Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஸ்லாப் வகைகள்

நீங்க அனுபவம் வாய்ந்த கட்டுமான வல்லுநராக இருந்தாலும் அல்லது ஆர்வமுள்ள வீட்டு உரிமையாளராக இருந்தாலும், இந்த வழிகாட்டி உங்களுக்கேற்றதாகும்! இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தி, கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகை ஸ்லாப்களை குறித்தும், கட்டிட வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் அவற்றைப் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

Share:


பீம்களில் உள்ள ஒன்-வே ஸ்லாப்கள், ரிப்டு ஸ்லாப்கள், வாஃபில் ஸ்லாப்கள், ஃபளாட் பிளேட்ஸ், பபிள் டெக் ஸ்லாப்கள் மற்றும் பலவற்றைப் போன்ற, பல்வேறு வகை ஸ்லாப்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகை ஸ்லாபின் அற்புதமான அம்சங்களையும் பலன்களையும் குறித்து அறிந்துகொண்டு, வெவ்வேறு வகை கட்டிடங்களில் அவற்றின் தனித்துவமான பயன்பாடுகள் குறித்து ஆராய்வோம். வசதியான வீடாக இருந்தாலும் அல்லது மிக உயரமான வணிக கட்டிடமாக இருந்தாலும், ஒவ்வொரு வகை ஸ்லாபும் தனக்கென்று சொந்தமான நன்மைகளையும் நடைமுறை பயன்பாடுகளையும் கொண்டுள்ளன.





கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஸ்லாப் என்றால் என்ன?

கட்டுமானம் என்று வரும்போது, ஸ்லாப் என்பது, ஃப்ளோர், சீலிங் மற்றும் ரூஃப் அமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான, கிடைமட்டமான, மற்றும் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் பொருள் ஆகும். ஸ்லாப்கள் என்பது கட்டிடக் கட்டமைப்பின் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும், மேலும் இது சுவர்கள், தூண்கள் மற்றும் பீம்கள் போன்ற மற்ற கட்டிட அமைப்புகளைச் சுமப்பதற்கான திடமான, நிலையான அடித்தளமாக அமைகிறது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஸ்லாப் வகைகள்

கட்டுமான திட்டங்களில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகை ஸ்லாப்களானது, ஸ்லாபின் நீளம், அது சுமக்கவிருக்கும் பாரம், மற்றும் கிடைக்கக்கூடிய பொருட்கள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இருக்கும். எனினும், பல்வேறு வகை ஸ்லாப்கள் உள்ளன:

1) பீம்களின் மேலே உள்ள ஒன்-வே ஸ்லாப்:

இந்த ஸ்லாப்களானது தூண்களுக்குப் பாரத்தைக் கடத்தும் பேரலல் பீம்களால் சப்போர்ட் செய்யப்படுகிறது. இந்த ஸ்லாப்கள் ஒரு திசையில் மட்டும் பாரத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும், பீம்களுக்கு செங்குத்தாக வலுவூட்டப்பட்டுள்ளன.

2) ஒன்-வே ஜாயிண்ட் ஸ்லாப் (ரிப்டு ஸ்லாப்):

இந்த வகை ஸ்லாபில் சிறிய வலுவூட்டப்பட்ட T-பீம்கள் சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருக்கும், மேலும் அவற்றைத் தூண்கள் அல்லது சுவர்கள் தாங்கிக்கொண்டிருக்கும். T-பீம்கள் விலா எலும்புகளைப் போல் செயல்பட்டு, கூடுதல் விறைப்புத்தன்மையை வழங்கி, தேவையான கான்கிரீட் அளவைக் குறைக்கிறது. பீம்களுக்கிடையிலான இடைவெளியை, எடை குறைவான கான்கிரீட் அல்லது ஹாலோ ப்ளாக்குகளைக் கொண்டு நிரப்பலாம், அவ்வாறு கட்டமைப்பின் ஒட்டுமொத்த எடை குறைகிறது.

3) வேஃபல் ஸ்லாப் (கிரிட் ஸ்லாப்):

வேஃபல் ஸ்லாப், கிரிட் ஸ்லாப் என்றும் அழைக்கப்படும், இது வேஃபல் அல்லது கிரிட் வடிவத்தைப் போன்ற சதுர அல்லது செவ்வக இடைவெளிகளைக் கொண்ட ஒரு இரு வழி வலுவூட்டப்பட்ட கான்கிரீட் ஸ்லாப் ஆகும். இந்த இடைவெளிகள் அல்லது வெற்றிடங்கள் ஸ்லாபின் வலிமை மற்றும் உறுதியையும் பராமரிக்கும் அதே வேளையில் அதன் எடையையும் குறைக்கிறது. இடைவெளிகளுக்கு இடையே உள்ள பீம்கள் விறைப்பான்களாக செயல்பட்டு பாரத்தை தூண்களுக்கு கடத்தும்.

4) ஃப்ளாட் பிளேட்ஸ்:

ஃப்ளாட் பிளேட் ஸ்லாப் என்பது, நேரடியாக தூண்கள் அல்லது சுவர்கள் தாங்கிக்கொள்ளும் ஒரு வழி அல்லது இரு வழி வலுவூட்டப்பட்ட ஸ்லாப் ஆகும். இந்த ஸ்லாப் பொதுவாக மெல்லியதாக இருக்கும், மேலும் இதில் பீம்களோ அல்லது ரிப்களோ இருக்காது. பாரங்களைத் தாங்கிக்கொள்வதற்காக இரு திசைகளிலும் வலுவூட்டப்பட்டிருக்கும். ஃப்ளாட் பிளேட் ஸ்லாப்கள் கட்டுமானத்தில் பயன்படுத்த எளிமையானவை மற்றும் சிக்கனமானவை.

5) ஃப்ளாட் ஸ்லாப்கள்:

ஃப்ளாட் ஸ்லாப்கள் ஃப்ளாட் பிளேட் ஸ்லாப்கள் போன்றதாகும், ஆனால் ஸ்லாபின் பலத்தையும் உறுதியையும் அதிகரிப்பதற்காக தூண்களைச் சுற்றி டிராப் பேனல்கள் இருக்கும். இரு திசைகளிலும் வலுவூட்டப்பட்டிருக்கும், மேலும், ஸ்லாப் நேரடியாகத் தூண்கள் அல்லது சுவர்களால் தாங்கிக்கொள்ளப்படும்.

6) பீம்களின் மேலே உள்ள டூ-வே ஸ்லாப்:

இந்த ஸ்லாப்கள் இரு திசைகளிலும் பீம்களால் தாங்கிக்கொள்ளப்படுகிறது, மேலும் இது இரு திசைகளிலும் பாரங்களைத் தாங்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு திசைகளிலும் வலுவூட்டப்பட்டிருக்கும், மேலும் இந்த ஸ்லாப் பொதுவாக ஒன்-வே ஸ்லாப்களை விட தடிமனாக இருக்கும்.

7) ஹாலோ கோர் ஸ்லாப்:

ஹாலோ கோர் ஸ்லாப் என்பது ஸ்லாப் முழுவதும் வெற்றிடங்கள் அமைக்கப்பட்டு முன்கூட்டியே வார்க்கப்பட்ட கான்கிரீட் ஸ்லாப் ஆகும். அந்த வெற்றிடங்கள் ஸ்லாபின் எடையைக் குறைத்து, அவற்றை எளிதாகக் கையாளவும் வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்லவும் உதவுகிறது. பீம்கள் அல்லது சுவர்களால் ஸ்லாப் தாங்கிக்கொள்ளப்படுகிறது, மற்றும் இரு திசைகளிலும் வலுவூட்டப்பட்டுள்ளது.

8) ஹார்டி ஸ்லாப்:

ஹார்டி ஸ்லாப், புரொஃபைல்டு ஸ்டீல் ஷீட் ஸ்லாப் என்றும் அழைக்கப்படும், இது ஸ்டீல் ஷீட் மற்றும் கான்கிரீட்டால் ஆன ஒரு காம்போசிட் ஸ்லாப் ஆகும். கட்டுமானத்தின் போது ஸ்டீல் ஷீட் ஒரு ஃபார்ம்வொர்க்காகவும், கான்கிரீட் கடினமான பிறகு இழுவிசை வலுவூட்டலாகவும் செயல்படுகிறது. காம்போசிட் ஸ்லாப் அதிக வலிமை-எடை விகிதத்தைக் கொண்டுள்ளது.

9) பபிள் டெக் ஸ்லாப்:

பபிள் டெக் ஸ்லாப் என்பது, ஸ்லாபில் ஹாலோ பிளாஸ்டிக் பந்துகள் அல்லது பபிள்கள் பதிக்கப்பட்ட டூ-வே கான்கிரீட் ஸ்லாப் ஆகும். இந்த பிளாஸ்டிக் பந்துகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆனது, மேலும் அவை ஸ்லாபிற்குள் மேட்ரிக்ஸ் வடிவில் வைக்கப்படும். பபிள்கள் ஸ்லாபில் தேவைப்படும் கான்கிரீட்டின் அளவைக் குறைக்கிறது, அதை லேசானதாகவும் செலவு குறைவானதாகவும் ஆக்குகிறது. பபிள்களால் உருவாக்கப்பட்ட வெற்றிடங்களை, மின்சாரம் சார்ந்த வேலைகளுக்கும், குழாய் அமைக்கும் வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.

10) காம்போசிட் ஸ்லாப்:

காம்போசிட் ஸ்லாப் என்பது, தேவையான பலத்தையும் உறுதியையும் வழங்கும் வகையில் ஒன்றாகச் செயல்படும் இரண்டு அல்லது அதற்கு மேலான பொருட்களால் ஆனதாகும். வழக்கமான காம்போசிட் ஸ்லாப்களில், ஸ்டீல் டெக், ஸ்டீல் வலுவூட்டல் மற்றும் கான்கிரீட் டாப்பிங் இருக்கும். ஸ்டீல் டெக் ஒரு ஃபார்ம்வொர்க்காகவும், இழுவிசை வலுவூட்டலாகவும் செயல்படும், அதே வேளையில் கான்கிரீட் டாப்பிங் இறுக்க வலிமையை வழங்கும்.

11) ப்ரீகாஸ்ட் ஸ்லாப்:

ப்ரீகாஸ்ட் ஸ்லாப்கள் என்பது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு, கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்படும் முன்கூட்டியே வார்க்கப்பட்ட கான்கிரீட் பொருளாகும். இந்த ஸ்லாப்கள் ஒன்-வே அல்லது டூ-வே ஆக இருக்கலாம் மற்றும் பல்வேறு வடிவிலும் அளவிலும் இருக்கும். ப்ரீகாஸ்ட் ஸ்லாப்களை பொதுவாகப் பீம்கள் அல்லது சுவர்கள் தாங்கிக்கொள்ளும் மற்றும் இணைப்பு அமைப்புகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்.

 

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகை ஸ்லாப்களைப் புரிந்துகொள்வது கட்டிட வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

 

கட்டுமானத்தில் ஸ்லாபின் செயல்பாடுகள்

கட்டுமானங்களில் ஸ்லாப்கள் மிகவும் முக்கியமான பொருளாகும், மேலும் அவை பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன:

  • மற்ற கட்டிடப் பொருட்களைத் தாங்குவதற்கான நிலையான அடித்தளத்தை வழங்குகிறது.
  • கட்டிடம் மற்றும் அவற்றில் உள்ளவற்றின் எடையை அடித்தளம் முழுவதும் சீராகப் பரப்புவது.
  • ஃப்ளோர், சீலிங் மற்றும் ரூஃபகளுக்கு சமமான மேற்பரப்பை உருவாக்குவது.
  • தரை மற்றும் சுவர்களுக்கு நிலையான அடித்தளத்தை வழங்குவது.


இது கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகை ஸ்லாப்களின் ஒரு விரிவான விளக்கமாகும். இது ஸ்லாப் என்றால் என்ன என்பதையும், மற்ற கட்டிட பொருட்களுக்கு நிலையான அடித்தளத்தை வழங்குவது எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்குகிறது. எந்தவொரு கட்டுமானத் திட்டத்திலும் சரியான ஸ்லாப் வகையைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும், மேலும், நீளம், பாரம், நிதிநிலை, மற்றும் கட்டுமான முறை உட்பட, பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த வழிகாட்டி, ஸ்லாப்களைப் பற்றிய விரிவான புரிதலைப் பெறவும், உங்கள் அடுத்த திட்டத்திற்கான சிறந்த ஸ்லாப் வகையைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவைப் பெற்றிருக்கவும் உதவுகிறது.



தொடர்புடைய

கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....