1. திட்டம் குறித்த கலந்துரையாடல்கள்:
வெவ்வேறு திட்ட கலந்துரையாடல்கள் தொடர்பான அனைத்து கூட்டங்களிலும் கட்டிடக் கலைஞர்களையும் ஈடுபடுத்த வேண்டும். இந்த கலந்துரையாடல்களில் வாடிக்கையாளரின் ஆரம்பக்கட்ட தேவைகளைப் புரிந்துகொள்வது அடங்கும். திட்டத்தின் எதிர்பார்ப்புகளைக் கவனமாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் தேவைகளின் அடிப்படையில் பட்ஜெட்டைத் திட்டமிடலாம். கட்டிடக் கலைஞருடனான மற்ற கலந்துரையாடல்கள் பின்வருமாறு:
அ. சைட்டின் வரம்புகள் மற்றும் பண்பு
ஆ. நிதி பட்ஜெட்கள் மற்றும் இலக்குகளைக் கலந்துரையாடுதல்
இ. தேவையின் அடிப்படையில் சைட் மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு தேர்வு
ஈ. தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கு திட்டமிடப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட நடைமுறைகள் இணக்கமாக வைக்கப்பட்டுள்ளன
2. வரைபடங்கள்:
கட்டுமான திட்டங்களுக்கான வடிவமைப்புகளை வரைவதே கட்டிடக் கலைஞரின் மிகப்பெரிய பணி ஆகும். வீடுகள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பலவற்றை வரைவது மற்றும் வடிவமைப்பதில் அவர்கள் நிபுணர்களாகும். வாடிக்கையாளர்கள் கற்பனை செய்யும் வடிவமைப்புகளையும் அவர்களால் வரைய முடியும். கட்டுமானம் மேற்கொள்ளப்படும் இடத்தைச் சார்ந்து பல்வேறு கட்டுமான சட்டங்களின் தேவைகளை அனைத்து வரைபடங்களும் பூர்த்தி செய்ய வேண்டும். அத்தகைய ஒழுங்குமுறைகளில் தீ ஒழுங்குமுறைகள், கட்டிட விதிமுறைகள், கட்டிடத்தின் ஸ்டைல்கள், கட்டுமானம் நடைபெறும் கட்டமைப்புகள் மற்றும் அஞ்சல் குறியீடுகள் உள்ளிட்டவை அடங்கும்.
3. செலவு மதிப்பீடு:
செலவு மதிப்பீடு, கட்டிடக் கலைஞரின் மற்றொரு முக்கியமான பணி ஆகும். வடிவமைப்புகளில் வேலை செய்து, பணியின் வெவ்வேறு கட்டங்களைப் புரிந்துகொள்ளும் அதே வேளையில், திட்டத்தின் பட்ஜெட்டைத் தயாரிக்கக் கட்டிடக் கலைஞர் உதவலாம். ஒருவேளை, பட்ஜெட்டை வாடிக்கையாளர் பொறுப்பேற்க தயாராக இல்லை என்றால், கட்டிடக் கலைஞர் அவர்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும்.
4. கட்டுமான ஒப்பந்தங்கள்:
கட்டுமானத்தின் வெவ்வேறு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்ததாரரைக் கட்டிடக் கலைஞர் தேர்வு செய்யலாம். டெண்டரைப் பெற்ற பிறகு, கட்டிடக் கலைஞர் ஒரு டெண்டர் பகுப்பாய்வு அறிக்கையை மேற்கொள்வார். கட்டிடக் கலைஞர் ஈடுபடும் வேலையின் வகை, ஒப்பந்தத்தைச் சார்ந்ததாகும். கட்டிடக் கலைஞர் எந்த பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வாடிக்கையாளருடனான ஒப்பந்தம் தீர்மானிக்கும். முடிக்கப்பட்ட பணியுடன் தொடர்புடைய பேமெண்ட்களைச் சரிபார்க்க மாத இறுதியில் இன்வாய்ஸ்களைச் சரிபார்ப்பதும் கட்டிடக் கலைஞர்களின் பணி ஆகும்.
5. ஒப்பந்ததாரர்களை வேலைக்கு எடுப்பது:
கட்டிடக் கலைஞர் மற்ற கட்டிடப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும். எனவே, சைட்டில் வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களைக் கட்டிடக் கலைஞர் தேர்வு செய்வது சிறந்ததாகும். பணிக்கு ஏற்ற சரியான நிபுணர்களைக் கட்டிடக் கலைஞர் தேர்வு செய்வார் என்பதால் வாடிக்கையாளருக்கு அது எளிதாகிவிடுகிறது.
6. ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல்:
கட்டிடக் கலைஞர்கள், உடன் பணியாற்ற விரும்பும் சரியான ஆட்களைப் பணியில் சேர்த்த பிறகு, வடிவமைப்பை விளக்கி, பணியின் முன்னேற்றத்தை மேற்பார்வையிட்டு, வடிவமைப்பு நன்றாகச் செயல்படுத்தப்பட்டதை உறுதி செய்வதன் மூலம் பணி உறவைப் பராமரிப்பது முக்கியமாகும். ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷன்கள், பொறியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் தங்களின் பணியைச் சரியாகச் செய்ய உதவும் வகையில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதே கட்டிடக் கலைஞர்களின் பணி ஆகும்.
7. ஆக்கப்பூர்வமான மற்றும் புதிய யோசனைகளைக் கொண்டுவருதல்:
கட்டிடக் கலைஞரின் வேலை ஒவ்வொரு கட்டிடத்தையும் மற்ற கட்டிடங்கள் போலவே மறுஉருவாக்கம் செய்வதல்ல. இது திட்டத்தின் அழகு மற்றும் தோற்றத்தைக் குறித்ததும் ஆகும். குறிப்பிட்ட கட்டிடங்கள் குறிப்பிட்ட வடிவங்களில் தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன, மேலும் கவர்ச்சிகரமான பது வடிவமைப்புகளைப் பரிந்துரைப்பது கட்டிடக் கலைஞரின் பணி ஆகும்.
8. வாடிக்கையாளர்களுடன் இணைந்து வேலை செய்தல்:
கட்டிடக் கலைஞர்கள் வாடிக்கையாளர்களின் சார்பாக வேலை செய்து, கட்டுமானம் நடைபெறும் மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும். அவர்கள் அனுமதி பெறுவதற்காக வடிவமைப்பின் வரைபடத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
9. மேற்பார்வை:
எல்லாவற்றிற்கும் மேலாக, திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத்தில் கட்டிடக் கலைஞர்கள் மேற்பார்வைப் பணியை மேற்கொள்கிறார்கள். இது அவர்களின் வடிவமைப்பு என்பதால், என்ன தேவை, என்ன தவறு நடக்கலாம் மற்றும் அதை எப்படி சரி செய்வதென்பது அவர்களுக்கு தெரியும்.