வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிள் அமைப்பதற்கான சிறந்த திசைகள்

வாஸ்து விதிப்படி சரியான திசையில் படிக்கும் டேபிளை வைத்தால், அது மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வெற்றியைத் தரும் முக்கிய அம்சமாக இருக்கும். வாஸ்து ஆலோசனைகளுடன் உங்கள் படிக்கும் டேபிள் வைக்க சரியான திசையை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் கவனம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும்.

 

 

Share:


முக்கிய குறிப்புகள் 

 

  • வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிள் வைப்பதற்கான சிறந்த சிறந்த திசை உங்கள் அறையின் கிழக்கு அல்லது வடகிழக்குத் திசையாகும். இந்த இடத்தில் அதிகமான சூரிய ஒளியும் பாசிடிவ் எனர்ஜியும் இணைகிறது. இது கவனத்தை அதிகரித்து மனதில் தெளிவை ஏற்படுத்தும்.
 
  • படிக்கும் டேபிளை தெற்கு அல்லது தென்மேற்கு நோக்கி வைத்தால், நெகடிவ் எனர்ஜி ஈர்க்கப்பட வாய்ப்புகள் உண்டு. இது கவனத்தை சிதற வைக்கும். மேலும், கற்றல் திறனை குறைக்கக்கூடும். வாஸ்து விதிப்படி, உங்களின் படிக்கும் டேபிளை இந்த திசைகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
 
  • படிக்கும் பகுதிக்கு மேல், பீம்கள் அல்லது சேமிப்பு கேபினட்கள் எதுவும் இருக்க கூடாது. இது உங்களை படிக்க விடாமல் கவனத்தை சிதறடிக்கும்.  வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிள் இருக்கும் இடம், எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும்.


வாஸ்து விதிப்படி சரியான திசையில் உங்கள் படிப்பு பகுதியை அமைக்க வேண்டும். இது உங்கள் கவனம் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்க பெரிதும் உதவும். வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் தொன்மையான கட்டிடவியல் மற்றும் கலை, படிக்கும் டேபிளை வைப்பதற்கான சில குறிப்பிட்ட திசைகளை பரிந்துரைக்கிறது. இது பாசிடிவ் எனர்ஜியை ஈர்த்து உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும். வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிள் வைப்பதற்கான சிறந்த திசையைச் சரியான முறையில் அறிந்து கொள்ள இந்த வழிகாட்டி உதவுகிறது. இந்த கொள்கைகளுடன் உங்க படிப்பு பகுதி பொருந்துகிறதா என்பதையும் இந்த வழிகாட்டி எடுத்துரைக்கும்.

 

 


வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிளை வைக்க வேண்டிய திசை



நீங்கள் உங்கள் வீட்டில் படிப்பு பகுதியை அமைக்கிறீர்களா? வாஸ்து விதிப்படி சரியான திசையில் உங்களின் படிக்கும் டேபிளை அமைக்க வேண்டும்.  இந்த தொன்மையான அறிவியல், அந்த இடத்தில் பாசிடிவ் எனர்ஜியை நிரப்புகிறது. படிக்கும் டேபிள் வைப்பதற்கான சிறந்த திசைகளை ஆராயலாம். இது உங்கள் கவனத்தையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க உதவும்.

 

2. கிழக்கு

வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிள் வைக்க மிகவும் பரிந்துரைக்கப்படும் திசை கிழக்கு. இந்த திசை காலை நேர சூரிய ஒளியைப் பெறும். அதனால் இது படிக்கவும் எழுதவும் சரியான இடமாக இருக்கிறது.  இந்த வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிளை அமைக்கும் பொழுது, கல்வியில் வெற்றியையும் அறிவு வளர்ச்சியையும் பெற முடியும். 

 

3. வடக்கு

வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிளை வைக்க வடக்கு திசையைத் தேர்வு செய்யும்போது, அறிவு மற்றும் புத்திசாலித்தனம் ஊக்குவிக்கப்படுகிறது. வடக்கு திசையுடன் சம்பந்தப்பட்ட புதன் கிரகம் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. இதனால், வாஸ்து விதிப்படி வடக்கு திசையில் படிக்கும் டேபிளை அமைப்பது, மாணவர்களுக்கும் தொழில்முறை ஆட்களுக்கும் சிறந்ததாகும்.

 

4. வடகிழக்கு

வாஸ்து விதிப்படி, அமைதிக்காகப் படிக்கும் டேபிளை வடகிழக்கு திசையில் வைக்கச் சொல்லி  பரிந்துரைக்கப்படுகிறது. இது மற்றொரு சிறந்த திசையாகும். இது உங்கள் கவனம் மற்றும் மன தெளிவை பராமரிக்க உதவுகிறது. மேலும் ஒரு சீரான கற்றல் சூழலை உருவாக்குகிறது.

 

 உங்கள் இடத்திற்கு படிக்கும் டேபிளை வைக்க வாஸ்து விதிப்படி சிறந்த திசையைத் தேர்ந்தெடுங்கள். இது உங்களின் கவனத்தையும் கல்வி வெற்றியையும் அதிகரிக்க உதவும். இது உங்கள் உற்பத்தித்திறனை மட்டுமல்லாமல், படிக்கும் பகுதியில் பாசிடிவ் எனர்ஜியையும் செழிப்பையும் அதிகரிக்கும். 

 

 

படிக்கும் டேபிளுக்கான மற்ற வாஸ்து வழிகாட்டுதல்கள்



படிக்கும் பகுதியை வாஸ்து சாஸ்திர விதிகளின் கீழ் அமைப்பது, செயல்பாடு ஆற்றலை இவை இரண்டையும் ஒருங்கிணைக்கிறது. கவனத்தை அதிகரிக்கவும் பாசிடிவ் எனர்ஜியை வரவேற்கவும், உங்கள் படிக்கும் டேபிள் அமைப்பதற்கான சில வாஸ்து வழிகாட்டுதல்கள் இங்கே பார்ப்போம்:

 

1. சரியான வெளிச்சம்: இயற்கை வெளிச்சத்துடன் உங்களின் படிக்கும் பகுதி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் வாஸ்து விதிப்படி, உங்கள் படிக்கும் டேபிள் இருக்கும் பகுதியில் நேரடியாக நிழல்கள் விழக்கூடாது. சரியான சூரிய ஒளியைப் பெரும் வகையில், உங்களின் டேபிளை ஜன்னலுக்கு அருகில் வைக்க வேண்டும். ஆனால், சூரிய வெளிச்சம் நேரடியாக விழக்கூடாது.

 

2. சுவருக்கான சரியான நிறம்: நிறங்கள் மன நிலையிலும் எனர்ஜியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  வெள்ளை, வெளிர் பச்சை, க்ரீம் போன்ற வெளிர் நிறங்களை படிக்கும் அறைக்கு தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், அமைதியும், கவனமும் அதிகரிக்கும். மேலும், வாஸ்து விதிப்படி அமைக்கப்பட்ட படிக்கும் டேபிளின் திசையுடன் இது இனைந்து நல்ல கற்றல் சூழலை உருவாக்கும். 

 

3. டேபிளின் வடிவம்:  சதுரம் அல்லது செவ்வகம் போன்ற வடிவங்களில் படிக்கும் டேபிளை தேர்வு செய்ய வேண்டும். படிக்கும் டேபிளின் வாஸ்து திசை விதிமுறைகளின் படி, சீரற்ற வடிவம் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், கவனத்தை சிதைக்கும். 

 

4. அலமாரியின் அமைப்பு: புத்தகங்கள், மற்ற படிப்பு பொருட்களை வைக்க தேவைப்படும் அலமாரியை,  டேபிளின் இடப்புறம் அல்லது பின்னால் வைக்க வேண்டும்.  வாஸ்து விதிப்படி டேபிளின் இடத்திற்கு மேலே அலமாரிகளை வைக்க கூடாது, இது மன அழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்தும்.

 

5. கவன சிதறல்களை தவிர்க்க வேண்டும்: கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றிலிருந்து படிக்கும் டேபிளை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். ஏனெனில், இவை அடிக்கடி சத்தங்களையும் அசைவுகளையும் ஏற்படுத்தும். வாஸ்து விதிப்படி, டேபிளின் நிலைத்தன்மை மிக முக்கியம். இது கற்றலை இன்னும் ஊக்குவிக்கும்.

 

6. பொருட்களை சரியாக வைக்க வேண்டும் முக்கியமான பொருள்களை மட்டுமே படிக்கும் டேபிளில் வைக்க வேண்டும். வாஸ்து விதிப்படி, படிக்கும் டேபிள் குப்பையாக இருந்தால் எனெர்ஜி சீராக இருக்காது. கவனத்தையும் திறமையையும் அதிகப்படுத்த படிக்கும் டேபிளை சுத்தமாக வைக்க வேண்டும்.

 

7. நாற்காலியில் முதுகுக்கான ஆதரவு படிக்கும் நாற்காலியில் முதுக்கான ஆதரவு சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். உயர்ந்த முதுகு பகுதி இருக்கும் நாற்காலியை தேர்வு செய்ய வேண்டும். நிலைத்தன்மையைக் கொடுத்து, படிக்கும் டேபிளையும் வாஸ்து விதிப்படி அமைக்க உதவும்.


படிக்கும் டேபிளுக்கு சரியான திசையைத் தேர்வு செய்வதன் பலன்கள்



 

1. கவனமும் உற்பத்தித்திறனும் அதிகம் ஆகும். வாஸ்து படி படிக்கும் டேபிளுக்கு சரியான திசையை தேர்வு செய்யும்போது, பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கப்பட்டு, கவனமும் உற்பத்தி திறனும் அதிகமாகும்.

 

2. கவனமும் மனத்தெளிவும் மேம்படுத்தப்படும். சரியான திசை காஸ்மிக் எனர்ஜியுடன் தொடர்பு கொண்டிருக்கும். அதனால், கவனமும் மனத்தெளிவும் அதிகரிக்கும்

 

3. கவன சிதறல்கள் குறையும் படிக்கும் டேபிளை சரியான திசையில் அமைக்கும் போது கவன சிதறல்கள் குறைக்கப்பட்டு கற்றல் திறன் அதிகம் அஆகும்.

 

4. கல்வியில் செயல்திறன் மேம்படும் சரியான இடத்தில் படிக்கும் டேபிளை வைக்கும்பொழுது, கல்வி திறன் அதிகரிக்கும். மேலும் கற்றல் அனுபவம் சிறப்பாக இருக்கும்.

 

5. ஆதரவான சூழல் உருவாகும் வாஸ்து விதிப்படி அமைக்கும்போது, மாணவர்களுக்கம் தொழில்முறை ஆட்களுக்கும் அறிவும் படைப்பாற்றலும் அதிகரிக்கப்படும் ஒரு ஆதரவான சூழல் உருவாகிறது.



 

வாஸ்து விதிப்படி படிக்கும் டேபிளுக்கான சரியான திசையை தேர்வு செய்யும்போது, கவனம் மற்றும் உற்பத்தித்திறன் பெரிதும் பாதிக்கப்படும். கிழக்கு அல்லது வடக்கு பக்கம் படிக்கும் டேபிளை வைப்பது நல்லது. இந்த திசை, இயற்கை வெளிச்சத்தை கொடுத்து, கவனத்தை அதிகரித்து, நல்ல கற்றல் சூழலையும் உருவாக்கும். நினைவில் கொள்ளுங்கள், படிக்கும் டேபிளுக்கான வாஸ்து திசை, தொன்மையான ஞானத்துடன் இணைந்து, அதிக வெளிச்சத்தைப் பயன்படுத்தும் நுட்பங்களையும் கவனம் சிதறல்களை குறைப்பதையும் ஆதரிக்கிறது.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....