Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஃபவுண்டேஷன் மெட்டீரியல்கள் என்ன? வெவ்வேறு ஃபவுண்டேஷன் மெட்டீரியல்கள் குறித்த வழிகாட்டி

எந்தவொரு கட்டுமான திட்டத்தின் மிகவும் முக்கியமான கூறுகளில் ஒன்றாக, கட்டிடத்தின் நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஃபவுண்டேஷன் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. சரியான ஃபவுண்டேஷன் மெட்டீரியல்களைத் தேர்வு செய்வது காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கக்கூடிய நம்பகமான மற்றும் நீடித்து உழைக்கும் ஃபவுண்டேஷன்களை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படிநிலை ஆகும்.

Share:


ஒரு கட்டுமான திட்டத்தைத் தொடங்கும்போது, அது சிறிய வீடு அல்லது உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடமாக இருந்தாலும் சரி, வலுவான மற்றும் நம்பகமான ஃபவுண்டேஷன் அவசியமாகும். ஃபவுண்டேஷன் என்பது ஒட்டுமொத்த கட்டமைப்பையும் தாங்கி நிற்கும் அடித்தளமாக இருந்து, எடையைத் தாங்கி அதை நிலத்திற்கு கடத்துகிறது. எந்தவொரு கட்டுமான திட்டத்தின் நிலைத்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்வதற்கு சரியான ஃபவுண்டேஷன் மெட்டீரியலைத் தேர்வு செய்வது முக்கியமாகும். இந்த வழிகாட்டியில், உங்களின் அடுத்த கட்டுமான திட்டத்திற்கான தகவலறிந்த முடிவை எடுக்க உங்களுக்கு உதவுவதற்காக, கட்டுமானத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஃபவுண்டேஷன் மெட்டீரியல்கள் குறித்து நாம் விரிவாகக் காண்போம்.



வெவ்வேறு வகை ஃபவுண்டேஷன் மெட்டீரியல்கள்



திடமான ஃபவுண்டேஷனைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவான சில ஃபவுண்டேஷன் மெட்டீரியல்களை ஆராய்ந்து, அவற்றின் பண்புகள், பயன்பாடுகள் மற்றும் நன்மைகளைப் புரிந்துகொள்வோம்.

 

 

1. வுட்

வுட் ஃபவுண்டேஷன்கள் அழுத்தத்தால் பதப்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் அல்லது என்ஜினியர்டு வுட் புராடக்ட்ஸைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன. இது சிறிய ஷெட்கள், கேபின்கள் அல்லது பிற எடை குறைவான கட்டமைப்புகளுக்கான பொதுவான தேர்வாகும். மரக்கட்டையை ஒரு ஃபவுண்டேஷன் மெட்டீரியலாகப் பயன்படுத்துவதின் முக்கியமான நன்மைகளில் ஒன்று, மற்ற மெட்டீரியல்களுடன் ஒப்பிடும்போது விலை குறைவாக

இருப்பதாகும்.

 

நன்மைகள்

அ) வேலை செய்யவும், கட்டுமானத்திற்கும் எளிதானது

ஆ) விலை குறைவானது

இ) மற்ற ஃபவுண்டேஷன்கள் பயனளிக்காத அதிக நீர்மட்டம் உள்ள பகுதிகளுக்கு ஏற்றது

 

 

2. ஸ்டோன்

ஸ்டோன் ஃபவுண்டேஷன்கள் இயற்கையான அல்லது வெட்டி எடுக்கப்பட்ட ஸ்டோன் ப்ளாக்ஸைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இது பழைய வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு ஃபவுண்டேஷன்களைக் கட்டுவதற்கான ஒரு பொதுவான முறையாகும். ஸ்டோன் ஃபவுண்டேஷன்கள் நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் நீண்ட ஆயுள் கொண்டது, ஆனால் அவற்றுக்கு வழக்கமான பராமரிப்பு தேவை.

 

நன்மைகள்

அ) நீடித்து உழைக்கிறது மற்றும் நீண்ட ஆயுள்

ஆ) தீ எதிர்ப்பு

இ) வெப்பநிலை மாற்றங்களுக்கு எதிராக சிறந்த இன்சுலேஷன் வழங்குகிறது

 

 

3. கான்கிரீட் மற்றும் கான்கிரீட் ப்ளாக்ஸ்

கான்கிரீட் ஃபவுண்டேஷன்கள், ஃபவுண்டேஷனுக்கு பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களின் பொதுவான வகைகளில் ஒன்றாகும். இந்த ஃபவுண்டேஷன்கள் முக்கியமாக சிமெண்ட் கொண்டு உருவாக்கப்பட்டதாகும், மேலும் இது அதிகமான இறுக்க வலிமையைக் கொண்டதாகும் மற்றும் குறிப்பிடத்தக்க அளவு எடையைத் தாங்கி நிற்கும். சிமெண்ட் ஃபவுண்டேஷன் என்றும் அழைக்கப்படும் இதில், பணி தளத்திலேயே கான்கிரீட்டை ஊற்றலாம் அல்லது ஃபவுண்டேஷன் கட்டுமானத்திற்காக ப்ளாக்ஸாக ப்ரீகாஸ்ட் செய்யலாம். மேலும், சிண்டர் ப்ளாக்ஸ் என்றும் அழைக்கப்படும் கான்கிரீட் ப்ளாக்ஸ், ஊற்றப்படும் கான்கிரீட் ஃபவுண்டேஷன்களுக்கு விலை குறைவான மாற்றாகும்.

 

நன்மைகள்

அ) வலுவானது மற்றும் நீடித்து உழைக்கக்கூடியது

ஆ) நெருப்பு, ஈரப்பதம் மற்றும் பூச்சிகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறன்

இ) குறைவான பராமரிப்பு தேவை

 

 

4. அக்ரிகேட்ஸ்

சரளைக்கல், நொறுக்கப்பட்ட கல் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட் போன்ற அக்ரிகேட்ஸை, ஃபவுண்டேஷன் மெட்டீரியலாகப் பயன்படுத்தலாம். இவை ஃபவுண்டேஷனிலிருந்து தண்ணீரை வெளியேற்றி, மண் அரிப்பைத் தடுப்பதால் அதிக நீர் மட்டம் உள்ள பகுதிகளுக்கு இவை ஏற்றதாகும்.

 

நன்மைகள்

அ) சிக்கனமானது

ஆ) முறையான நீர் வெளியேற்றத்தை அனுமதிக்கிறது

இ) சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது

 

 

5. ஃப்ளை ஆஷ்

ஃப்ளை ஆஷ், நிலக்கரி மின் நிலையங்களின் துணை பொருள் ஆகும், மேலும் இதன் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை காரணமாக இது பொதுவாக ஃபவுண்டேஷன் மெட்டீரியலாகப் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் கலவைகளில் சிமெண்ட்டிற்கு மாற்றாகவும் இதைப் பயன்படுத்தலாம் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாகும்.

 

நன்மைகள்

அ) சிமெண்ட் பயன்பாட்டைக் குறைக்கிறது

ஆ) சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது

இ) சுருக்கம் மற்றும் விரிசலுக்கு எதிரான எதிர்ப்புத்திறன் கொண்டது

 

 

6. மணல்

மணல், குறைவான நீர் மட்டம் மற்றும் நிலையான மண் உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படும் பொதுவான ஃபவுண்டேஷன் மெட்டீரியல் ஆகும். இது பெரும்பாலும் ஃபவுண்டேஷன் மற்றும் மண்ணுக்கு இடையிலான பெட்டிங் லேயராகப் பயன்படுத்தப்படுகிறது.

 

நன்மைகள்

அ) வேலை செய்ய எளிதானது மற்றும் கச்சிதமானது

ஆ) நிலையான அடித்தளத்தை வழங்குகிறது

இ) முறையான நீர் வெளியேற்றத்தை அனுமதிக்கிறது

 

 

7. செங்கல்

செங்கற்களை ஃபவுண்டேஷனாகப் பயன்படுத்துவது, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட ஆயுள் அடிப்படையில் ஸ்டோன் ஃபவுண்டேஷன் போன்றதாகும். இவை பழைய வீடுகள் மற்றும் கட்டிடங்களின் பொதுவான தேர்வாகும்.

 

நன்மைகள்

அ) நீடித்து உழைக்கிறது மற்றும் நீண்ட ஆயுள்

ஆ) தீ எதிர்ப்பு

இ) வெப்பநிலை மாற்றங்களுக்கு எதிராக சிறந்த இன்சுலேஷன் வழங்குகிறது

 

 

8. ஸ்டீல்

ஸ்டீல் ஃபவுண்டேஷன்கள் கட்டுமான துறையில் புதிதான ஒன்றாகும். அவை வலிமையாகவும் நீடித்து உழைக்கக்கூடியவையாகவும் இருப்பதால் வணிக மற்றும் தொழிலக கட்டிடங்களுக்கான பிரபலமான தேர்வாகும்.

 

நன்மைகள்

அ) வலுவானது மற்றும் நீடித்து உழைக்கக்கூடியது

ஆ) காலநிலை மற்றும் பூச்சிகளுக்கு எதிராக எதிர்ப்புத்திறன் கொண்டது

இ) குறைவான பராமரிப்பு தேவை


கட்டுமானத்தில் நல்ல தரமான ஃபவுண்டேஷன் மெட்டீரியல்களைத் தேர்வு செய்வதிப் முக்கியத்துவம்.



நல்ல தரமான ஃபவுண்டேஷன் மெட்டீரியல்களைத் தேர்வு செய்வது பல்வேறு காரணங்களுக்காகக் கட்டுமானத்தில் மிகவும் முக்கியமானதாகும். உயர் தரமான மெட்டீரியல்களில் முதலீடு செய்வது ஏன் முக்கியம் என்பதற்கான சில முக்கியமான காரணங்கள் இதோ:

 

1. நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட ஆயுள்

உயர் தரமான ஃபவுண்டேஷன் மெட்டீரியல்கள் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை தேய்மானத்திற்கு எதிராக அதிக எதிர்ப்புத்திறன் கொண்டவையாகும், இது ஃபவுண்டேஷன் மற்றும் ஒட்டுமொத்த கட்டமைப்பின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. தரம் தாழ்ந்த மெட்டீரியல்களைத் தேர்வு செய்வது குறித்தகாலத்திற்கு முன்பே சீர்குலைவதற்கு வழிவகுக்கும், கட்டிடத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யும்.

 

2. கட்டமைப்பு சார்ந்த நிலைத்தன்மை

ஃபவுண்டேஷன் என்பது எந்தவொரு கட்டிடத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. நல்ல தரமான மெட்டீரியல்களைத் தேர்ந்தெடுப்பது, ஃபவுண்டேஷனால் கட்டமைப்பின் எடையையும் பாரத்தையும் கையாள முடிவதை உறுதி செய்கிறது. மோசமான மெட்டீரியல்கள் ஃபவுண்டேஷன் செட்லிங், விரிசல் அல்லது நிலைகுலைவதற்கு கூட வழிவகுத்து, கட்டிடத்தின் கட்டமைப்பு சார்ந்த உறுதியை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடும்.

 

3. சுற்றுச்சூழல் காரணிகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறன்

பெரும்பாலும் ஈரப்பதம், வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் பூச்சிகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளை எதிர்க்கும் வகையில் நல்ல தரமான மெட்டீரியல்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மெட்டீரியல்கள் தண்ணீரினால் ஏற்படும் சேதம், உறைதல் மற்றும் சூடாகும் சுழற்சிகள், மற்றும் பூச்சி அல்லது கரையான் தாக்குதல்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்கி, அதிக செலவாகும் பழுதுகள் மற்றும் சாத்தியமான ஆபத்துகளைத் தடுக்கிறது.

 

4. கட்டிட விதிகளுக்கு இணங்குவது

கட்டிட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கட்டுமான மெட்டீரியல்களுக்கான குறைந்தபட்ச தரநிலைகளை விதிக்கின்றன. நல்ல தரமான ஃபவுண்டேஷன் மெட்டீரியல்களைத் தேர்வு செய்வது, பாதுகாப்பை ஊக்கப்படுத்தி, சாத்தியமான கட்டமைப்பு சார்ந்த சீர்குலைவுகளைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள இந்த விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய உதவுகிறது. கட்டிட விதிகளுக்கு இணங்காதது சட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் குடியிருப்பவர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.

 

5. நீண்ட காலத்திற்கு செலவுகளை மிச்சப்படுத்துகிறது

உயர் தரமான மெட்டீரியல்களுக்கு ஆரம்பத்தில் அதிகம் செலவானாலும், அவை பெரும்பாலும் நீண்ட கால சேமிப்புக்கு வழிவகுக்கக்கூடும். நீடித்து உழைக்கும் மெட்டீரியல்களில் முதலீடு செய்வதன் மூலம், அடிக்கடி பழுது பார்ப்பது மற்றும் பராமரிக்கும் தேவையை நீங்கள் குறைத்து, கட்டிடத்தின் வாழ்நாளில் ஒட்டுமொத்த செலவினங்களைக் குறைக்கிறீர்கள்.



இறுதியாக, கட்டுமானத்தில் நல்ல தரமான ஃபவுண்டேஷன் மெட்டீரியல்களைத் தேர்வு செய்வது முக்கியமாகும். இது நிலைத்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை, கட்டிட விதிகளுக்கு இணங்குவது, மற்றும் நீண்ட கால செலவை மிச்சப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. உயர் தரமான மெட்டீரியல்களில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் கட்டிடத்தின் பாதுகாப்பு, நீண்ட ஆயுள் மற்றும் செயல்திறனை உறுதி செய்து, அதை உங்கள் கட்டுமான திட்டத்தின் ஒட்டுமொத்த வெற்றியில் ஒரு விவேகமான முதலீடாக ஆக்கலாம்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....