2) ப்ராஜெக்ட்டை நிர்வகித்தல்:
கான்ட்ராக்டர்கள் ப்ராஜெக்ட்டை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கை வகிக்கின்றனர், கட்டுமானத்தில் நடக்கும் அனைத்ததையும் கண்காணிக்கின்றனர். அவர்களின் பொறுப்புகள்:
1. கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை நிர்வகித்து, அதற்கு தேவையான நிதிகளை சரி பார்ப்பது.
2. ஒவ்வொரு வேலைகளையும் முடிக்கத் தேவையான திறமையுள்ள சிறு கான்ட்ராக்டர்கள் மற்றும் தனி நபர்களை வேலைக்கு எடுப்பது.
3. ப்ராஜெக்ட்டை செயல்படுவதற்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் பிற சேவைகளை சரி பார்ப்பது.
4. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்காக, கழிவு நீக்க முறைகளை செயல்படுத்துவது.
5. காண்ட்ராக்ட் டாக்குமன்ட்ஸின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பில் தயாரித்து சமர்ப்பிப்பது.
3) ப்ராஜெக்டை கண்காணித்தல்:
ப்ராஜெக்ட்கள் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுகிறதா, தரம் எவ்வாறு இருக்கிறது, பாதுகாப்பு வழிகாட்டுதல்படி நடைபெறுகிறதா என்பதை கான்ட்ராக்டர்கள் கவனமாக கண்காணிப்பார்கள். அவர்களின் கண்காணிப்பு பொறுப்புகளில் இவை அடங்கும்:
1. மாற்றங்கள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ப்ராஜெக்ட் ப்ரோக்ராம்களை அடிக்கடி சரி பார்த்து, தவறுகள் இருந்தால் திருத்தி, அப்டேட் செய்வார்கள்.
2. வளங்களை மேம்படுத்தவும் செயல்திறனை அதிகரிக்கவும் பொருளாதார கட்டுமான முறைகளைப் பயன்படுத்துவார்கள்.
3. அவ்வப்போது பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை கண்காணித்து, பிரச்சனைகளை சரிசெய்து வேலை பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பான சூழலை அமைத்து கொடுப்பார்கள்.
4) சட்டம் மற்றும் ஒழுங்குமுறை:
முழு கட்டுமானத்திலும் சட்டப்பூர்வமான ஒழுங்குகளைப் பின்பற்றுவது கான்ட்ராக்டர்களின் முக்கிய பொறுப்பாகும். அதாவது,
1. கட்டுமானதிற்கான அனுமதி விண்ணப்பங்களை சரிபார்த்து, ஒழுங்குமுறை நிபந்தனைகளைப் பின்பற்றுதல்.
2. ப்ராஜெக்ட் சட்ட ஒழுங்குமுறைபடி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
3. கட்டுமானத்திற்குத் தேவையான அனுமதிகள், லைசன்ஸ் மற்றும் சான்றிதழ்களைப் பெறுதல்.