வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



M25 கான்கிரீட் கலவை விகிதம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை

M25 கான்கிரீட் கலவை விகிதத்தின் முக்கிய அம்சங்களை புரிந்துகொண்டு, அதன் கணக்கீடு, பயன்பாடு உறுதியான, நீடித்த கட்டிடங்களை உருவாக்குவதில் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்வோம். இது குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் அதிக வலிமையுடன் கூடிய கட்டுமானங்களுக்கு பெரிதும் பயன்படுகிறது.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • M25 கான்கிரீட் கலவை விகிதம் 28 நாட்களுக்குப் பிறகு 25 MPa நம்பகமான வலிமையை உறுதிசெய்கிறது. இது பல்வேறு தரமான கட்டிடக் கட்டமைப்புகளையும் அதன் பயன்பாட்டையும் கொண்டு, செயல்திறன் மற்றும் செலவையும் சமநிலைப்படுத்துகிறது.
 
  • M25 கான்கிரீட்டின் நிலையான கலவை விகிதம் ஒரு பங்கு சிமெண்டு, ஒரு பங்கு தண்ணீர், இரண்டு பங்குகள் மணல் மற்றும் நான்கு பங்குகள் கற்களாகும். இது செலவிற்கும் கட்டிடத்தின் வலிமைக்கும் இடையில் ஒரு நல்ல சமநிலையை வழங்குகிறது.
 
  • செலவு-செயல்திறன் படி பார்த்தால் M25 கான்கிரீட் கட்டுமானத்திற்கு ஒரு சிறந்த தேர்வாகும். அதிக செலவு இல்லாமல் வலிமையான கட்டிட திட்டங்களை  வழங்குகிறது.
 
  • M25 கலவையானது உலக கட்டுமான தரநிலைக்கு ஏற்றவாறு செயல்படுகிறது. இந்திய தரநிலை குறியீடு, ப்ராஜெக்ட்களின் நிலைத்தன்மையையும் தரத்தையும் உறுதி செய்கிறது.
 
  • M25 கான்கிரீட் கலவை விகிதத்தை கணக்கிடுவது, குறிப்பிட்ட வலிமையைப் பெறவும், தண்ணீர்-சிமெண்டு விகிதத்தை சரியாக நிர்ணயிக்கவும், நீடித்த தன்மைக்கும், வேலைத்திறனை அடைவதற்கும் முக்கியமாக இருக்கிறது.
 
  • இந்த கலவையானது  திறன் வாய்ந்தது. ஸ்லாப்கள், டிரைவ்வேக்கள், நடைபாதைகள், நெடுவரிசைகள், பீம்கள், தடுப்பு சுவர்கள் மற்றும் பல்வேறு கட்டிட கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஏற்றது.


கட்டிடத்துறையில் சரியான பொருட்களை தேர்வு செய்தால் கட்டிடம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும். குறிப்பாக கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் அடித்தளங்களுக்கு கான்கிரீட் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் M25 போன்ற பல்வேறு கான்கிரீட் தரங்களைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.


கட்டுமானத்திற்குப் பயன்படுகின்ற வலிமையையும் நிலைத்தன்மையையும் அளிக்கும் கலவையை இந்த M25 கான்கிரீட் கலவை விகிதம் கொடுக்கும். இது பல ப்ராஜெக்ட்களுக்கு பயன்படுத்தக்கூடிய, வலிமைக்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தேர்வாகும்.

 

 


M25 கான்கிரீட் கலவை விகிதம் என்றால் என்ன?

 

M25 கான்கிரீட் விகிதம் என்பது ஒரு தரமான கான்கிரீட்டை உருவாக்கப் பயன்படும் ஃபார்முலாவாகும். இது 28 நாட்களுக்கு ஒருமுறை கியூரிங் செய்யப்பட்டால், 25 மெகாபாஸ்கல் (MPa) வலிமையை அடைகிறது. இந்த கலவை விகிதத்தில் ஒரு பங்கு சிமெண்டு, ஒரு பங்கு தண்ணீர், இரண்டு பங்குகள் மணல் மற்றும் நான்கு பங்குகள் கற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. M25 கலவை விகிதமானது கட்டிடத்திற்கு அதிக வலிமையை அளிக்கிறது. அதே நேரத்தில் சிக்கல்களும் அதிக செலவுகளும் இல்லாமல் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது கட்டுமானத் திட்டங்களுக்கான பயன்பாடு, மலிவான விலை மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துகிறது.

 

 

M25 கான்கிரீட் கலவை விகிதத்தின் அம்சங்கள்



M25 கான்கிரீட் கலவை, கட்டுமானத்தில் பல முக்கிய அம்சங்களை வழங்குகிறது. அதனால் இது கட்டிடத் திட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. M25 விகித கான்கிரீட் கலவையின்  அம்சங்களானது கட்டுமானத் திட்டங்களில் இருக்கும் பயன்களிலும்  செயல்திறரன்களிலும் பங்களிக்கின்றன.

 

1. வலிமை மற்றும் நிலைத்தன்மை

M25 கான்கிரீட் கலவை, 28 நாட்கள் கியூரிங் செய்த பிறகு 25 மெகாபாஸ்கல் வலிமையை அடைகிறது. இது நிலைத்தன்மையை அளிக்கிறது. இந்த வலிமை, பல்வேறு சாதாரண கட்டுமான திட்டங்களுக்கு ஏற்றது. இதில் கட்டிட தளங்கள், ஸ்லாப்கள்,பீம்கள், தூண்கள், அல்லது போதுமான வலிமை தேவைப்படும் தெருக்கள் போன்றவை அடங்கும். ஆனால் மிகப்பெரிய பாரங்கள் தேவைப்படும் கட்டுமானகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

 

2. உறுதியான அமைப்பு

சமநிலையான கலவை விகிதத்தின் காரணங்களால் M25 கான்கிரீட் மிகச்சிறந்த அமைப்பின் உறுதியை வழங்குகிறது. நொறுக்கப்பட்ட கற்கள் போன்ற மொத்த பொருட்களை ஒன்றாக இணைக்கும் சிமெண்ட் பேஸ்டுக்களின் இடையே ஒரு நல்ல பிணைப்பை இது உறுதி செய்கிறது. இது ஒருங்கிணைந்த, உறுதியான அமைப்பை உருவாக்கி, அதிக அழுத்தத்தைத் தாங்குவதற்கு வலிமையாக இருக்க உதவுகிறது.

 

3. செலவுக் குறைவு

 M25 கான்கிரீட் பல கட்டுமான ப்ராஜெக்ட்களை, குறைந்த செலவில் முடிக்க உதவுகிறது.  இது வலிமை மற்றும் மலிவான விலைக்கு இடையே நல்ல சமநிலையைப் பாதுகாப்பதால்,  பல கட்டிட வேலைகளுக்கு ஏற்ற தேர்வாகத் திகழ்கிறது. இது கட்டுமானத்தின் உறுதியை பராமரித்தும், திட்டச் செலவுகளைச் சமநிலைப்படுத்தியும் சிறந்த தீர்வை உருவாக்குவதில் உதவுகிறது.

 

4. தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை

கட்டுமானத்தில் பாதுகாப்பு மற்றும் தரத்தை பராமரிக்க தொழில் தரநிலைகள் அவசியம். M25 கான்கிரீட்டின் கலவை விகிதம் ஒரு நியமிக்கப்பட்ட கலவை முறையாகும், இது இந்திய தரநிலைக் குறியீடுகள் உள்ளிட்ட உலகளாவிய தரங்களுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது இது  நம்பகத்தன்மையுடன் அனைவரும எதிர்பார்க்கும் செயக்திறனையும் வழங்குகிறது.

 

5) திறமையான கட்டுமான செயல்முறை

M25 கான்கிரீட் விகித கலவை, கட்டுமான செயல்முறைகளில் திறமையான பங்களிப்பை வழங்குகிறது. தரநிலைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் எளிதில் பின்பற்றக்கூடிய கலவை விகிதம் இருப்பதால், இது கலவை செயல்முறையில் தவறுகளை குறைக்க உதவுகிறது. இதனால் கட்டுமானங்களை சரியான நேரத்திற்குள் முடிக்க முடியும். மேலும், வேலையை சீராக முடிக்க முடியும்.


M25 கான்கிரீட்டின் விகிதத்தை எவ்வாறு கணக்கிடுவது?



சரியான கான்கிரீட் கலவையை உருவாக்குவது சுலபமானது அல்ல. துல்லியமான கணக்கீடுகள் மூலம், இந்த கான்கிரீட் கலவை சரியான வலிமையைப் பெறுவதுடன், மிக சிறந்த நீடித்த தன்மையையும் சுலபமாக வேலைசெய்யும் தன்மையையும் வழங்குகிறது.  இப்போது, M25 கான்கிரீட் விகிதத்தின் கணக்கீட்டினை பகுத்தறிந்து கொள்வோம்.

 

1)இலக்கு வலிமையை கணக்கிடுதல்

 இலக்கு வலிமை என்பது கான்கிரீட்டு கலவை காய்ந்த பிறகு அடையும் வலிமையாகும். M25 கான்கிரீட்டிற்கு, 25 MPa (மெகா பாஸ்கல்) எனக் குறிப்பிடுகிறோம். M25 கான்கிரீட் விகித கலவையானது கடினமான நிலையை அடைந்த பிறகு வலிமை அடைவதை செய்யும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

2. நீர்-சிமெண்டு விகிதத்தைத் தேர்வு செய்தல்

 நீர்-சிமெண்டு விகிதம் மிக முக்கியமான அம்சமாகும். இந்த விகிதமானது, ஒரு கலவையில் உள்ள சிமெண்டின் எடையை வகுத்து கிடைக்கும் நீரின் எடையாகும். இது கான்கிரீட்டின் வலிமை, ஆயுள் மற்றும் வேலைத்திறனில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சரியான விகிதத்தைத் தேர்வு செய்தால், M25 கான்கிரீட்டின் இலக்கிற்கேற்ற நீடித்தித்த தன்மையையும் வலிமையையும் அடையும்.

 

3)நீர் அளவைக் கணக்கிடுதல்

பயன்படுத்தப்படும் மொத்தப் பொருட்களின் அளவு மற்றும் வகை போன்ற பல்வேறு காரணிகள் பொருத்து, கலவையில் தேவைப்படும் நீரின் அளவு மாறுபடும். கான்கிரீட்டின் வேலைத்திறன் மற்றும் குறிப்பிட்ட கலவை வடிவமைப்பின் அடிப்படையில் அதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்.

 

4)சிமெண்ட் அளவை கணக்கிடுதல்

 நீர் அளவையும், நீர்-சிமெண்டு விகிதத்தையும் தீர்மானித்த பிறகு, உங்கள் கலவையில் எவ்வளவு சிமெண்ட் தேவை என்பதைக் கண்டறிய முடியும். நீர்-சிமெண்ட் விகிதமானது சிமெண்டின் எடையால் வகுக்கப்படும் நீரின் எடைக்கு சமமாக இருக்கும். இதில் நீர் அளவை உங்கள் விகிதத்துடன் பெருக்கினால், சிமெண்ட் அளவைப் பெறலாம் 

 

5)கற்களின் அளவை கணக்கிடுதல்.

 அடுத்து, சேர்க்கப்படும் பொருட்களின் அளவை கண்டறிய, பயன்படுத்தப்படும் பொருட்களின் அதிகபட்ச அளவு, அதன் அடர்த்தி (மென்மையானதா அல்லது கடினமானதா) மற்றும் கான்கிரீட்டின் வேலைசெய்யும் திறன் மற்றும் சுருக்க வலிமை போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நீர் மற்றும் சிமெண்ட் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, தேவையான கற்களின்  அளவைக் கணக்கிடலாம்.

 

6) நீர் உள்ளடக்கம் மற்றும் கற்களின் விகிதத்தை தீர்மானித்தல்.

 இறுதியாக, எல்லா அளவுகளும் தெரிந்த பிறகு, உங்கள் கலவையில் எவ்வளவு சிறிய கல் (மணல் போன்றவை) மற்றும் பெரிய கல் (சரளைக்கல்) தேவை என்பதை நிர்ணயிக்கவும். இந்த இரண்டு வகை கற்களுக்கு இடையிலான விகிதம் கான்கிரீட்டின் வலிமை மற்றும் வேலை திறனை பாதிக்கிறது. உங்கள் கற்களில் உள்ள ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் அளவை சரிசெய்ய வேண்டும்.


M25 கான்கிரீட்டின் பயன்பாடுகள்

M25 கான்கிரீட், அதன் வலிமை-செயல்திறன் விகிதத்தால் பல்வேறு கட்டுமான ப்ராஜெக்ட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு இவை மட்டுமல்ல,, M25 கான்கிரீட்டின் சில பொதுவான பயன்பாடுகள்:

 

1) ஸ்லாப்ஸ் 



M25 கான்கிரீட்டின் விகிதம் பொதுவாக குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் பல்வேறு வகையான ஸ்லாப்களைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவான சுமைகளைத் தாங்கக் கூடிய தளத்தை அளித்து, நீண்ட கால செயல்திறனை உறுதி செய்கிறது.

 

2)டிரைவ்வேஸ்



வாகன எடையைத் தாங்க வேண்டிய டிரைவ்வேகளுக்கு M25 கான்கிரீட்டு மிகச் சிறந்ததாகும். கார்கள் மற்றும் லாரிகளின் இயக்கம் , எடையைத் தாங்கக்கூடிய வலிமையையும் வானிலைகளை எதிர்க்கும் மேற்பரப்பையும் உறுதிப்படுத்துகிறது.

 

3) நடைபாதைகள்



எந்தவொரு சூழலிலும் பாதுகாப்பான மற்றும் நீடித்த நடைபாதைகள் முக்கியமானவை. மேலும் இந்த நோக்கத்திற்காக M25 கான்கிரீட்டை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அதிக நடைபாதை போக்குவரத்தை இது திறனுடன் கையாளுவதால், பாதைகளுக்கும் இது பொதுவாக தேர்வு செய்யப்படுகிறது.

 

4) தூண்கள் மற்றும் பீம்கள்



M25 கான்கிரீட்டின் சுருக்க வலிமையானது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டிடங்களின் பீம்கள் மற்றும் தூண்களை கட்டமைக்க உதவுகிறது. இது கட்டிடங்கள் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய ஆதரவை வழங்குகிறது.

 

5)தடுப்புச் சுவர்கள்



தடுப்புச் சுவர்கள் பூமியின் அழுத்தத்தைத் தாங்கும் அளவிற்கு உறுதியாக  இருக்க வேண்டும். M25 கான்கிரீட்டு விகிதத்தில்  வலிமையும் நீடிப்பும் இருப்பதால், தடுப்புச் சுவரின் கட்டுமானத்தில் கட்ட பயன்படுத்தப்படுகிறது.

 

6)முன் தயாரிக்கப்பட்ட கட்டடமைப்புகள்

சில கட்டுமானத் ப்ராஜெக்ட்களுக்கு தடுப்புகள், பேனல்கள் மற்றும் எல்லைச் சுவர்கள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட கூறுகள் தேவைப்படலாம். இது போன்ற கட்டுமானங்களுக்கு,  M25 கான்கிரீட் சரியான தேர்வாகும். கான்கிரீட் 28 நாட்கள் கியூரிங் செயப்பட்டப்பின் வலிமையாகும். இது வருடா வருடம் நிலைத்து செயல்படுவதற்கு சிறந்த தேர்வாகும்.



 

M25 கான்கிரீட் விகிதம் கட்டுமானத் துறையில் ஒரு அடிப்படை அங்கமாகும். இது வலிமை மற்றும் வேலைத்திறன் இடையே சமநிலையை வழங்குகிறது . M25 கான்கிரீட் கலவையின் பயன்பாடுகளில்,பங்கு மற்றும் விகிதக் கணக்கீடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டால், M25 கான்கிரீட் கட்டுமானங்களின் நிலைத்தன்மையையும்‍, ஆயுளையும் உறுதி செய்ய முடியும். இது அதன் அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் காரணமாக கட்டிடத் துறையில் முக்கியப் பங்காற்றுகிறது.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....