வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



10 உங்கள் வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு கலர் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்

நீங்கள் உங்களின் வீட்டிற்கான வெளிப்புறப் பெயிண்ட்டின் வண்ணத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று குழப்பத்தில் இருக்கும் ஒருவர் என்றால், வீட்டின் வெளிப்புற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையை இந்தக் கட்டுரை எளிதானதாகவும் வேகமானதாகவும் ஆக்கும்.

Share:





வெளிப்புறச் சுவர்களுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்



உங்களின் வீடு கட்டும் பயணத்தின் மிகவும் உற்சாகமான கட்டங்களில் ஒன்று உங்கள் வீட்டிற்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதாகும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் உங்கள் வீட்டின் தோற்றக் கவர்ச்சியைப் பெரிதும் தீர்மானிக்கும். மேலும், வீட்டின் வெளிப்புறப் பெயிண்ட்டின் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றின் கண்ணோட்டங்களைப் பாதிக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. எனவே நீங்கள் உங்களின் வண்ணங்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதற்காக மனதில் கொள்ள வேண்டிய சில உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்:

 

 

  • 1. காம்பினேஷன்கள்: குறைவானதே அதிகமானது

    மிகவும் அதிகமான வண்ணங்களைப் பயன்படுத்துவது மிகவும் குழப்பமிக்கதாகத் தோற்றமளிக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். விஷயங்களை எளிமையானதாக வைத்து, உங்கள் வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு வெளிப்புற வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. விஷயங்கள் சற்று ஒரேமாதிரியானதாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், ஒரே நிறத்தின் வெவ்வேறு ஷேட்களையும் நீங்கள் ஆராயலாம்.
 
  • 2.வண்ணங்களின் தேர்வு :
    வண்ணங்களைத் தேர்வு செய்தல் என்று வரும்போது, நீங்கள் பல ஆப்ஷன்களைச் சரியாக ஆராய வேண்டும். நீங்கள் உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை அறிந்துகொள்ள முயற்சி செய்யும்போது, மற்ற வீடுகளில் உங்களைக் கவரும் வண்ணங்கள் இருக்கிறதா என்று தேடி, அவற்றிலிருந்து காம்பினேஷன்களை உருவாக்குங்கள். எளிதில் தூசி படியக்கூடிய கருப்பு மற்றும் அடர் வண்ணங்களைத் தவிர்க்கவும்.

  • 3. ஒளியில் உள்ள காரணி
    ஷேட் கார்டில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் மற்றும் ஷேரை உங்கள் வீட்டின் வெளிப்புறத்தில் பூசும்போது, அதில் விழும் வெளிச்சத்தின் தரம் மற்றும் வகையைச் சார்ந்து இறுதியில் அது மிகவும் வித்தியாசமாகத் தோன்றக்கூடும். இறுதியில் அது எவ்வாறு தோன்றக்கூடும் என்பது குறித்து நீங்கள் அறிந்துகொள்ள, சுவரில் சில வண்ணங்களையும் ஷேட்களையும் சாம்பிள் பார்ப்பது சிறந்தது.

  • 4. சுற்றுப்புறங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் :
    உங்கள் வீட்டின் வெளிப்புறத்திற்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது உங்களின் வீடு இருக்கும் இடம் மற்றும் அதைச் சுற்றி என்ன இருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் வீடு தனித்துவத்துடன் நிற்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களின் சுற்றுப்புறங்கள் மற்றும் பின்னணியின் மூட் மற்றும் காலநிலைக்கு ஏற்ற வகையில் நீங்கள் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யவும்.

  •  5. வெறும் பெயிண்ட்களைக் கடந்தும் சிந்தியுங்கள் :
    உங்கள் வீட்டின் வெளிப்புறமானது கதவு மற்றும் ஜன்னல்களைக் காட்டிலும் சில அலங்காரங்கள், கலைப்பொருட்கள் மற்றும் தாவரங்களால் உயிரோட்டம் பெற முடியும். உங்களின் வெளிப்புற வண்ணங்களுக்கு ஏற்றவாறு மெட்டீரியலையும் லைட்டிங்கையும் சரியாகத் தேர்ந்தெடுக்கவும். மேலும், ட்ரிம்கள் மற்றும் அக்சென்ட் வண்ணங்களுக்குச் சரியான காம்பினேஷனிலான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 6. நீடித்து உழைக்கும் தன்மை :
    உங்கள் வீட்டின் வெளிப்புறப் பெயிண்ட்டைப் பராமரிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெயிண்ட்களைத் தேர்ந்தெடுக்கும்போது, எந்த வண்ணமாக இருந்தாலும் சரி, நீடித்து உழைக்கும், குறைவான பராமரிப்பு தேவைப்படும் பெயிண்ட்களை நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யவும். வழக்கமாக, "சாட்டின்" மற்றும் "எக் ஷெல்" பெயிண்ட்கள் அதிகமான நீடித்து உழைக்கும் திறனைக் கொண்டுள்ளன, அவை சுத்தம் செய்யவும் எளிதானவை. அவை உங்களின் வண்ணங்களுக்கு ஒரு நல்ல ஃபினிஷையும் வழங்கும்.

  • 7. தீம் :
    உங்கள் வீட்டிற்கான வெளிப்புறப் பெயிண்ட்டின் வண்ணங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திலிருந்து தப்பிக்க, நீங்கள் முதலில் ஒரு தீமை செட் செய்ய வேண்டும். வீட்டின் வெளிப்புற வண்ணத்திற்கான ஒரு தீமை செட் செய்வது வெளிப்புறச் சுவர்களுக்குச் சரியான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்களின் வீட்டை அழகாகத் தோற்றமளிக்கவும் செய்யும்.

  • 8. பருவகாலம் :
    சரியான பருவக் காலத்தில் பெயிண்ட் செய்தால் வெளிப்புறச் சுவர்களுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் கடினமான வேலையைத் திறம்படச் செய்து முடிக்கலாம். கோடை காலத்தில் பெயிண்ட் செய்தால் வெளிப்புறப் பெயிண்ட்டின் ஆயுட்காலம் அதிகரிக்கும். பெயிண்ட் சரியான வெப்பநிலையில் சரியாக உலர்வதற்குக் கோடை காலம் உதவுகிறது. குளிர்காலம் அல்லது மழை காலங்களில் வெளிப்புறங்களில் நீங்கள் பெயிண்ட் செய்தால், வெளிப்புறச் சுவர்களில் வண்ணம் பூசும் செயல்முறையை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்யவேண்டியிருக்கும்.

  • 9. சோதனை :
    வெளிப்புறச் சுவர்களுக்கான சரியான வண்ணத்திற்காக ஒரு சில ஆப்ஷன்களை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், அதற்கான சாம்பிள்களைப் பெற்று, வெளிப்புறச் சுவர்களில் பெரிய ஸ்வாட்ச்களாகப் பெயிண்ட் செய்யவும். ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் இந்த ஸ்வாட்ச்களைப் பார்க்கவும். இந்த ஸ்வாட்ச்களைச் சூரிய வெளிச்சத்திலும் நிழலிலும் பார்க்கவும்; இது வெளிப்புறச் சுவர்களுக்கான சரியான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும். வெளிப்புறச் சுவர்களுக்கு எத்தகைய வண்ணம் நன்றாக இருக்கும் என்பது குறித்து நீங்கள் இன்னும் குழப்பத்தில் இருந்தால், நீங்கள் தொழில்முறை வடிவமைப்பாளரின் உதவியை நாடலாம் அல்லது உங்களின் நெருங்கிய நண்பரின் உதவியைப் பெறலாம்.



வல்லுநர்களின் உதவியை நாடவும்
பிழையில்லாத பெயிண்டிங் அனுபவத்தைப் பெறுவதற்கான உதவி மற்றும் வழிகாட்டுதலுக்கு அல்ட்ராடெக்கில் வீடு கட்டும் ஒப்பந்ததாரரைத் தொடர்புகொள்ளவும்.

இந்த வழிகாட்டியின் உதவியுடன், நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஒரு அழகான வெளிப்புறத்தைப் பெறுவீர்கள், ஆனால் அழகிய உட்புறங்களை எப்படிப் பெறுவீர்கள்? உங்களின் உட்புறங்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைச் சேர்க்க, நீங்கள் வெவ்வேறு வால் ஃபினிஷ்களைச் சோதனை செய்து பார்க்க வேண்டும். மேலும் அறிய - வால் ஃபினிஷிங்குகளின் வகைகள் - வலைப்பதிவைப் படிக்கவும்



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்



  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....