வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான வீடுகளைக் கண்டரியுங்கள்

நாட்டின் வளமான கலாச்சாரத்தையும் புவியியல் நிலப்பரப்புகளையும் பிரதிபலிக்கும், இந்தியாவில் உள்ள  பல்வேறு வகையான வீடுகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.,

Share:


முக்கிய குறிப்புகள் 

 

  • இந்திய வீடுகள் பாரம்பரியமும் நவீன கட்டிடக் கலை வடிவங்களும் கலந்து கட்டமைக்கப்பட்டது.
 
  • உள்ளூர் கலாச்சார மாறுபாடுளை வெளிப்படுத்தும், குடிசைகள் முதல் அரண்மனை வரை பல்வேறு வகையான வீடுகள் காணப்படுகின்றன.
 
  • மண், செங்கல் மற்றும் கான்கிரீட் போன்ற கட்டிடப் பொருட்களானது உள்ளூரில் கிடைப்பது  மற்றும் சுற்றுச்சூழலின் பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
 
  • நகரில் மாடர்ன் அடுக்குமாடி வீடுகள் மற்றும் வில்லாக்கள் இருக்கும். இதுவே கிராமப்புறங்களில் பாரம்பரிய குடிசைகள் மற்றும் விவசாய வீடுகள்  காணப்படும்.
 
  • கலாச்சாரப் பாரம்பரியம் கட்டிடக்கலை வடிவமைப்புகளில் பாதுகாக்கப்படுகின்றது.  இதற்கு உதாரணம், ராஜஸ்தானில் உள்ள ஹவேலிகளும் தென்னிந்தியாவில் உள்ள முற்ற வீடுகளும் ஆகும்.
 
  • சுற்றுச்சூழல் காரணிகள் கட்டுமான பணிகளை பெரிதும் பாதிக்கின்றன. உதாரணமாக, வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஸ்டில்ட் வீடுகள், சுற்றுசூழலுக்கு ஏற்ற வீடுகள் ஆகியவை ஆகும்.
 
  • கட்டுமான பொருள்களின் தேர்வு காலத்திற்கும் நீடித்து, நிலைத்தன்மையுடன் இருக்கும் கட்டிடங்களை உருவாக்குவதில், முக்கிய பங்கை அளிக்கின்றது.


 இந்தியாவில் இருக்கும் மக்கள் வேறுபட்டு இருப்பதைப்போல,கிராமத்தில் இருக்கும் பாரம்பரிய மண் குடிசைகள் முதல் நகரங்களில் இருக்கும் மாடர்ன் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை இந்தியவீடுகளும் வேறுபட்டு இருக்கும். நாட்டின் வேற்றுமைகள், பல்வேறு இடங்களில் இருக்கும் வீடுகளில் பிரதிபலிக்கின்றது. இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான வீடுகளைப் பற்றி காணலாம்., அவற்றின் தனித்துவமான பண்புகளையும் கலாச்சாரத்தையும் டிசைன்களை பாதிக்கும் சுற்றுச்சூழலை காரணிகளைப் பற்றியும் பார்க்கலாம்.

 

 


இந்தியாவில் இருக்கும் 15 வகையான வீடுகள்

இந்தியாவின் கட்டிடக்கலை நிலப்பரப்பானது அதன் கலாச்சாரம் மற்றும் புவியியல் தன்மையை போலவே மாறுபட்டதாக இருக்கின்றன. இங்கே, நாடு முழுவதும் இருக்கும் 15 வெவ்வேறு வகையான  வீடுகளைப் பற்றி பார்க்கலாம்., ஒவ்வொன்றும் அதன் பாரம்பரியத்தையும் சுற்றுச்சூழலின் பகுதியையும் பிரதிபலிக்கிறது.

 

1. குடிசைகள்



 எளிய குடியிருப்பான குடிசைகள் கிராம பகுதியில காணப்படும். இதை கட்டுவதற்கு உள்ளூரில் கிடைக்கும் மண், ஓலை மற்றும் மூங்கில் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படும். குடிசைகளின் டிசைன்களில், நடைமுறை மற்றும் குறைவான செலவில் கிடைக்கும் தங்குமிட தேவைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். வடிவமைக்கப்படுகிறது. இந்த வீடுகள்  தடிமனான சுவர்களால் கட்டப்பட்டிருக்கும். இதனால் வீடு, கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சூடாகவும் இருக்கும்.

 

இந்த சிறிய இந்திய வீடுகளின் ஓலைக் கூரைகள் பயனுள்ள பாதுகாப்பை வழங்கும். மேலும், இவற்றை உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எளிதில் சரி செய்ய முடியும்.. கலாச்சாரப் படி பார்த்தால், கிராம வாழ்க்கை நடைமுறையையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதால், குடிசைகள் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

 

2. அபார்ட்மென்ட்



அபார்ட்மென்ட் என்பது பல மாடிக் கட்டிடங்கள் தனித்தனி குடியிருப்புகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். பொதுவாக, இவை இந்தியாவின் நகர்ப்புற மையங்களில் காணப்படும். மக்கள் தொகை அதிகமானதால், சிறிய இடத்தில் மக்களை வாழ வைக்க வேண்டிய கட்டாயத்தில் இவை அமைக்கப்பட்டன. அபார்ட்மென்ட்கள் பாதுகாப்பு,பார்க்கிங், மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளான ஜிம்கள் ,நீச்சல் குளங்கள், போன்ற பல்வேறு வசதிகளை வழங்குகின்றன.

 

நகரமயமாக்கல் மற்றும் நகரங்களில் வீட்டின் தேவை அதிகமாக இருந்ததால் தான், அபார்மென்ட்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன. சுற்றுச்சூழல் ரீதியாக பார்த்தால், இந்த கட்டிடங்கள் இடத்தை திறம்பட பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் எனர்ஜி திறன் மற்றும் கழிவு மேலாண்மைக்காண அம்சங்களும் இருக்கின்றன 

 

3. பங்களாக்கள்



 ஒற்றை-அடுக்கு வீடான பங்களாவில் பெரிய ரூம்களும், தோட்டம் வராண்டாக்கள் போன்ற விரிவான வெளிப்புற பகுதிகளும் இருக்கும். இந்த வகை வீடுகள், நிலம் அதிகமாகக் கிடைக்கும் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் பிரபலமானவை பங்களாக்கள் தனியுரிமை மற்றும் திறந்த இடங்களை ஒருங்கிணைத்து வழங்கி, குடும்பங்களுக்கு ஏற்றதாக விளங்குகிறது.

 

கட்டிடக்கலை ரீதியாக பார்த்தால்,, இந்தியாவில் இருக்கும் பங்களாக்கள் உயரமான சீலிங்கள் மற்றும் பெரிய ஜன்னல்களை உள்ளடக்கி, இயற்கை காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்தை மேம்படுத்துகின்றன. வெவ்வேறு பகுதிகளின் வெப்ப மண்டலத்திற்கு ஏற்ப இவை வடிவமைக்கப்படுகின்றன.

 

4. வில்லாக்கள்

 



வில்லாக்கள் என்பது ஆடம்பரமான, தனித்து விளங்கும், மாடர்ன் வசதிகள் மற்றும் விசாலமான வாழ்விடங்களைக் கொண்டவீடுகள் ஆகும். இவ்விதமான வீடுகள் பொதுவாக வசதியான குடியிருப்புகள் மத்தியிலும் பாதுகாப்பான இடத்திலும் காணப்படுகின்றன. வில்லாக்களில் பெரும்பாலும் தனியார் தோட்டங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பல கார் கேரேஜ்கள் போன்ற வசதிகள் இருக்கும். வில்லாக்களின் வடிவமைப்பானது வசதி, தனியுரிமை, மற்றும் தனிச்சிறப்புகளைத் தருகிறது.

 

சமூக ரீதியாக பார்த்தால், வில்லா வைத்திருப்பது செல்வம், வெற்றியைப் பிரதிபலிக்கும் அந்தஸ்து அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் ரீதியாக பார்த்தால், இந்த வீடுகள் சோலார் பேனல்கள் மற்றும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் போன்ற சிறப்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

5. பண்ணை வீடுகள்



 பண்ணை வீடு என்பது விவசாய நிலங்கள் இருக்கும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வீடுகளாகும். இந்த வீடுகள் விவசாயத்திற்கு இடமளிகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.பெரிய சமையலறைகள், விளைப்பொருள் சேமிப்பதற்கான இடங்கள் மற்றும் விசாலமாக வாழும் குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.

 

 பண்ணை வீடு என்பது நிலத்துடன் விவசாயப் பழக்கவழக்கங்களை இணைத்து வாழும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கின்றன. சுற்றுச்சூழல் ரீதியாக  பார்த்தால், நீடித்த தன்மையையும் வசதியையும் கருத்தில் கொண்டு, உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும்,. கலாச்சார ரீதியாக பார்த்தால், பண்ணை வீடுகள் இயற்கை மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளின் தொடர்பைக் குறிக்கிறது.

 

6. சால்ஸ்



சால்கள் என்பது குறைந்த செலவில்,  பல குடும்பங்கள் வாழ்வதற்காக கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் ஆகும்.இதை பொதுவாக மும்பையில் காணலாம். இவை பொதுவான நடைப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரு ரூம் கொண்ட பல சிறிய வீடுகள் ஆகும்.  சால்கள் தொழில்துறை வளர்ச்சியின்போது அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாழுவதற்கான தான் முதலில்கட்டப்பட்டன. ஒவ்வொரு சால்கலிளும் ஒரு சிறிய கிச்சன் மற்றும் லிவிங் இடம் இருக்கும்.மேலும் நடைபாதையின் ஓரத்தில் அனைத்து வீடுகளுக்கும் பொதுவான கழிப்பிடங்கள் இருக்கும்.

 

சால்கள் மிகவும் நெருக்கமாக அமைந்திருப்பதால், குடியிருப்பாளர்களிடையே சமூக உணர்வை வளர்க்கிறது. சமூக ரீதியாக பார்த்தால், இவை மும்பை வரலாற்றுக்கும் நகர வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.

 

7. ஸ்டில்ட் வீடுகள்

 



ஸ்டில்ட் வீடுகள் என்பது மரம் அல்லது மூங்கிலை பயன்படுத்தி உயர்த்தி கட்டப்பட்ட வீடுகள் ஆகும். இந்த வீடுகளை அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் காணலாம். இந்த ப்ராஜெக்ட், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பாக வாழவும், மழைக் காலங்களில் வீடுகளை உளர்வாக வைக்கவும் உதவுகிறது. ஸ்டில்ட் வீடுகள் காற்றோட்டத்தை அதிகரிக்கவும், பூச்சி தொற்றின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. இது உள்ளூரில் இருக்கும் பொருள்களை பயன்படுத்துவதால், இவ்வகை வீட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் நிலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

 

சமூக ரீதியாக பார்த்தால், ஸ்டில்ட் வீடுகள் அதிக மழை மற்றும் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

 

8. காட்டெஜ்கள்



காட்டெஜ்கள் என்பது சிறிதான அழகான வீடுகள் ஆகும். இவை கற்கள் அல்லது மரத்தால் கட்டப்படுகின்றன.  இவை மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் காணப்படுகிறது. இது வசதியான மற்றும் அழகிய வாழ்க்கைச் சூழலை தருகிறது. காட்டெஜ்களில் சாய்ந்த கூரைகள், பெரிய விளக்குகள், அழகான பூங்காக்கள் இருக்கும்.

 

இந்த வகை வீடுகள் இயற்கை சூழலோடு இணைந்து, மிதமான வீட்டின் உணர்வை தருகிறது. கலாச்சார ரீதியாக பார்த்தால், காட்டேஜ்கள் எளிய மற்றும் இயற்கை வாழ்வியல் முறையுடன் தொடர்புடையவை. பெரும்பாலும் இவை விடுமுறை வீடுகளாகவோ அல்லது ஓய்வு எடுக்கும் வீடுகலாகவோ பயன்படுத்தப்படுகின்றன

 

9. வரிசையான வீடுகள்



வரிசையான வீடுகள், பொதுவான சுவர்களைக் கொண்டு, ஒரே மாதிரியாக, வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும்.. நிலத்தின் விலை அதிகமாகவும், இடத்தை திறம்பட பயன்படுத்துவது முக்கியமாகவும் இருக்கும் புறநகர் பகுதிகளில், இந்த வீடுகள் பிரபலமாக உள்ளன.. ஒவ்வொரு வீடும் பல மாடிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டின் முற்புறத்திலும் பிற்புறத்திலும் முற்றங்கள்இருக்கும்.

 

வரிசை வீடுகள் சமூக வாழ்க்கைக்கும் தனியுறிமைக்கும் இடையிலான சமநிலையை வழங்குகின்றன. சுற்றுச்சூழல் ரீதியாக பார்த்தால், இதன் வடிவமைப்பு இடத்தை திறம்பட பயன்படுத்தும் வகையில் இருக்கும்., மேலும், வசதிகள் கொண்ட பூங்காக்கள் அல்லது விளையாட்டு மைதானங்கள் போன்ற பொதுவான பொழுதுபோக்கு இடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். சமூக ரீதியாக பார்த்தால், வரிசை வீடுகள் நெருக்கமான சமூக சூழலை ஊக்குவிக்கிறது.

 

10. அரண்மனைகள்



அரண்மனைகள் என்பது பிரமாண்டமான, வரலாற்று சிறப்புமிக்க குடியிருப்புகள். இவை ஒருகாலத்தில் அரசர்கள் வாழும் வீடுகளாக இருந்தன. இந்த கட்டிடங்கள் வளமான கட்டிடக்கலையாலும், பெரிய முற்றங்களாலும், நுணுக்கமான வடிவமைப்புகளாலும் தனிச் சிறந்து விளங்குகிறது. முக்கியமாக ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இவைக் காணப்படும்.இந்த அரண்மனைகள் இந்தியாவின் பழமையான வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கட்டிடக்கலையின் திறமையையும் பிரதிபலிக்கின்றன.

 

இவை பொதுவாக ஜரோகா என்ற மூடிய பால்கனிகள், முற்றங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.. சமூக ரீதியாக பார்த்தால், அரண்மனைகள் அரச கம்பீரத்தையும் வரலாற்றின் முக்கியத்துவத்தையும் குறிக்கின்றன. ஈபோழுது இவை பாரம்பரிய ஓய்விடங்களாகவோ அருங்காட்சியகங்களாகவோ மாற்றப்பட்டுள்ளன.

 

11. ஹவெலிகள்



ஹவெலிகள் என்பது ஒரு காலத்தில் பணக்காரராக இருந்த வியாபாரிகள் மற்றும் பெரிய குடும்பங்கள் வாழ்ந்த பாரம்பரிய மாளிகைகள் ஆகும். இதை பொதுவாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் காணலாம். இந்த வீட்டில் விரிவான முகப்புகள், அலங்கரிக்கப்பட்ட பால்கனிகள் மற்றும் மைய முற்றங்கள் இருக்கும். இதனால் சிறந்து விளங்குகிறது. ஹவெலிகள் பெரிய குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களுக்கான பல நிலைகளும் பிரிவுகளும் இருக்கும்.

 

 சுற்றுச்சூழல் ரீதியாக பார்த்தால், இவை அந்த பகுதியின் கடுமையான காலநிலைக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளன. உட்புறங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க தடிப்பமான சுவர்களும் நிழல் கொண்ட முற்றங்களும்கட்டப்பட்டு இருக்கும். சமூக ரீதியாக பார்த்தால், ஹவெலிகள் முகலாய மற்றும் ராஜ்புத் கட்டிடக்கலையின் இணைப்பை குறிக்கிறது. இதன் உரிமையாளர்களின் வரலாற்று மற்றும் சமூக அந்தஸ்தை இவை பிரதிபலிக்கின்றன.

 

12. லடாகி வீடுகள்



லடாகி வீடுகள் என்பது லடாக் என்னும் குளிர்ந்த பாலைவன பகுதியின் பாரம்பரிய வீடுகளாகும். கல்,மரம், மண் முதலியவற்றை கொண்டு இவ்வகை வீடுகள் கட்டப்படும். இவைக் கடுமையான காலநிலைகளிலும் உயர்ந்த நிலைகளிலும் தாங்கி நிற்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தடிமனான சுவர்கள் குளிரால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கும். மேலும் சமமான கூறைகள் பயிர்களை உலர வைக்கவும் விறகுகளை சேமிக்கவும்பயன்படுத்தபடுகின்றன.

 

லடாகி வீடுகளில்,கிச்சன் மற்றும் லிவிங் இடம் இருக்கும். மேலும் வெப்பத்தை குறைக்க சின்ன ஜன்னல்களும் இருக்கும். சமூக ரீதியாக பார்த்தால்,இந்த வீடுகள் உள்ளூர் மக்களின் வளம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு இருக்கிறது.

 

13. ஹவுஸ்போட்கள்



ஹவுஸ்போட்கள் என்பது கேரளாவில் நீரோட்டமே இல்லாத பகுதியில் மற்றும் காஷ்மீரின் டால் ஏரியில் காணப்படும் மிதக்கும் வீடுகள் ஆகும். இந்த படகுகள் மரத்தையும் தென்னை நார்களையும் பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும். இவை பாரம்பரிய கைவினை பொருள்களையும்  வடிவமைப்புகளையும் கொண்டதாக இருக்கும். கேரளாவில் "கெட்டுவல்லம்" எனப்படும் ஹவுஸ்போட்கள், குடியிருப்புகளுக்கும் சுற்றுலா சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.அமைதியான மற்றும் அழகிய வாழ்க்கை சூழலை வழங்குகிறது.

 

காஷ்மீரில், ஹவுஸ்போட்கள் நிலையாகவும், ஆடம்பரமான குடியிருப்புகள் அல்லது விருந்தினர் வீடுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சமூக ரீதியாக பார்த்தால், ஹவுஸ்போட்கள் அந்த பகுதிகளின் பாரம்பரிய வாழ்க்கை முறையை குறிக்கின்றன மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஈர்ப்பான இடமாக உள்ளன.

 

14. முற்றத்தில் இருக்கும் வீடுகள்



முற்றத்தில் இருக்கும் வீடுகள்என்பது திறந்தவெளி மாயம் அல்லது முற்றத்தில் காட்டப்படும் வீடுகள் ஆகும். இந்த வீடுகள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகமாக இருக்கும். முற்றம் என்பது வீடு முழுவதற்கும் மையமாக செயல்படுகிறது.ஏனெனில் இது  இயற்கை ஒளியையும் காற்றோட்டத்தையும் வழங்கி, குடும்பச் செயல்பாடுகளுக்கான  சிறந்த இடமாகவும் உள்ளது.

 

இந்த வீடுகள் வெப்பமான நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. உள்ளே இருக்கும் பகுதியை குளிர்ச்சியாக வைக்க  நிழல்லாகவும் காற்றோட்டம் உள்ள பகுதியாகவும் இவை வடிவமைக்கப் பட்டிருக்கும் சமூக ரீதியாக பார்த்தால், முற்றத்தில் இருக்கும் வீடுகள் இந்திய குடும்பங்களின் சமூக மற்றும் குடும்ப அமைப்பை பிரதிபலிக்கின்றன. மேலும் வீட்டின் தொடர்பையும் இணைப்பையும் மேம்படுத்துகின்றன..

 

15. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகள் 

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகள் என்பது சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து, நீடித்த தன்மையுடன் இருக்கும் நவீன வீடுகளாகும். இந்த வீடுகள் பசுமை கட்டுமானப் பொருட்கள், மின்சாரத்தை மிச்சப்படுத்தும் திட்டம், மழைநீர் சேகரிப்பு, சூரிய ஆற்றல் போன்ற முறைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்..

 

நகரப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகள், கார்பன் ஃபூட் பிரிண்டை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை தருகிறது. சமூக ரீதியாக பார்த்தால், இவை விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் குறிக்கிறது. மேலும்,இந்தியாவில் நிலையான வாழ்க்கை நடைமுறைகளையும் காட்டுகிறது.


இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு விதமான வீடுகளில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்கள்

 இந்திய வீடுகளின் மாறுபாட்டு, பல்வேறு பகுதிகளில், கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களுடன், நெருக்கமாக இருக்கின்றன. உள்ளூரில் கிடைப்பது, காலநிலை மற்றும் கலாச்சார விருப்பங்களுக்கு ஏற்ப இந்த பொருட்கள் தேர்வு செய்யப்படுகின்றன.


 

வீட்டின் வகை பயன்படுத்தப்படும் பொருட்கள்
குடிசைகள் மண், ஓலை, மூங்கிக்
அபார்த்மன்ட்கள் கான்கிரீட், ஸ்டீல், செங்கல்கள்
பங்களாக்கள் செங்கல், கான்கிரீட், மரம்
வில்லாக்கள் கான்கிரீட், மார்பில், கிரேனைட், கண்ணாடி
பண்ணை வீடுகள் செங்கல், கற்கள், மரம்
சால்ஸ் செங்கல், கான்கிரீட், பிளாஸ்டர்
ஸ்டில்ட் வீடுகள் மூங்கில், மரம்
காட்டேஜ்கள் கள், மரம், ஓலை
வரிசை வீடுகள் செங்கல், கான்கிரீட், ஸ்டீல்
அரண்மனைகள் மணர்கள், மார்பில், விலையுயர்ந்த கற்கள், மரம்
ஹேவளிஸ் செங்கல், லைம் பிளாஸ்டர், மணற்கல், மரம்
லடாக்கி வீடுகள் கல், மரம், மண் செங்கல்கள்
படகுகள் மரம், தென்னை நார்
முற்றத்தில் இருக்கும் வீடுகள் செங்கல், கான்கிரீட், மரம், டெரகோட்டா
சூழலுக்கு ஏற்ற வீடுகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள், மூங்கில், ராம்ட் எர்த், சோலார் பேனல்கள்


இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஸ்டைல்களில் இருக்கும் வீடுகளைப் பற்றி ஆராயும் பொது, காலப்போக்கில் கட்டிடக்கலை எவாறு மாறியுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். குடிசைகளில் இருந்து, பிரம்மாண்ட அரண்மனைகள் வரை, ஒவ்வொரு வீடும், கலாச்சாரம் மற்றும் இயற்கையைப் பற்றி விளக்குகிறது. நகரங்கள் வளர வளர, இந்தியாவிலிருக்கும் நவீன வீடுகள், நகர்புற நிலப்பரப்புகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன. கலாச்சாரத்துடன், தற்கால டிசைன்களில் கட்டமைக்கின்றனர். காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வீடுகளை கட்ட, சரியான பொருள்களைத் தேர்வு செய்வது மிக மிக முக்கியம்.




தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....