தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதத்தின் முக்கியத்துவம் :
தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதம் என்பது கான்கிரீட் கலவையின் வலிமையைத் தீர்மானிக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சரியாகப் பதப்படுத்தும் பட்சத்தில், தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதமானது, கான்கிரீட்டின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கான காரணியாகும். உதாரணத்திற்கு, தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதம் 0.40 என்றால், கான்கிரீட்டில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 50 கிலோ சிமென்ட்டிற்கும், 20 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதத்தை எப்படி கணக்கிடுவது?
தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதம் = தண்ணீரின் எடை
சிமென்ட்டின் எடை
உதாரணத்திற்கு, தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதம் 0.50 மற்றும் கான்கிரீட்டில் 50 கிலோ சிமென்ட (ஒரு சிமென்ட் மூட்டையின் எடை) சேர்க்கப்பட்டால்.
கான்கிரீட்டிற்குத் தேவைப்படும் தண்ணீர் பின்வருமாறு:
தண்ணீர் / சிமென்ட் = 0.50
தண்ணீர் / 50 கிலோ = 0.50
தண்ணீர் = 0.50 x 50 = 25 லிட்டர்கள்.
அதே போல், W/C = 0.40 என்பதற்கு
தண்ணீர் = 0.40 x 50
தண்ணீர் = 20 லிட்டர்கள்
தண்ணீர்-சிமென்ட் விகிதத்தை நாம் குறைக்கும்போது தண்ணீரும் குறைவதை நீங்கள் காணலாம். கான்கிரீட்டில் தண்ணீர் குறைக்கப்படும்போது, கான்கிரீட்டின் இறுக்க வலிமை அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதத்திற்குச் சில வரம்புண்டு. குறைந்தபட்சத் தண்ணீர் மற்றும் சிமென்ட் விகிதம் 0.30 - 0.35 ஆகும், இதற்கு மேல் கான்கிரீட் மிகவும் விறைப்பானதாகவும் கையாளச் சாத்தியமில்லாததாகவும் மாறும்.