Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
குடியிருப்புக்காக அல்லது வணிகப் பயன்பாட்டிற்காக வாங்குவதற்காக நீங்கள் ஒரு மனையைத் தேர்ந்தெடுக்கும்போது, வாஸ்துவின்படி நிலத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். ஏனென்றால், மனை என்பது அசையாத நிலையான ஒன்றாகும், எனவே அது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துவதையும் எதிர்மறை ஆற்றலில் இருந்து விலகி இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வீட்டிற்கான வாஸ்து சாஸ்திரம் மனை வாஸ்துவிலிருந்து வேறுபட்டதாகும். அதனால், நீங்கள் வாங்கிய மனை சரியானதா இல்லையா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இதை வாசிப்பது அனைத்தையும் விரிவாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
முதலில், ஒரு மனையை வாங்குவதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய வாஸ்து வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரிவில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மூன்று முக்கியக் குறிப்புகள் உள்ளன:
வாஸ்துவின்படி நிலத்தைத் தேர்ந்தெடுப்பதின் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று மனையின் திசையமைப்பு ஆகும். வாஸ்து வழிகாட்டுதல்களானது அறிவியல் சார்ந்த பகுத்தறிதல் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் இருக்கும். எந்தவொரு நகரத்திலும், சாலையின் இருபுறங்களிலும் வீடுகள்/அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும், மேலும் நான்கு திசைகளிலும் வீடுகள் இருக்கும்போது அந்த நகரம் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும். அதனால், மனை வாஸ்துவின்படி, நான்கு திசைகளும் நல்லது எனக் கருதப்படுகிறது. கிழக்கு திசையை நோக்கி இருப்பது அறிஞர்கள், பூசாரிகள், தத்துவவாதிகள், பேராசிரியர்களுக்கு ஏற்றது, வடக்கு திசையை நோக்கி இருப்பது அதிகாரத்தில், நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றது,
தெற்கு திசையை நோக்கி இருப்பது வணிகம் செய்பவர்கள் மற்றும் நிர்வாக மட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றது அதேசமயம் மேற்கு திசையை நோக்கி இருப்பது சமூகத்தில் துணை சேவைகளை வழங்குபவர்களுக்கு மிகவும் ஏற்றது.
வாஸ்துவின்படி, ஒருவர் நிலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் மனையின் சீரான அமைப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் :
நீங்கள் குடியிருப்பு நோக்கங்களுக்காக மனை வாஸ்துவைப் பார்க்கிறீர்கள் என்றால், பிறகு அது சமவெளி நிலமாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். ஒருவேளை, மனை சரிவாக இருந்தால், தென்மேற்கு அல்லது வடகிழக்கை நோக்கிச் சரிந்திருக்கும்பட்சத்தில்
அது அனுகூலமானதாக இருக்கும். மேற்கு நோக்கிச் சரிந்திருந்தால், அது குடும்பத்தினர்களிடையே ஒற்றுமையின்மையைக் குறிக்கிறது மற்றும் உடல்நலத்திற்குக் கேடு உண்டாக்கலாம்.
இதையும் படியுங்கள் : வீடு கட்டுவதற்கான வாஸ்து குறிப்புகள்
இதுதான் உங்களின் மனை வெற்றி மற்றும் மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சில வாஸ்து குறிப்புகளாகும். வாஸ்துவின்படி மனையை வாங்குவதற்கு முன் அல்லது நிலத்தைத் தேர்ந்தெடுக்கச் செல்வதற்கு முன் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளவும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கான செலவைக் கணக்கிட்டு, மனை வாஸ்துவை இறுதி செய்வதற்கு முன், ஒரு மனையை வாங்குவதற்கான சட்டத் தேவைகளைப் புரிந்துகொள்வது நல்லது. எங்கள் கட்டுரையில் விரிவாக நீங்கள் புரிந்து கொள்ளலாம் : நிலம் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்