது பல்வேறு வடிவங்களில் வார்ப்பெடுக்கலாம்
வானிலை எதிர்ப்பு வானிலையினை எதிர்த்து போராடக் கூடியது மோசமான வானிலை, அரிமானம் மற்றும் நெருப்பினை எதிர்த்து செயலாற்றும்
பராமரிப்பு தரம் மற்றும் வகையினை பொருத்து மாறுபடும் குறைவான பராமரிப்பே போதுமானது



 

சுருக்கமாக சொன்னால், சிறந்த வீட்டுக் கட்டுமானத்திற்கு மோர்டார் மற்றும் கான்கிரீட்டின் வேறுபாடு பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். செங்கல் மற்றும் கற்களை இணைக்க சிறந்த பாண்டிங் ஏஜண்டாக மோர்டார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கான்கிரீட் பல கட்டுமான ப்ராஜக்டுகளில் வலிமையையும் உறுதியையும் கொடுக்கிறது. கட்டுமானத்தின் போது, இவை இரண்டின் சிறப்பு அம்சங்களையும் பயன்பாடுகளையும் புரிந்துக் கொள்வதன் மூலம், ப்ராஜக்டை சிறப்பாக்க முடிக்க முடியும். மேலும், தரமான வீட்டைக் கட்டமைக்க முடியும்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....