வடகிழக்கு மூலைக்கான வாஸ்து சாஸ்திரம்: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை
வாஸ்து சாஸ்திர விதிப்படி, பாசிடிவ் எனர்ஜியைப் பயன்படுத்தி வடகிழக்கு மூலையின் நன்மைகளைப் பெற சில செய்யவேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை இங்கே பார்க்கலாம்:
செய்ய வேண்டியவைகள்;
1. சுத்தமாக வைத்திருங்கள்
வடகிழக்கு மூலையில் சுத்தம் மிக முக்கியம். இந்த பகுதி பரிசுத்தமானதாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கு குழப்பம் அல்லது குப்பை இல்லாமல் வைத்திருக்க வேண்டும். இதனால் பாசிடிவ் எனர்ஜி சுதந்திரமாகப் பாயும்.
2. வெற்று இடமாக வைத்திருங்கள்
கவனமான பொருட்கள் அல்லது குப்பைகளால் இந்த மூலையை தடுக்க கூடாது. வடகிழக்கு பகுதி வெற்றிடமாக இருந்தால், பாசிடிவ் அதிர்வுகள் அதிகமான வரும். மேலும், மன தெளிவு கிடைக்கும்.
3. நீருடன் தொடர்புடைய பொருட்களை வைக்க வேண்டும்
வடகிழக்கு நீருடன் தொடர்புடையது. இந்த பகுதியில் ஒரு நீரூற்று அல்லது மீன் தொட்டியை வைத்தால் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் பாசிடிவ் எனர்ஜி ஈர்க்கப்படும்
4. போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும்
இயற்கை சூரிய ஒளி மூலமோ அல்லது செயற்கை வெளிச்சம் மூலமோ இந்த மூலையை நல்ல வெளிச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். வடகிழக்குப் பகுதியின் வெளிச்சம் அறியாமை என்னும் இருளை நீக்கி, ஞானத்தை வரவேற்கிறது
5. தியானம் அல்லது பிரார்த்தனைக்கு இதைப் பயன்படுத்துங்கள்
இந்த மூலை தியானம் அல்லது பிரார்த்தனை அறைக்கு மிகவும் சிறந்தது. இதன் அமைதியான அதிர்வுகள் ஆன்மிக வளர்ச்சிக்கும் அமைதிக்கும் உகந்ததாக இருக்கும்.
செய்யக்கூடாதவைகள்:
1. கழிப்பறையை இங்கே அமைக்க வேண்டாம்
வடகிழக்கு மூலையில் கழிப்பறையை அமைத்தால், இது பரிசுத்தத்தை பாதிக்கும். நெகடிவ் எனர்ஜியையும் ஆரோக்கிய பிரச்சனைகளையும் கொண்டு வரும்.
2. கனமான பொருட்களை வைக்க வேண்டாம்
கனமான பொருள்கள் அல்லது இயந்திரங்கள் இந்த மூலையின் எனர்ஜியின் “எடையைக் குறைக்கும்.”இதனால் பணப் பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியப் பிரச்சனைகள் உருவாகலாம்.
3. குப்பைகளை சேர்த்து வைக்க வேண்டாம்
குப்பைகளை இந்தப் பகுதியில் சேர்த்து வைத்தால், உங்கள் வீட்டில் பாசிடிவ் எனர்ஜியை வரவிடாமல் தடுக்கும். மேலும், வாழ்க்கையில் மந்த நிலை உருவாகும்.
4. படிக்கட்டுகளை கட்ட வேண்டாம்
வழகிழக்கு பகுதியில் படிக்கட்டுகளைக் கட்டினால், பாசிடிவ் எனர்ஜி தடுக்கப்பட்டு மன அழுத்தம், ஆரோக்கியப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம்.
5. இருண்ட நிறங்களைப் பயன்படுத்த வேண்டாம்
இந்த பகுதியில் இருண்ட நிறங்கள் இருந்தால், வீட்டிற்காக இருக்கும் பாசிடிவ் எனர்ஜிகளை இவை உறிஞ்சி விடுகின்றன. வெளிர் நிறங்களைத் தேர்வு செய்யுங்கள். இது இந்தப் பகுதியை வெளிச்சத்துடன் பாசிடிவ் எனர்ஜிகளால் நிரம்பியதாக வைத்திருக்க உதவும்.