செங்கற்கள் என்றால் என்ன?
சிவப்பு செங்கற்கள், இது களிமண் செங்கல் என்றும் அழைக்கப்படுகிறது, இது இயற்கை களிமண்ணால் செய்யப்பட்ட பொருள் ஆகும், இது செவ்வக வடிவங்களில் வார்க்கப்பட்டு அதிக வெப்பநிலையில் சூளையில் சுடப்படுகிறது. இது உலகளவில் பயன்படுத்தப்படும் பழமையான மற்றும் மிகவும் பாரம்பரியமான கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும்.
ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் vs செங்கற்கள்
இரண்டு வகையான செங்கற்களுக்கும் அவற்றுக்கென நன்மைகள் மற்றும் தீமைகள் இருந்தாலும், ஃப்ளை ஆஷ் மற்றும் சிவப்பு செங்கற்களுக்கு இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.
1. கலவை
ஃப்ளை ஆஷ் செங்கற்கள் தொழில்துறை கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, முதன்மையாக நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஃப்ளை ஆஷ் பெறப்படுகின்றன. இந்த கழிவுப் பொருளுடன் சிமென்ட், மணல் மற்றும் தண்ணீருடன் இணைந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கப்பட்டு பின்னர் அதை வடிவமைத்து கற்கள் உருவாக்கப்படுகின்றன. அதேசமயம், சிவப்பு செங்கற்கள் களிமண்ணிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இது இயற்கையான மண்ணிலிருந்து உருவாகின்றன, இது பல இடங்களில் ஏராளமாக கிடைக்கின்றன. களிமண்ணை தண்ணீரில் கலந்து, செங்கல் வடிவில் வார்த்து, கெட்டிப்படுத்துவதற்காக சூளைகளில் சுட்டு எடுக்கப்படுகின்றன.
2. இன்சுலேஷன்
ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் குறைந்த வெப்ப காப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன மற்றும் குளிர் காலநிலையில் வெப்பத்தை திறம்பட தக்கவைத்து கொள்வதில்லை. மாறாக, சிவப்பு செங்கற்கள் அதிக அடர்த்தி மற்றும் குறைந்த வெப்ப கடத்துத்திறன் காரணமாக ஒலி மற்றும் வெப்ப காப்பு இரண்டையும் வழங்குகின்றன. வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் இரைச்சல் குறைப்பு ஆகியவை முக்கியமாக இருக்கும் சூழல்களுக்கு சிவப்பு செங்கற்களே சிறந்த கட்டுமான பொருளாக இருக்கும்.
3. மேற்பரப்பு
ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் ஒரு மென்மையான மேற்பரப்பு பூச்சினை வழங்குகின்றன, இதனால் ப்ளாஸ்டெரிங் தேவை குறைகிறது. இவற்றின் மென்மையான அமைப்பு அழகான தோற்றத்தினை வழங்குகிறது மற்றும் ஒட்டுமொத்த கட்டுமான நேரத்தையும் செலவையும் குறைக்கிறது. மாறாக, சிவப்பு செங்கற்களில் மென்மையான மற்றும் ஃபினிஷ் செய்யப்பட்ட தோற்றத்தை வழங்க ப்ளாஸ்டெரிங் தேவைப்படுகிறது.
4. அடர்த்தி
சிவப்பு செங்கற்களுடன் ஒப்பிடும்போது ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் எடை குறைந்தவை. உற்பத்திச் செயல்பாட்டில் இலகுரகப் பொருளான ஃப்ளை ஆஷ் சேர்ப்பதால், ஃப்ளை ஆஷ் கற்களின் ஒட்டுமொத்த அடர்த்தி குறைகிறது. இந்த இலகுரக இயல்பால் இவற்றைக் கையாளவும், தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லவும் மற்றும் கட்டுமானத்தின் போது நிறுவவும் எளிதாகிறது. இதற்கு நேர்மாறாக, செங்கற்களில் பயன்படுத்தப்படும் களிமண் காரணமாக அவை கனமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். சிவப்பு செங்கற்களின் அதிக அடர்த்தியால் பயன்படுத்தப்படும் கட்டமைப்புகளுக்கு கூடுதல் வலிமை மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது.
5. இறுக்க வலிமை
செங்கற்கள் அவற்றின் வலிமை மற்றும் நீடித்த தன்மைக்கு பெயர் பெற்றவை. ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்களுடன் ஒப்பிடும்போது இவை அதிக இறுக்க வலிமையைக் கொண்டுள்ளன, இவை சுமை தாங்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. சிவப்பு செங்கற்களின் அதிக வலிமையானது குறிப்பிடத்தக்க சிதைவு அல்லது உடைப்பு இல்லாமல் அதிக சுமைகளைத் தாங்குகிறது. ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் சிவப்பு செங்கற்களுடன் ஒப்பிடும்போது குறைந்த இறுக்க வலிமையைக் கொண்டுள்ளன, ஆனால் இவை பல கட்டுமான நோக்கங்களுக்காக ஏற்ற போதுமான வலிமையைக் கொண்டுள்ளன.
6. நீர் உறிஞ்சும் திறன்
செங்கற்களுடன் ஒப்பிடுகையில், ஃப்ளை ஆஷ் கற்கள் அதிக நீர் உறிஞ்சும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஃப்ளை ஆஷ் கற்களின் நுண்ணிய தன்மையுடன் நுண்ணிய துகள்களின் இருப்பு இணைந்து, நீர் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இந்த அதிக நீர் உறிஞ்சுதல் தன்மை, சரியாக பாதுகாக்கப்படாவிட்டாலோ அல்லது வாட்டர்ப்ரூஃப் செய்யப்படாவிட்டாலோ, ஃப்ளை ஆஷ் கற்காளை ஈரப்பதம் தொடர்பான பிரச்சனைகளான வெடிப்பு மற்றும் உதிர்தல் (ஸ்பாலிங்) போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது. செங்கற்கள், அவற்றின் அடர்த்தியான அமைப்பால், பொதுவாக குறைந்த நீர் உறிஞ்சுதல் விகிதத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் ஈரப்பதம் தொடர்பான பிரச்சனைகளும் குறைவாகவே உள்ளன.
7. சுய எடை
ஃப்ளை ஆஷ் கற்கள் சிவப்பு செங்கற்களை விட இலகுவான எடை கொண்டவை. ஃப்ளை ஆஷ் கற்களின் இலகுரக தன்மை, கட்டுமானத்தின் போது அவற்றைக் கையாள்வதையும், தேவையான இடத்திற்கு கொண்டு செல்வதையும் மற்றும் நிறுவுதலையும் எளிதாக்குகிறது. செங்கற்கள், கனமாக இருப்பதால், போக்குவரத்து மற்றும் நிறுவலுக்கு அதிக முயற்சி மற்றும் உழைப்பு தேவைப்படுகிறது. ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் vs செங்கற்களுக்கு இடையேயான எடையைப் பொறுத்தவரை, கட்டுமானத்திற்கேற்ற கற்களை தேர்ந்தெடுப்பது சிறந்த விருப்பமாக இருக்கும்.
இந்த விளக்கங்கள், ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அவற்றின் பண்புகள், தோற்றங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் பயன்படுத்துவதற்கேற்றவற்றை தேர்ந்தெடுப்பதற்கு உதவும்.