வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



தென்புறம் நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

வாஸ்து விதிகளின் படி தெற்கு நோக்கிய வீடுகளை எப்படி செழிப்பாக மாற்றுவது என்பதை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சின்ன விஷயங்களும் சமநிலை, பாசிடிவ்ட்டி மற்றும் ஆரோக்கியத்தை வீட்டிற்குள் கொண்டு வரும்.

Share:


முக்கியக் குறிப்புகள் 

 

  • தென்புறம் நோக்கிய வீடுகள் அதிருஷ்டமற்றவை அல்ல. சரியான வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால், மற்ற எந்த திசையில் உள்ள வீடுகளுக்கும் இணையாக செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும் வண்ணம் இந்த வீடும் இருக்கும்.
 
  • முகப்பு கதவை தென்புறம் நோக்கிய சுவரின் வலது பக்கத்தில் அமைத்தால், வீட்டுக்குள் பாசிடிவ் எனர்ஜியை வரவழைத்து, அமைதியையும் செழிப்பையும் ஏற்படுத்த முடியும்.
 
  • வீட்டின் வடகிழக்கு பகுதியில் நிலத்தடி நீர் தொட்டியை அமைப்பது, வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும். 
 
  • தெற்குத் திசை மற்றும் மேற்கு சுவர்களைத் தடிமன் மற்றும் உயரமாக கட்டுவதனால், வீட்டை நெகடிவ் எனர்ஜியிடம் இருந்து பாதுகாக்கின்றது. மேலும் கட்டமைப்புக்கு நிலைத்தன்மை மற்றும் வலிமையைச் சேர்க்கின்றது.
 
  • தென்கிழக்கு பகுதியில் சமையலறையை அமைப்பது, நெருப்பு தன்மையைச் சரியாகப் பயன்படுத்துவதால், ஆரோக்கியம் மற்றும் உயிர்த்தன்மையை ஊக்குவிக்கிறது. தென்மேற்கு பகுதியில் மாஸ்டர் பெட்ரூமை அமைப்பது நிலைத்தன்மை, அமைதியான உறக்கம் மற்றும் உறவுகளுக்கான ஒற்றுமையை கொடுக்கிறது.
 
  • தெற்கு மற்றும் தென்கிழக்கு நோக்கிய வீடுகள் பற்றிய தவறான கருத்துக்களை முறியடிக்கும் பொது, இதன் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்ள முடியும். இது வெறும் திசை அல்ல; செழிப்பு மற்றும் ஆரோக்கியத்தை வழங்க கூடிய ஆற்றல்.


வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகள், எவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக வீட்டை திட்டமிடுவது என்பதற்கான சிறந்த வழியை கண்டறிய உதவுகின்றன. தெற்கு நோக்கிய வீட்டைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சரியான வடிவமைப்புடன், உங்கள் வீடு மற்ற வீடுகளுக்கு சமமாக மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் ஆதாரமாக இருக்கும்!

தெற்கு நோக்கிய வீடுகள் அதிருஷ்டமற்றவை என்பது ஒரு தவறான புரிதல். தெற்கு நோக்கிய வீடுகளை, வாஸ்து சாஸ்திரத்தின் படி கட்டமைக்கும் பொழுது, இந்த வீடுகள் மகிழ்ச்சியால் நிரம்பியதாகவும் மாறும். இந்த வலைப்பதிவில், தெற்கு நோக்கிய வீட்டுக்கான வாஸ்து வழிமுறைகளை பார்ப்போம். சரியான இடப்பெயர்ப்பு முதல் கதவுகள் வைக்கும் வரை உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் வளத்தை அதிகரிக்க இந்த திசையில் எப்படி வீட்டை அமைக்கலாம் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

 

 


தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து என்றால் என்ன? இதனை எப்படி புரிந்துகொள்வது?



தெற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி பேசும் போது, இது வீட்டின் திசை மட்டும் அல்ல, மனித வாழ்க்கை மற்றும் இயற்கையின் பஞ்சபூதங்களை ஒருங்கிணைக்கும் முறை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தெற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், இந்த திசையை நெகடிவ் எனர்ஜியாக கருதும் எண்ணத்தை மாற்றி, பாசிடிவ் எனர்ஜி மற்றும் அமைதி நிறைந்த இடம் என்பதை புரிய வைப்பது தான். ஒவ்வொரு திசைக்கும் தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அவற்றை சரியாகப் பயன்படுத்தினால், தெற்கு நோக்கிய வீடுகள் உட்பட, எந்த வீடும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரக்கூடும் என்பதை உணர வேண்டும்.

 

தெற்கு திசை, இந்து மதக் கணிப்பின்படி இறப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தேவன், எமன் உடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த தொடர்பு காரணமாக, தெற்கு நோக்கிய வீடுகள் நெகடிவ் எனர்ஜியை அழைக்கும் என்ற தவறான நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் எச்சரிக்கையாக உள்ளனர். ஆனால் சரியாக கவனித்தால், வாஸ்து சாஸ்திரத்தின் மூலம், மற்ற திசைகளில் இருக்கும் வீடுகளைப் போல, தெற்கு நோக்கிய வீடுகளையும் பாசிடிவ் எனர்ஜி நிறைந்ததாக மாற்ற முடியும்.


தெற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து விதிகள்



 

1. முகப்பு கதவு அமைப்பு

தெற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து சாஸ்திரத்தில், முகப்பு கதவு அமைப்பானது மிகவும் முக்கியமான அம்சமாகும். கதவை தெற்கு திசையின் வலது பக்கம் வைத்து, கதவு உள்ளே வலதுபுறமாகத் திறக்கும்போது, பாசிடிவ் மற்றும் பயனுள்ள எனர்ஜியை வீட்டுக்குள் கொண்டுவரலாம், இது அமைதி மற்றும் செழிப்பின் தொடக்கத்தை உண்டாக்கும்.

 

2. கீழ்மட்ட நீர் சேமிப்பு அமைப்பு

கீழ்மட்ட நீர் தொட்டியை உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் அமைப்பது சிறந்தது. நீரே வாஸ்து சாஸ்திரத்தில் செழிப்பு மற்றும் நன்மையை குறிக்கிறது. அதனால், இந்த இடத்தில் நீர் சேமிப்பை அமைப்பது வீட்டில் செல்வத்தை ஈர்க்கும் எனர்ஜி ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

 

3. சுவர்களின் தடிமன்

தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து விதிகளின் படி, சுவர்களின் தடிமனும் முக்கிய பங்காற்றுகிறது.  தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை தடிமனாகவும் உயரமாகவும் கட்டுவதன் மூலம், வீட்டை நெகடிவ் எனர்ஜியிடம் இருந்து சிறந்த முறையில் பாதுகாக்கலாம். இத்தகைய தடிமனான சுவர்கள் கட்டமைப்புக்கு நிலைத்தன்மையையும் வலிமையையும் சேர்க்கின்றன.

 

4. சமையலறையின் இடம்

தெற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து விதிகளின் படி, சமையலறை தென்கிழக்கு பகுதியில் அமைக்கப்பட வேண்டும். இங்கு நெருப்பு முக்கியமான தன்மையாக இருக்கும், இந்த திசையில் சமையலறையை வாவ்ப்பதால் இந்த நெருப்பை புத்திசாலித் தனமாக பயன் படுத்திக்கொள்ளலாம்.. அதை இங்கு நுட்பமாகப் பயன்படுத்துவதன் மூலம் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் எனர்ஜியை மேம்படுத்தலாம்.

 

5. பெட்ரூமின் திசை

மாஸ்டர் பெட்ரூம் தென்மேற்கில் இருக்க வேண்டும். ஏனெனில் இது நிலைத்தன்மையை அளித்து, அமைதியான உறக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த திசை உறவுகளை வலுப்படுத்தவும், அமைதியை மேம்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில், பெட்ரூமை வடகிழக்கில் அமைப்பதை தவிர்க்க வேண்டும். இது தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து விதிகளின் படி கலக்கத்தையும், ஆரோக்கிய சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.


தென்கிழக்கு நோக்கிய வீடுகள் தொடர்பான வாஸ்து குறித்த சில தவறான கட்டுக்கதை

 

கட்டுக்கதை 1:  தென்கிழக்கு நோக்கிய வீடுகள் கெட்ட சகுனமாகும்

பொதுவான நம்பிக்கை என்னவென்றால் தென்கிழக்கு நோக்கிய வீடுகள் துரதிர்ஷ்டத்தையும், பிரச்சனைகளையும் கொண்டு வரும். ஆனால், தெற்கு நோக்கிய வீடுகளின் வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றினால், இந்த வீடுகளும் மற்ற வீடுகளைப் போலவே அமைதியாகவும், செழிப்புடனும் இருக்கும். உதாரணத்திற்கு, கதவை சரியான இடத்தில் அமைப்பது போன்ற வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

 

கட்டுக்கதை 2: நிதி இழப்புகள் தவிர்க்க முடியாதது

மற்றொரு தவறான நம்பிக்கையாக, தென்கிழக்கு நோக்கிய வீடுகளில் வசிப்பது நிதி குறைவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தும் என்பதாகும். ஆனால் உண்மையில் நிதி நிலைமை, ஒருவரின் செயல்களோடு நெருக்கமாக தொடர்புடையது. தெற்கு நோக்கிய வீடுகளின் வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றினால், நிதி சமநிலையை பேண முடியும்.

 

கட்டுக்கதை 3: ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்

தென்கிழக்கு நோக்கிய வீட்டில் வாழ்வோர் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தவறானது. ஆரோக்கியம் பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. நெருப்பு தன்மை இந்த திசையில் அதிகமாக இருந்தாலும், பஞ்ச பூதங்களின் சமநிலையை சரியாக மேம்படுத்தினால், ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.

 

நினைவில் கொள்ளுங்கள் இந்த தவறான கட்டுக்கதைகள் வாஸ்து எப்படி இயங்குகிறது என்பதை சரியாக புரிந்துக் கொள்ளாததின் விளைவாகும். தெற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து திட்டத்தை சரியான முறையில் வடிவமைத்தால், வீட்டை மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் மையமாக மாற்ற முடியும்.


தெற்கு நோக்கிய வீட்டிற்கான வாஸ்து விதிகளில் செய்யக் கூடாதவை.

 

சிறந்த திசை வாஸ்து திட்டத்தைப் பின்பற்றினாலும், அல்லது குறிப்பாக தென் முகம் 30x40 வாஸ்து திட்டத்தைப் பின்பற்றினாலும், நீங்கள் செய்ய வேண்டியவற்றைத் தவிர, தவிர்க்க வேண்டியவற்றையும் கவனித்தல் கொள்வது மிக முக்கியம்.

 

1. முகப்புவாயிலைத் தவறான இடத்தில் வைக்க வேண்டாம்

முகப்புவாயில் தென்மேற்கில் இருந்தால் அது நெகடிவ் எனர்ஜியை வரவழைக்கும்.

 

2. தென் திசையில் நீர்நிலைகளை அமைக்க வேண்டாம்

தென் திசையில் நீர்தொட்டி அல்லது நீச்சல் குளம் இருந்தால், அது எனர்ஜியின் சமநிலையை குலைத்துவிடும். இது பொருளாதார அல்லது உடல் நல பிரச்சினைகளை உருவாக்கலாம்.

 

3. முன் பக்கத்தில் பெரிய மரங்களை நட்டுவிட வேண்டாம்

தென் முகத்தில் நேரடியாக பெரிய மரங்கள் இருந்தால், அது பாசிடிவ் எனர்ஜியை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கலாம்.

 

4. தென் பகுதியை அசுத்தமாக வைத்திருக்க வேண்டாம்

வீட்டின் தென் பகுதி அசுத்தமாக இருந்தால், அது பாசிடிவ் எனர்ஜியின் ஓட்டத்தைத் தடுக்கலாம் மற்றும் வீட்டில் வசிப்பவர்களுக்கு அமைதியின்மையையும் ஏற்படுத்தக் கூடும்.

 

5. தென் கிழக்கில் பெட்ரூம்களை அமைக்க வேண்டாம்

தென் கிழக்கு திசையில் நெருப்பு சக்திகள் அதிகமாக இருப்பதால் சண்டைகள் மற்றும் உடல் நல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதனால் பெட்ரூம்களை இந்த திசையை நோக்கி அமைக்கக் கூடாது. பெட்ரூம்கள் தென்மேற்கு திசையில் இருக்கச் சிறப்பானவை.



 

தெற்கு நோக்கிய வீடுகள் குறித்து தவறான நம்பிக்கைகளும் கவலைகளும் அதிகம் இருக்கின்றன சரியாக திட்டமிட்டு, தெற்கு நோக்கிய வீடுகளை வாஸ்து விதிகளின் அடிப்படையில் அமைத்தால், எந்த இடத்தையும் சுமூகமாகவும், நல்ல சமநிலையுடனும் வைத்திருக்க முடியும். முகப்புவாயில் அமைப்பு, சமையலறையின் இடம், பெட்ரூமின் திசை போன்ற அனைத்து அம்சங்களும் வாஸ்து சாஸ்திரத்திற்கு ஏற்ப சரியான முறையில் அமைக்கப்பட்டால், அந்த வீடு பாசிடிவ் எனர்ஜி மற்றும் செழிப்பால் நிரம்பி இருக்கும்



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....