வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வசதிக்காக வாஸ்து படி பெட் ரூமிற்கான நிறங்களை தேர்ந்தெடுப்பது

உங்கள் இடத்திற்கு அமைதியையும் வசதியையும் கொண்டு வர சரியான பெட்ரூம் வாஸ்து நிறங்களைப் பற்றி ஆராயுங்கள். சிறந்த வாஸ்து நிறங்களுடன் உங்கள் நல்வாழ்வை மேம்படுத்துங்கள்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • வாஸ்து படி பெட் ரூமிற்கான நிறங்கள் மனநிலை மற்றும் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். நிம்மதியாக உறங்குவதற்கும் புத்துணர்வுடன் எழுவதற்கும் சரியான நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது மிக அவசியம்.

 

  • அமைதியான பெட் ரூமிற்கு நீலம், பச்சை, லைட் பிங்க் போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

 

  • நெகட்டிவிடி மற்றும் மிகுந்த தூண்டல் கொண்டதாக சிவப்பு மற்றும் கருப்பு நிறங்கள் இருக்கின்றன. அவை பெட் ரூம்களுக்கு பரிந்துரைக்கப்படாது.

 

  • பெட் ரூமிற்கு சரியான நிறத்தை தேர்ந்தெடுப்பது நல்ல உறக்கத்தையும் உணர்ச்சி சமநிலையையும் தருகிறது.

 

  • பொதுவான பரிந்துரை இருந்தாலும், வாஸ்து அடிப்படையில் பெட் ரூமிற்கான நிறத்தை தேர்வு செய்வது உங்கள் படுக்கையின் திசையைப் பொறுத்ததாகவும் இருக்கலாம்.


பெட் ரூமிற்கு சரியான நிறத்தை தேர்ந்தெடுத்தால் அமைதியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் நிறைந்த இடத்தை உருவாக்க முடியும். வாஸ்து படி, சில வண்ணங்கள் மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் நல் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வழிகாட்டி, வாஸ்து படி சரியான நிறங்களை பெட் ரூமிற்கு தேர்ந்தெடுத்து அமைதியான சூழலை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும். உங்கள் மாஸ்டர் பெட் ரூமில் மீண்டும் நிறங்கள் பூசுவதாக இருந்தாலும், புதிப்பிக்க முயற்சித்தாலும், வாஸ்து படி சரியான நிறத்தை பூசினால் மாற்றங்கள் ஏற்படும்.

 

 


வாஸ்து படி பெட் ரூமிற்கு வண்ணம் பூசுவது முக்கியமானதா?

 வாஸ்து சாஸ்திரப் படி, சரியான வண்ணத்தை தேர்ந்தெடுப்பது அழகான சம நிலைக் கொண்ட பெட் ரூமை உருவாக்கும்.  இதன் படி வண்ணத்தை தேர்ந்தெடுத்தால் மனநிலையிலும் எனர்ஜிலும் தாக்கங்கள் ஏற்படும். பெட் ரூம் என்பது  புத்துணர்ச்சிக்கான இடம். அதனால் அங்கிருக்கும் நிறம் நிம்மதியை கொடுக்க வேண்டும்.

 

சில பெட் ரூம் நிறங்கள் உங்கள் தூக்கத்தின் தரத்தையும் நலத்தையும் அதிகரிக்கும். வாஸ்து படி பெட் ரூமிற்கான நிறங்கள் நல்ல தூக்கத்தையும், நிம்மதியையும் தரும். உதாரணமாக, இனிமையான நிறங்கள் எனப்படும் நீலம் மற்றும் பச்சை நிறங்கள் போன்றவை. இந்த நிறங்கள் மனதையும் உடலையும் அமைதியாக வைப்பதால், பெட் ரூமிற்கு மிகச் சிறந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

 

 

வாஸ்து சாஸ்திரத்தின் படி பெட் ரூமிற்கான சரியான நிறங்கள்

பெட் ரூமிற்கு வாஸ்து படி நிறத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் மனநிலையிலும் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கே, பெட் ரூமிற்கு பாஸிட்டிவிடி மற்றும் அமைதியை அதிகரிப்பதற்கான நிறங்களை பார்க்க போகிறோம்.

 

1. அமைதியான நீலம்



 பெட் ரூமிற்கு வாஸ்து படி நீல நிறம் பூசினால் தூங்கும் இடத்தில் அமைதியை ஏற்படுத்தும். வாஸ்து படி, பெட் ரூமிற்கு நீல நிறத்தை பூசுவது, அமைதியை வெளிப்படுத்தும் வானம் கடல் போன்றவற்றை குறிப்பதால், ஓய்விற்கு இவை மிக அவசியமானது. வாஸ்து படி பெட் ரூமிற்கு நீலம் சிறந்த நிறம். ஏனெனில் இது மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை தரும். இது குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் பொருந்தும். இந்த நிறம் தியானத்திற்கும் மனநல பிரச்னைகளை குணப்படுத்தவும்  உதவுகிறது.

 

2. இனிமையான பச்சை



 வாஸ்து படி பச்சையும் பெட் ரூமிற்கு சிறந்த நிறமாக இருக்கிறது. இது இயற்கையைக் குறிப்பிடுவதோடு சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை தருகிறது. பச்சை நிறத்தை பெட் ரூமிற்கு பயன்படுத்தினால் புத்துணர்ச்சியைத் தரும். இதனால் வாஸ்து படி பெட் ரூமிற்கு பச்சை நிறம் பூசுவது சிறந்தது. இது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் ஓய்வை ஊக்குவிக்கவும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது.

 

3. அமைதியான மஞ்சள்



 மஞ்சள் நிறம் பெட் ரூமிற்கு மகிழ்ச்சியையும் பாஸிட்டிவ் எனர்ஜியையும் தரும். வாஸ்து படி, மஞ்சள் நிறம் சூர்ய வெளிச்சத்தை குறிப்பதால், இது மிதமான வசதியான சூழலைத் தருகிறது. இந்த நிறம் வெளிச்சமுள்ள நல்ல சூழலை எதிற்பார்ப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும். வாஸ்து படி, இது நல்ல பலன்களை தரக்கூடிய நிறமாக மாஸ்டர் பெட் ரூமிற்கு விளங்குகிறது.

 

4. மென்மையான பிங்க்



வாஸ்து படி மென்மையான பிங்க் பெட் ரூமிற்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது அன்பையும் தூய்மையையும் குறிக்கிறது. இது பெட் ரூமில் அழகான சூழலை உருவாக்கி, உறவை வளர்கிறது இது அமைதியான சூழலை உருவாக்குவதால், குழந்தை ரூமிற்கும் மாஸ்டர் பெட் ரூமிற்கும் பொருத்தமாக இருக்கும். 

 

5. மென்மையான ஊதா



ஊதா பெட் ரூமிற்கு சிறந்த தேர்வாக உள்ளது. வாஸ்து படி இந்த நிறத்தை பெட்ரூமில் பூசினால், நிம்மதியையும் ஆன்மீக வளர்ச்சியையும் உருவாக்கு  முடியும். இந்த நிறம் அமைதியான சூழலை உருவாக்கி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது ஒய்வு மற்றும் அமைதிக்காக ஒதுக்கப்பட்ட இடங்களான பெட் ரூமிற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

 

 

வாஸ்து படி மாஸ்டர் பெட் ரூமிற்கான நிறங்கள்

வாஸ்து படி மாஸ்டர் பெட் ரூமின் நிறங்கள் நிம்மதியையும் நல்ல தூக்கத்தையும் தரும். மண் அல்லது தோல் போன்ற நிறங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் வெளிர் பழுப்பு, பீஜ்‌ அல்லது மென்மையான நிறங்கள் அடங்கும். இது வசதியான நிலைத்த தன்மையுள்ள ரூமை உருவாக்க உதவுகிறது. 


வாஸ்து படி பெட் ரூமிற்கு தவிர்க்க வேண்டிய நிறங்கள்.

 உங்கள் பெட் ரூமை அலங்கரிக்க சரியான வண்ணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்டிடக்கலை மற்றும் இடத்தின் பண்டைய இந்திய அறிவியலான, வாஸ்து சாஸ்திரம் நிறங்கள் எப்படி இடத்தின் எனர்ஜியை பாதிக்கும் என்பதை குறித்தி வழிகாட்டுதலை வழங்குகிறது. சில நிறங்கள் அமைதியையும் பாஸிட்டிவிடியையும் அதிகரிக்கிறது. இதில் குறிப்பிடாத நிறங்களை தவிர்ப்பது நல்லது. பெட் ரூமிற்கான நிறங்களில் கவனம் செலுத்துவோம். வாஸ்து படி, மனதுக்கு பிடித்த சூழலை அமைக்க சில நிறங்களை தவிர்க்க வேண்டும்

 

1. கருப்பு 

எதற்கு தவிர்க்க வேண்டும் கருப்பு பெட் ரூமில் எனர்ஜியை எடுத்து விடும். அதனால் இவை பெட்ரூம் அதிர்வின் சமநிலையைக் குலைத்துவிடும். இது நெகட்டிவிட்டியை அதிகரித்து தூக்கத்தை பாதிக்கும்.

 

வாஸ்து பற்றிய அறிவு: பெட் ரூமில் வாஸ்து பற்றிய கொள்கைகளில், கருப்பு நிறங்கள் தற்போதுள்ள நிலைமையைக் குறிக்கின்றன. இது முன்னேற்றம் மற்றும் பாஸிட்டிவ் ஓட்டத்தைத் தடுக்கக்கூடும்.

 

2. சிவப்பு

எதற்கு தவிர்க்க வேண்டும் சிவப்பு என்பது உற்சாகமான புத்துணர்ச்சியூட்டும் நிறம். ஆனால் இது தீங்கும் விளைவிக்கும். இது எனர்ஜியை மிக அதிகமாக உயர்த்துவதனால், அமைதியாக வைத்திருக்க கடினமாகிறது.

 

வாஸ்து பற்றிய அறிவு: சிவப்பு என்பது தூண்ட கூடிய வண்ணம், அதனால் இது அமைதியைக் கெடுக்கும் மற்றும் பெட் ரூமிற்கு ஏற்ற நிறமாக இருக்காது.

 

3. அடர் பழுப்பு

எதற்கு தவிர்க்க வேண்டும் அடர் பழுப்பு நிறம் ரூமில் மூடிய உணர்வைத் தரும். இது உணர்வை கடினமாக்கி மனநிலையை குலைக்கும்.

 

வாஸ்து பற்றிய அறிவு: வாஸ்து படி ரூமிற்கு வெளிச்சமுள்ள நிறத்தை பூசுவது நல்லது. ஏனெனில் அது பறந்து விரிந்த வெளிச்சமுள்ள ரூமை அமைக்கும்.

 

4. ஒளிமிக்க மஞ்சள்

எதற்கு தவிர்க்க வேண்டும் இது அழகான நிறமாக இருந்தாலும், தூண்டுதலை அதிகரித்து அமைதி ஓட்டத்தை பாதிக்கும்.

 

வாஸ்து பற்றிய அறிவு: வாஸ்து படி பெட் ரூமின் நிறம் அமைதியை தர வேண்டும். மென்மையான மஞ்சளை ஏற்றுக் கொள்ளலாம். அதுவே ஒளிமிக்கதாக இருந்தால் பரிந்துரைக்கப்பட்டாது.

 

5. நியான் நிறம்

எதற்கு தவிர்க்க வேண்டும் நியான் நிறம் கவனத்தை திசை திருப்பும். இதனால் தேவையான அமைதி மற்றும் ஓய்வை அடைவதற்கு சவாலாக அமைகிறது.

 

வாஸ்து பற்றிய அறிவு: வாஸ்து படி பெட் ரூமிற்கு கடுமையான நிறங்கள் பரிந்துரைக்கப்படாது. அவற்றால், ரூமிற்கு அமைதியான சூழலை உருவாக்க முடியாது.



பெட் ரூம் என்பது புத்துணர்ச்சி கொண்ட ஓய்வெடுக்க வேண்டிய இடம். இங்கு சரியான நிறத்தை தேர்வு செய்வது முக்கியமானது. பெட் ரூமிற்கு வாஸ்து படி சரியான நிறத்தை பூசுவது அமைதியான சூழலை உருவாக்கும். வாஸ்து படி பெட் ரூமிற்கு சரியான நிறத்தை தேர்ந்தெடுப்பது நல்ல தூக்கத்தையும் பாஸிட்டிவ் எனர்ஜியையும் தரும்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....