ஒரு கான்கிரீட் தொகுதி கலக்கும் இயந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு கான்கிரீட்டை ஒரே நேரத்தில் கலக்க கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு வகை கலக்கும் இயந்திரம் ஆகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு இந்த வகை கலக்கும் இயந்திரம் பொருத்தமானது, அங்கு கான்கிரீட் தேவை அதிகமாக இல்லை. கான்கிரீட் கலக்கும் இயந்திரம் பொதுவாக ஒரு உருளை அல்லது கொள்கலன் கொண்டு இருக்கும் அதில் சேர்மானங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வரிசையில் சேர்க்கப்படும். சேர்மானங்கள் பொதுவாக சிமண்ட், மணல், தண்ணீர் மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள் அல்லது சரளை ஆகும். கான்கிரீட் கலக்கும் இயந்திரம் பல அளவுகளில் வருகின்றன அது தேவைப்படும் கான்கிரீட் அளவு கொண்டு தீர்மானிக்கப் படுகிறது. சிறிய அளவிலான கான்கிரீட் கலக்கும் இயந்திரம் சுமார் ஒரு கன கஜம் கான்கிரீட்டை கொள்ளும், பெரிய அளவிலான கான்கிரீட் கலக்கும் இயந்திரம் 6 கன கஜம் வரை அல்லது அதற்கு மேலும் கொள்ளும்.
தொகுதி கான்கிரீட் கலக்கும் இயந்திரம் சிறிய அளவிலான கட்டிடத் திட்டங்களுக்கு ஒரு நம்பத்தகுந்த திறமையான தேர்வாகும், இங்கு ஒரு நேரத்தில் குறிப்பிட்ட அளவு கான்கிரீட் மட்டுமே தேவைப்படும்.
1. டிரம் கலக்கும் இயந்திரம்
டிரம் கலக்கும் இயந்திரம் பீப்பாய் கலக்கும் இயந்திரம் என்றும் அழைக்கப்படும் இது ஒருவித அதிக அளவிலான கான்கிரீட் அல்லது சிமண்ட் தேவைப்படும் பெரிய கட்டுமான தொழில்களில் பயன்படுத்தப்படும் கலக்கும் இயந்திரம் ஆகும். இதில் ஒரு டிரம் அல்லது பீப்பாய் தன சொந்த அச்சில் சுழலும், அதனுள் துடுப்புகள் வைக்கப்பட்டு சுழலும் போது கான்கிரீட் கலக்கப்படும். இதன் அனுகூலம் பெரிய அளவிலான கான்கிரீட்டை திறமையாகக் கலக்கும் திறமை ஆகும். இவற்றை இயக்குவது எளிது மேலும் மற்ற வகை கலக்கும் இயந்திரங்களை விட குறைந்த மனித சக்தியே தேவைப்படும். இது போன்ற கலக்கும் இயந்திரம் சிறிய மற்றும் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு உகந்தது, மேலும் இதை கான்கிரீட், சிமண்ட் கலவை அல்லது மற்ற கட்டுமான கலவைகள் தயாரிக்க பயன்படுத்தலாம்.
டிரம் கலக்கும் இயந்திரங்களை மேலும் மூன்று விதமாக பிரிக்கலாம்: சாயும் டிரம் கலக்கும் இயந்திரம், சாயாத உருளை வடிவ கலக்கும் இயந்திரம் மற்றும் மாற்றி சுழலும் கலக்கும் இயந்திரம்.
i. சாயும் டிரம் கலக்கும் இயந்திரம்
சாயும் டிரம் கலக்கும் இயந்திரம்: ஒரு சாயும் டிரம் கொண்டு அது சுழன்று கான்கிரீட் கலவை அல்லது சிமண்ட் கலவையை வெளியே ஊற்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ள அது விரைவாக கலவையை வெளியே எடுக்கவேண்டிய கட்டுமானத்திட்டங்களின் பிரபலமான தேர்வாக இருக்கிறது. இந்த கலக்கும் இயந்திரத்தில் ஒரு டிரம் தனது அச்சில் சாய்க்கப்பட்டு உள்ளே உள்ள கலக்கிய கலவையை டிரம்முக்கு வெளியே குறிப்பட்ட இடத்தில் ஊற்றும்படி செய்கிறது. இந்த வகை கலக்கும் இயந்திரங்களின் அனுகூலம் என்ன என்றால் இவைகளுக்கு குறைந்த அளவு மனித சக்தியே சாயாத டிரம் கலக்கும் இயந்திரங்களோடு ஒப்பிடும்போது தேவைப்படுகிறது. சாயாத டிரம் கலக்கும் இயந்திரத்தில் கலவையை வெளியே எடுக்க மனித சக்தி தேவைப்படுவதால் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களில் இது திறமைக் குறைவாக இருக்கும்.
ii சாயாத டிரம் கலக்கும் இயந்திரம்
சாயும் டிரம் கலக்கும் இயந்திரம் போல் இல்லாமல் இந்த சாயாத டிரம் கலக்கும் இயந்திரத்தில் சாய்க்கும் இயந்திரவியல் இல்லை கலவையை கொட்டுவதற்கு மனித சக்தியை சார்ந்து இருக்க வேண்டியது உள்ளது. இந்த வகை இயந்திரங்களின் அனுகூலம் என்ன என்றால் இவற்றின் எளிமையான வடிவமைப்பும் எளிதாக இயக்க முடிவதும். இவை சிறிய அம்ற்றும் நடுத்தர கட்டுமானத் திட்டங்களுக்கு உகந்ததாக இருக்கும் இவற்றை ஈரமான மற்றும் உலர்ந்த கலவைகள் தயாரிக்க பயன்படுத்த முடியும். இருந்தபோதிலும், இவற்றின் மிகப் பெரிய பின்னடைவு கலக்கப்பட்ட கலவையை தானாகவே வெளியேற்ற முடியாதது. கலவையை வெளியே எடுக்க மனித சக்தி தேவை அது பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களில் திறமையாக இருக்காது.
iii மாற்றிச் சுழலும் டிரம் கலக்கும் இயந்திரம்
ரு மாற்றிச் சுழலும் டிரம்கலக்கும் இயந்திரம் இரு திசைகளிலும் சுழன்று கலக்கும் துடுப்புகளால் பொருட்களை நன்கு திறம்பட கலக்க முடியும். டிரம்மில் உள்ளே துடுப்புகள் இணைக்கப்பட்டு இருப்பது பொருட்களை நன்கு கலக்க உதவுகிறது. இந்த வகை கலக்கும் இயந்திரம் மிகவும் ஒரேவிதமான கலவையை கொடுக்க முடியும் என்பது மிகப் பெரிய அனுகூலம். இவை சிறிய முதல் நடுத்தர அளவு கட்டுமானத் திட்டங்களுக்கு பொருத்தமாக இருக்கும் மேலும் எளிதாக கழுவவும் பராமரிக்கவும் முடியும். இருந்தபோதிலும், அவற்றின் மிக அதிக விலை சில கட்டுமானத்திட்டங்களுக்கு குறைந்த அளவே ஈர்க்கப்படுகிறது.
2. தட்டு வடிவ கலக்கும் இயந்திரம்
இது வட்ட கலக்கும் இயந்திரம் இயந்திரம் அல்லது தட்டு கலக்கும் இயந்திரம் என்றும் அழைக்கப்படும், ஏனென்றால் இதில் வட்ட வடிவ கலக்கும் தட்டு உள்ளது. இந்த கலக்கும் இயந்திரத்தில் ஒரு வட்டமான கலக்கும் தட்டு கிடை மட்டமாக ஒரு சட்டத்தில் சக்கரங்களோடு பொருத்தப்பட்டு இருக்கும். இதன் அனுகூலங்களில் ஒன்று இதனால் ஒரேவிதமான கான்கிரீட் கலவையைக் கொடுக்கும் திறன். தட்டு வடிவ கலக்கும் இயந்திரம் பல்வேறு விதமான கான்கிரீட் கலவைகளை ஈரமாகவும், ஈரமில்லாமலும், சாந்துக் கலவை, பூச்சுக் கலவை மற்றும் எதற்கும் மசியாத பொருட்களுக்கு உகந்தது. இருந்த போதிலும், மிக முக்கியமான பின்னடைவுகளில் ஒன்று அவற்றை மற்றவைகளுடன் ஒப்பிடும் போது அவற்றின் குறைந்தளவு கலக்கும் திறன் இவை அதிக அளவிலான திறனுள்ள கலக்கும் இயந்திரம் தேவைப்படும் இடங்களில் இவை உகந்ததில்லை.
தொடர்ந்து கலக்கும் இயந்திரம்
தொடர்ந்து கலக்கும் இயந்திரம் என்பது தொடர்ந்து ஓடும் கலவை இயந்தரம் என்றும் அழைக்கப்படும் இவை, கட்டுமானத் தொழிலில் கான்கிரீட் அல்லது அதுபோன்ற கலவைகளை தயாரிக்க பயன்படுகிறது. ஒரு நேரத்தில் ஒரே ஒரு கலவையை மட்டும் கொடுக்கும் தொகுதி கலக்கும் இயந்திரம் போல் இல்லாமல் இந்த சிமண்ட் கலக்கும் இயந்திரத்தில் பொருட்கள் தொடர்ச்சியாக கலக்கும் பகுதிக்கு செல்வதால் தொடர்ந்து கொடுக்கிறது. ஒரு முனையில் பொருட்கள் தொடர்ச்சியாக கலக்கும் அறைக்கு அனுப்பப் படுகிறது கலக்கப்பட்ட பொருள் மறு முனை வழியாக வெளியேறி வருகிறது. இதன் அனுகூலம் பெரிய அளவிலான ஒரேவிதமான கலவையை விரைவாகவும் திறமையாகவும் கொடுக்க முடியும் என்பது. இவற்றை கான்கிரீட் (ஈரமான மற்றும் உலர்ந்த) தார் உள்ளிட்ட பூச்சுக் கலவை மற்றும் பலவிதமான கட்டுமானப் பொருள் கலவைகளுக்கு பயன்படுத்தலாம்.
இருந்தபோதிலும் இதன் பிரதான பின்னடைவு அதன் அதிகமான செலவு .இதற்கு பெரிய அளவிலான இடமும் தேவைப்படுகிறது, இது சிறிய கட்டுமானத் திட்டங்களுக்கு உகந்ததாக இல்லை,
தொகுப்பு
கான்கிரீட் அல்லது வேறு கட்டுமானப் பொருட்களை கலக்குவதற்கு அனேக விதமான கலக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மிகவும் பொதுவானவைகளில் தொகுதி கான்கிரீட் கலக்கும் இயந்திரம், டிரம் கலக்கும் இயந்திரம், தட்டு வடிவ கலக்கும் இயந்திரம், சாயும் கலக்கும் இயந்திரம், சாயாத கலக்கும் இயந்திரம் மாற்றிச் சுழலும் கலக்கும் இயந்திரம் மற்றும் தொடர்ந்து கலக்கும் இயந்திரம் அடங்கும். சிமண்ட் கலக்கும் இயந்திரங்களின் தொகுப்பு கீழே:
- தொகுதி கலக்கும் இயந்திரம் சிறிய முதல் நடுத்தர அளவு கட்டுமானப் திட்டங்களுக்கு உகந்தது, அதே நேரத்தில் டிரம் கலக்கும் இயந்திரம் பெரிய அளவு திட்டங்களுக்கு உகந்ததாகும்
- சாயும் டிரம் கலக்கும் இயந்திரம் பெரிய மற்றும் சிறிய கட்டுமானத் திட்டங்களுக்கு உகந்த இது இயக்க எளிதானது.
- மாற்றிச் சுழலும் கலக்கும் இயந்திரம் இரண்டு திசைகளிலும் சுழன்று பொருட்களை கலக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரம் தட்டு வடிவ கலக்கும் இயந்திரம் பல துறைகளிலும் பயன்படக்கூடியது மேலும் சிறிய முதல் நடுத்தர அளவு திட்டங்களுக்கு பொருத்தமானது.
- தொடர்ந்து கலக்கும் இயந்திரங்கள் அவற்றின் மிக அதிக அளவிலானா பொருட்களை கலக்கும் திறன் இருப்பதால் மிகப்பெரியஅளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு திறமையான தேர்வாக இருக்கும்