வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



M20 கான்கிரீட் விகிதத்தை புரிந்துக் கொள்ளுதல்: செயல்முறை மற்றும் பயன்பாட்டின் அடிப்படைகள்

உங்கள் கட்டுமான தேவைகளுக்காக சரியான M20 கான்கிரீட் கலவை விகிதத்தை கணக்கிடுவது எப்படி என்பதை இங்கு விரிவாகக் கூறியுள்ளோம். இதில் சிமெண்டு, மணல், மற்றும் கற்கள் பற்றிய அடிப்படைகளை தெளிவாகக் காணலாம்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • M20 கான்கிரீட் கலவையில்  நீண்ட காலம் நீடிப்பு, செலவின் சேமிப்பு, மற்றும் வலிமை ஆகியவை இருப்பதால், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் நடைபாதைகளை கட்டுவதற்கு சிறந்ததாக அமைகிறது.
 
  • M20 தர நிலை கான்கிரீட்டுக்கான கலவையின் விகிதம் 1 பங்கு சிமெண்டு, 1.5 பங்குகள் மணல் மற்றும் 3 பங்குகள் கற்கள் ஆகும். இந்த விகிதம், 28 நாட்கள் கியூரிங் செய்யப்பட்ட பின் 20 மெகாபாஸ்கல் (MPa) அளவு வலிமை சக்தியை பெறும்.
 
  • தவறில்லாத அளவீடுகள் மற்றும் பொருட்களின் சரியான கலவை M20 கான்கிரீட் கலவையை சரியாக பெற வைக்கிறது.
 
  • M20 கான்கிரீட்டின் சரியான கணக்கீடு கட்டிடங்களின் கட்டுமானச் சக்தியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது.
 
  • M20 கான்கிரீட் குடியிருப்பு கட்டுமானங்கள், நடைபாதைகள், கார்கள் செல்லும் வழிகள் மற்றும் சுமை தாங்கும் தொழில்துறை தளங்கள் ஆகிய கட்டுமானகளுக்கு பயன்படுத்தப்படும்..
 
  • கட்டுமான ப்ராஜெக்ட்களின் நீண்ட ஆயுளையும் தரத்தையும் உறுதிசெய்ய, கட்டட அமைப்பாளர் மற்றும் காண்ட்ராக்டர்களுக்கு M20 கான்கிரீட் விகிதத்தைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை.


சரியான கான்கிரீட் கலவை விகிதத்தைப் பயன்படுத்தினால் நம்பகமான மற்றும் நீடித்த கட்டிடங்களை கட்ட முடியும். M20 கான்கிரீட் கலவை, அதன் சீரான நீடித்துழைப்பு, மலிவான விலை மற்றும் வலிமையின் காரணங்களால், குடியிருப்புகள் மற்றும் நடைபாதைகள் கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கான்கிரீட்டின் பல்வேறு தரங்களில், M20 தரங்கள் பொதுவாக குடியிருப்பு கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வலிமை தேவைப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பதிவில், M20 கான்கிரீட் விகித கணக்கீடு, M20 கான்கிரீட் கலவை விகிதம் மற்றும் M20 கான்கிரீட்டுக்குத் தேவையான சிமெண்டின் அளவைப் பற்றி விவரிக்கிறோம். இதில் 1 கன மீட்டருக்கான M20 கான்கிரீட்டின் துல்லியமான கலவையை அறிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் கட்டுமானத் ப்ராஜெக்டின் வலிமை மற்றும் நீடித்த தன்மைக்கு தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்ய முடியும்.

 

 


M20 கான்கிரீட் கலவை விகிதம் என்றால் என்ன?



M20 கான்கிரீட் கலவை விகிதம் என்பது சிமெண்டு, மணல், கற்கள் மற்றும் தண்ணீரின் கலவை விகிதத்தை முடிவு செய்யும் ஃபார்முலா ஆகும். இது வலிமை கொண்ட கட்டுமான வேலைகளுக்குத் தேவையான வலுவான மற்றும் நிலையான கான்கிரீட் கலவையை உருவாக்க உதவுகிறது. M20 இல் "M" என்பதன் அர்த்தம் "Mix" (கலவை), 20 என்பது 28 நாட்களுக்குப் பிறகு MPa (Megapascals) இல் அளவிடப்படும் கான்கிரீட் கலவையின் அழுத்த வலிமையைக் குறிக்கிறது. M20 கான்கிரீட் விகிதத்தை கணக்கிட்டால் சிமெண்டு, மணல், கற்கள் மற்றும் தண்ணீரின் சரியான அளவுகளை கண்டறிந்து, இந்த வலுவை அடைய உதவும். குறிப்பாக, M20 தர நிலை கான்கிரீட்டின் கலவை விகிதம் 1:1.5:3 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்க்கு பொருள், ஒவ்வொரு பங்குச் சிமெண்டிற்கும் 1.5 பங்குகள் மணலும் 3 பங்குகள் கற்களும் சேர்க்கப்படுகின்றன. இதன் முடிவாக, 28 நாட்கள் கியூரிங் செய்த பிறகு, 20 மெகாபாஸ்கல் (MPa) அழுத்த சக்தியை அடையும் ஒரு கான்கிரீட் கலவையும் கிடைக்கும்.அது குடியிருப்பு கட்டுமானங்கள், நடைபாதைகள் மற்றும் வலிமை தேவைப்படும் மற்ற கட்டமைப்புகளுக்கு ஏற்றதாக அமைகிறது. M20 கான்கிரீட் விகித கணக்கீட்டை புரிந்துகொண்டால், உங்கள் கட்டுமான திட்டங்கள் வலிமையுடன் காலத்திற்கும் நீடித்து நிற்கும்.


1 கன மீட்டருக்கான M20 கான்கிரீட் கலவையை எப்படி தயாரிப்பது?

M20 கான்கிரீட்டைத் தயாரிக்க துல்லியமான அளவீடுகளும், பொருட்களின் சரியான புரிதலும் தேவை. M20 கலவை விகிதமான 1:1.5:3 (சிமெண்டு: மணல்: கற்கள்) சரியான வேலைத்திறன் மற்றும் வலிமையைச் சமநிலைப்படுத்த உதவுகிறது. இது வலிமையான பயன்பாடுகள் தேவைப்படும் கட்டிடங்களுக்கு ஏற்றது. 1 கன மீட்டர் அளவுக்கு கான்கிரீட்டை திறம்பட கலப்பதற்கான எளிய வழிகாட்டிகள்:

 

1. விகிதத்தைப் புரிந்துகொள்ளுதல்:

M20 கான்கிரீட்டின் கலவை விகிதம் 1:1.5:3 ஆகும். இதற்க்கு ஒவ்வொரு பங்கு சிமெண்டிற்கும் 1.5 பங்குகள் மணலும் 3 பங்குகள் கற்களும் சேர்க்கப்படுகின்றன. இந்த விகிதம், 28 நாட்கள் கியூரிங் செய்த பிறகு 20 MPa அழுத்த சக்தியை அடைய உதவுகிறது.

 

2. பொருட்களை கணக்கீடு செய்வது: 

அ) சிமெண்ட்: M20 கான்கிரீட்டின் 1 கன மீட்டருக்குத் தேவையான சிமெண்ட் அளவு விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சிமெண்டின் நிலையான எடையை (1440 kg/m³) கருத்தில் கொண்டு பார்த்தால் சுமார் 8 மூட்டைகள் சிமெண்டு தேவைப்படுகின்டறன.

 

ஆ) மணல்: விகிதத்தின் அடிப்படையில், சிமெண்டின் அளவிற்கு 1.5 மடங்கு மணல் தேவைப்படும்.  இதற்கான கணக்கீடு சுமார் 0.42 m³ மணல் ஆகும்

 

 இ) கற்கள்: விகிதத்தில் 3:1 என்ற பங்கின்படி, கான்கிரீட்டின்  ஒவ்வொரு கன மீட்டருக்கு சுமார் 0.84 m³ கற்கள் தேவைப்படும். 

 

3. கலவை செயல்முறை

ஒரு சீரான நிறத்தை அடையும் வரை சிமெண்ட், மணல் மற்றும் கற்களை ஒன்றாக உலர்த்தி கலக்கவும். படிப்படியாக தண்ணீரைச் சேர்த்து, கான்கிரீட் வேலை செய்யக்கூடிய நிலைத்தன்மையை அடையும் வரை தொடர்ந்து கலக்கவும். தண்ணீரின் அளவு முக்கியமானது; அதிகமாக இருந்தால் கான்கிரீட் பலவீனமாகும், குறைவாக இருந்தால் கலவையை கையாள முடியாத அளவுக்கு கெட்டியாகி விடும்.

 

4. தரம் மற்றும் நிலைத்தன்மை:

 கலவையின் தரத்தைச் சீராக வைத்திருக்க, பொருட்கள் நன்றாக சீராக்கப்பட்டு, குப்பைகளின்றி இருக்க வேண்டும். கலவை செயல்முறையின் சீரானநிலையானது M20 கான்கிரீட்டின் வலிமையையும் நீடித்தன்மையையும் அதிகரிக்க உதவும்.


M20 கான்கிரீட் விகிதக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது?

M20 கான்கிரீட்டின் விகித கணக்கீடு, கட்டிட கட்டுமானத் திட்டங்களின் நிலைத்தன்மையையும் சக்தியையும் உறுதி செய்ய முக்கியமானது. 20 MPa அழுத்த வலிமையுடன் கான்கிரீட் கலவையை அடைவதற்கு, சரியான அளவில் சிமெண்ட், மணல்,கற்கள் மற்றும் நீர் ஆகியவற்றை தீர்மானிப்பதில் இந்த செயல்முறை உறுதி செய்கிறது. 1 கன மீட்டருக்கான M20 கான்கிரீட் உலர் கலவை பெற ஒவ்வொரு பொருளுக்கும் சரியான அளவைக் கணக்கிடும் எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்:

 

1) சிமெண்டின் எடையைத் தீர்மானிக்கவும்

M20 தர கான்கிரீட்டில், சிமெண்டு விகிதம் முக்கியமானதாகும். தேவையான நீர்-சிமெண்ட் விகிதத்தை பராமரிக்க, சிமெண்டின் எடையை துல்லியமாக கணக்கிடுவது அவசியம். 1:1.5:3 என்ற கலவை விகிதத்தின்படி, சுமார் 8 மூட்டைகள் சிமெண்டு தேவைப்படும். ஒரு மூட்டை சிமெண்டு (50 கிலோ) இவை சுமார் 0.0347 கன மீட்டர்களை உள்ளடக்கும். சரியான கலவை நிலைத்தன்மையையும் சக்தியையும் அடைய உதவுகிறது. இது  கட்டுமானத்திற்கும் உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது.

 

2) மணலின் எடையைத் தீர்மானிக்கவும்.

காங்கிரீட் கலவையில் மணல் மிகவும் அவசியமான கலவை. இது கரடுமுரடான கலவைகளுக்கு இடையே உள்ள வெற்றிடங்களை நிரப்பி கலவையின் வேலைத்திறன் மற்றும் வலிமையை உயர்த்துகிறது. M20 கலவைக்கு, சிமெண்டின் அளவில் இருந்து 1.5 மடங்கு மணல் தேவைப்படும். இதற்கான கணக்கீடு சுமார் 0.42 கன மீட்டர் மணல் ஆகும். மணலைத் துல்லியமாகக் கணக்கிடுவதால், கான்கிரீட் கலவை நன்றாக வேலை செய்யும் வகையில் உறுதி செய்ய முடியும். இதன் விளைவாக கட்டிடத்தின் இறுதி அழுத்த வலிமைக்கு பங்களிப்பை அளிக்கிறது.

 

3) கற்களின் எடையைத் தீர்மானிக்கவும்

பெரிய கற்கள் கான்கிரீட் கலவைகளில் பெரும் பங்காற்றுகின்றன. இது கலவையின் வலிமை, நிலைத்தன்மை மற்றும் வெப்ப குணாதிசயங்களை அதிகரிக்க உதவுகிறது. M20 கான்கிரீட்டிற்கு, சிமெண்ட்  அளவிலிருந்து மூன்று மடங்கு கற்கள் தேவைப்படும். இது 1 கன மீட்டருக்கு சுமார் 0.84 கன மீட்டர் ஆகும். உயர்தரமான கற்களைத் தேர்வு செய்வதும், அவற்றின் அளவுகளைத் துல்லியமாகக் கணக்கிடுவதும், M20 கான்கிரீட் கலவை தரத்தைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானது.

 

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, M20 கான்கிரீட் விகிதத்தை சரியாகக் கணக்கிட்டால், கட்டுமான வேலைகளில் தரமும் நிலைத்தன்மையும் உறுதியாக இருக்கும்.


M20 கான்கிரீட்டின் பயன்பாடுகள் என்ன?



M20 கான்கிரீட்டின் கலவை விகிதம் பல்வேறு கட்டுமானத் ப்ராஜெக்ட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது வலிமையையும் நீண்ட ஆயுளையும் கொண்ட கட்டமைப்புகளை  வழங்குகிறது. எம்20 கான்கிரீட்டின் பயன்பாடுகள் 

 

1. குடியிருப்பு கட்டிடங்கள்

எம்20 கான்கிரீட் கலவை விகிதம் பல்வேறு கட்டுமான வேலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பீம்கள், நெடுவரிசைகள், அடித்தளங்கள் மற்றும் ஸ்லாப்கள் போன்ற வீடுகளின் கட்டமைப்பு கூறுகளை உருவாக்க இது சிறந்தது. M20 கான்கிரீட்டின் அழுத்தம் வலிமையானது. இது வீட்டிற்கு நீடித்த பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. எனவே இது கட்டிடத் தொழிலாளர்களும் வீட்டு உரிமையாளர்களும்  விரும்பும் தேர்வாக உள்ளது.

 

2. நடைப்பாதைகள்

M20 கான்கிரீட்டின் வலிமை மற்றும் நிலைத்தன்மையின் காரணத்தினால், இதை நடைப்பாதைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இது போக்குவரத்து மற்றும் வானிலை நிலைகளைத் தாங்கி பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றதாக அமைந்து, நீண்ட காலம் உழைத்து நிற்கிறது. மேலும், இதுக்கு குறைந்தபட்ச பராமரிப்பே போதுமானது.

 

3. டிரைவ்வேக்கள்

M20 கான்கிரீட் டிரைவ்வேக்களுக்கு திடமான மற்றும் நீடித்த மேற்பரப்பை வழங்குகிறது. இது வாகனங்களை தாங்குவதோடு தினசரி பயன்பாட்டிலிருந்து உண்டாகும்  தேய்மானம் மற்றும் விரிசல்களை எதிர்க்கும்.

 

4. தோட்டப் பாதைகள்:

தோட்ட பாதைகளுக்கு வலிமையான மேற்பரப்பு தேவைப்படும். இதற்கு M20 கான்கிரீட் சிறந்த தேர்வாகும். இது செயல்திறன் மற்றும் அழகிய தோற்றத்தை வழங்குகிறது.

 

5. லேசான வேலைகள் நடக்கும் தொழில்துறை தளங்கள்:

அதிக பாரங்கள் இயக்கப்படாத தொழிற்சாலைகளில், M20 கான்கிரீட் கலவை விகிதத்தை பயன்படுத்தி, லேசான இயந்திரங்கள் மற்றும் நடமாட்டம் போன்றவற்றுக்கான தளங்களை உருவாக்கலாம்.



 

M20 கான்கிரீட் கலவை விகிதத்தைப் பற்றி புரிந்துக் கொண்டால், பல்வேறு கட்டுமான ப்ராஜெக்ட்களின் நீடித்ததன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த முடியும். இது மிதமான வலிமை தேவைப்படும் பயன்பாடுகளுக்கு சிறந்தது. குறிப்பாக குடியிருப்பு கட்டிடங்கள், பாதைகள், டிரைவ்வேக்கள் போன்றவற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. M20 கலவை குறித்த சரியான கணக்கீடு மற்றும் பயன்பாடு, கட்டமைப்புகளின் தரத்தையும் ஆயுட்காலத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடும். கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் காண்ட்ராக்டர்களுக்கு இது ஒரு அவசியமான திறனாகும்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....