சிந்தெடிக் ரெசினைக் ஒரு ஹார்டனருடன் கலந்து உருவாக்கப்படும் சிறந்த பொருள் தான் இந்த எபாக்சி ரெசின் ஆகும், இது நீண்ட காலம் தரமாக நிற்கும். மேலும், ரசாயனம் மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களையும் எதிர்க்கும்.
இது உங்கள் கான்கிரீட் பரப்புகளை தேய்மானம் அடைய விடாமல் பாதுகாத்து அவற்றின் ஆயுட்காலத்தை நீடிக்க வைக்கிறது. மேலும், உங்கள் இடத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றபடி தேர்வு செய்ய, பல வண்ணங்களில் இந்த எபோக்சி க்ரௌட் உள்ளது.
மேலும் கறை மற்றும் நிறமாற்றம் பற்றி கவலைப்பட வேண்டாம் எபோக்சி க்ரௌட் மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டது. அதிக போக்குவரத்து உள்ள பகுதிகள் அல்லது கசிவுகள் மற்றும் கறைகள் வெளிப்படும் பகுதிகளுக்கு இது சரியானதாக அமைகிறது. பாரம்பரிய சிமெண்ட் க்ரௌட்டிங்குடன் ஒப்பிடும் போது, இது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் நீண்ட காலம் நீடிக்கும், அதனால் இதில் முதலீடு செய்வது சிறந்ததே.
சிமெண்ட் க்ரௌட்டிங் மற்றும் எபோக்சி:
எபோக்சி மற்றும் சிமெண்ட் க்ரௌட்டிங் இது ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை வாய்ந்த பலங்கள் மற்றும் பலவீனங்கள் உள்ளன. ஆனால், இவை இரண்டிற்கிடையிலான வேறுபாடு என்ன?
சிமெண்ட் க்ரௌட் என்பது கட்டுமான ப்ராஜெக்ட்களில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய பொருள் ஆகும். சிமெண்ட், மணல், மற்றும் தண்ணீரின் கலவையால் உருவாக்கப்பட்ட சிமெண்ட் க்ரௌட், கம்மி விலையிள் கிடைக்கும் மற்றும் எளிதில் பயன்படுத்தவும் முடியும். மேலும், இவை டைல்களுக்கான ஒரு உறுதியான அடித்தளத்தையும் வழங்குகிறது. ஆனால், இதற்கும் சில குறைகள் உள்ளன - இது காலப்போக்கில் விரிசல் மற்றும் துண்டுகளை ஏற்படுத்தும், கறையானால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம், மேலும், இதை சிறந்த நிலையில் வைத்திருக்க பராமரிப்பு அவசியம்.
மறுபுறம், எபோக்சி க்ரௌட் என்பது எதிர்காலத்தில் சிமெண்ட் க்ரௌட்டிற்கு பதிலாக பயன்படுத்தப்படும் தரம் மிகுந்த கலவை. ஒரு சிந்தெடிக் ரெசின் மற்றும் ஹார்டனரில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது வலிமையாகவும் நீடித்தும் இருக்கும். இரசாயன மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்க்கும். இது உங்கள் டைல்களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படும், மேற்பரப்புக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்கி, அதன் ஆயுளை நீடிக்க உதவுகிறது. மேலும், இது பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும், எளிதில் கரை படியாது, நிறங்கள் மாறாது. இதனால் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகள், கசிவுகள் மற்றும் கரைகள் வெளிப்படும் பகுதிகளில் பயன்படுத்துவதற்கு இந்த எபோக்சி க்ரௌட் ஏற்றதாக அமைகிறது.
ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது - எபோக்சி க்ரௌட், சிமெண்ட் க்ரௌட்டை விட அதிக விலையில் உள்ளது. எனவே, இது சிறந்த செயல்திறன் மற்றும் நீடித்த தன்மையை வழங்கலாம். ஆனால் செலவு ரீதியாக பார்த்தால், இது சிறந்த தேர்வாக இருக்காது. எபோக்சி மற்றும் சிமெண்ட் க்ரௌட்டிங்கில் எதை தேர்வு செய்வது என்பது, உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை பொறுத்தது. முடிவு உங்கள் கையில்தான் உள்ளது!