வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



செங்கல் பான்ட்டின் 11 வகைகள்: உங்கள் ப்ராஜெக்ட்டுக்கான சிறந்த முறைகளை தேர்வு செய்ய வேண்டும்

இந்த பதிவில், கட்டுமானத்தின் செங்கல் பான்ட்டை பற்றி பார்க்கலாம்.மேலும், செங்கல் பான்ட் வகைகள், பான்ட் தாக்கத்தின் விதிகள் மற்றும் அதன் தேவைகளை பற்றியும், வலுவான மேசனரி வேலைகளின் அத்தியாவசியங்களைப் பற்றியும் பார்ப்போம்.

Share:


முக்கிய குறிப்புகள் 

 

  •  சுவர்கள், தரைகள், பாதைகள் போன்றவற்றை கட்டமைக்க செங்கல்களை அடுக்குவது தான் செங்கல் பான்ட் எனப்படும்.
 
  • செங்கல் பான்ட்டில் பல்வேறு முக்கியமான வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமான கட்டமைப்புகளையும் அழகிய தோற்றத்தையும் வழங்குகின்றன
 
  •  இங்கிலீஷ் பான்ட், அதன் வலிமைக்காக சிறப்பிக்கப்படுகிறது. கட்டுமானத்தில் வலிமைக்காகவே இது பயன்படுத்தப்படுகிறது. 
 
  • இங்க்லீஷ் பான்ட், ஃப்ளெமிஷ் பான்ட் போன்றவை இந்தியாவில் பிரபலமாக இருக்கிறது. அதனால் இதை அதிகம் பயன்படுத்துகின்றனற். இப்படி இடங்களுக்கு ஏற்ப செங்கல் பாண்டுகளின் தேர்வு மாறுபடும்
 
  • அழகான முறையில் செங்கலை அடுக்கும் பொது, அவை மொத்த கட்டமைப்பின் தோற்றத்திலும், தொழில்முறை திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
 
  • கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் செலவு ஆகியவற்றிற்கு பான்ட்டை தேர்வு செய்வது மிக அவசியம்.
 
  • ஸ்டாக் பான்ட், தனித்துவமான வடிவத்தை வழங்கும். இதை அமைக்கும் போது, செங்கல் ஒன்று மேல் ஒன்று அடுக்கப்படாது. அதனால் குறைந்த கட்டுமான நிலைத்தன்மைக்கு இது குறிப்பிடத்தக்கது.


செங்கல் சுவர்களில் அழகான பேட்டன்களை நீங்க என்றாவது பார்த்திருக்கிறீர்களா? இதற்கு காரணம், பல வகையான செங்கல் பான்ட்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்த பேட்டன்கள் தான் சுவரை வலிமையாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் மாற்றும் ஆனால் பல வகையான பான்ட்கள் இருப்பதால், சில சமையம் குழப்பமாகவும் இருக்கும் இந்த வழிகாட்டியில், பல வகையான செங்கல் பான்ட்களைப் பற்றி எளிமையாக விளக்கியுள்ளோம். இதனால், உங்களின் அடுத்த கட்டுமான ப்ராஜெக்ட் வலிமையாக நிற்பது மட்டும் அல்லாமல், பார்க்கவும் அழகான தோற்றத்தில் இருக்கும்.

 

 


செங்கல் பான்டிங் என்றால் என்ன?

சுவர்கள், தரைகள் அல்லது நடைபாதைகள் அமைப்பதற்கு பல வகையான செங்கல்களை அடுக்குவார்கள். இதுவே செங்கல் பான்ட் என்று அழைக்கப்படும். செங்கல்களை இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம், கீழே தரையிலும் வைக்கலாம், அல்லது வரிசையாக நிறுத்தவும் செய்யலாம்.  சுருக்கமாகச் சொன்னாள், செங்கல்களால் அமைக்கப்படும் பேட்டன் தான் செங்கல் பான்ட் ஆகும். இதே போல பல பேட்டன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வித்யாசமாக இருக்கும். இவற்றை அதன் வழியில் வைத்து அடுக்குவார்கள். 

 

 

வித்யாசமான செங்கல் பேட்டன்களை பயன்படுத்தவதன் காரணம் என்ன?

இந்த பல்வேறு வகையான செங்கல் பான்ட் பேட்டன்களுக்கு சில முக்கியமான வேலைகள் இருக்கின்றன. 

 

  • இவை எடையை சரிசமமாக பகிர்ந்து கட்டிடங்களை வலிமையாக்கும்.
 
  • அனைத்தையும் வலுவாக சமநிலையுடன் வைத்திருக்கும்.
 
  • இவை கட்டமைக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

 

பல வகையான செங்கல் பேட்டன்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு கூடுதலான வலிமை வேண்டுமா? உங்களின் சுவர் எவ்வளவு தடிமனாக இருக்கும்? ஜன்னல்களுக்கு மேல் இருக்கும் அளவைப் போல இது சிறப்பாக இருக்குமா?  நீங்கள் எந்த ஸ்டைலில் விரும்புகிறீர்கள்? சரியான செங்கல் பேட்டனை தேர்வு செய்வதில், செனகலின் வகை, உள்ளூர் கட்டுமான ஸ்டைல்கள் மற்றும் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன.

 

 

11 வகையான செங்கல் பான்ட்கள்

சுவரை வலுவாகவும் பார்க்க அழகாகவும் மாற்றும் பல வகையான செங்கல் பான்ட்களின் அமைப்பை பற்றி பார்க்கலாம்.

 

 

1. ஸ்ட்ரெச்சர் பான்ட்



இது எளிமையான பேட்டன். இது தான் எல்லா வகையான பான்ட்களிலும் அடிப்படையான பான்ட். எல்லா செங்கல்களும் அதன் நீல வாக்கில், குறிகிய பக்கங்கள் (ஸ்ட்ரெச்சர்ஸ்) வெளிப்படும் வகையில் கிடைமட்டமாக (ஹரிசாண்டல்லி) வைக்கப்படும். ஒவ்வொரு வரிசையில் இருக்கும் கற்கள் கீழே உள்ள கற்களுடன் பாதி பகுதி மட்டும் ஒன்றோடு ஒன்று மடியுமாறு அமைக்கப்படும். இதனால் தோட்ட சுவர் அல்லது வெனியர் சுவர் போன்ற பாதி செங்கல் கொண்ட தடிமனான சுவர்களை கட்டுவதற்காக இந்த பான்ட் பயன்படுத்தப்படுகிறது.

 

2. ஹெடர் பான்ட்

பல வகையான செங்கல் பான்ட்களில் இந்த ஹெடர் பான்ட் தான் முக்கியமான ஒன்று. இதில், செங்கல்கள் அதன் முடிவு பக்கம் (ஹெடர்ஸ்) வெளிப்புறம் இருக்குமாறு அடுக்கப்படும். இது சுவர்களுக்கிடையே வலிமையான இணைப்பை உண்டாக்கும். அதிக தடிமனுள்ள சுவர்களை உருவாக்கும். இது பெரும்பாலும் முழு செங்கல் அகலத்தில் உள்ள சுவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படுகிறது.

 

3. ஃப்ளெமிஷ் பான்ட் 

 



இந்த க்லாசிக் பான்ட் ஒவ்வொரு வரிசையிலும் ஹெடர்ஸ் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை மாற்றி மாற்றி வைப்பதால், இந்த பேட்டன் பார்க்க அழகாக தெரியும். மாற்று வரிசையில் ஒவ்வொன்றையும் சரியாக அமைக்க அதிக திறன் மற்றும் நேரம் தேவைப்படும். ஆனால் இது சமநிலை கொண்ட வலிமையான சுவரை உருவாக்கும்.

 

4. இங்க்லீஷ் பான்ட்



பல வகையான செங்கல் பான்டில் இந்த இங்கிலீஷ் பான்ட் அதன் வலிமை காரணமாக தனித்து நிற்கும். ஒரு வரிசையில் செங்கல்கள் நீளவாக்கில் வைக்கப்படும், அடுத்த வரிசையில் அகலமாக வைக்கப்படும். அதிக சுமையா தாங்க வேண்டிய சுவர்களில் இந்த பேட்டன் பயன்படுத்தப்படும்.

 

5. ஸ்டாக் பான்ட்



எல்லா செங்கல்களும் ஒன்றாக சேர்த்து அடுக்கப்படும். இதனால் அதன் செங்குத்தான இணைப்புகள் நேராக வரிசைப்படுத்தப்படும். இந்த பான்ட் முறை ஈர்ப்பாக இருக்கும். மேலும், கூடுதல் ஆதரவு கொண்ட சுவர்கள் அல்லது க்லாடிங் போன்ற அதிக சுமையைத் தாங்காத சுவர்களில் பயன்படுத்தப்படும்.

 

6. தோட்ட சுவர் பான்ட்

 



இந்த விலை குறைவான பான்டில் குறைவான செங்கல்களைப் பயன்படுத்துவர். மேலும், ஆதரவு அதிகம் இல்லாத கட்டுமானத்தில், ஒற்றை தடிமனான சுவர்களை அமைக்க பயன்படுத்தப்படும். இது அதிக ஹெடர்ஸ்களை பயன்படுத்தாது. இதனால் இது பலவீனமாக இருக்கும், ஆனால் விலையும் குறைவாக இருக்கும்.

 

7. ஜிக்ஜேக் பான்ட்

 



இது பார்வையை ஈர்க்கும் பேட்டன். ஜிக்ஜேக் பேட்டனை உருவாக்கும் வகையில் செங்கல்களை அடுக்குவார்கள். மற்ற வகை செங்கல் பான்ட்களில் இருந்து இது தனித்துவத்துடன் நிற்கும். இது பார்வைக்கு ஈர்ப்பாக இருக்கும். ஆனால், இதன் வலிமை குறைவாக இருப்பதால், இது கட்டுமான சுவர்களில் பயன்படுத்தப்படாது.

 

8. ரேக்கிங் பான்ட்

இந்த வகையில், டையகோணல் பேட்டன்களை அமைக்க, செங்கல்களை ஒரு கோணத்தில் வைப்பார்கள். இந்த பேட்டங்கள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும். மேலும், சுவர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும்.

 

  • ஹெர்ரிங்போன் பான்ட்: இந்த ஹெர்ரிங்போன் பான்டில், V வடிவத்தைக் கொண்டு வர, செங்கல்கள் எதிர் எதிரே டையகோணலாக அடுக்கப்படும். இது வலிமையையும் கொடுக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும்.
 
  • டையகோணல் பான்ட்:  இந்த வகையில், சுவர்களுகுள்ளேயே, டையகோணல் முறையில் பல அடுக்குகள் வைக்கப்படும். இது சுவர்களின் வலிமையை மேம்படுத்தும்.

 

9. ஃபேசிங் பான்ட்

இது பார்ப்பதற்கு ஸ்ட்ரெச்சர் பான்ட் போலவே டிசைன் செய்யப்பட்டிருக்கும். ஆனால் போதுமான இடைவெளியில் ஹெடர்ஸ்களும் இருக்கும். 

 

10. ஸ்காட்டிஷ் பான்ட்

ஸ்காட்டிஷ் பான்ட் பல வரிசைகளில் ஸ்ட்ரெச்சர்ஸ்களைப் பயன்படுத்துகிறது. இதனை தொடர்ந்து ஹெடர்ஸ் வரிசை வரும். இது தனித்துவமான பேட்டனுடன் சுவருக்கு வலிமையையும் கொடுக்கும்.  அமெரிகன் பான்டும் இதே போல் தான். ஆனால், இது ஹெடர்ஸ்களுக்கு முன் பல ஸ்ட்ரெச்சர்ஸ்களைப் பயன்படுத்தும். இது அந்த ஊரின் வழக்கங்களை பொறுத்து மாறுபடும்.

 

11. ரேட் ட்ராப் பான்ட்

செங்கல்களை தட்டையாக இல்லாமல், அவற்றின் விளிம்புகளில் அமைப்பர், இது வெற்று சுவர் பேட்டன் போன்றது. இது சுவரில் ஒரு குழியை உருவாக்குகிறது. மேலும், வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது. இதில் சில செங்கல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், செலவு குறைந்ததாக இருக்கும். இருப்பினும் கட்டுமானத்தில் இது கொஞ்சம் சிக்கலாக இருப்பதால், திறமையான தொழிலாளர்கள் தேவை. 

 

 

செங்கல் மேசனரியில் நல்ல பான்டிங்கான 10 விதிமுறைகள்

1. பொருத்தமான செங்கல்களை பயன்படுத்த வேண்டும் செங்கல்கள் அனைத்தும் சரியான அளவிலும் வடிவத்திலும் இருக்கிறதா என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

2. மோர்டாரை சரிசமமாக வைத்துக் கொள்ளுங்கள்: செங்கலுக்கு இடையில் வைக்கும் மோர்டாரை ஒரே தடிமன் அளவில், அதாவது பென்சிலின் தடிமன் அளவில் பயன்படுத்தவும்.

3. சரியான பேட்டனை தேர்வு செய்யவும்: சுவருக்காக சிறந்த பேட்டனை பயன்படுத்துங்கள்.

4. செங்கல்களை ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும்: செங்கல்கள் ஒன்றோடு ஒன்று இணைகிறதா என்பதை கவனித்துக் கொள்ளவும். இதனால் சுவர்களில் நேர்கோடுகள் எதுவும் விழாமல் இருக்கும்.  இது சுவரை மிக வலிமையானதாக மாற்றும்.

5. இணைப்புகளை நன்றாக மூட வேண்டும் செங்கல்களுக்கு இடையிலான இடைவெளிகளை முழுமையாக நிரப்ப வேண்டும். இதனால் தண்ணீர் உள்ளே புகாமல் சுவர் வலிமையாக இருக்கும்.

6. வலது புறத்தில் இடைவெளியினை நிரப்பவும்: முனையில் இருக்கும் இடைவெளிகளை, அரை செங்கல்கள் அல்லது வெட்டப்பட்ட செங்கல்களைப் பயன்படுத்தி நிரப்ப வேண்டும். நீண்ட நேரான பிளவுகளின்றி நிரப்ப வேண்டும்.

7. சரியான மோர்டார் கலவையை பயன்படுத்தவும்: உங்களின் மோர்டாரை சரியான பொருள்களை வைத்து கலக்கவும். இதனால் இவை நீண்ட காலம் வலுவாக உழைத்து நிற்கும். 

8. செங்கல்களை முதலில் நனைத்துக் கொள்ளுங்கள்:  செங்கல்களை பயன்படுத்துவதற்கு முன் முதலில் நனைத்துக் கொள்ளுங்கள். இதனால், மோர்டாரில் இருந்து தண்ணீரை வெகுவாக உறிஞ்சாது. மேலும், அவை நன்றாக போருந்துவதற்கும் உதவியாக இருக்கும்.

9. இதனை நேராகவும் சமமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்: சுவர்களை நீங்கள் கட்டும் போது, அது நேராகவும் கிளைமட்டமாகவும் இருக்கிறதா என்பதை எப்போதும் கவனிக்க வேண்டும். 

10. அதை சரியாக உலர விட வேண்டும். சுவரை சரியாக உலர விடுங்கள். இதனால், மோர்டார் மிக வலிமையாக மாறும், நீண்ட நேரம் நிலையாக நிற்கும்.



 

வலிமையான கட்டுமானங்களைப் பெற, சரியான வகை செங்கல் பான்ட் பேட்டனை தேர்வு செய்ய வேண்டும். பார்ப்பதற்கும் அழகாக, விலையும் குறைவாக இருக்கும் செங்கல் மேசனரியை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பான்டும் அழகு மட்டும் நிலைத்தன்மையில தனித்துவமான சமநிலையை வழங்கும். இதனால், ப்ராஜெக்டின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நாம் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், நீடித்த ஈர்ப்பான கட்டுமானத்தை வழங்குகிறது.




தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....