Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
ஃப்ளோர் டைல் விரிசலடைவதென்பது, உங்களின் ஃப்ளோர் டைல்ஸில் விரிசல்கள், முறிவுகள், அல்லது உடைப்புகள் இருப்பதைக் குறிக்கிறது. இந்த விரிசல்கள் டைல்ஸின் மேற்பரப்பை மட்டும் பாதிக்கக்கூடிய சிறிய, எளிதில் கண்ணுக்கு தெரியாத வெடிப்புகள் முதல், டைல்ஸின் ஆழம் வரை செல்லும் பெரிய, கவனிக்கத்தக்க விரிசல் வரை இருக்கலாம். அழகியல் ரீதியாக அழகாக இல்லாததோடு மட்டுமல்லாமல், சில சந்தர்ப்பங்களில், இந்த விரிசல்கள் உங்கள் வீடு அல்லது வணிக கட்டுமானத்தின் உறுதிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகளைக் குறிக்கக்கூடும்.
உங்களின் டைல்ஸில் உள்ள விரிசல்கள், அதாவது நுண்ணிய விரிசல் கூட வெறும் அழகியல் பிரச்சனைகளை விட அதிகமான பிரச்சனையாக இருக்கும். இவை உங்களின் ஃப்ளோரிங்கிற்கு கீழ் ஈரப்பதம் நுழைவதற்கான வாயிலாகிறது, அவ்வாறு பூஞ்சை வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. மேலும், காலப்போக்கில், இந்த விரிசல்கள் ஆழமாகி, உங்களின் இடத்தில் இடறி விழும் ஆபத்து உருவாகக்கூடும். இந்த விரிசல்களின் காரணத்தைப் புரிந்துகொள்வது அவற்றைத் தடுப்பதற்கும், எபாக்ஸி கிரவுட் போன்ற பொருத்தமான சொல்யூஷன்களைப் பயன்படுத்தி டைல்ஸில் உள்ள விரிசல்களை நிரப்புவதன் மூலம் உடனடியாக பழுதுபார்ப்பதற்கும் முக்கியமாகும்.
ஃப்ளோர் டைல்ஸில் விரிசல்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக உள்ளன. இந்த காரணங்களைப் புரிந்துகொள்வது ஃப்ளோர் டைல்ஸில் விரிசல் ஏற்படுவதைத் திறம்படத் தடுப்பதற்கு முக்கியமாகும். மிகவும் முக்கியமான காரணிகள் இதோ:
டைல் விரிசல் விடுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று கடுமையான தாக்கங்கள் ஆகும். டைல்ஸில் கனமான பொருட்களைப் போடும்போது அல்லது டைல்ஸ் கூர்மையான தாக்கங்களை அனுபவிக்கும்போது, அவை உடனடியாக விரிசலடையக்கூடும் அல்லது காலப்போக்கில் பலவீனமடையக்கூடும். டைல்ஸில் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க, டைல்ஸின் மேற்பரப்பில் ஃபர்னிச்சர்கள் அல்லது பிற கனமான பொருட்களை நகர்த்தும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
மோசமான இன்ஸ்டலேஷன் நடைமுறைகள் டைல் விரிசலடைவதற்கு வழிவகுக்கக்கூடும். ஒட்டுப்பொருளின் பற்றாக்குறையான கவரேஜ், முறையற்ற கிரவுட்டிங், அல்லது பற்றாக்குறையான சப்ஸ்டிரேட் தயாரிப்பு உள்ளிட்டவை டைல்ஸில் விரிசலுக்கு வழிவகுக்கும் பொதுவான இன்ஸ்டலேஷன் தவறுகளாகும். சரியான இன்ஸ்டலேஷன் நுட்பங்களைப் பின்பற்றும் தொழில்முறை டைல் இன்ஸ்டாலர்களைப் பணியில் ஈடுபடுத்துவது அத்தகைய பிரச்சனைகளைத் தடுப்பதற்கு முக்கியமானதாகும்.
டைல்ஸில் அதிகமான பாரம் அல்லது அழுத்தம் அவற்றை விரிசலடையச்செய்யலாம், குறிப்பாக போதுமான கட்டமைப்பு சார்ந்த சப்போர்ட் இல்லாத இடங்களில். கனமான பொருட்களை டைல்ஸில் நேரடியாக வைக்கும்போது அல்லது குறிப்பிட்ட இடங்களில் ஒருமுகப்படுத்தப்பட்ட எடையை வைக்கும்போது இது ஏற்படும். உங்களின் டைல்ஸ் மேற்பரப்புகளில் எடையைப் பரவச்செய்து, விரிசலைத் தடுக்க முறையான சப்போர்ட்டைப் பயன்படுத்துவதில் கவனத்துடன்.
சப்ஃப்ளோர் அல்லது அடிப்படை மேற்பரப்பு, டைலின் நீடித்து உழைக்கும் தன்மையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சப்ஃப்ளோர் சேதமடைந்தால், விரிசலடைந்தால், அல்லது சமச்சீராக இல்லை என்றால், அது மேலே உள்ள டைல்ஸ் மீது அழுத்தத்தை உருவாக்கி விரிசல் விட வழிவகுக்கலாம். டைல்ஸ் இன்ஸ்டலேஷனுக்கு முன் சப்ஸ்டிரேட் நல்ல நிலைமையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் எந்தவொரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகளையும் உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.
கண்ட்ரோல் ஜாயிண்ட்கள் அல்லது எக்ஸ்பான்ஷன் ஜாயிண்ட்கள் கட்டிடப் பொருட்களின் இயல்பான அசைவு மற்றும் விரிவாக்கத்தை அனுமதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. டைலிங்கின் போது இந்த ஜாயிண்ட்களை புறக்கணிப்பது ஃப்ளோரிங்கின் அசைவைத் தடுத்து, டைல்ஸில் அழுத்தத்தை ஏற்படுத்தி, விரிசல்கள் மற்றும் டைல் பாப்பிங்கிற்கு வழிவகுக்கக்கூடும். கண்ட்ரோல் ஜாயிண்ட்களில் கவனம் செலுத்தவும் மற்றும் விரிவாக்கம் மற்றும் சுருக்கத்திற்கு இடமளிப்பதற்காக சரியான டைலிங் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
விரிசலடைந்த டைல்ஸைத் தவிர்ப்பதென்று வரும்போது அதனைத் தடுப்பதே முக்கியமாகும். சில செயலூக்கமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், ஃப்ளோர் டைல்ஸ் விரிசலடையும் ஆபத்தை உங்களால் குறைக்க முடியும் மற்றும் விரிசலடைந்த டைல்ஸைப் பழுதுபார்க்கும் பிரச்சனையைத் தவிர்க்க முடியும். டைல்ஸ் விரிசல் விடுவதைத் தவிர்க்க பின்வரும் உதவிக்குறிப்புகளைச் செயல்படுத்தவும்:
போர்சலின் டைல்ஸ் அதிகம் நீடித்து உழைக்கும் திறன் கொண்டது மற்றும் விரிசல்களை எதிர்க்கக்கூடியது. இந்த வகை டைல்ஸைத் தேர்ந்தெடுப்பது டைல் விரிசல் விடுவதற்கான வாய்ப்புகளைக் கணிசமாகக் குறைக்கலாம். போர்சலின் டைல்ஸ் அவற்றின் வலிமை மற்றும் கடினமான பயன்பாட்டைத் தாங்கும் திறனுக்கு பெயர்போனவை ஆகும், அதனால் இது அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கான சிறந்த தேர்வாக அமைகிறது.
சப்ஃப்ளோரைச் சரியாகத் தயார் செய்வது டைல் விரிசலடைவதைத் தடுப்பதற்கு அவசியமாகும். டைல்ஸுக்கு நிலையான மற்றும் சமச்சீரான மேற்பரப்பை உருவாக்குவதற்கு ப்ளைவுட் மற்றும் கான்கிரீட் பேஸைப் பயன்படுத்தவும். இது எடையைச் சீராகப் பரவச்செய்யவும், நிலையற்ற ஃபவுண்டேஷன் காரணமாக ஏற்படும் விரிசல்களின் ஆபத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
டைல் இன்ஸ்டலேஷனுக்கு முன், சப்ஃப்ளோரில் எதாவது குழி அல்லது சமச்சீரற்ற இடங்கள் இருக்கிறதா என்பதை நன்றாக ஆய்வு செய்யவும். இந்த "டெட் ஸ்பாட்கள்" டைல்ஸைப் பலவீனமடையச்செய்யும் மற்றும் அவற்றை எளிதில் விரிசலடையச்செய்யும். டைலிங்கிற்கு முன் சப்ஃப்ளோரை வலுப்படுத்துவது மற்றும் பழுதுபார்ப்பதன் மூலம் எந்தவொரு பிரச்சனைகளையும் சரி செய்யவும்.
வெப்பநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் பெரிய பகுதிகளில், எக்ஸ்பான்ஷன் ஜாயிண்ட்களை அனுமதிப்பது முக்கியமாகும். இந்த ஜாயிண்ட்கள் டைல்ஸின் இயல்பான அசைவிற்கு இடமளித்து, அழுத்தத்தினால் ஏற்படும் விரிசல்களைத் தடுக்கிறது. பொருத்தமான இடைவெளி மற்றும் எக்ஸ்பான்ஷன் ஜாயிண்ட்களை வைப்பது குறித்து தீர்மானிக்க, தொழில்முறை இன்ஸ்டாலர்களிடம் கலந்தாலோசிக்கவும் அல்லது தொழில்துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
விரிசலடைந்த அல்லது சிப்டு டைல்ஸைக் கையாளுவது தொந்தரவுமிக்கதாகும், ஆனால் அவற்றின் பின்னால் இருக்கும் காரணங்களைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது உங்களின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் மற்றும் எரிச்சலடைவதைத் தடுக்கும். இந்த ப்ளாகில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், விரிசலில்லாத மற்றும் நீடித்து உழைக்கும் டைல் மேற்பரப்புகளை நீங்கள் அனுபவிக்கவுள்ளீர்கள். மேலும் விரிவான டைல் இன்ஸ்டலேஷன் உதவிக்குறிப்புகள் மற்றும் நுட்பங்களுக்கு, சரியான டைல் இன்ஸ்டலேஷன் நடைமுறைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் எங்களின் டைல் இன்ஸ்டலேஷன் உதவிக்குறிப்பு வீடியோவைப் பார்க்கவும்.