கட்டுமானத்தில் அடிக்கல்களின் பயன்பாடுகள்
அடிக்கற்கள் கட்டுமானத் ப்ராஜெக்ட்களில் அடிப்படை அங்கங்களாக உள்ளன. மேலும் பல்வேறு அடிக்கல் வகைகள் கட்டிடங்களின் கட்டமைப்பு, முழுமைத்தன்மை மற்றும் நீடித்த தன்மையை உறுதி செய்யும் முக்கிய செயல்பாடுகளை ஆற்றுகின்றன. அவற்றின் பயன்பாடுகள் கட்டிடத்தின் வகை, சுற்றுச்சூழல் நிலைகள் மற்றும் மண் பண்புகளின் அடிப்படையில் மாறுபடும். கட்டுமானத்தில் அடிக்கற்கள் செய்யும் முக்கிய பங்களிப்புகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1) எடைப் பகிர்வு
அடிக்கல்களின் முதன்மை செயல்பாடு கட்டிடத்தின் மேல் இருக்கும் எடையை நிலத்தின் ஆழம் முழுவதும் சமமாகப் பகிர்ந்தளிப்பதாகும். இது கட்டிடம் எந்த ஒரு நிலையிலும் அதிக அழுத்தத்தைப் பெறாமல் பார்த்துக்கொள்கிறது. இது மண் சரிவு அல்லது அடித்தளப் பிழை ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும்.
2)வெவ்வேறு மணல்களில் நிலைத்தன்மையுடன் நிற்க வேண்டும்:
ஒவ்வொரு மண்ணின் வகையிலும் எடையைத் தாங்கும் திறன் மாறுபட்டதாக இருக்கும். அதனால், அடிக்கற்கள் மண்ணின் நிலைக்கு ஏற்ப சரிசெய்யப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. அடிக்கல்களை ஆழமாக வைத்து உறுதியான மண்ணில் செல்வதற்காகவும், பரவலான மற்றும் அகலமான அடிக்கல்களை பயன்படுத்தி குறைந்த உறுதியுள்ள மண்ணில் சுமையை சீராகப் பரப்புவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
3) அடித்தள சரிவையும் தாழ்வையும் தடுத்தல்:
கட்டிடத்தின் முழுத் தளத்திலும் எடையைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதன் மூலம், கட்டிடங்கள் தவறாகக் கீழே இறங்குவதையும் சரிவதையும் இந்த அடிக்கற்கள் தடுக்கின்றன. இது மென்மையான, நிலைத்தன்மையற்ற மண்ணுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் சரியான அடிக்கற்கள் இல்லையென்றால் கட்டிடங்கள் சாயவோ, உடையவோ அல்லது மொத்தமாக இடிந்து கீழே விழவோ வாய்ப்புகள் உண்டு.
4) கடுமையான சுற்றுச்சூழலுக்கு எதிராக கட்டிடங்களை நிலைநிறுத்துதல்:
கட்டிடத்தின் அடித்தளங்களில் போடப்படும் அடிக்கற்கள், நிலையான எடையை மட்டுமல்லாமல், காற்று, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற கடுமையான ஆபத்துக்களில் இருந்தும் கட்டிடங்களை நிலைநிறுத்த வேண்டும். சரியான அடிக்கற்கள் வைத்து வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள், இந்த ஆபத்துகளால் இடம் மாறாமல் அல்லது கீழே விழாமல் பாதுகாப்பாக நிற்கும்.
5) ஈரப்பதத்திலிருந்து உயர்வு
அடிக்கல்களை கட்டும்போது, அவை கட்டிடத்தின் அடித்தளத்தை உயர்வடையச் செய்கின்றன. இதனால், மழை அல்லது நிலத்தின் ஆழத்தினால் ஏற்படும் நீரின் ஈரத்தைத் தடுக்க முடிகின்றது. இது நீர் சேதம் மற்றும் பூஞ்சை பிரச்சினைகளைத் தவிர்க்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
6) மற்ற கட்டுமானக் கூறுகளுக்கான அடித்தளங்கள்:
சுவர்கள், தூண்கள், ஸ்லாப்கள் போன்ற பலவேற கட்டுமான கூறுகளின் அடித்தளத்தை வலுவாக்க இந்த அடிக்கற்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இவை அனைத்தும் சரியாக வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து, முழு கட்டமைப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
7) சாய்ந்த நிலப்பரப்பிற்கு ஏற்றபடி செயல்படுதல்
மலைப்பகுதிகள் அல்லது குன்றான இடங்களில், அடிக்கல்களின் வகைகள், கட்டிடங்களுக்கு சமமான மேடைகளை உருவாக்க உதவுகின்றன. இந்த அடிக்கல்கள், குன்றின் கோணத்தை சமம்செய்து, குன்றான இடங்களில் பாதுகாப்பான கட்டுமானத்தை செய்ய உதவுகின்றன. இதனால், கட்டிடம் காலத்திற்கும் நிலையாகவும் சமமாகவும் நிற்கும்.
8)கட்டுமான விதிகள் மற்றும் தரங்கள்
கட்டுமானத்தில், அடிக்கல்கள் லோக்கல் கட்டுமான விதிகள் மற்றும் தரங்களுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படுகின்றன. இந்த விதிகள், பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நீடித்த தன்மைக்கு தேவையான அடிப்படை தேவைகளை உள்ளடக்கியிருக்கும். இதன் மூலம், கட்டிடங்கள் எதிர்பார்க்கப்படும் சுமைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளை எதிர்கொள்ளக் கூடியவாறு கட்டப்படுகின்றன. இதனால், வாழும் மக்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதியாக இருக்கும்.