வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



ஒரு வழி ஸ்லாப் மற்றும் இரண்டு வழி ஸ்லாப்க்கு இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துக் கொள்ளுதல்

கட்டுமானத்திலும் கட்டுமான டிசைனிலும் முக்கியமாக இருக்கும் இந்த ஒரு வழி ஸ்லாப் மற்றும் இரண்டு வழி ஸ்லாப்க்கு இடையிலான வேறுபாடுகளைப் பார்ப்போம்.

Share:


முக்கியக் குறிப்புகள்

 

  • ஒரு வழி ஸ்லாப்கள் சுமைகளை ஒரு திசையில் சுமக்கும். இரண்டு பக்கமும் பீம்கள் வைக்கப் பட்டு ஆதரிக்கப்படும். நீண்டகால குறுகிய கட்டமைப்புகளுக்கு இந்த ஸ்லாப்கள் பொருத்தமாக இருக்கும்.  
 
  • இரண்டு வழி ஸ்லாப்கள் இரண்டு திசைகளுக்கும் ஏற்ப செயல்படும். எல்லா பக்கமும் பீம்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதிக சுமைகள் மற்றும் பெரிய இடைவெளிகளைக் கையாள இது சிறந்தது.
 
  • ஒரு வழி ஸ்லாப்கள் சுமைகளை இரண்டு பீம்களுக்கு மாற்றும்; இரண்டு வழி ஸ்லாப்கள் சுமைகளை தூண்கள் அல்லது சுவர்களுக்கு மாற்றும். 
 
  • ஒரு வழி ச்லாப்களுக்கு கம்மியான ஸ்டீல்கள் தான் தேவை; இரண்டு வழி ஸ்லாப்களுக்கு அதன் இரண்டு வழி குறுக்கிடலின் காரணமாக அதிக ஸ்டீல்கள் தேவைப்படும்.
 
  • 3.6 மீட்டர்கள் நீளமுள்ள இடைவெளிகளுக்கு ஒரு வழி ஸ்லாப்கள் பொருத்தமானதாக இருக்கும்; 6 மீட்டர் நீளமுள்ள இடைவேளிகுக்கு இரண்டு வழி ஸ்லாப்கள் பொருத்தமானதாக இருக்கும்.


 ஸ்லாப்கள் என்பது தளங்கள் மற்றும் சீலிங்கை உருவாக்கும், கான்கிரீட்டாலான சமபரப்பு பகுதி ஆகும்.  இவை இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன: ஒரு வழி ஸ்லாப்கள் மற்றும் இரண்டு வழி ஸ்லாப்கள். கட்டமைப்பு பொறியியலில் ஒரு வழி மற்றும் இரண்டு வழி ஸ்லாப்கள் அடிப்படையாகும். இரண்டிற்கும் தனிப்பட்ட பண்புகளும் பயன்பாடுகளும் இருக்கின்றன. பாதுகாப்பான திறமையான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு, ஒரு வழி மற்றும் இரண்டு வழி ஸ்லாப்களுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.  இந்தப் பதிவில், ஒரு வழி ஸ்லாப்கள் மற்றும் இரண்டு வழி ஸ்லாப்களுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்வோம். அதன் குனாதீசியம், டிசைன், நடைமுறை பயன்பாடுகள் இவற்றையும் அறிவோம்.

 

 


ஒரு வழி ஸ்லாப் என்றால் என்ன?

ஒரு வழி ஸ்லாப் என்பது ஒரு எளிய கான்கிரீட் ஸ்லாப் ஆகும். சுமையை ஒரு திசையில் மட்டும் ஏற்றுக்கொள்ள இரண்டு எதிர் பக்கங்களிலும் பீம்கள் வைத்து இதை கட்டமைப்பார்கள்.  இந்த வகை ஸ்லாபில், நீண்ட இடைவெளிக்கும் குறுகிய இடைவெளிக்கும் உள்ள விகிதம் இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்கும். ஒரு திசையில் மட்டுமே வளைத்து கொடுக்கும் வகையில் தான் இந்த ஸ்லாப் வடிவமைக்கப்படும், பொதுவாக குறுகிய திசையில் தான் வைக்கப்படும்.

 

 

இரண்டு வழி ஸ்லாப் என்றால் என்ன?

மறுப்பக்கம், இந்த இரண்டு வழி ஸ்லாப்பை நான்கு பக்கமும் பீம்கள் வைத்து, இரண்டு திசைகளிலும் வளைந்துக் கொடுக்கும் வகையில் கட்டமைப்பார்கள். இது அதிக சுமைகளையும் நீண்ட இடைவெளிகளையும் கையாளத் தகுதியானது இந்த இரண்டு வழி ஸ்லாப் நான்கு பக்கமும் பீம்களால் ஆதரிக்கப்பட்டு, இரண்டு திசைகளிலும் வளைந்துக் கொடுக்கும் வகையில் இருக்கும். இது நீண்ட மற்றும் குறிகிய திசையிலும் இடைவெளிக் கொண்டிருக்கும். 

 

 

ஒரு வழி மற்றும் இரண்டுவழி ஸ்லாப்களுக்கு இடையிலான வேறுபாடு



ஒரு வழி மற்றும் இரண்டுவழி ஸ்லாப்களுக்கு இடையிலான சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அந்த முக்கிய வேறுபாடுகளை விளக்கும் ஒரு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

அம்சம்

ஒரு வழி ஸ்லாப்

இரண்டு வழி ஸ்லாப்

இடைவெளியின் திசை

ஒரு திசையில் இருக்கும் இடைவெளிகள்

இரு திசையில் இருக்கும் இடைவெளிகள்

ஆதரவு

இரண்டு எதிர் பக்கங்களிலும் பீம்கள் இருக்கும்

நான்கு பக்கங்களிலும் பீம்கள் இருக்கும்

சுமை மாற்றம்

இரண்டு பீம்களுக்கு சுமையைக் கொடுத்துவிடும்

தூண்கள் அல்லது சுவர்களுக்கு சுமையைக் கொடுத்துவிடும்

கனம்

ஒப்பிட்டு பார்த்தால் இது தான் கனமானது

ஒப்பிட்டு பார்த்தல் இது மெல்லியது

வலுவூட்டல்

குறைவான வலுவூட்டலே தேவை

இரண்டு திசையிலும் இடைவெளி இருப்பதால் அதிக வலுவூட்டல் தேவைப்படும்.

இடைவெளியின் நீளம்

குறைந்த இடைவெளிக்கு இது பொருத்தமானது

நீண்ட இடைவெளிக்கு இது பொருத்தமானது

பயன்பாடு

நீண்ட மற்றும் குறுகிய கட்டிடங்களுக்கு பொருத்தமானது

சதுர அல்லது செவ்வக கட்டிடங்களுக்கு பொருத்தமானது


ஒரு வழி ஸ்லாபின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்

 

நன்மைகள்:

  • 3.6 மீட்டர் வரை நீளமுள்ள இடைவெளிக்குப் பொருத்தமானது.
 
  • குறைவான ஸ்டீல் வலுவூட்டலே தேவை
 
  • ஸ்லாபின் ஆழம் அதிகமாக இருந்தால், குறுகிய திசையிலும் கட்டமைப்பிற்கு அதிக வலிமை கிடைக்கும்.

 

குறைபாடுகள்:

  • ஒரு திசையில் மட்டுமே வளைத்துக் கொடுக்கும், அதனால் சுமையை சரியாக பகிர முடியாது.
 
  • ஸ்டீல்லின் வலுவூட்டல் குறைவாக இருப்பதால், ஸ்லாபின் அடர்த்தி அதிகம் ஆகும்.

இரண்டு வழி ஸ்லாபின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்

 

நன்மைகள்:

  • 6 மீட்டர் x 6 மீட்டர் வரை பரப்புள்ள பகுதிக்கு பொருத்தமானது.
 
  • அதிக ஸ்டீல் வலுவூட்டல் கொடுப்பதால், ஸ்லாப் மெலிதாகிவிடும்.
 
  • இரண்டு திசைகளில் சுமை பகிர்வு இருப்பதால், கட்டமைப்பின் வலிமை அதிகரிக்கிறது.

 

குறைபாடுகள்:

  • ஒரு வழி ஸ்லாபுடன் ஒப்பிட்டால் இதன் டிசைன் சிக்கலானது.
 
  • திறமையான தொழிலாளர்கள் தேவை.
 
  • கட்டுமானச் செலவுகள் அதிகம்.


 

இவை இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது, ப்ராஜெக்டின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது, தேவையான இடைவெளி, சுமை தாங்கும் திறன், மற்றும் அழகான வடிவமைப்பு போன்றவற்றை சார்ந்து உள்ளது. எளிமையான டிசைன்கள் மற்றும் குறுகிய முதல் நடுத்தர இடைவெளி வரை இந்த ஒரு வழி ஸ்லாப்களைப் பயன்படுத்தலாம். அதே சமயத்தில், இரண்டு வழி ஸ்லாப்கள் நீண்ட இடைவெளிகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும். இங்கே சில தூண்களும் தேவைப்படும். ஒரு வழி ஸ்லாப் மற்றும் இரண்டு வழி ஸ்லாப்க்கு இடையேயுள்ள வேறுபாடுகளைப் புரிந்துக் கொண்டால், அதன் நன்மைகள் மற்றும் தீமைகளைப் புரிந்துக் கொண்டால், கட்டமைப்பாளர்களும் இன்ஜினியர்களும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். குறைவான விலையில், பாதுகாப்பான செயல்திறன் கொண்ட கட்டமைப்புகளை உருவாக்க முடியும். 



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....