4. சிமெண்ட் மூட்டையை தூக்க அல்லது அடுக்க கொக்கியைப் பயன்படுத்தக்கூடாது
சிமெண்ட் மூட்டையை தூக்க அல்லது அடுக்க கொக்கியைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் உள்ளன. கொக்கிகள் மூட்டைகளை ஓட்டையாக்கவோ அல்லது கிழிக்கவோ கூடும், இதனால் சிமெண்ட்டின் தரத்தைக் குறைக்கும் வகையில் தூசி மற்றும் ஈரப்பதம் ஊடுருவுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் முதலீட்டையும், உங்கள் மெட்டீரியல்களின் தரத்தை பாதுகாக்க, சிமெண்ட்டைக் கையாள்வதற்கென்று உருவாக்கப்பட்ட ஃபோர்க்லிஃப்ட், பால்லெட் ஜாக்ஸ் அல்லது லிஃப்டிங் ஸ்டிராப்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தவும். இந்த கருவிகள் பாதுகாப்பான மற்றும் சேதமில்லாத கையாளுதலை வழங்குகிறது, உங்களின் சிமெண்ட் நல்ல நிலையில் இருப்பதையும், அது உங்களுக்கு தேவைப்படும்போது கட்டுமானத்திற்கு தயாராக இருப்பதையும் உறுதி செய்கிறது.
5. சிமெண்ட் மூட்டைகளைத் தனியாகச் சேமித்து வைக்கவும்
தரத்தைப் பாதிக்கக்கூடிய மாசு ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுப்பதற்காக, வெவ்வேறு வகை சிமெண்ட்டை மற்ற மெட்டீரியல்களிடமிருந்து தனியாகச் சேமித்து வைப்பது அவசியமாகும். உங்கள் சிமெண்ட்டின் தரத்தை உறுதி செய்ய, சிமெண்ட் மூட்டைகளை, உரம் போன்ற மற்ற தயாரிப்புகளிடமிருந்து தனியாக, அதற்கென்று உள்ள சேமிப்பு பகுதியில் சேமித்து வைக்க வேண்டும்.
6. பழையது முதலில் இருக்கும் வகையில் அடுக்கவும்
சிமெண்ட் மூட்டைகளைப் பயன்படுத்துவதில் ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் முறையைப் பின்பற்றவும். பழைய மூட்டைகளை முதலில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு சிமெண்ட் மூட்டைகள் அடுக்கிலும் அவை பெறப்பட்ட தேதியைக் காட்டும் லேபிள் அந்த சிமெண்ட்டின் வயதைத் தீர்மானிக்க உதவலாம். கிடங்கில் சிமெண்ட்டைச் சேமித்து வைக்க திட்டமிடும்போது, மூட்டைகள் பெறப்பட்ட வரிசையிலேயே திரும்ப எடுக்கும் வகையில் அடுக்கி வைக்கவும்.
7. மீதமுள்ள சிமெண்ட்டைக் கவனமாகச் சேமித்து வைக்கவும்
மீதமுள்ள சிமெண்ட் பாதி காலியான மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டு முதலில் பயன்படுத்தப்பட வேண்டும். உங்களிடம் மீதமுள்ள சிமெண்ட்டை வலுவான பிளாஸ்டிக் மூட்டைகளில் சேமித்து வைக்கவும். ஓட்டைகளைத் தவிர்க்க, மூட்டைகளை டக் டேப் அல்லது கயிற்றைக் கொண்டு மூடவும்.