Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


ஒரு வீட்டிற்கான ஃபவுண்டேஷன்களைக் கட்டுவதற்கான படிப்படியான வழிகாட்டி

கட்டுமான உலகில், ஒரு வீட்டிற்கான ஃபவுண்டேஷன்களைக் கட்டுவதிலிருந்து அனைத்தும் தொடங்குகிறது. இந்த வழிகாட்டியில், உங்கள் வீட்டிற்கான வலிமையான மற்றும் நிலையான பேஸை உருவாக்குவதற்கு அவசியமான படிநிலை ஒவ்வொன்றையும் நாம் காண்போம். வீட்டு ஃபவுண்டேஷன்களின் உலகத்திற்குள் சென்று, உங்களின் கனவு இல்லங்களை நினைவாக்கத் தொடங்குவோம்.

Share:


வீட்டின் ஃபவுண்டேஷனைக் கட்டுவது எந்தவொரு வீடு கட்டுமானத் திட்டத்தின் மிகவும் முக்கியமான பகுதி ஆகும், ஏனெனில் அது வீட்டின் மொத்தப் பாரத்தையும் தாங்குகிறது. சரியாகக் கட்டப்படாத ஃபவுண்டேஷன் காரணமாகச் சுவர்கள் மற்றும் ஃப்ளோர்களில் விரிசல் ஏற்படலாம் மற்றும் ஷிஃப்ட் ஆகலாம், இதன் விளைவாகக் கட்டமைப்பு சார்ந்த சேதம் ஏற்படலாம். அதனால்தான், சரியான வீட்டு ஃபவுண்டேஷனைக் கட்டுவதற்கு கவனமான திட்டமிடல், பொருத்தமான மெட்டீரியல்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது மற்றும் படிப்படியான துல்லியமான செயல்படுத்தல் தேவைப்படுகிறது. இந்த வழிகாட்டி, ஆரம்ப சைட் தயாரிப்பு முதல் இறுதியில் கான்கிரீட் ஊற்றுவது வரை, வீட்டு ஃபவுண்டேஷன் கட்டுவதற்கான முழு செயல்முறையையும் உங்களுக்கு விளக்கும். சரியான நுட்பங்கள் மற்றும் மெட்டீரியல்களைப் பயன்படுத்தி, பல ஆண்டுகளுக்கு வீட்டைத் தாங்கி நிற்கக்கூடிய ஒரு உறுதியான, நீடித்து நிலைக்கக்கூடிய ஃபவுண்டேஷனை உங்களால் கட்ட முடியும்.



ஒரு வீட்டின் ஃபவுண்டேஷன் என்றால் என்ன?



பில்டிங் ஃபவுண்டேஷன்கள் என்பது எந்தவொரு வீட்டின் அல்லது கட்டிடத்தின் மிகவும் முக்கியமான கட்டமைப்பு கூறு ஆகும், ஏனெனில் இது கட்டமைப்பின் மொத்த பாரத்தையும் தாங்கி, அதைப் பாதுகாப்பாகக் கீழே உள்ள நிலத்திற்குக் கடத்துகிறது. இது வீட்டின் சுவர்கள், ஃப்ளோர்கள், ரூஃப், யுடிலிட்டிகள் மற்றும் வசிப்பவர்களின் மொத்த எடையையும் தாங்கி நிற்கும் பேஸாக அமைகிறது. கட்டமைப்பு பாரங்களைக் கீழே உள்ள மண்ணுக்குள் சமச்சீராக வழங்குவதன் மூலம் நிலைத்தன்மையை வழங்குவதே ஃபவுண்டேஷன்களின் முக்கியமான நோக்கமாகும். ஃபவுண்டேஷன்களைக் கட்டும்போது, காலப்போக்கில் பெரிய விரிசல்கள் மற்றும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய, கட்டிடத்தின் சீரற்ற செட்டில்மெண்ட்டை இது தடுக்கிறது.

 

குடியிருப்பு கட்டுமானத்தில் முக்கியமாக இரண்டு வகை ஃபவுண்டேஷன்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை ஷாலோ மற்றும் டீப் ஃபவுண்டேஷன் ஆகும். ஷாலோ ஃபவுண்டேஷன்கள் கிட்டத்தட்ட 1.5 மீட்டர்கள் அல்லது அதை விட குறைவான ஆழம் வரை மட்டுமே செல்லும், மேலும் அவை ஒரு குடும்பத்திற்கான வீடுகள் மற்றும் குறைவான உயரம் கொண்ட கட்டிடங்களுக்கு ஏற்றதாகும். அவற்றில் ஸ்பிரெட் ஃபூட்டிங்ஸ், மேட் ஸ்லாப்கள், ஃப்ளோட்டிங் ஸ்லாப்கள் முதலியன அடங்கும். டீப் ஃபவுண்டேஷன்கள் 1.5 மீட்டர் ஆழத்தையும் தாண்டி ஆழமான மண் அல்லது அடிப்பாறைக்குள் வரை செல்லும். அவை அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் பலவீனமான அல்லது நிலையற்ற மண்ணில் கட்டப்படும் வீடுகளுக்கு தேவை. பைல்ஸ், பியர்ஸ் மற்றும் கைசன்ஸ் உள்ளிட்டவை பொதுவான டீப் ஃபவுண்டேஷன் அமைப்புகளாகும். வீட்டு ஃபவுண்டேஷன்களின் வகையானது, மண்ணின் நிலைமைகள், கட்டிடத்தின் பாரம் மற்றும் கட்டுமானத்தின் பட்ஜெட்டைச் சார்ந்திருக்கும். சரியாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஃபவுண்டேஷன், வீட்டை நிலையாகவும், பாதுகாப்பாகவும், செட்டில்மெண்ட் பிரச்சனைகள் ஏற்படாமலும் வைத்திருக்கிறது.

 

அவை அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் பலவீனமான அல்லது நிலையற்ற மண்ணில் கட்டப்படும் வீடுகளுக்கு தேவை. பைல்ஸ், பியர்ஸ் மற்றும் கைசன்ஸ் உள்ளிட்டவை பொதுவான டீப் ஃபவுண்டேஷன் அமைப்புகளாகும். வீட்டு ஃபவுண்டேஷன்களின் வகையானது, மண்ணின் நிலைமைகள், கட்டிடத்தின் பாரம் மற்றும் கட்டுமானத்தின் பட்ஜெட்டைச் சார்ந்திருக்கும். சரியாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஃபவுண்டேஷன், வீட்டை நிலையாகவும், பாதுகாப்பாகவும், செட்டில்மெண்ட் பிரச்சனைகள் ஏற்படாமலும் வைத்திருக்கிறது.


ஃபவுண்டேஷனுக்கு தேவையான கருவிகள் மற்றும் மெட்டீரியல்கள்



உங்களின் வீட்டு ஃபவுண்டேஷன் திட்டத்தைத் தொடங்குவதற்கு, தேவையான கருவிகள் மற்றும் மெட்டீரியல்களைச் சேகரிக்கவும்:

 

1. தோண்டுவதற்கான மண்வெட்டி

2. கடினமான நிலப்பரப்பிற்கான கோடரி

3. கான்கிரீட் வேலைக்கான டிரவல்

4. துல்லியத்திற்கான ஸ்பிரிட் லெவல்

5. குறியிடுவதற்கான மெஷரிங் டேப்கள், கயிறு மற்றும் பெக்ஸ்

6. பொருட்களை எடுத்துச்செல்வதற்கான வீல்பாரோ

7. ஃபார்ம்வார்க்கிற்கான மரப்பலகைகள்

8. திறம்பட கலக்குவதற்கான கான்கிரீட் மிக்ஸர்

9. வலிமைக்கான ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீல்

10. தாங்குசுவர்களுக்கான கான்கிரீட் ப்ளாக்ஸ்

11. வடிகாலுக்கான சரளைக்கல்

12. மிக்ஸிங் மற்றும் கியூரிங்கிற்கானக் கட்டுமான மண், சிமெண்ட் மற்றும் சுத்தமான தண்ணீர்

 

இவை, உங்கள் கனவு இல்லத்திற்கு நம்பகமான ஃபவுண்டேஷன்களைக் கட்டுவதற்கு தேவையான அடிப்படை கருவிகள் மற்றும் மெட்டீரியலகள் ஆகும்.


ஃபவுண்டேஷன் கட்டுமானத்திற்கான படிநிலைகள்/செயல்முறை

நீங்கள் எப்போதாவது ஒரு வீட்டு ஃபவுண்டேஷனைப் படிப்படியாகக் கட்டுவது எப்படி என்று யோசித்திருந்தால், இந்த முக்கியமான கட்டுமான நிலைக்கான தெளிவான வழிகாட்டுதல்களை உங்களுக்கு வழங்கும் ஃபவுண்டேஷன் கட்டுமான செயல்முறையைக் காண்போம்.

 

 

1) சைட்டைத் தேர்ந்தெடுப்பது



ஃபவுண்டேஷன்களைக் கட்டும்போது சரியான சைட்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். நல்ல பாரம் தாங்கும் திறன் கொண்ட நிலையான, இறுக்கமான மண் உள்ள சைட்களைத் தேர்ந்தெடுக்கவும். ஷிஃப்ட் மற்றும் செட்டில் ஆகக்கூடிய லூஸ் ஃபில் அல்லது மணல் போன்ற மண்ணைத் தவிர்க்கவும். சைட்டில் வெள்ளம் வராததை அல்லது நீர் மட்டம் அதிகமாக இல்லாததை உறுதி செய்யவும், ஏனெனில் அவை வீட்டின் ஃபவுண்டேஷன் மீது அழுத்தத்தை உண்டாக்கும். சைட்டை நன்றாக ஆய்வு செய்து, தோண்டுவதை மற்றும் ஃபவுண்டேஷன் வேலையைத் தடுக்கக்கூடிய நிலத்தடி கேபிள்கள், பைப்கள், அல்லது பெரிய மர வேர்கள் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் ஃபவுண்டேஷன் சுவர்கள் மற்றும் ஃபூட்டிங்கை மர வேர்கள் சேதப்படுத்தலாம்.

 

 

2) தோண்டுதல்



ஃபவுண்டேஷன்களைக் கட்டும் செயல்முறையில், நீங்கள் சைட்டை இறுதி செய்ததும், கயிறு, பெக்ஸ் மற்றும் ஸ்பிரே பெயிண்ட் பயன்படுத்தி வீட்டின் ஃபவுண்டேஷன் லேயவுட்டைத் துல்லியமாகக் குறிக்கவும். பிறகு, திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டைமென்ஷன்கள் மற்றும் ஆழத்தின் படி ஃபவுண்டேஷன் குழிகள் மற்றும் ஃபூட்டிங்ஸைத் தோண்டவும். மண்ணின் வகை மற்றும் கட்டிடத்தின் பாரம் அடிப்படையில் தோண்டும் ஆழம் தீர்மானிக்கப்படும். மணலான அல்லது லூஸான மண்ணிற்கு ஆழமான ஃபூட்டிங் தேவை ஆகும். பள்ளத்தில் சரியான சரிவு மற்றும் வடிகால் இருப்பதை உறுதி செய்யவும். எதிர்கால செட்லிங்கைத் தடுப்பதற்காக, கான்கிரீட் போட தொடங்குவதற்கு முன் தோண்டப்பட்ட மண்ணை சமன் செய்து, நன்றாக இறுகச்செய்யவும். இறுக்கம் ஒரு நிலையான பேஸை வழங்குகிறது.

 

 

3) கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்



மர கட்டுமானம் மற்றும் வீட்டு ஃபவுண்டேஷன்களை கரையான்கள் அழித்து, பேரழிவை உண்டாக்கலாம். எனவே, கான்கிரீட் ஊற்றுவதற்கு முன் ஃபவுண்டேஷன் குழிகளுக்கு பக்கங்களில் மற்றும் அடியில் இரசாயன கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்டைப் பயன்படுத்தவும். கரையான்கள் ஃபவுண்டேஷனுக்குள் நுழைவதற்கு முன் இந்த ட்ரீட்மெண்ட் ஒரு இரசாயன தடுப்பை உருவாக்கி அவற்றை விரட்டுகிறது மற்றும் நீக்குகிறது. ஃபவுண்டேஷன்களைக் கட்டும் செயல்முறையில், மண் வகை மற்றும் நிலத்தடி நீர் இருப்பு அடிப்படையில் பொருத்தமான கரையான் கொல்லியைத் தேர்வு செய்யவும். ட்ரீட்மெண்ட்டைப் பயன்படுத்தும்போது தயாரிப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

 

 

4) தோண்டிய மண்ணை இறுகச்செய்தல்



தோண்டிய மண்ணை இறுகச்செய்வதென்பது ஃபவுண்டேஷனைக் கட்டுவதற்கு முன் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான படிநிலை ஆகும். குழிகளைத் தோண்டிய பிறகு, ஹேண்ட் டேம்பர் அல்லது மெக்கானிக்கல் ப்ளேட் காம்பாக்டர் பயன்படுத்தி அடியில் உள்ள மண்ணை இறுகச்செய்யவும். இறுகச்செய்வது மண் துகள்களை ஒன்றாக அழுத்தி, அடர்த்தியையும் பாரம் தாங்கும் திறனையும் அதிகரிக்கிறது. சீரான இறுக்கத்தை அடைய காம்பாக்டரைப் பல முறைப் பயன்படுத்தவும். இறுகச்செய்யும்போது மண் ஈரமாக இருக்க வேண்டும். ஃபவுண்டேஷன்களைக் கட்டும்போது இது எதிர்கால செட்லிங்கைத் தடுத்து, ஃபவுண்டேஷனுக்கான நிலையான பேஸை வழங்குகிறது.

 

 

5) வுடன் ஃபார்ம்வார்க்

 



கான்கிரீட்டை ஊற்றுவதற்காக ஃபவுண்டேஷன் குழிகளின் உட்புற சுற்றளவில் மரப்பலகைகள் அல்லது பிளைவுட்டை அமைக்கவும். கான்கிரீட் ஊற்றப்படும்போது பல்ஜ் ஆவதைத் தடுக்க ஃபார்ம்வர்க்கில் சரியான குறுக்குச்சட்டம் அமைக்கவும். ஃபார்ம்வர்க்கின் மூலைகள் செங்குத்தாகவும் நேராகவும் இருப்பதை உறுதி செய்ய ஸ்பிரிட் லெவல்களைப் பயன்படுத்தவும். கான்கிரீட் ஒட்டாத வகையில் ஃபார்ம்வர்க்கின் மீது ரிலீஸ் ஏஜெண்டை பயன்படுத்தவும். ஃபார்ம்வர்க் திரவ நிலை கான்கிரீட்டைக் கொண்டுள்ளது, சீரான ஃபினிஷை வழங்குகிறது மற்றும் சரியான ஃபவுண்டேஷன் டைமென்ஷன்களைப் பராமரிக்கிறது.

 

 

6) ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீல் (ரீபார்) வேலை

 



ஸ்டீல் ரீபார் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் கான்கிரீட் ஃபவுண்டேஷன் சுவர்கள் மற்றும் ஃபூட்டிங்ஸின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. ஃபவுண்டேஷனைக் கட்டும்போது, ரீபார் வடிவமைப்பு மற்றும் லேயவுட்டிற்காகக் கட்டமைப்பு பொறியாளரிடம் கலந்தாலோசிப்பது அவசியமாகும். கான்கிரீட் ஊற்றுவதற்கு முன் வடிவமைப்பின் படி ரீபார்களை வைக்கவும். ரீபார் கேஜை ஒரு இடத்தில் நிலைநிறுத்த ப்ளாஸ்டிக் அல்லது மெட்டல் பார் நாற்காலிகளைப் பயன்படுத்தவும். ரீபார் நாற்காலிகள் ஸ்டீலின் மீது முறையான இடைவெளி மற்றும் கான்கிரீட் கவரை வழங்குகிறது. ரீபார்கள் டென்ஸைல் பாரங்களைத் தாங்கி, கான்கிரீட்டில் விரிசல்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. சரியான ரீபார் அளவு, இடைவெளி மற்றும் ஓவர்லாப்களை உறுதி செய்யவும்.

 

 

7) ஃபூட்டிங்கிற்குள் கான்கிரீட்டை ஊற்றுதல்



பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர்-சிமெண்ட் விகிதத்தின்படி உயர்தரமான கான்கிரீட் மிக்ஸைத் தயார் செய்யவும். ஃபவுண்டேஷன் குழிகளுக்குள் தொடர்ச்சியாக 18-24 அங்குலங்களில் கான்கிரீட்டை ஊற்றவும். கான்கிரீட்டை அழுத்தி, ஃபவுண்டேஷனை பலவீனமடையச் செய்யும் காற்று வெற்றிடங்களை நீக்க டேம்பிங் ராடைப் பயன்படுத்தவும். ஒரு நல்ல ஃபினிஷிற்காக மேற்பரப்பை டிரவல் பயன்படுத்தி சமப்படுத்தவும் மற்றும் சீராக்கவும். ஃபவுண்டேஷன்களைக் கட்டும்போது தண்ணீர் ஊற்றுவதன் மூலம் குறைந்தது 7 நாட்களுக்கு கான்கிரீட்டை கியூர் செய்ய வேண்டும். முறையாக ஊற்றுவது மற்றும் கியூரிங்கின் விளைவாக வலிமையான, நிலையான ஃபவுண்டேஷன் கான்கிரீட் கிடைக்கும். நல்ல நடைமுறைகளுக்காக தொழில்முறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


நல்ல ஃபவுண்டேஷனின் தேவை என்ன?

 

பில்டிங் ஃபவுண்டேஷன்கள், அதுவும் குறிப்பாக நல்ல ஃபவுண்டேஷன்கள், பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன:

 

1. கட்டமைப்பு பாரங்களைச் சமச்சீராக நிலத்திற்குள் கடத்துகிறது

 

2. கட்டிடத்தின் விரிசல்கள் மற்றும் செட்டில்மெண்ட்டைத்தடுக்கிறது

 

3. பெரிய கட்டமைப்புகளுக்கு வலிமையான, நிலையான பேஸை வழங்குகிறது

 

4. நிலத்தின் அசைவால் ஏற்படும் விளைவுகளைத் தாங்குகிறது

 

5. உயர்தரமான கான்கிரீட் மற்றும் முறையான ரீபார் ரீயின்ஃபோர்ஸ்மெண்டால் ஆனது

 

6. உறைவதனால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதற்காக ஃப்ராஸ்ட்லைனுக்குக் கீழ் நீள்கிறது.



சரியான ஃபவுண்டேஷன் கட்டுமான படிநிலைகளைப் பின்பற்றுவது, சரியான மெட்டீரியல்களைப் பயன்படுத்துவது மற்றும் உறுதியான நுட்பங்களைச் செயல்படுத்துவதன் மூலம், உங்களால் எளிதாகப் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கக்கூடிய உங்கள் வீட்டிற்கான வலுவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய ஃபவுண்டேஷனைக் கட்ட முடியும். வீட்டு ஃபவுண்டேஷனைக் கட்டும்போது, சரியான சைட்டைத் தேர்வு செய்வதில், முழுமையான மண் பரிசோதனையை மேற்கொள்வதில், தேவையான அளவுகளில் தோண்டுவதில், உறுதியான ஃபார்ம்வர்க்கை அமைப்பதில், முறையாக வலுவூட்டுவதில், உயர்தரமான கான்கிரீட்டை ஊற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஃபவுண்டேஷன்களைக் கட்டும் ஒவ்வொரு நிலையிலும் உன்னிப்பாக இருந்து, சிக்கனம் செய்ய முயற்சிக்காதது, உங்கள் வீட்டைப் பல தலைமுறைகளுக்கு தாங்கி பாதுகாக்கக்கூடிய உறுதியான பேஸுக்கு வழிவகுக்கும்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....