வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வீட்டிற்கான வாஸ்து சாஸ்திர விளக்கப்படத்தை பயன்படுத்துவது எப்படி என்பதற்கான முழுமையான வழிகாட்டி:

வாஸ்து ஷாஸ்திரத்தை வீட்டிற்கு பயன்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சமநிலையை அடைவது எப்படி?மேலும், சிறந்த அறை மற்றும் பொருள் வைக்கும் இடங்களைப் பெறுவது எப்படி என்பதை அறியுங்கள்.

Share:


வீடுகளுக்கான வாஸ்து சாஸ்திரம் இந்திய பாரம்பரியமாகும். இது கட்டிட வடிவமைப்புகளையும் இன்டீரியர் அலங்காரங்களையும் இயற்கை எனர்ஜியுடன் இணைக்கிறது. இதன் நோக்கம் இயற்கையுடன் சேர்ந்து அமைதியான வளமான வாழ்வை உருவாக்குவதாகும். இந்த முறையில், 'வீட்டு வாஸ்து வரைபடம்' என்ற கருவியை பயன்படுத்தி உங்கள் வீட்டில் பாஸிட்டிவ் எனர்ஜியையும் சமநிலையையும் உருவாக்க முடியும்.

இந்த வாஸ்து சாஸ்திரம் 'பூமி, நீர், நெருப்பு, காற்று, விண்' என்ற பஞ்ச பூதங்களின் தன்மைகளில் உருவானது என்ற கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இந்த ஐந்து தன்மைகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தினால், ஒரு சக்திவாய்ந்த, பாஸிட்டிவ் எனர்ஜியை உருவாக்க முடியும் என்று வாஸ்து சாஸ்திரம் நம்புகிறது. இந்த எனர்ஜி அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, உடல் நலமும், செல்வமும் கிடைக்க உதவுகிறது.

 

 



முக்கிய குறிப்புகள்

 

  • வாஸ்து சாஸ்திரம், இயற்கை தன்மைகளுடன் இல்லங்களை இணைக்க உதவும் ஒரு பாரம்பரிய இந்திய அறிவியல் ஆகும்.  
 
  • இதன் கொள்கைகள், திசை சீரமைப்பு மற்றும் பஞ்சபூதங்கள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
  • வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்தி ஒரு வீட்டின் அமைப்பை கார்டினல் திசைகள் மற்றும் எனர்ஜியுடன் சீரமைப்பதற்க்கு 'வீட்டு வாஸ்து விளக்கப்படம்’ கருவியாக இருக்கும்.
 
  • வீட்டு வடிவமைப்பில் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செல்வத்தை ஈர்த்து, அமைதியை பெருக்கி, வாழ்வு நிலையை மேம்படுத்தும்.
 
  • வீட்டு வாஸ்து சாஸ்திரம் மாடர்ன் லிவிங் இடத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு கட்டப்படுகிறது. 
 
  • வீட்டில் நல்ல எனர்ஜி மற்றும் சூழலை உருவாக்குவதற்காக வாஸ்து சாஸ்திரத்தின் படி செய்யும் சிறிய மாற்றங்கள் கூட பெரும் பயன்களை தரும்.

வீட்டு வாஸ்து விளக்கப்படம் என்றால் என்ன? 

 வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டு வாஸ்து விளக்கப்படம் முக்கியமானதாகும். இது 360 டிகிரி வாஸ்து விளக்கப்படத்தில் கட்டிடம் மற்றும் அறைகளை அமைப்பதற்கான வழிகாட்டியாக செயல்படுகிறது. இது கட்டிடக்கலையை இயற்கையுடன் இணைக்கும் கொள்கைகளை உடையது. சுற்றுச்சூழலுக்கும் ஒரு வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

 

 

முக்கிய அம்சங்கள்:

 

[1]கட்டவியல் அடிப்படையிலான வரைபடம் 

இந்த வரைபடத்தில் பொதுவாக சதுரங்கள் அல்லது பட்டைகளை பயன்படுத்தி வாஸ்துபடத்தை ஒரு கட்டமாக காட்சிப்படுத்துவார்கள். இது வாஸ்து கொள்கைகளின்படி பல்வேறு ரூம்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான கட்டமைப்பிற்கு சிறந்த இடங்களை வரைபடமாக்குகிறது.

 

2)திசையின் சீரமைப்பு

இந்த விளக்கப்படம் வீட்டின் திசைகள் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அறைகள், கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றின் இடத்தை அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த விதிமுறைகள் செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

 

3) பிரபஞ்ச சக்தியின் ஓட்டம்:

வீட்டில் பிரபஞ்ச சக்தி சமநிலையாகச் செல்வதற்கு பொருத்தமான வடிவமைப்பு இருக்க வேண்டும். இதனால், வீட்டில் வசிப்பவர்களின் உடல் மற்றும் மன நலம் மேம்படும் என்று நம்பப்படுகிறது. 

 

வீட்டு வாஸ்து சாஸ்திர விளக்கப்படம் கட்டிடக் கலைக்கு ஒரு அடிப்படையான ஒன்றாகும். இது கட்டிட சூழலுக்கும்  இயற்கைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும். இதனால் வீட்டிற்கு நல்ல சக்தி, ஆரோக்கியம், செல்வம் ஆகியவைக் கிடைக்கிறது.


வீட்டுக்கான வாஸ்து சாஸ்திர வரைபடத்தில், பஞ்ச பூதங்களின் பங்கு:

 

1. பூமி

பூமியின் காந்தப்புலங்கள் மற்றும் ஈர்ப்பு சக்திகள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் வீட்டின் உறுதிக்கு குறிப்பிட்ட திசைகளை பரிந்துரைக்கின்றனர்.

 

2. நீர் (ஜலம்)

நீர் என்பது ஓட்டம் மற்றும் தூய்மையின் அடையாளமாகும். செல்வம் மற்றும் வளத்தை பெருக்க, நீர் சார்ந்த பகுதிகளை சரியான இடங்களில் அமைக்க வேண்டும்.

 

3. நெருப்பு (அக்னி)

சக்தி மற்றும் எனர்ஜியை பிரதிபலிக்கும் அக்னியின் மூலக்கூறான  சமையலறையையும் மின்சார சாதனங்களையும்  சரியான இடத்தில் வைக்க வேண்டும்..

 

4. காற்று(வாயு)

காற்றின் ஓட்டம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது வெளிச்சமும், ஜன்னல்கள் வைக்கும் இடமும் மிக முக்கியமானவை.

 

5. ஆகாயம்(ஆகாஷ்)

அனைத்து மூலக்கூறுகளையும் கொண்ட நீலநிற ஆகாயம், கட்டிடத்தின் முழுமையான வடிவமைப்பு மற்றும் அமைவுகளை நிர்ணயிக்கிறது.


வீட்டு வாஸ்து விளக்கபடத்தின் முக்கியத்துவம்

 வீட்டு வாஸ்து வரைபடம், அல்லது வாஸ்து புருஷ மண்டலம், கிழக்கு நோக்கி தலை வைத்து படுத்திருக்கும் பிரபஞ்ச மனிதனை பிரதிநிதி செய்யும் சதுர வரைபடம். இது வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை கொள்கைகளை கட்டிடத்தில் பயன்படுத்துகிறது. இந்த கட்ட அமைப்பில் அறைகள், கதவுகள் மற்றும் தளபாடங்கள் ஆகியவை அடங்கும். இது வாழும் இடத்தில் எனர்ஜியை மேம்படுத்தும்.

 

 

1) திசைகளின் முக்கியத்துவம்

ஒவ்வொரு திசையும் குறிப்பிட்ட முக்கியத்துவம் கொண்டது.இது சில  ரூம்களுக்குப் பொருத்தமுள்ள இடத்தையும் கொடுக்கிறது.

 

அ) தெற்கு

இது பெட் ரூம்மிற்கு சிறந்த திசை. ஏனெனில் இது நிலைத்தன்மையையும்  நல்ல உறக்கத்தையும் ஊக்குவிக்கும்.

 

ஆ)தென்மேற்கு

இந்த இடம் சமையலறைக்குப் பொருத்தமானது. ஏனெனில் இது உடல்நலனுக்கும், நெருப்பின் சக்திக்கும், எனர்கஜிக்கும் தொடர்புடையது.

 

இ)கிழக்கு

நுழைவாயில் அமைப்பதற்கான சிறந்த திசை. ஏனெனில் இது வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜியை ஈர்க்கிறது.

 

ஈ)வடகிழக்கு

தியானம் அல்லது பூஜைக்குப் பொருத்தமான இடம், ஏனெனில் வடகிழக்குப் பகுதி தெளிவையும், ஆன்மீக வளர்ச்சியையும் அளிக்கின்றது.

 

 

2) ரூம் அமைப்பின் முக்கியத்துவம்

வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தை சரியாகக் கடைப்பிடிக்கும் போது, ஒவ்வொரு அறைகளிலும் நலன் மற்றும் ஒற்றுமை இடம் பெற்றிருக்கும்.

 

அ) லிவிங் ரூம் 

இது விருந்தாளிகளை வரவேற்கவும், குடும்ப உறவுகளை வளர்க்கவும் உதவுவதால், இதனை வடக்கு அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும். 

 

ஆ)சமையலறை

தென்மேற்கு திசையானது நெருப்பு சக்தியுடன் இனைந்து உடல் ஆரோக்கியத்தையும் ஆர்வத்தையும் மேம்படுத்துகிறது.

 

இ) பெட் ரூம் 

தெற்கு திசை எனர்ஜியை வழங்கி, அமைதியையும் ஆழமான உறக்கத்தையும் கொடுக்கும். 

 

ஈ)கழிவறை

வடமேற்கு திசையில் அமைப்பது சுத்தத்தையும், நெகடிவ் எனர்ஜியை அகற்றுவதையும் உறுதி செய்கிறது.

 

வாஸ்து திசை வரைபடத்தின் படி இந்த அமைப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் சீரான பாஸிட்டிவிடி இருக்கும் வீட்டுச் சூழலை உருவாக்க முடியும்.


வாஸ்து வரைபடத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?

வாஸ்து சாஸ்திரம் என்பது வீட்டின் விதி முறைகளை பின்பற்றுவது மட்டுமல்ல. அதன் அறிவை புரிந்துகொண்டு, சமநிலை, ஆரோக்கியம், வளம் ஆகியவற்றை வாழ்விடங்களில் ஏற்படுத்துவதாகும். இந்த அணுகுமுறை இயற்கை எனர்ஜியை வீட்டுடன் ஒருங்கிணைத்து உடல்நலத்தயும் மன மற்றும் ஆன்மிக நலத்தயும் வழங்குகிறது.

 

மொத்தத்தில், வழிகாட்டியாக செயல்படுகின்ற வாஸ்து வரைபடமானது வீட்டிற்கான பயன்களையும் அழகையும் கொடுக்கும் இடங்களை உருவாக்கும், மேலும் இது இயற்கையின் சக்திகளோடு ஒற்றுமையையும் உருவாக்கி, அமைதியான மற்றும் செழிப்பான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.


வாஸ்து சாஸ்திரத்தின் கோட்பாடுகளை பின்பற்றுவதன் பயன்கள்



வாஸ்து சாஸ்திரம் சார்ந்த விளக்கப்படம் வீட்டிற்கு பல நன்மைகளைக் கொடுக்கும். இது அங்குள்ளவர்களின் உடல்நலம் முதல் செழிப்பு வரையில்  அனைத்தையும் பெருக்கும். இயற்கையின் சக்திகளுக்கும் கட்டிட சூழலுக்கும் இடையில் சீரான சமநிலையை உருவாக்கும் இதனால், வீட்டில் அமைதியையும், ஆற்றலையும் மேம்படுத்தலாம். 

 

அ)ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

வீட்டில் வாஸ்து கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், அங்கு வசிக்கும் அனைவரின் உடல் நலனை மேம்படுத்தும் சூழலை உருவாக்க முடியும்.

 

ஆ)செழிப்பை ஈர்த்தல்

வாஸ்துப்படி இடைவெளிகளின் சீரமைப்பு மற்றும் கட்டமைப்பானது பாஸிட்டிவ் எனர்ஜியையும் செழிப்பையும் ஈர்க்க உதவுகின்றன.

 

இ)அமைதியை அதிகரித்தல் 

வாஸ்து சாஸ்திரம் படி  வாழ்விடங்களையும் இயற்கை சக்திகளையும் இணைப்பது  மன அமைதியை பெருக்க  உதவுகிறது.

 

ஈ)ஆற்றலை அதிகரித்தல்

வாஸ்து கோட்பாடுகளை பின்பற்றுவதன் மூலம், இயற்கை சக்திகள் சமநிலையுடன் இருப்பதால், வீட்டில் மொத்த எனர்ஜியையும் மேம்படுத்த முடியும்.

 

உ)இயற்கையுடன் சமநிலையை ஏற்படுத்துதல்

வீட்டிற்கும் இயற்கையின் சக்திகளுக்கும் இடையிலான தொடர்பை சமநிலையாக்க வாஸ்து கோட்பாடுகள் உதவுகின்றன, இது ஆரோக்கியமான மற்றும் ஒற்றுமையான வாழ்க்கை முறையை உருவாக்குகிறது.


வீட்டுக்கான வாஸ்து வரைபடத்தை பயன்படுத்தும் வழிகள்

வாஸ்து சாஸ்திரம்  வீட்டில் இருக்கும் அமைப்பையும் அமைதியையும்  சமநிலைப்படுத்தும். வீட்டுக்கான வாஸ்து வரைபடத்தை எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது. இந்த வரைபடம் ஒரு எளிய கருவி அல்ல. இது உங்கள் வாழும் இடத்தை இயற்கையுடன் இணைத்து உங்கள் இல்லற வாழ்க்கையை சிறப்பானதாக்கும். வீட்டில் நல்ல எனர்ஜி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வாஸ்து சாஸ்திரத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

 

 

முக்கிய வழிகாட்டுதல்கள்:

 

அ)நுழைவாயில்

சிறந்த நுழைவாயில்கான  இடமானது வடக்கு அல்லது கிழக்கு திசை ஆகும். இது செழிப்பை வரவேற்க உதவுகிறது. 

 

ஆ) லிவிங் ரூம் 

வடகிழக்கு திசை சமூக உறவுகள் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்துகிறது.

 

இ) சமையலறை

தென்கிழக்கு மூலையில் அமைந்திருக்க வேண்டும். இந்த பகுதி நெருப்பு சக்தியுடன் ஒத்துபோகிறது.

 

ஈ)பெட் ரூம் 

மாஸ்டர் பெட் ரூம் தென்மேற்கில் அமைந்தால் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும். கெஸ்ட் ரூமிற்கு வடமேற்குப் பகுதி சிறந்தது.

 

உ) கழிவறை 

கழிவறையை வடமேற்கு பகுதியில் அமைத்தால், நெகட்டிவ் சக்திகள் நீங்கும்.

 

இவை கடினமான விதிகள் அல்ல. ஆனால் வீட்டின் வடிவமைப்பில் பாஸிட்டிவிடி உருவாக்கும் வழிகாட்டுதலாகக் கருதலாம்.


வீடுகளில் வாஸ்து சாஸ்திரத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் பரிகாரங்கள்.



அனைத்து வீடுகளும் வாஸ்து சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்க முடியாது. கட்டிடக்கலை மாற்றங்கள் மற்றும் பாதகங்கமான விளைவுகளைத் தணிக்கக்கூடிய சரிசெய்தல்களும் உள்ளன.

 

அ)கண்ணாடிகள்

கண்ணாடிகள் சக்தி ஓட்டத்தை மறுசீரமைக்க உதவுகின்றன. வடக்கு அல்லது கிழக்கு சுவர்களில் கண்ணாடிகளை வைப்பது பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க உதவும்.

 

ஆ)நிறங்கள்

வீட்டில் உள்ள நிறங்கள் மனநிலைகளையும், சூழலையும் பாதிக்கும். லிவிங் ரூமில் குளிர் நிறங்களும், செயல்பாடுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வெம்மை நிறங்களும் சமநிலையான சூழலை உருவாக்கும்.

 

இ)செடிகள் மற்றும் நீர்நிலைகள்

உள் தாவரங்கள் மற்றும் வடகிழக்குப்  பகுதியில் அமைந்த நீர்நிலைகள் பாஸிட்டிவ் எனர்ஜியையும் வளத்தையும் அதிகரிக்கின்றன.


வாஸ்து சாஸ்திரம் குறித்த பொதுவான தவறான கருத்துக்கள்

வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைத் உடனே சரிசெய்ய வேண்டும்

 

அ)கடினமான விதிகள்

வாஸ்து சாஸ்திரத்தில் கடினமான விதிகள் இருப்பதாக எண்ணப்படுகிறது.  இருப்பினும், இது நவீன வாழ்க்கை முறைகளுக்கு நெகிழ்வான வழிகாட்டியாகும்.

 

ஆ)மூடநம்பிக்கை

பண்டைய நடைமுறைகளில் வாஸ்து சாஸ்திரம் வேரூன்றியிருந்தாலும், வாஸ்துவின் கொள்கைகள் விஞ்ஞான அடிப்படையில் இடஞ்சார்ந்த இணக்கமும் எனர்ஜியையும் கொண்டுள்ளன.



 

வீட்டின் வாஸ்து சாஸ்திர விளக்கப்படத்தைப் பின்பற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன் அன்றாட வாழ்க்கையில் பாஸிட்டிவிடியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முடியும். அதிக முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில் கூட வாஸ்து சாஸ்திரத்தில் பழங்கால ஞானத்தை பயன்படுத்தினால், மனநிறைவு மற்றும் நலத்தை அதிகரிக்க முடியும். இந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப உங்கள் சூழலை முறைப்படுத்தும்போது, உங்கள் வீடு அமைதியும் வளமும் கொண்ட ஒரு குடியிடமாக மாறும்—ஒரு உண்மையான தங்குமிடம் சீரான மற்றும் திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....