வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கழிவுநீர் தொட்டிக்கான வாஸ்து சிறந்த நல்வாழ்வுக்கான இடத்தை அமைக்க விரிவான வழிகாட்டி

கழிவுநீர் தொட்டிக்கான வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் கழிவுநீர் தொட்டிக்கான இடத்தை சரியாக அமைத்து, வீட்டில் எவ்வாறு நல்ல எனர்ஜி ஓட்டத்தை மேம்படுத்தி நலத்தைப் பெறுவது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

Share:


முக்கியக் குறிப்புகள் 

 

  •  வாஸ்து சாஸ்திரப்படி கழிவுநீர் தொட்டியை சரியான இடத்தில் அமைத்தால் வீட்டில் பாசிடிவ் எனர்ஜி மற்றும் உடல் நலம் மேம்படும். தவறான இடத்தில் அமைத்தால் உடல்நல பிரச்சினைகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஏற்படலாம்.
 
  • எனர்ஜி ஓட்டத்திற்கு வடமேற்கு மற்றும் தென்மேற்கு திசையின் தெற்கு பகுதி பரிந்துரைக்கப்படுகிறது. வடகிழக்கு அல்லது வடமேற்கு மூலைகள் வடக்கு நோக்கிய வீடுகளுக்கு ஏற்றது.
 
  • வடகிழக்கின் கிழக்கு திசையில் உள்ள ""ஈஷான்"" மூலை புனிதமானது என்பதால், அங்கே கழிவுநீர் தொட்டியை அமைக்கக் கூடாது. அது கடுமையான வாஸ்து குறைகளைக் கொண்டுவந்துவிடும்.
 
  • பெட் ரூம் எண்ணிக்கையின் அடிப்படையில் கழிவுநீர் தொட்டியின் அளவை அளவிட வேண்டும். இதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு சரியாக நடைபெறும், பராமரிப்பு எளிதாகவும் இருக்கும்.


ஒரு இடத்தில் இருக்கும் எனர்ஜி ஓட்டத்தின் முக்கியத்துவத்தை வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. கழிவுநீர் தொட்டியின் இடத்தை வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றி அமைத்தால், உங்கள் வீட்டின் நலனும் வீட்டில் குடியிருப்பவர்களின் நலனும் மேம்படும். கழிவுநீர் தொட்டியை வாஸ்து படி வைப்பது சிறிதாக தெரியலாம், ஆனால் வாஸ்து படி கழிவுநீர் தொட்டியின் அமைப்பு வீட்டில் வசிப்பவர்களின் நல் வாழ்வில் தாகத்தை ஏற்படுத்துகிறது. வாஸ்து படி, கழிவுநீர் தொட்டிக்கான வழிகாட்டுதல்களைப் புரிந்துக் கொண்டு, வீட்டில் சம நிலை கொண்ட சூழலை உருவாக்கலாம்.

 

 


வாஸ்து படி கழிவுநீர் தொட்டி வைக்கும் இடத்தின் முக்கியங்கள்

 வாஸ்து படி கழிவுநீர் தொட்டியை வைப்பது முக்கியமாகும். ஏனெனில் இதில் கழிவு மற்றும் தேவை இல்லாத பொருள்கள் இருப்பதனால் நெகடிவ் எனர்ஜியை தரும். இதை தவறான இடத்தில் வைத்து விட்டால் பாஸிட்டிவ் எனர்ஜியை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும். உடல் நல பிரச்சினைகளையும் நிதி பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். வீட்டின் அமைதியில் நெகடிவான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், வாஸ்து படி கழிவுநீர் தொட்டியை அமைத்தால், நெகடிவ் எனர்ஜி கட்டுபடுத்தப்பட்டு, வீட்டின் வாஸ்துவை முறிக்காமலும் இருக்கும்.

 

திசை 1: வடமேற்கு

கழிவுநீர் தொட்டிக்கான வாஸ்து படி பார்த்தால், கழிவுநீர் தொட்டியை அமைப்பதற்கு வடமேற்கு சிறந்த இடமாகும். உங்கள் வீட்டின் திசை எதுவாக இருந்தாலும், எனர்ஜி ஓட்டம் மற்றும் சமநிலை மேம்பட, கழிவுநீர் தொட்டியை வடமேற்கு மூலையில் வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

 

திசை 2: தென்மேற்கில் இருக்கும் தெற்கு 

மற்றொரு திசை, தென்மேற்கில் இருக்கும் தெற்கு ஆகும். கழிவுநீர் தொட்டிக்கான வாஸ்து படி, இந்த திசையும் கழிவுநீர் தொட்டியை அமைக்க சிறந்த திசை. இந்த திசை உங்கள் வீட்டின் எனர்ஜியை பாதிக்காமல் நெகட்டிவ் எனர்ஜியைத் தடுக்கும்.

 

திசை 3: வட கிழக்கு அல்லது வட மேற்கு

வடக்கை நோக்கி இருக்கும் வீட்டின் நுழைவாயில் அருகில் கழிவுநீர் தொட்டியை அமைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, பொருத்தமான இடங்களாக கருதப்படும் வடகிழக்கு அல்லது வடமேற்கு மூலைகளில் அமைத்தால் பாஸிட்டிவ் எனர்ஜி ஓட்டத்தை மேம்படுத்த முடியும். கழிவுநீர் தொட்டியுடன் தொடர்புடைய தோஷங்கள் அதாவது நெகடிவ் எனர்ஜியை தடுக்கவும் இது உதவுகிறது.

 

திசை 4: தடைசெய்யப்பட்ட திசை 

வாஸ்து படி வடமேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள தெற்கு திசை, கழிவுநீர் தொட்டிக்கு ஏற்ற திசையாக இருந்தாலும், வடகிழக்கு திசையில் உள்ள கிழக்கில் கழிவுநீர் தொட்டியை அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த இடம் "ஈஷான்" மூலை எனப்படும் புனிதமான இடமாகும்.  எனவே இந்த திசையில் கழிவுநீர் தொட்டியை அமைக்க கூடாது.



வாஸ்து படி கழிவுநீர் தொட்டிக்கான அளவு



அனைத்து வகையான தண்ணீர் தொட்டியும் வீட்டின் அளவை பொறுத்து வெவ்வேறு அளவுகளை கொண்டிருக்கும். அதே போல, கழிவுநீர் தொட்டியின் அளவு பெட் ரூம் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. வீட்டின் கழிவுநீர் தொட்டிகள், கழிவை அகற்றுகிறதா என்பதை உறுதி செய்து சரியாக பராமரிக்க வேண்டும். ழிவுநீர் தொட்டியை எளிமையான முறையில் பராமரித்து பழுதுபார்க்க, சரியான அளவில் அவற்றை கட்டமைக்க வேண்டும். இது கழிவு நீர் சுத்திகரிப்பின் செயல்பாட்டை உறுதி செய்யும்.

 

பெட் ரூமின் எண்ணிக்கை செப்டிக் டேங்க் அளவு
2 வரை 3,000 லிட்டர்
3 4,500 லிட்டர்
4 6,500 லிட்டர்
5 அல்லது அதற்கும் மேல் 7,500 லிட்டர்

 

கழிவுநீர் தொட்டியின் வாஸ்து திசையை போலவே, கழிவுநீர் தொட்டியின் அளவும் மிக முக்கியமாகும். இதன் தவறான அளவு வாஸ்து தோஷங்கள் அல்லது மற்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் பெரிய கழிவுநீர் தொட்டி வளங்களை வீணடிக்கும். சிறிய கழிவுநீர் தொட்டி உடல் நலத்திலும் நிதிகளிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

 

 

வாஸ்து படி கழிவுநீர் தொட்டியின் அமைப்பில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை



கழிவுநீர் தொட்டிக்கான வாஸ்து சாஸ்திரம் படி செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்:

 

செய்ய வேண்டியவை

  • கழிவுநீர் தொட்டி, வீட்டின் எந்த சுவர்களையும் தொடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் இது நெகட்டிவ் எனர்ஜியை இடமாற்றும்.
 
  • கழிவுநீர் தொட்டியின் அவுட்லெட் குழாய்களை வடக்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
 
  • கழிவுநீர் தொட்டியின் அவுட்லெட் கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
 
  • கழிவுநீர் தொட்டிற்கும் எல்லைச் சுவருக்கும் இடையே குறைந்தது இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும்.

 

செய்யக்கூடாதவை

  • கழிவுநீர் தொட்டியை நேரடியாக தலை வாசலுக்கு முன் அல்லது நீர் ஆதாரங்களுள்ள இடமான ஆழ்துளை கிணறு அல்லது நிலத்தடி தொட்டி போன்ற இடங்களின் அருகில் அமைக்க வேண்டாம்.
 
  • கழிவுநீர் தொட்டிக்கு மேல் சமையலறை, பூஜை அறைகள் அல்லது படுக்கையறைகளை வைக்க வேண்டாம்.
 
  • தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் கழிவுநீர் தொட்டியை கட்ட வேண்டாம். ஏனெனில் இது வாஸ்து குறைபாடுகளை உருவாக்கி ஆரோக்கியத்தை பாதிக்கும்.
 
  • வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசைகளில் கழிவுநீர் தொட்டியை அமைக்க வேண்டாம். ஏனெனில் இது நெகட்டிவ் பாதிப்பை ஏற்படுத்தி, குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும்.

 

வாஸ்து படி இருக்கும் கழிவுநீர் தொட்டியின் அமைப்பு, பாஸிடிவ் எனர்ஜியின் ஓட்டத்தை பராமரிப்பதோடு, கழிவுநீர் மேலாண்மை அமைப்பை திறமையாக செயல்படவும் வைக்கிறது.



 

கழிவுநீர் தொட்டிக்கான வாஸ்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சரியான திசை, அளவு, மற்றும் அமைப்பைத் தேர்வு செய்வதன் மூலம், செழிப்பான வாழ்விடத்தை உருவாக்க முடியும். இது மொத்த வீட்டின் நலனையும் மேம்படுத்தும். கழிவுநீர் தொட்டியை வாஸ்து கொள்கைகளுடன் இணைப்பதன் மூலம் ஆரோக்கியமான, வளமான மற்றும் சீரான வீட்டை அமைக்க முடியும். இதனால் வீட்டில் மகிழ்சியாக இருக்கலாம்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....