1) உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது
உலர்ந்த சுவர் என்பது இரண்டு காகிதங்களுக்கு இடையே இடையீடாக வைக்கப்பட்ட ஜிப்சம் பிளாஸ்டர் ஆன இது, பொதுவாக வீடுகளிலும் கட்டடங்களிலும் உட்சுவராக அமைக்கப்படும் பொருளாகும். அதனால் நாம் உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது எப்படி என்று விவாதிக்கும்போது, இது பலருக்கு ஆச்சரியமாக இருப்பதில்லை ஏனென்றால் வீட்டு உரிமையாளர்கள் எப்படியும் ஒரு நேரத்தில் விரிசல்களை எதிர்கொள்வார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது மிக எளிதான நடைமுறையாகும்.
பின்வருவது ஒரு உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்யும் படிகளாகும்.
1) ஏற்கனவே கலக்கப்பட்டது அல்லது "இருகும் வகையான" இணைக்கும் கூட்டை(compound) வாங்குங்கள்.
2) நீங்கள் சரி செய்ய விரும்பும் விரிசலில் 'V" வடிவத்தில் ஒரு காடி வெட்டுங்கள்
3) உடைந்த கழிவு மற்றும் தூசியை சுத்தமாக நீக்கி சுத்தம் செய்யுங்கள்.
4) ஒரு மெல்லிய படலமாக இணைக்கும் கூட்டை வைத்து அதை ஒரேவிதமாக பரவச் செய்யுங்கள்
5) உங்களுக்கு அவசியம் என்று தோன்றினால் அத்தனை முறை தொடர்ந்து பூசுங்கள்.
6) குறைந்தது 24 மணி நேரம் வரை உலர விடுங்கள்
7) உலர்ந்ததும் உப்புத்தாள் கொண்டு தடிமனான அல்லது அதிகப்படியான கூட்டு இருப்பதை சுத்தம் செய்து வழுவழுப்பாக்குங்கள்.
8) சுற்றுப் புற சுவர்களின் வர்ணத்திற்கு பொருந்துமாறு வர்ணம் கொடுத்து முடியுங்கள் .
2) கான்கிரீட் சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது
கான்கிரீட் சுவர்கள் பொதுவாக பேஸ்மென்ட்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பிற வீட்டுப் பகுதிகளில் காணப்படும், மேலும் இந்த சுவற்றில் விரிசல்கள் அஸ்திவாரம் இறுகுவது, உஷ்ணநிலை மாற்றம் மற்றும் நீரால் சேதம் போன்ற உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படுக்கூடும். அதிர்ஷ்டவசமாக, கான்கிரீட் சுவர் மற்றும் கான்கிரீட்டை குணப்படுத்தல் ஏறக்குறைய ஒரு எளிதான நடைமுறையாகும்.
கான்கிரீட் சுவரில் உள்ள விரிசலை சரி செய்ய பின்பற்ற வேண்டிய படிகள்:
1) ஒரு உளி அல்லது சுத்தி கொண்டு விரிசலை சற்று அகலப்படுத்துங்கள்
2) விரிசலைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள தூசிகளை கம்பி பிரஷ் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
3) ஒரு இணைக்கும் பசையை ஒரு பழைய பிரஷ் கொண்டு விரிசல் பகுதியில் மூடுங்கள்
4) பலமுறை பசையை பூசி ஒரு பட்டிக் கத்தி கொண்டு விரிசளுக்குள் அழுத்தம் கொடுத்து சுவரின் மற்று பகுதிகள் லெவலுக்கு சரி படுத்துங்கள்
5) சுவரின் மற்ற பகுதிகளுக்கு பொருந்தும்படியாக இருப்பதை உறுதி செய்து முடியுங்கள்
3) பிளாஸ்டர் சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது
பழங்கால வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கலவைப் பூச்சு சுவர்கள் காணப்படுகிறன, மேலும் இந்த சுவரில் விரிசல்கள் அஸ்திவாரம் இறுகுவது, உஷ்ணநிலை மாற்றம் அல்லது சாதாரணமாக வயதாவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பூச்சு சுவர்களில் உள்ள விரிசலை சரி செய்வதற்கு உலர்ந்த சுவர் அல்லது கான்கிரீட் போல் இல்லாமல் சிறிது வித்தியாசமான அணுகல் தேவை.
ஒரு கலவைப் பூச்சு சுவர் விரிசலை சரி செய்யும்போது பின்பற்ற வேண்டிய படிகள்:
1) பூச்சு விலகுகிறதா அல்லது வெளியே வருகிறதா என்று பார்க்க சுவரை மெதுவாக அமுக்குவதில் ஆரம்பிக்கவும்
2) பட்டி கத்திக் கொண்டு விரிசலை சுத்தம் செய்து விரிசலை விரித்து விடவும்.
3) ரெடி மிக்ஸ் அல்லது இருகும் தன்மையுள்ள இணைக்கும் கூட்டு கொண்டு விரிசலை முழுவதுமாக நிரப்பவும்
4) விரிசல் பெரிதாக இருக்கும் பட்சத்தில், தானாக ஒட்டிக்கொள்ளும் கண்ணாடி இழை வலை நாடாவை பூச்சு கொடுக்கும் முன்னர் ஓட்ட வேண்டும்
5) நாடா மீது சில லேயர் கூட்டு வைத்து (2 அல்லது 3 முறை) பூச வேண்டும்.
6) இறுதியாக ஒட்டப்பட்ட பகுதியை சுவற்றின் நிறத்திற்கு வர்ணம் பூசவேண்டும்.
மேலும் வாசிக்க: எப்படி தண்ணீர் சிமண்ட் விகிதத்தை கணக்கிடுவது?