கான்கிரீட்டிற்கான உறுதி, நீடித்த தன்மை மற்றும் எதிர்ப்புத்திறன் ஆகியவற்றைப் பெறுவதற்கு கியூரிங் உதவுகிறது. கியூரிங்கானது ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை நிலைகளை பராமரித்து நீரேற்றம் மற்றும் வலுவான கான்கிரீட் அணி உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த செயல்முறையில், சிமெண்ட் துகள்கள் ஒன்றோடொன்று சேர்ந்துகொண்டு, உறுதியான மற்றும் நீடித்த தன்மையுள்ள கட்டமைப்பை உருவாக்குகின்றன. கியூரிங்கின் போது, நீரேற்ற செயல்முறை தொடர்ந்து நடக்கும். இதனால் கான்கிரீட் வலிமையான திறனை அடையும். கான்கிரீட் கியூரிங் கலவையில், போதுமான கியூரிங் வசதி இல்லாமல் இருந்தால் கான்கிரீட்டில் விரிசல், சுருங்குதல் மற்றும் ஆயுள் குறைதல் ஆகியவை ஏற்படும். இது காலப்போக்கில் kஅட்டமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கான்கிரீட் கியூரிங் கலவைகளின் வகைகள்
1)செயற்கை பிசின் கலவை
எபோக்சி அல்லது பாலியூரிதீன் போன்ற செயற்கை பிசின்களைப் பயன்படுத்தி, செயற்கை பிசின் கலவைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த கலவைகள் கான்கிரீட்டின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலத்தை உருவாக்குகின்றன. அதனால் கியூரிங் போது ஈரப்பதம் இழக்காமல் இருக்கும்.
பயன்கள்:
- கியூரிங்கிற்கு ஏற்ற சிறந்த ஈரப்பதத் தன்மையை இது கொடுக்கும்.
- கான்கிரீட்டின் நீடித்த தன்மை மற்றும் சேதமடையாமல் நிலைத்து நிற்கும் தன்மையை அதிகரிக்கிறது.
- UV யை எதிர்த்து, நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது.
- கான்கிரீட் மேற்பரப்புகளில் அனைத்தும் வலுவாக ஓட்டுவதற்கு உதவுயறது. மேலும், அதன் ஆயுளை நீட்டிக்கிறது.
2) அக்ரிலிக் கலவை
அக்ரிலிக் கலவைகள் என்பது அக்ரிலிக் பாலிமர்களைக் கொண்ட நீர் சார்ந்த கியூரிங் கலவைகள் ஆகும். இந்த கலவை கான்கிரீட் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலமாக உருவாகி, கியூரிங் முறையின் போது தேவையான ஈரத்தினை தக்கவைக்க உதவுகிறது.
பயன்கள்:
- சரியான முறையில் கியூரிங் செய்தால், தேவையான ஈரத்தன்மையைத் தக்கவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஈரப்பதத்தை குறைக்க முடியும்.
- விரைவாக உலரும் தன்மை மற்றும் UV எதிர்ப்பு இதற்கு உண்டு.
- கான்கிரீட்டை மேட் பினிஷுடன் தெளிவாக மேம்படுத்திகிறது.
- பல்வேறு கான்கிரீட் பயன்பாடுகளுக்கு நல்ல பசைப்பிடிப்பு மற்றும் ஆயுள் ஆகியவற்றை வழங்குகிறது.
3)மெழுகு கலவை
மெழுகு கலவையில், மெழுகு சார்ந்த பொருட்கள், சால்வெண்ட்டில் கரைக்கப்பட்டிருக்கும். கான்கிரீட் மேற்பரப்பில் பயன்படுத்தும்போது, அவை ஒரு மெல்லிய மெழுகுப் படலத்தை உருவாக்குகின்றன. அவை ஈரப்பதத்தை அடைத்து, கியூரிங் செயல்பாட்டிற்கு உதவுகின்றன.
பயன்கள்:
- இது ஈரப்பதத்தை தடுக்கும் வகையில் செயல்படுகிறது. மிக எளிதில் ஈரப்பதம் உலர்வதைத் தடுக்கவும், விரிசல்கள் மற்றும் சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.
- பளபளப்பான கான்கிரீட் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
- அலங்கார கான்கிரீட் பயன்பாடுகளுக்கும் கட்டடக்கலை முடிவுகளுகும் இவை ஏற்றது.
- சிராய்ப்பு மற்றும் தேய்மானத்திற்கு எதிரான பாதுகாப்பை இது வழங்குகிறது
4) குளோரினேட்டட் ரப்பர் கலவை
குளோரினேட்டட் ரப்பர் கலவை என்பது குளோரினேட்டட் ரப்பர் ரெசின்கள் கொண்ட சால்வெண்ட் அடிப்படையிலான கியூரிங் கலவைகள் ஆகும். கான்கிரீட் மேற்பரப்பில் நீர்ப்புகாமல் தடுப்புகளை உருவாக்கி, கியூரிங் செயல்பாட்டின்போது ஈரப்பதம் இழப்பதில் இருந்து தடுக்கிறது.
பயன்கள்:
- கியூரிங்கின் போது ஈரப்பதம இழக்காமல் இருக்க, இது ஒரு தடையை உருவாக்குகிறது.
- பசைப்பிடிப்பு, நீண்ட கால உறுதி மற்றும் சிராய்ப்பிற்கான எதிர்ப்பை வழங்குகிறது.
- இது வெளிப்புற பயன்பாடுகள் மற்றும் கடினமான சூழல்களுக்கு ஏற்றது.
- மேலும், தகுந்த மேற்பரப்பு தயாரிப்புடன் நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது.
5) சுய கியூரிங் கலவை:
இன்டர்னல் கியூரிங் ஏஜன்ட்ஸ் என்று அழைக்கப்படும், சுய கியூரிங் கலவைகள் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு, கான்கிரீட் தேவை இல்லாத ஈரப்பதத்தில் சிக்காதவாறு பாதுகாக்கிறது. பெயர் போலவே, இந்த கான்கிரீட் கியூரிங் ஏஜன்ட்ஸ் கான்கிரீட்டின் உள்ளே இருந்து செயல்பட்டு, சீரான மற்றும் முறையான கியூரிங் செயல்முறையை உறுதிப்படுத்துகிறது.
பயன்கள்:
- கான்கிரீட் முழுவதும் சீரான ஈரத்தன்மையை உறுதிப்படுத்தி, மேற்பரப்பில் பிளவுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
- இது கியூரிங்கிற்காக மறுபடி நீர் பாய்ச்சும் அவசியத்தை குறைக்கிறது. அதனால் வறண்ட பகுதிகளில் அல்லது தண்ணீர் குறைவாக உள்ள காலங்களில் கட்டுமானத்திற்கு உதவியாக இருக்கும்.
- வெளிப்புற கியூரிங் கஷ்டமாக இருக்கும் கட்டிடங்களில் இதை பயன்படுத்தும் முறை சவாலானதாக இருக்கும். இது மிகவும் பொருத்தமானது.