Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


ஆட்டோகிளேவ்டு ஏரேடெட் கான்கிரீட் (AAC) ப்ளாக்குகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை

சுற்று சூழல் நலனைக் கருத்தில் கொண்டு நீங்கள் வீடு கட்ட விரும்பினால், AAC ப்ளாக்குகளே சிறந்த வழி. ஆட்டோகிளேவ்டு ஏரேடெட் கான்கிரீட் (AAC) என்பது எடை குறைவான, பாரத்தைத் தாங்கும், அதிகம் இன்சுலேட் செய்யப்பட்ட, நீடித்து உழைக்கும் சான்றளிக்கப்பட்ட பசுமை கட்டுமானப் பொருளாகும், இது செங்கற்களை விட மூன்று மடங்கு லேசானதாகும்.

Share:



அழுகாமல், தீப் பிடிக்காமல், மற்றும் கரையான்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் ஒரு கட்டுமானப் பொருளைத் தேடிக்கொண்டிருந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிட வடிவமைப்பாளரால் 1924-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் AAC ப்ளாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கட்டுரையில், AAC ப்ளாக்குகளின் வகைகளைக் குறித்தும் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தும் காணவுள்ளோம்.


AAC ப்ளாக்குகள் என்றால் என்ன?

ஆட்டோகிளேவ்டு ஏரேடெட் கான்கிரீட் (AAC) ப்ளாக் என்பது, நல்ல தெர்மல் இன்சுலேஷன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையைக் கொண்டுள்ள ஒரு ப்ரீகாஸ்ட் கட்டுமானப் பொருளாகும். AAC ப்ளாக்குகளின் ஹீட்-இன்சுலேஷன் பண்புகள் கட்டிடத்தை குளிர்ச்சியாக வைக்கிறது மற்றும் வெளிப்புற வெப்பம் உள்ளே நுழைவதைத் தடுக்கிறது, அதன் விளைவாக ஏர் கண்டிஷன் செலவு கணிசமாக குறையும். AAC ப்ளாக்குகளானது, அஸ்திவாரச் சுமை, கட்டமைப்பு சார்ந்த ஸ்டீல் நுகர்வு, மற்றும் காரை நுகர்வில் சேமிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

 

AAC ப்ளாக்குகளின் வகைகள்

 

  • தீயெதிர்ப்பு AAC ப்ளாக்குகள்

     

  • 200 மிமீ AAC ப்ளாக்

     

  • 100 மிமீ AAC ப்ளாக்

     

  • நீடித்திருக்கும் AAC ப்ளாக்

     

  • செவ்வக வடிவிலான ஃப்ளை ஆஷ் AAC ப்ளாக்குகள்



AAC ப்ளாக்குகளின் நன்மைகள்

 

  • - எளிதாக மற்றும் வேகமாக வேலை செய்யும் தன்மை :

  • AAC ப்ளாக்குகள் வழக்கமான செங்கற்களிலிருந்து பாதி எடையும், அளவில் பத்து மடங்கு பெரியதாகவும் இருக்கும். இந்தத் தனித்துவமான பண்பு எளிமையாக இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கிறது மற்றும் விருப்பமான நெகிழ்வுத்தன்மை, சரிக்கட்டல், வெட்டுதல், வடிவமாக்கல் மற்றும் பலவற்றை வழங்குகிறது. AAC ப்ளாக்குகளில் குறைவான இணைப்புகளும், சீரான அளவுகளும் இருப்பதால், அது அவற்றை அமைப்பதை எளிதாகவும், கட்டுமானச் செயல்முறையை விரைவானதாகவும் ஆக்குகிறது. இறுதியில், எடை குறைவான ப்ளாக்குகளை எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லலாம், எனவே இது வழக்கமான செங்கற்களுக்கான போக்குவரத்து செலவுகளுடன் ஒப்பிடும்போது செலவு குறைவானதாக உள்ளது.
 
  • - பேரிடர் எதிர்ப்பு:

  • சொந்த-எடை மற்றும் புவியீர்ப்பு விசை உள்ளிட்டவற்றைக் கையாள்வதற்காக ஒரு கட்டிடம் வடிவமைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, நிலநடுக்கங்கள் செங்குத்து விசையை ஏற்படுத்துகின்றன. உற்பத்தி செயல்முறையின் விளைவாக, AAC ப்ளாக்குகள் மிகவும் வலுவடைகின்றன, மேலும் அதன் விளைவாக நீடித்து உழைக்கும் திறனைப் பெறுகின்றன. வழக்கமான செங்கற்களுடன் ஒப்பிடும்போது, AAC செங்கற்களால் அதிகமான நில அதிர்வு தாக்கங்களைக் கையாள முடியும்.
 
  • - தெர்மல் இன்சுலேஷன் மற்றும் மின்சார சேமிப்பு :

  • கான்கிரீட்டில் ஹைட்ரஜன் பயன்படுத்தி ஃபோமிங் செய்வதன் மூலம், நல்ல இன்சுலேஷனை வழங்குகிறது, எனவே, குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். எனவே, இது உங்களின் ஏர் கண்டிஷன் செலவுகளை 25% குறைக்கிறது. அவற்றின் மின்சாரச் சேமிப்பு திறன் காரணமாக, AAC ப்ளாக்குகள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் மின்சாரத்தைச் சேமிக்க உதவுகின்றன..
 
  •  

    - சவுண்ட்ப்ரூஃப் :

  • AAC ப்ளாக்குகள் எடை குறைவானதாகவும் துளையுடனும் இருப்பதால் அவை கணிசமான சத்தத்தைக் குறைக்கிறது. இந்தக் காரணங்களால் தான் ஸ்டுடியோக்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
  • - நிலைத்திருக்கக்கூடியது மற்றும் செலவு குறைவானது :

  • இயற்கையான, விஷம் இல்லாத மூலப் பொருட்களைப் பயன்படுத்திக் குறைவான கழிவுடன் AAC ப்ளாக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சில வீணான மற்றும் தவறாக வெட்டப்பட்ட தயாரிப்புகளை மறுசுழற்சி செய்யலாம் அல்லது சல்லி கற்களைச் செய்யப் பயன்படுத்தலாம். எளிதில் மக்காத பொருட்களைப் பயன்படுத்துவதால் கட்டிடம் அதிகம் நீடித்து உழைப்பதாகவும், நிலையானதாகவும் உள்ளது, அழுகல் மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், AAC ப்ளாக்குகள் எடை குறைவானதாகவும், மின்சாரத்தைச் சேமிப்பதாகவும், எளிதாக இன்ஸ்டால் செய்யக்கூடியதாகவும் இருப்பதால் அவை பணியாளர் செலவுகளைக் குறைக்கிறது.
 
  • - தீயெதிர்ப்பு :

  • மற்ற கட்டுமானப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, AAC ப்ளாக்குகள் எளிதில் தீப் பற்றாது என்பதால், அவற்றின் தடிமனைப் பொருத்து ஆறு மணி நேரம் வரையிலும், 1,200 டிகிரி செல்சியஸ் வரையிலும் தீயெதிர்ப்பை வழங்குகிறது. எனவே, இது கணிசமான தீப் பாதுகாப்பு பலன்களைக் கொண்டுள்ளது.
 
  • - மாயிஸ்சர் ப்ரூஃப் :

  • ஈரப்பதம் கணிசமான கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தும். AAC ப்ளாக்குகளில் உள்ள பெரிய துளைகள் குறைவான தண்ணீர் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. அதன் விளைவாக, அவை ஈரப்பதத்திலிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.

AAC ப்ளாக்குகளின் தீமைகள்
 

  • - அவற்றின் எளிதில் நொறுங்கும் இயல்பால், செங்கற்களை விட AAC ப்ளாக்குகளைக் கையாளும்போதும், கொண்டுசெல்லும்போதும், அதிகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். AAC ப்ளாக்குகல் விலை அதிகமானது, ஆனால் இன்ஸ்டால் செய்யப்படும்போது குறைவான சிமெண்ட் காரை பயன்படுத்தப்படுவதால் ஒட்டுமொத்த மேசனரி செலவுகள் குறைவாக இருக்கும்.
 
  • AAC ப்ளாக்குகள் நொறுங்கக்கூடிய இயல்பைக் கொண்டுள்ளதால், அவை எளிதில் உடையக்கூடும். இடைவெளிகளின் காரணமாக அவை எளிதாக உடையக்கூடும்.
 
  • அவை அதிகமான தண்ணீரை உறிஞ்சும். இதன் காரணமாகக் கட்டமைப்பில் வெடிப்புகள் ஏற்பட்டு, தண்ணீரை உறிஞ்சும்பொது விரிவடையவும், ஈரப்பதத்தை இழக்கும்போது சுருங்கவும் செய்யும்.
 
  • காற்றில் அதிகமான ஈரப்பதமுள்ள இடத்தில் இன்ஸ்டால் செய்யப்படும்போது உட்புறத்தில் குறைவான நீராவி ஊடுருவும் திறனையும், வெளிப்புறத்தில் அதிகமான நீராவி ஊடுருவும் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.



இப்போது, AAC ப்ளாக்குகளின் வகைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த அனைத்தையும் நீங்கல் அறிந்திருப்பீர்கள். உங்களின் வீடு அல்லது எதாவது திட்டத்தின் கட்டுமானத்திற்கு AAC ப்ளாக்குகளைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் அல்ட்ராடெக் AAC ப்ளாக்குகளை முயற்சி செய்து பார்க்கலாம்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....