வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



10 கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பில்டிங் மெட்டீரியல்களின் வகைகள்

வீடு அல்லது எதாவது கட்டமைப்பைக் கட்டுவது மகிழ்ச்சியானதாகும், ஆனால், இவை அனைத்தும் சரியான பில்டிங் மெட்டீரியல்களைத் தேர்வு செய்வதுடன் தொடங்குகிறது. கட்டுமான துறை தனித்துவமான பண்புகள் மற்றும் நோக்கங்களுடன் உள்ள பல மெட்டீரியல்களை வழங்குகிறது. இந்த கட்டுரையில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பத்து வகை பில்டிங் மெட்டீரியல்களை நாம் காண்போம்.

Share:


ஸ்டீல், சிமெண்ட், கான்கிரீட், ரெடி மிக்ஸ் கான்கிரீட், பைண்டிங் வயர்ஸ், வுட், ஸ்டோன், செங்கல் ப்ளாக்ஸ் மற்றும் அக்ரிகேட் போன்ற பல்வேறு பில்டிங் மெட்டீரியல்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்படும் இந்த ஒவ்வொரு பில்டிங் மெட்டீரியல்களும், அவற்றை குறிப்பிட்ட வகை பயன்பாடுகளுக்கு ஏற்றதாக்கும், எடை, ஆற்றல், நீண்ட ஆயுள் மற்றும் விலை போன்ற பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன. ஒரு திட்டத்திற்கான கட்டுமான பொருட்களைத் தேர்வு செய்வது அதன் செலவு மற்றும் கட்டமைப்பு எதிர்கொள்ளும் ஃபோர்ஸ்கள் மற்றும் அழுத்தங்களைத் தாங்கும் அதன் திறனைச் சார்ந்ததாகும்.



கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களின் வகைகள்

பில்டிங் மெட்டீரியல்கள் பொதுவாக இரண்டு ஒரிஜின்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: இயற்கையானது மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டது. எனினும், அவை இரண்டையும் கட்டுமானத்தில் பயன்படுத்துவதற்கு முன் தயாரிக்கவோ அல்லது பதப்படுத்தவோ வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களின் பட்டியல் பின்வருமாறு:

 

1) ஸ்டீல்



ஸ்டீல் என்பது இரும்பு மற்றும் கார்பனிலிருந்து உருவாக்கப்பட்ட வலுவான உலோகமாகும், இதை இரும்பை விட இன்னும் வலுவானதாகவும், சேதம் ஏற்படாததாகவும் ஆக்க மற்ற மெட்டீரியல்களுடன் கலக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் கூடுதலாக குரோமியம் இருப்பதால் அது அரிமானம் மற்றும் ஆக்ஸிடேஷனை எதிர்க்கிறது. அது எடை அதிகமாக இருந்தாலும், அதன் அற்புதமான வலிமை காரணமாக நவீன கட்டிடங்கள் மற்றும் பெரிய தொழிலக கட்டுமானங்களின் முதன்மை தேர்வாக உள்ளது.

 

2) சிமெண்ட்



சிமெண்ட் என்பது கெட்டியாகி மற்ற மெட்டீரியல்களுடன் ஒட்டிக்கொண்டு அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள உதவும் முக்கியமான பில்டிங் மெட்டீரியல் ஆகும். இது வழக்கமாக தனியாக பயன்படுத்தப்படாது; மாறாக மணல் மற்றும் சரளைக்கல்லுடன் கலக்கப்படும். கட்டிடங்கள் கட்டுவதில் செங்கற்கள் மற்றும் ஸ்டோன்ஸுக்கு பயன்படுத்தப்படும் மோர்டாரை உருவாக்குவதற்காக பெரும்பாலும் மணலுடன் சிமெண்ட் கலக்கப்படும். மணல் மற்றும் சரளைக்கல்லுடன் கலக்கும்போது, அது பல்வேறு கட்டுமான திட்டங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பன்முக மெட்டீரியலான கான்கிரீட் ஆகிறது. திடமாகி பிணைக்கும் திறனை கொண்டிருப்பதால் இது கட்டுமானத்தின் மூலைக்கல்லாக இருந்து, கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்பதை உறுதி செய்கிறது.

 

3) கான்கிரீட்



கான்கிரீட் என்பது சரளைக்கல், பொடியாக்கப்பட்ட கல், மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட் மற்றும் சிந்தடிக் மெட்டீரியல்கள் போன்ற சிறிய மற்றும் பெரிய பீஸ்களை கலக்குவதன் மூலம் உருவாக்கப்படும் சிறப்பு கட்டுமான பொருள் ஆகும். இந்த பீஸ்கள் உலரும்போது படிப்படியாக கெட்டியாகும் சிமெண்ட் போன்ற லிக்விட் பைண்டருடன் ஒட்டிக்கொள்ளும். பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான சிமெண்ட் வகை போர்ட்லாண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படும், இது சுண்ணாம்பு கல் மற்றும் களிமண்ணைச் சுட்டு ஜிப்சமைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் போர்ட்லாண்ட் சிமெண்ட்டை தண்ணீர் மற்றும் இந்த அக்ரிகேட்ஸுடன் கலக்கும்போது, அது கான்கிரீட் என்று அழைக்கப்படும் திடமான பொருளாக மாறும். இந்த வலுவான மெட்டீரியல் நம்மை சுற்றியுள்ள பல கட்டமைப்புகளுக்கான அடிப்படையாக அமைகிறது.

 

4) ரெடி மிக்ஸ் கான்கிரீட்



ரெடி மிக்ஸ் கான்கிரீட் என்பது சைட்டிற்கு வெளியே ஒரு ஆலையில் தயாரிக்கப்பட்டு, முன்பே கலக்கப்பட்டு பயன்படுத்த தயாராகக் கட்டுமான தளத்திற்கு கொண்டுவரப்படும் ஒரு வசதியான பில்டிங் மெட்டீரியல் ஆகும். இது ஒரு கான்கிரீட் ஆலையில் துல்லியமாக அளவிட்டு கலக்கப்பட்ட செமெண்ட், மணல் மற்றும் சரளைக்கல் போன்ற அக்ரிகேட்ஸ், மற்றும் தண்ணீரின் கலவையாகும். பயன்படுத்த தயாராக உள்ள கலவை நிலைத்திறன் மற்றும் தரத்தை உறுதி செய்கிறது, கட்டுமான தளங்களில் நேரம் மற்றும் உழைப்பை மிச்சப்படுத்துகிறது. ஒப்பந்ததாரர்கள் வெறுமனே அதை மோல்டு அல்லது ஃபார்ம்வர்க்கில் ஊற்றி, துல்லியமான ப்ளேஸ்மெண்ட் மற்றும் கூரிங்கை அனுமதிக்கலாம். அவ்வப்போது, கான்கிரீட்டைக் கையாள்வதை எளிதாக்குவதற்கு அல்லது அது கெட்டியாகும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, அட்மிக்ஸ்சர் என்று அழைக்கப்படும் கூடுதலான ஒரு பொருள் சேர்க்கப்படும், இது கட்டுமான தளத்திற்கு எடுத்துச்செல்வதைத் திறன்மிக்கதாக்கும்.

 

5) பைண்டிங் வயர்



வெவ்வேறு காம்போனென்ட்களை பாதுகாப்பாக ஒன்றிணைத்து வைக்க உதவுவதன் மூலம், கட்டுமானத்தில் பைண்டிங் வயர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறிப்பாகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இணைப்பு புள்ளிகளில் ரீயின்ஃபோர்ஸிங்க் பார்களை (ரீபார்கள்) கட்ட பயனுள்ளதாக இருக்கிறது. பைண்டிங் வயர் வழக்கமாக லேசான ஸ்டீலிலிருந்து உருவாக்கப்படுகிறது.

 

1. கட்டுமானம் சார்ந்த பைண்டிங் வயர் (நேராக்கப்பட்ட கட் வயர்)

இந்த வயர் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் கட்டுவதற்காக, கட்டுமான நோக்கங்களுக்கு ஏற்றதாகும்.

 

2. கருப்பு அன்னியல்டு பைண்டிங் வயர்

இந்த வயர் கையாள்வதற்கு எளிதாக இருப்பதாலும், இறுக்கமாக பிடித்துக்கொள்வதை உறுதி செய்வதாலும், தினசரி கட்டும் தேவைகளுக்கு ஏற்றதாகும்.

 

3. கால்வனைஸ்டு அயர்ன் பைண்டிங் வயர்

அரிமான எதிர்ப்புத்திறன் கொண்ட இந்த வயர் நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் நீடித்து நிலைக்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும்.

 

4. சிறிய காயில் ரெபர் வயர்

கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகக் குறிப்பாக ரீபார்களைக் கட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

5. டை லூப் டை வயர்

கட்டுமானத்தில் பரவலான கட்டும் பயன்பாடுகளுக்கு பன்முகமானது மற்றும் பயனுள்ளது.

 

6. பேக்கிங்கிற்கான பைண்டிங் வயர்

மெட்டீரியல்கள் மற்றும் சரக்குகளைப் பாதுகாப்பதற்காக பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது.

 

7. U வகை பைண்டிங் வயர்

U வடிவத்தில் உள்ள இந்த வயர், குறிப்பிட்ட கட்டும் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

8. கால்வனைஸ்டு வயர்

துருவுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது, வெளிப்புற பயன்பாட்டிற்கு ஏற்றது.

 

9. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வயர்

அரிமான எதிர்ப்புத்திறன் கொண்ட இந்த வயர் வெளிப்புற மற்றும் கடல் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும்.

 

10. பித்தளை வயர்

அதன் வலிமை மற்றும் அரிமான எதிர்ப்புக்கு பெயர்போன இது, பொதுவாகப் பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

11. அலுமினியம் வயர்

எடை குறைவானது மற்றும் அரிமான எதிர்ப்புத்திறன் கொண்ட இது, எடை சார்ந்த குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும்.

 

12. PVC கோட் செய்யப்பட்ட வயர்

கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது மற்றும் அதன் காலநிலை எதிர்ப்புத்திறன் காரணமாக வெளிப்புறத்தில் மற்றும் கடினமான சுற்றுச்சூழலில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

6) வுட்



வுட் என்பது மரங்களில் இருந்து கிடைக்கும் பன்முகமான இயற்கை பில்டிங் மெட்டீரியல் ஆகும் மற்றும் பல நூற்றாண்டுகளாக நம்பிக்கையான கட்டுமான பொருளாக உள்ளது. இது பல வகைகளில் கிடைக்கும், அவை ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்டிருக்கும். வுட் என்பது அதன் வலிமை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அழகிய தோற்றத்திற்காக மதிக்கப்படும் ஒரு கட்டுமானப் பொருள் ஆகும், எனவே இது கட்டுமான துறையில் கட்டுமானத்திற்காக, ஃபர்னிச்சருக்காக, ஃப்ளோரிங்கிற்காக மற்றும் எண்ணற்ற பிற பயன்பாடுகளுக்கான பிரபலமான தேர்வாக உள்ளது. இது லும்பர், டிம்பர், பலகைகள் மற்றும் ப்ளாங்க்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களில் வெட்டி அல்லது அழுத்தப்பட்டு கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

இதன் மறுசுழற்சி இயல்பு இதைக் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாகவும் ஆக்குகிறது. FSC (வனப் பொறுப்பாளர் கவுன்சில்) சான்றளிப்பு மூலமாக வுட் பெறப்படும்போது, உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கும் அதே வேளையில் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஊக்குவிக்கப்பட்டு, காடுகள் நிலையான முறையில் நிர்வகிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.

 

7) கல்



கல் என்பது பல நூற்றாண்டுகளாகப் புவியியல் செயல்முறைகள் மூலம் உருவான ஒரு இயற்கையான பில்டிங் மெட்டீரியல் ஆகும். இது கிரானைட், சுண்ணாம்புக்கல், மார்பிள் மற்றும் பல்வேறு வகைகளில் வருகிறது, அவை ஒவ்வொன்றும் தனித்துவமான நிறங்கள் மற்றும் டெக்ஸ்சர்களைக் கொண்டுள்ளன. ஸ்டோன்ஸ் என்பது கட்டிடங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில், ஃபவுண்டேஷன்கள், சுவர்கள், ஃப்ளோரிங் மற்றும் அலங்கார அமைப்புகளுக்காக கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பில்டிங் மெட்டீரியல்கள் ஆகும். அதன் உறுதி மற்றும் கடுமையான காலநிலைகளைத் தாங்கி நிற்கும் திறன் காரணமாக ஸ்டோன் மெட்டீரியல் கட்டுமானத்திற்கான பிரபலமான தேர்வு ஆகிறது மற்றும் நீடித்து நிலைக்கும் செயல்திறனையும் கிராமிய அழகியலையும் உறுதி செய்கிறது.

 

8) செங்கல்



செங்கல் என்பது கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் பழமையான மற்றும் மிகவும் முக்கியமான பில்டிங் மெட்டீரியல் ஆகும். அவை வழக்கமாக களிமண்ணை சூளையில் சுடுவதன் மூலம் கிடைக்கிறது. சுவர்கள், கட்டிடங்கள் கட்டுவதற்கு மற்றும் பல்வேறு மேசனரி கட்டுமானங்களுக்கு செங்கற்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. அவை பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் நிறங்களில் கிடைக்கின்றன மற்றும் அவை பன்முகமான வடிவமைப்புகளை அனுமதிக்கும் வகையில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள் ஆகும். அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் இன்சுலேட் செய்யும் பண்புகளால், செங்கற்கள் கட்டுமான துறையில் காலத்தின் சோதனையை கடந்து நிற்கும் கட்டுமான பொருட்களாகும், மேலும் அவை கட்டிடக்கலை திட்டங்களுக்கு வலிமையையும், தரமான, பாரம்பரிய தோற்றத்தையும் வழங்குகிறது.

 

9) ப்ளாக்ஸ்



ப்ளாக்ஸ் என்பது கான்கிரீட், களிமண் அல்லது ஏரேட்டட் கான்கிரீட் போன்ற மெட்டீரியல்களில் இருந்து உருவாக்கப்பட்ட மாடுலர் கட்டுமானம் ஆகும். இந்த யூனிட்கள் வடிவம் மற்றும் அளவில் வேறுபடும், அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கட்டுமான தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவர்கள், பார்டீஷன்கள் மற்றும் கட்டுமான திட்டங்களில் உள்ள கட்டமைப்பு கூறுகளில் இவை ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. ப்ளாக்ஸ் என்பது அவற்றின் வலிமை, நிலைத்தன்மை மற்றும் எளிதான இன்ஸ்டலேஷனுக்கு பெயர்பெற்றவை என்பதா, அவை குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான சிறந்த தேர்வாகிறது.

 

10) அக்ரிகேட்ஸ்



அக்ரிகேட்ஸ் என்பது வழக்கமாக சரளைக்கல், பொடியாக்கப்பட்ட கல், மணல் அல்லது கான்கிரீட் மற்றும் அஸ்ஃபால்ட் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட மெட்டீரியல்களை உள்ளடக்கியதாக, கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் குருணை வடிவ மெட்டீரியல்களாகும். இந்த காம்போனென்ட்கள் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பல்வேறு கட்டுமான திட்டங்களுக்கான ஃபவுண்டேஷனல் பில்டிங் ப்ளாக்ஸாக செயல்படுகிறது. அக்ரிகேட்ஸ் கட்டுமான சப்போர்ட்டை வழங்குகிறது, எடையைப் பரவலாக்குவதற்கு உதவி, கான்கிரீட் மற்றும் அஸ்ஃபால்ட் கலவைகளின் வலிமையை மேம்படுத்துகிறது. பல அளவுகள் மற்றும் வகைகளில் கிடைப்பதால், குறிப்பிட்ட கட்டுமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அக்ரிகேட்ஸைத் துல்லியமாக பயன்படுத்தலாம்.

 

வீடு கட்டுவதென்று வரும்போது, கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் சரியான கட்டுமான பொருட்களைத் தேர்வு செய்வது முக்கியமாகிறது. அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் சிமெண்ட், கான்கிரீட் மற்றும் ரெடி மிக்ஸ் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட பல கட்டுமான மெட்டீரியல்களை வழங்குகிறது. இந்த பன்முகமான ஆப்ஷன்களுடன், உங்களின் கட்டுமான தேவைகளுக்கான சரியான மெட்டீரியலை உங்களால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.



கட்டுமான உலகில், மெட்டீரியல்கள் குறித்த தகவலறிந்த தேர்வுகள் அவசியமாகும். கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பில்டிங் மெட்டீரியல்களின் பண்புகள் மற்றும் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வது, பாதுகாப்பான, நம்பகமான கட்டுமானங்களுக்கு வழிவகுக்கும் தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ள உதவும். இந்த முடிவுகள் வீடுகளின் உறுதி, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் தோற்றத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் புது வீடு கட்டுகிறீர்கள் அல்லது மறுசீரமைப்பு செய்கிறீர்கள் என்றாலும் சரி, சரியான தேர்வுகள் கட்டுமான துறையில் வெற்றியை உறுதி செய்கிறது.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....