1. பாங்கு : வடிவம் மற்றும் அளவுகள்
சாய்தளக் கூரை பல வடிவம் அளவு மற்றும் கூரையில் அளவுகளில் அதிக இடம் கொடுக்கிறன. கட்டிடக் கலைஞர் சிக்கலான வடிவங்களைத் தேர்வுசெய்து, பின்வாங்காமல் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் அதிக விருப்பத் தேர்வுகள் உள்ளன இது விருப்பத்திற்கு ஏற்ப கூரையின் மிகவும் குறைபாடற்ற வடிவம் மற்றும் அளவைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
2. சக்தி சேமிப்பு
சாய்தளக் கூரை கட்டுமானத்திற்கும் வெளிப் புறத்திற்கும் இடையே இயற்கையான காற்றோட்டத்திற்கு அனுமதிக்கிறது இந்த கட்டிட அமைப்பினால் மின் சக்தி சுமார் 25% -30% சேமிக்கப்படுகிறது.
3. சுற்றுச் சூழல் அபாயங்களில் இருந்து பாதுகாக்கிறது
சாய்தளக் கூரை ஒரு முக்கோண வடிவம் பெற்று இருப்பதால் அது உறுதியானது மற்றும் பாதுகாப்பானது. அவை அதீத பனிப்பொழிவு, மலை, மற்றும் காற்று நேரங்களில் சுற்றுச் சூழல் விளைவுகளுக்கு எதிராக ஒரு சிறந்த பொருத்தமாக இருக்கிறது.
அதோடு கூட, நீங்கள் அதிகப்படியான பாதுகாப்பு ம்னற்றும் நீடித்த உழைப்புக்கு சுவர்கள் மற்றும் கூரைக்கு காப்பு கொடுக்கலாம்.
4. மிகச் சிக்கனமான அதிகப்படியான இடம்
சாய்வான ஜோடி மூடிய சாய்தளக் கூரைகள் உதவியால் நீங்கள் உங்கள் வீட்டில் அதிகப் பணம் செலவில்லாமலும் தளத்தை நீட்டிக்காமலும் அதிகப் படியான இடத்தை அனுபவிக்க முடியும்.
5. மழை நீர் மறு பயன்பாடு
சாய்தளக் கூரைகள், பல்வேறு விதமான மழைநீர் சேகரிப்பை எளிதாகவும் திறமையாகவும் ஏற்படுத்த உதவுகின்றன. அது, அந்த கூரைகளில் உள்ள வெளிப்புற நீரோடும் முறைமைகள் எளிதாக பாதை மாற்றவும் மாற்றி அமைக்கவும் உதவுவதால்.