லிவிங் ரூம்கள் உங்கள் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இடமாகும், குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும் சரி, சோஃபாக்களில் வசதியாக அமர்ந்துகொண்டு காஃபி குடிப்பதாக இருந்தாலும் சரி அல்லது அவ்வப்போது உங்களின் அன்புக்குரிய நண்பர்களை அழைத்து ஒன்றுகூடுவதாக இருந்தாலும் சரி. குறையற்ற இண்டீரியர் டிசைனிங்குடன் சேர்த்து, லிவிங் ரூமை மங்கலகரமானதாகவும், நேர்மறை ஆற்றல்களோடும், எதிர்மறை ஆற்றல்கள் இல்லாமலும் வைத்துக்கொள்வதற்குக் குறிப்பிட்ட வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது முக்கியமாகும்.
இந்தக் கட்டுரையில் உள்ள லிவிங் ரூமுக்கான வாஸ்து குறிப்புகளானது, உங்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான, வெற்றிகரமான, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் ஒரு வாஸ்துவுக்கு இணக்கமான இடத்தைத் திட்டமிட்டு வடிவமைக்க உங்களுக்கு வழிகாட்டும்.