Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
ஸ்டீல், கட்டுமானத் துறையின் முதுகெலும்பாக இருக்கிறது. ஒரு கட்டுமான திட்டத்தைத் தொடங்கும் போது, சரியான ஸ்டீல் கம்பிகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். உங்கள் கட்டிடத்தின் முழுமை, பாதுகாப்பு, மற்றும் நீடித்த ஆயுட்காலம் இந்த ஸ்டீல் தேர்வினை சார்ந்து தான் உள்ளது.
தவறான ஸ்டீலை தேர்ந்தெடுத்தால் கட்டுமானக் குறைபாடுகள், செலவுக் கூடுதல்கள், மற்றும் பாதுகாப்பு சிக்கல் உண்டாகக் கூடும். ஏராளமான ஸ்டீல்களின் வகைகளும் பல காரணங்களும் இருப்பதால், இதன் செயல்முறையை தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
கட்டுமான ப்ராஜட்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் பல்வேறு வகை ஸ்டீல் பார்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட பண்புகளையும் பலன்களையும் கொண்டிருக்கின்றன. இரண்டு பொதுவான வகைகள்: இரண்டு பொதுவான வகைகள்:
மைல்ட் ஸ்டீல் பார்கள், "ப்லெய்ன் பார்கள்" என்றழைக்கப்படுவதால், கட்டுமானப் பயன்பாடுகளில் பிரபலமாக இதையே தேர்வு செய்கின்றனர். இவற்றில் குறைவான கார்பன் உள்ளது, இதனால் இவற்றை எளிதில் வெல்டிங் செய்யவும் வடிவமைக்கவும் முடிகிறது. மைல்ட் ஸ்டீல் கம்பிகள் நல்ல வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் கொடுப்பதால், பொதுவான கட்டுமானங்களுக்கு இவை பொருத்தமானவை.
டிஃபார்ம்ட் ஸ்டீல் பார்கள், "ரீயின்ஃபோர்ஸிங் பார்கள்" அல்லது "ரீபார்ஸ்" என்று அழைக்கப்படுகின்றன.இவை கான்கிரீட்டுடன் சிறப்பாக ஒட்டக்கூடிய பரப்பில் மாறுபாடுகள் கொண்ட ஸ்டீல் பார்கள் ஆகும். ஸ்டீல் மற்றும் கான்கிரீட் இடையிலான ஒட்டுமொத்த வலிமையை அதிகரிக்க, இந்த கம்பிகள் பொதுவாக கான்கிரீட் கட்டிடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. டிஃபாம்ட் ஸ்டீல் பார்ஸ் நீடித்த வலிமையுடனும் உறுதியுடனும் இருக்கும்.
கட்டுமானத்திற்கான ஸ்டீலை எவ்வாறு தேர்வு செய்வது என்பதைப் புரிந்துகொள்ளும் போது, பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கட்டுமானத் ப்ராஜெக்ட் வெற்றி பெற வேண்டுமென்றால், முக்கியமான பல அம்சங்களைப் கவனிக்க வேண்டும். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:
விட்டம் மற்றும் தரம் நிறைந்த ஸ்டீல் கம்பிகள் அதிக பாரங்களைத் தாங்கும். உங்கள் ப்ராஜெக்டின் குறிப்பிட்ட தேவைகளுக்காக சரியானதை தேர்வு செய்ய வேண்டும். கட்டமைப்பு டிசைனில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஸ்டீல் விட்டம் மற்றும் தரத்தை சரிபார்க்க வேண்டும். நீங்கள் அதிக பாரம் தாங்க வேண்டிய கட்டமைப்பில் பணியாற்றுகிறீர்களானால், தடித்த, உயர்ந்த தரம் கொண்ட ஸ்டீல் கம்பிகளை பயன்படுத்த வேண்டும்..
வெவ்வேறு கட்டுமான ப்ராஜெக்ட்களுக்கு ஏற்ப ஸ்டீல் ராட்களின் எடைகள் மாறுபடும். இது போக்குவரத்து மற்றும் நிறுவலையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், ஸ்டீல் ராட்களின் எடையை முன்பே கவனித்துக் கொள்ள வேண்டும், தேர்வு செய்யப்படும் ஸ்டீல் பார்களின் எடை பராமரிக்கக்கூடியதாகவும், ப்ராஜெக்ட் தேவைகளுடன் பொருந்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் ஸ்டீல் ராட்கள் மிகவும் இலகுவானவையாக இருந்தால், கட்டமைப்பு தோல்வியடையும் அபாயம் உள்ளது.
ஸ்டீல் ராட்களை நன்கு பரிசோதித்து, எந்தவிதமான விரிசலும் பாதிப்பும் உள்ளனவா என்பதைக் கவனியுங்கள். சிறிய விரிசல்கள் கூட, காலங்கள் கடக்க கடக்க கட்டமைப்பின் வலிமையை குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. விரிசல்கள் உள்ள ராட்களை தவிர்க்கவும், அவை பாதுகாப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மென்மையான மேற்பரப்புகளுடன், விரிசல்கள் இல்லாத ஸ்டீல் ராட்களைத் தேர்வு செய்யுங்கள்.
துருப்பிடிப்பு ஸ்டீலின் வலிமையை பாதிக்கக்கூடும். ஸ்டீல் ராட்களின் நிலையைப் பரிசோதியுங்கள். சேதத்தை தவிர்க்க எபோக்ஸி அல்லது சிங்க் பாதுகாப்பு கோட்டிங் இருக்கிறதா என்று பாருங்கள். ஸ்டீல் ராட்கள் துருப்பிடிப்பு அல்லது மிக அதிகமான சேதம் இல்லாமல் இருக்க வேண்டும். துருப்பிடிப்பை நீக்க முடியும், ஆனால் ஆழமான சேதம் ஏற்பட்டால் ராட்களை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நீங்கள் தேர்வு செய்யும் ஸ்டீலின் பிராண்ட் மிகவும் அவசியம். நம்பகமான பிராண்ட்கள் அதிக தரம் நிறைந்த ஸ்டீல் ராட்களை வழங்கும். அதனால் நம்பி வாங்கலாம்.. நம்பகமான பிராண்டுகளைத் தேர்வு செய்யும் பொழுது, சான்றளிக்கப்பட்ட ஸ்டீல்களைப் பயன்படுத்துகிறோம் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம், இது தொழில் தரங்களையும் பூர்த்தி செய்யும்.
ஸ்டீல் பார்களின் விளிம்புகளை கவனத்தில் கொள்ளுங்கள். வட்டமாக இருக்கும் விளிம்புகளை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில், இதைக் கையாளும் பொழுதும் நிறுவும் பொழுதும் ஆபத்துகள் குறைவாக இருக்கும். சீராக முடிக்கப்பட்ட விளிம்புகளைக் கையாளுவதும் எளிமை, கட்டுமானத்தில் அடுக்குவதும் எளிமை. இது உங்கள் வேலைக்கான தரத்தை மட்டும் இல்லாமல், கட்டுமான செயல்திறனையும் மேம்படுத்துகிறது.
கட்டுமானத்திற்கான சரியான ஸ்டீல் பார்களை தேர்வு செய்வதன் மூலம், பாதுகாப்பையும் கட்டமைப்பின் உறுதியையும் உறுதிபடுத்திக்கொள்ள முடியும். நீங்கள் எடுக்கும் முடிவு, கட்டிடத்தின் வலிமையை அதிகரித்து, அதை நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வைக்கும். மேலும், வட்ட அளவு, எடை, விரிசல்கள், துருப்பிடிப்பு, பிராண்ட் மற்றும் சீரான விளிம்புகள் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஸ்டீல் ஏன் கட்டுமானத்தில் பலமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள, இந்தத் வீடியோவைப் பாருங்கள்: ஸ்டீல் ஏன் ரீன்ஃபோர்ஸ்மென்ட் ஆகப் பயன்படுத்தப்படுகிறது.