வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆர்ச்சுகள் குறித்த வழிகாட்டி

எங்களின் சிறப்பான வழிகாட்டியில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஆர்ச்சுகள் குறித்து அறிந்துக் கொள்ளுங்கள். அடிப்படையிலிருந்து சிக்கலான டிசைன்கள் வரை, இன்றைய கட்டுமானங்களை வடிவமைக்கும் ஆர்ச்களின் வகைகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • ஆர்ச்கள் என்பது எடையை சரிசமமாக தாங்கும் வளைந்த கட்டமைப்புகள். இவை பொதுவாக பாலங்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பயன்படுத்தப்படுகின்றன.
 
  • வட்ட ஆர்ச் அல்லது ரோமன் ஆர்ச் என்பது அரைவட்டமாக இருக்கும். இதில் பலமும் நீடித்த தன்மையும் அதிகம். பொதுவாக பண்டைய நீர்வழிகள் மற்றும் பாலங்களில் இவற்றைக் காணலாம்.
 
  • கோதிக் கட்டிடக்கலையில் பாயிண்டட் ஆர்ச்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை எடையை சரிசமமாக பகிர்ந்து, உயரமான கட்டிடங்களையும் பெரிய ஜன்னல்களையும் அமைக்க உதவும்.
 
  • செக்மென்டல் ஆர்ச்கள் மேலே சற்றே வளைவானதாக இருக்கும். உயரக்கட்டுப்பாடு உள்ள சிறிய கட்டிடங்கள் மற்றும் பாலங்களுக்கு இவை சிறந்ததாக இருக்கும்.
 
  • ஹார்ஸ்ஷூ ஆர்ச்கள் அறைவட்டத்தையும் தாண்டி வளைவாக இருக்கும். தனித்துவமான அலங்காரத்துடன் இருப்பதால், இவை இஸ்லாமிய கட்டிடக்கலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
  • ஓகீ ஆர்ச்கள், இரண்டு முறை வளைந்த எஸ் வடிவத்தில் இருக்கும். அழகான தோற்றத்தாலும், அதிகம் எடையை தாங்கும் தன்மையாலும் இவை கோடிக் கட்டிடக்களைகளில் பயன்படுத்தப்படுகின்றன.


கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல வகையான ஆர்ச்கள்

கட்டுமானக்கலையில் ஆர்ச்கள் முக்கியமானவை. இவை பலத்தையும் கொடுக்கும் அழகான தோற்றத்தையும் கொடுக்கும். அவற்றின் பயன்பாடுகளை அறிய, பல்வேறு வகையான ஆர்ச்களைப் பற்றி புரிந்துக் கொள்வது மிக அவசியம். பழைய ரோமன் ஆர்ச் முதல் நவீன பேரபோலிக் ஆர்ச் வரை, ஒவ்வொரு வகையும் கட்டுமானத்தில் தனித்துவமான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டுமானக்கலை அற்புததைப்பற்றி மேலும் தெரிந்துக் கொள்வோம்



Epoxy Grout v/s Cement Grout | UltraTech Cement

ஆர்ச் என்றால் என்ன?

ஆர்ச் என்பது கட்டுமானத்தில் பொதுவாக காணப்படும் வளைந்த கட்டமைப்பு ஆகும். இது தனது வலிமை மற்றும் நிலைத்தன்மைக்கு பேர் போனது. இதில் திறந்த இடத்தில் வளைவு போல் இருக்கும். மேல் பகுதியின் எடையை திறமையாகப் பகிர்ந்து கனமாக எடைகளைத் தாங்கும்.. பண்டைய ரோமன் நீர்வழிகள் முதல் நவீன கால பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் வரை ஆர்ச்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பலவற்றிலும் பயன்படுத்தப்படும் இதன் தன்மை, கட்டிடக்கலைஞர்களுக்கு கண்ணுக்கு ஈர்ப்பான டிசைன்களை உருவாக்க உதவுகிறது. அதே சமயம் கட்டிடத்தின் வலிமையையும் அதிகரிக்கிறது. அவற்றின் பல்வேறு வகைகளையும் அவற்றின் கட்டுமானப் பயன்பாடுகளையும் புரிந்து கொள்ள, ஆர்ச்களின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுவது அவசியமாகும்.

 

 

கட்டுமானக்களைகளில் பயன்படுத்தப்படும் பல வகையான ஆர்ச்கள்

கட்டிடம் மற்றும் டிசைன்களில், ஆர்ச்களின் வகைகள் முக்கிய பங்கு வகிக்கும். கட்டிடத்தின் அழகு மற்றும் கட்டுமான ஒருங்கிணைப்பில் இவை தாக்கத்தை ஏற்படுத்தும்.  பல வகையான ஆர்ச்களை டிசைன் செய்து, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தியும் உள்ளனர். ஆர்ச்களின் ஒவ்வொரு வகையும் தனித்துவமான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சுமைகளைத் தாங்குவதிலிருந்து இடங்களை அழகாக்குவது வரை, கட்டிடக்கலையில் ஆர்ச் வகைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. கட்டிடக்கலையின் அழகு மற்றும் செயல்பாட்டில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இதை புரிய வைக்கும் வகையில்,  கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆர்ச்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். 

 

1. வட்டமான ஆர்ச்

வட்டமான ஆர்ச், பொதுவாக ரோமன் ஆர்ச் என அழைக்கப்படும். இது கட்டிடக்கலையில் மிகவும் அறியப்பட்ட ஆர்ச் வகைகளில் ஒன்றாகும்.  இதன் அரைவட்ட வடிவம் பல நூற்றாண்டுகளாக கட்டுமானத்தில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வலிமை மற்றும் நிலைத்தன்மைக்காக பிரபலமானது.  இந்த ஆர்ச் வகையை பழமையான நீர்வழிகள் மற்றும் பாலங்களில் காணலாம். இது காலத்திற்கும் அழகுடன் நீடித்து நிற்கும் தன்மைக் கொண்டது.

 

2. பாயிண்டத் ஆர்ச்

 



கோதிக் கட்டிடக்கலையில் பாயிண்டட் ஆர்ச்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. அவற்றின் நுனியில் காணப்படும் பாயிண்டட் ஏபெக்ஸ் வைத்தே அவற்றை கண்டறியலாம். இந்த வகையான ஆர்ச், கேத்தடர்கள் மற்றும் கோட்டைகளில் கண்ணுக்கு ஈர்ப்பான தோற்றத்தை அளித்தது. இதன்மூலம் கட்டிடங்களில் உயரமான சுவர்களையும் பெரிய ஜன்னல்களையும் உருவாக்க முடிந்தது. இந்த பாயிண்டட் ஆர்ச்கள் எடையை சரிசமமாக பகிரும். இதனால் பெரிய கட்டிடங்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகின்றது.

 

3. செக்மென்டல் ஆர்ச்



செக்மென்டல் ஆர்ச், வட்டமான ஆர்ச் போல தான் இருக்கும். ஆனால் இவற்றில் ஆழமான வளைவுகள் இருக்காது. இந்த வகையான ஆர்ச் பாலங்கள் மற்றும் சிறிய கட்டிடங்களில் காணப்படும் இந்த ஆர்ச் வகையை அமைக்க குறைந்த உயரமுள்ள இடமே தேவைப்படும். அதனால் உயர்க்கட்டுபாடு இருக்கும் வீடுகளிலும் இடங்களிலும் இவற்றை பயன்படுத்தலாம்.

 

4. ஹார்ஸ்ஷூ ஆர்ச்

 



அரைவட்டத்தையும் தாண்டின வளைவைக் கொண்ட இந்த தனித்துவமான ஹார்ஸ்ஷூ ஆர்ச், இஸ்லாமிய கட்டிடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தொழுகைப்பள்ளிகள் மற்றும் கட்டிடங்களில் இது அழகையும் கலாச்சார மேம்பாடுகளையும் அளிக்கிறது. அதனால் இது, கட்டுமானக்கலையின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அழகிய தோற்றம் இதன் கட்டுமான செயல்திறனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது, கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

5. ஓகீ ஆர்ச்

 



ஓகீ ஆர்ச் இரண்டு மடங்கு வளைந்த வடிவத்தை உடையது. இதில் ஒவ்வொரு பக்கம் ஒவ்வொன்றின் பிரதிபலிப்பாக இருக்கும். எஸ் வடிவத்தை உருவாக்கும்.  இதன் அழகான தோற்றம் மற்றும் சிக்கலான கட்டமைப்பு, இதனை ஆங்கில கோதிக் மற்றும் கோதிக் ரிவைவல் கட்டிடக்கலையில் பிரபலமாக்கியது. இதன் அழகான தோற்றத்தையும் தாண்டி, ஓகீ ஆர்ச் அதிக எடையைத் தாங்கும். இவை வடிவம் மற்றும் செயல்திறனை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும்.

 

6. ரிலீவிங் ஆர்ச்

ரிலீவிங் ஆர்ச் கட்டுமானத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பெரிதும் கவனிக்கப்படாத ஆர்ச் வகையாகும். குறைந்த ஆர்ச்கள் அல்லது லிண்டல் மீது எடையைக் குறைக்க இதுவே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்ஜினியரிங்கில் இந்த ரீளிவிங் ஆர்ச் புத்திசாலித்தனமான தீர்வாகும்.  சுமையை சுவர்களுக்கு கொடுத்து, கட்டுமான அழுத்தத்தை இது சரி செய்யும். குறிப்பாக பண்டைய மற்றும் வரலாற்று கால கட்டிடங்களில். இந்த வகை, வீடுகள் மற்றும் மற்ற கட்டமைப்புகளில் காணப்படும் பல வகையான ஆச்களில் சிறந்த தேர்வாகும். இவை நீண்ட காலம் நிலைத்தன்மையுடன் நிற்கும். 

 

7. முக்கோண ஆர்ச்

நேரான கோடுகள் மற்றும் கூர்மையான முனை வடிவத்தை வைத்து, இந்த முக்கோண ஆர்ச்சை கண்டறியலாம். இது ஆர்ச்களின் வளைவிலிருந்து சற்று மாறுபடும். இது பழைய வடிவ ஆர்ச் வகையாகும். இதனை பண்டைய மெசப்போத்தேமிய நாகரிகங்களில் காணலாம். இதன் எளிமையான வடிவமைப்பு கண்ணுக்கு அழகான தோற்றத்தை அளிக்கிறது. மேலும் வலுவான ஆதரவையும் அளிக்கிறது. இவை பண்டைய கட்டிடக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன.  முக்கோண ஆர்ச்கள் எளிமையான தோற்றத்தை கொடுக்கும். நேரான கோடுகளாலும் எளிய கட்டுமான முறையாலும் நவீன கட்டிடக்கலையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

 

 

ஆர்ச்களின் பல்வேறு வகைகள் கட்டுமானத்தில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

ஆர்ச்களை வகைப்படுத்தும்போது பல காரணிகள் உள்ளடங்கும். அவற்றில் சில முக்கிய வகைப்பாடுகளை பார்ப்போம்:

 

1. வடிவ வகைப்பாடு

 வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆர்ச்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இது அவற்றின் அமைப்பு தன்மை மற்றும் தோற்றம் ஆகியவற்றைக் தீர்மானிக்கின்றது பொதுவான வடிவங்களில், அரைவட்ட வளைவு கொண்ட ரோமன் ஆர்ச் மற்றும் கூர்மையான நுனியுடன் கூடிய பாயிண்டட் கோதிக் ஆர்ச் ஆகியவை அடங்கும். மற்ற வடிவங்களில், தொடர் அரைவட்டங்களாக இருக்கும் பேரல் ஆர்ச் மற்றும் பேரபோலாவின் வளைவு போல இருக்கும் பேரபோலிக் ஆர்ச் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வடிவத்திற்கும் கட்டுமானத்தில் ஒவ்வொரு நோக்கங்கள் உண்டு. இவை அழகு மற்றும் செயல்திறனின் சமநிலையைக் கொண்டுள்ளன.

 

2. கட்டுமானப் பொருட்கள்

மற்றொரு முறையில், கட்டுமான பொருட்களை வைத்து ஆர்ச்கள் வகைப்படுத்தப்படும்.  நீடித்த நிலைத்தன்மை மற்றும் வலிமைக்காக. பழமையான பொருட்களான கல், செங்கல் மற்றும் கான்கிரீட் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன,  நவீன ஆர்ச்களில் நிலைத்தன்மை மற்றும் வலைவுத்திறனுக்காக, கூடுதலாக ஸ்டீல் அல்லது வலுவூட்ட கான்கிரீட்டும் பயபடுத்தப்படுகின்றன. பட்ஜெட், கட்டுமான டிசைன் மற்றும் சூழல் ஆகியவற்றை பொறுத்து, கட்டுமான பொருட்கள் தேர்வு செய்யப்படும்.

 

3. வேலைப்பாட்டின்வகை

ஆர்ச்களை வகைப்படுத்துவதில், கட்டுமான முறையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கையால் கவனமாக கட்டமைக்க பட்ட ஆர்ச்கள், திறமையான கலைஞர்களால் கட்டப்படும். அவை அழகிய தோற்றத்திற்கு கைவினை நுட்பத்தையும் வழங்குகின்றன. இயந்திரம் மூலம் செய்யப்படும் ஆர்ச்கள், மேம்பட்ட உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும். திறமையையும் துல்லியத்தையும் முன்னுரிமையாகக் கொண்டு இது காட்டப்படும். இரு வகையான வேலைப்பாடுகளிலும் அவற்றிற்கான நன்மைகளை இருக்கின்றன. ப்ராஜெக்டின் தேவைகள் மற்றும் பட்ஜெட் கட்டுப்பாட்டை அடிப்படையாக கொண்டு இவை தேர்வு செய்யப்படும். 

 

4. மையப் புள்ளிகளின் எண்ணிக்கை

ஆர்ச்களை, அவற்றின் மையப் புள்ளிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம். பழமையான ரோமன் ஆர்ச்சில், வளைவு தொடங்கும் இடத்தில், ஒரு மைய ஆர்ச்களுக்கு ஒரு மையப் புள்ளி இருக்கும். எலிப்டிக்கல் ஆர்ச்சில், இரட்டை மைய ஆர்ச்களில் இரண்டு மையப் புள்ளிகள் இருக்கும். இது ஒரு தட்டையான வளைவுடன் ஒரு பரந்த திறப்பை உருவாக்குகின்றது. ஒஜி ஆர்ச் போன்ற பல மையம் கொண்ட ஆர்ச்களில், சிக்கலான வளைவுகள் பல மைய புள்ளிகள் மூலம் உருவாக்கப்படும். மையப் புள்ளிகளின் எண்ணிக்கை ஆர்சின் மொத்த வடிவத்தையும் கட்டமைப்பு நிலைத்தன்மையையும் தீர்மானிக்கின்றது.




 

கட்டுமானத்தில், ஆர்ச்களின் சரியான வகைகளைத் தேர்ந்தெடுப்பது மிக அவசியமானது. கட்டுமானத்தில் பல்வேறு வகையான ஆர்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொன்றும் அதன் பலன்களை வழங்குகின்றன. மிக வலிமையான பண்டைய ரோமன் ஆர்ச் முதல் பார்வையை ஈர்க்கும் கோதிக் ஆர்ச் வரை, கட்டிடக்கலையில் ஒவ்வொரு ஆர்ச் வகையும் தனித்துவமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிற்கான பல்வேறு ஆர்ச் வகைகளை வீட்டு உரிமையாளர்கள் அறிந்து கொள்வதன் மூலம் டிசைனிலும் செயல்பாடிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சுருக்கமாகச் சொன்னால், கட்டிடக்கலையில் ஆர்ச் வகைகளைத் தேர்ந்தெடுப்பதை அலட்சியமாக கருதக் கூடாது. அழகு மற்றும் கட்டுமானத்தின் வலிமைக்கு இது தான் அடிப்படை. பார்வையை ஈர்க்கும், நீண்ட காலம் நீடித்து நிற்கும் கட்டுமானங்களை அமைக்க, பல்வேறு வகையான ஆர்ச் வகைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.




தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....