வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



உங்கள் வீட்டிற்கான 10 எளிய வரைபட வடிவமைப்புகள்

சிறப்பான ப்ளுபிரிண்ட் மூலம், ஒரு சாதாரண கட்டிடமாக இருக்கும் வீட்டை, அமைதி நிறைந்த வாழ்விடமாக மாற்ற முடியும். இந்த பதிவில் பல்வேறு தேவைகள், வாழ்க்கை முறைகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ற வீட்டு வரைபட வடிவமைப்புகள் பற்றி பார்க்கப் போகிறோம். தற்போதைய தேவைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட ரசனையுடன் பொருந்தக்கூடிய வடிவமைப்பைத் தேர்வுசெய்ய உதவும் குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதனால், உங்கள் வீடு காலத்திற்கும் உறுதியுடன் நிலைத்து நிற்கும்.

Share:


வீடு கட்டுவதற்கான பயணம் உற்சாகமாகவும், பயமளிக்குமாறும் இருக்கலாம். ஒரு வசதியான, பயனுள்ள மற்றும் பார்வையை ஈர்க்கும் வீட்டின் அடித்தளமானது அதன் வடிவமைப்பில் உள்ளது , பொதுவாக இது ‘வீட்டு நக்ஷா’ என்று அழைக்கப்படுகிறது. நன்கு திட்டமிடப்பட்ட வீட்டுக் கட்டமைப்புத் திட்டமானது கட்டுமான செயல்முறையை வழிநடத்தி, இறுதியில் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும். இந்த பதிவில், உங்கள் கனவு இல்லத்த்துக்கான பத்து எளிய பல்துறை வீட்டு வரைபட வடிவமைப்புகளைப் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு வடிவமைப்பும் என்ன வழங்குகிறது என்பதையும் எது பொருத்தமாக இருக்கும் என்பதையும விவரிக்கிறது.

 

 



முக்கிய குறிப்புகள்

 

  • உங்கள் வீட்டுக் கட்டமைப்புக்கான வரைப்பட  திட்டத்தைத் தேர்வு செய்யும் முன், உங்கள் குடும்பத்தின் அளவு, வாழ்க்கை முறை, தனியுரிமை தேவைகள், மற்றும் எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

 

  • எளிமையான வடிவமைப்புகள் கட்டுமான செயல்முறையை எளிதாக்கி, செலவுகளை குறைப்பதற்கும் உதவுகின்றன.

 

  • மிகப்பெரிய மற்றும் சிக்கலான கட்டமைப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ,அவை அதிக கட்டுமான செலவுகளுக்கும் சிக்கல்களுக்கும் வழிவகுக்கக்கூடும்.

 

  • உங்கள் வீட்டின் கட்டமைப்பை ஒரு சிறந்த நேர்த்தியான வீட்டு வரைபடமாக மாற்ற நிபுணர்களின் உதவியைப் பெறுவது மிகவும் முக்கியம்.

 

  • குறுகிய கால செலவுகள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு செலவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, செலவு குறைவிற்கு முன்னுரிமை கொடுங்கள்.

 

  • நீங்கள் தேர்வு செய்யும் வடிவமைப்பு, தொழிலாளர்களுக்கான கூலியை குறைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேலும், உங்கள் கட்டுமானம் தாமதமின்றி வேகமாக நடக்க வேண்டும்.  

 

  • உங்கள் வீடு எதிர்காலத்திலும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும், அதனால், எதிர்கால வாழ்க்கை மாற்றங்களையும், தேவைகளையும் கருத்தில்கொண்டு, உங்கள் வீட்டு வரைப்பட திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

வீட்டுக் கட்டுமானத்திற்கான வீட்டு வரைபடத்தின் முக்கியத்துவம்.

உங்கள் வீட்டின் ப்ளூப்பிரிண்ட், பொதுவாக வீட்டு வரைபடம் என அழைக்கப்படும். இது நாம் கட்டப்போகும் கட்டிடத்தின் பார்வைப் படம் ஆகும். இது அறைகள் மற்றும் இடங்களின் அமைப்பை மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையையும் உள்ளடக்கியது. ஒரு நல்ல வீட்டு வரைபடம், இருக்கும் இடத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறது. மேலும், இயற்கை வெளிச்சத்தை அதிகரிக்கிறது, காற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது, மற்றும் உங்கள் வீட்டின் வசதியையும் செயல்திறனையும் அதிகப்படுத்தும் வகையில் இருக்கிறது. இதுவே உங்கள் வீட்டை உண்மையாக உருவாக்கும் முதல் படி ஆகும்.


10 எளிய வீட்டு வரைபட வடிவமைப்புகள்

 

1. ஒரே மாடி வீடு 



அப்படி என்றால் என்ன?

ஒரே மாடி வீட்டில், படுக்கையறைகள், வாழும் இடம் மற்றும் சமையலறை உள்பட அனைத்து அறைகளும் ஒரே மட்டத்தில் இருக்கும். இந்த வீட்டின் வரைபட வடிவம் படிக்கட்டுகளை அகற்றி,  எளிய   வாழ்விடத்தை தேடுபவர்களுக்கு ஏற்றதாக அமைகின்றது.  இந்த வீட்டு வரைப்பட வடிவம், பெரும்பாலும் நடப்பதில் சிரமம் உள்ளவர்கள் அல்லது அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

 

இதன் பலன்கள் என்ன? 

1) முதியவர்கள் அல்லது நடப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு இவ்வகை வீடுகள் சிறந்த வடிவமைப்பாகும்.

 

2) இதில் செலவு குறைவாக இருக்கும். மேலும், பராமரிக்க சுலபமாகவும் இருக்கும்.

 

3) இது குறுகிய இடத்தில் போதுமான வாழ்விடத்தைத் தரும்.

 

4) படிக்கட்டுகளில் அடிக்கடி ஏற வேண்டிய தேவை இல்லை.       

 

2. ஸ்டூடியோ அபார்ட்மெண்ட் வடிவம்



அப்படி என்றால் என்ன?

  ஸ்டூடியோ அபார்ட்மெண்டின் வடிவம் என்பது ஒற்று பெரிய நிலப்பரப்புள்ள இடம் இருக்கும். லிவிங் ஏரியா, பெட்ரூம் மற்றும் சமையலறை இவை மூன்றும் ஒரே அறையில் அமைவதாகும். பொதுவாக, பாத்ரூம் மட்டுமே தனியாக இருக்கும். இந்த வீட்டின் வடிவம் சிறிய வாழ்விடத்தில் அனைத்து வசதிகளையும் அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் நகரங்களில் காணப்படும். இது நகரத்தில் வசிப்பதற்கான மலிவான முறையாகும். இது எளிய முறையில் வசதியான சூழலை வழங்குகிறது.

 

இதன் பலன்கள் என்ன? 

1) திறந்த வடிவமைப்பின் காரணமாக, அபார்ட்மெண்டில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் பல விதமாகப் பயன்படுத்தலாம்.

 

2) ஃப்ளோர் பிளானின் பல்திறனுள்ள அமைப்பின் காரணமாக, குடியிருப்பவர்கள் தங்கள் தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல பயன்பாட்டுள்ள நாற்காலிகள், மேஜைகள் போன்ற பொருட்களை தாராளாமாக வீட்டில் அமைக்கலாம்.

 

3) சிறிய இடம் என்பதால் குறைவான வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பு தேவைப்படும். இதனால் ஓய்வுநேர செயல்களுக்காக அதிக நேரம் கிடைக்கும்.

 

4) இளம் வாலிபர்கள் அல்லது வாழ்க்கையைத் தொடங்கும் ஜோடிகளுக்கு மிகவும் பொருத்தமானது. இது ஒரு வசதியான வாழ்க்கைத் தளத்தை நியாயமான செலவில் வழங்குகிறது.

 

3. இரு மாடி டுப்ளெக்ஸ் 



அப்படி என்றால் என்ன?

  இரு மாடி டுப்ளெக்ஸ் என்பது இரண்டு தனியாக உள்ள வீடுகளாகப் பிரிக்கப்பட்ட கட்டிடம். ஒவ்வொன்றும் இரண்டு மாடிகளைக் கொண்டிருக்கும்.   இந்த வீட்டின் வரைபடத்தில், கீழ் மாடியில் லிவ்விங் வாழ்விடங்கள் மற்றும் மேல்மாடியில் உறங்கும் அறைகளை இருக்கும். இது நகர்ப்புற இடத்தில் பெரிய இடத்தை பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பு, வீடுகளில் தனி லிவ்விங் இடம் மற்றும் உறங்கும் இடங்களை விரும்பும்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

இதன் பலன்கள் என்ன? 

1) இந்த வடிவமைப்பு, வீட்டுக்குள்ளே வெளிப்படையான பகுதிகளை வழங்குகிறது. இது ஒரு பெரிய குடும்பம் அல்லது விருந்தினர்கள் இருந்தாலும் தனிமையை அதிகரிக்க உதவுகிறது.

 

2) சிறிய நிலப்பகுதிகளைக் கொண்ட சொத்து உரிமையாளர்களுக்கு, இந்த வடிவமைப்பு பெரிதும் பயன்படும்.

 

3) இதன் போதுமான அளவினால்,  டூப்லெக்ஸ் நகர குடியிருப்புப் பகுதிகள் அல்லது கேட்டட் கம்யுனிட்டிகளுக்கு சிறப்பாக பொருந்தும்.

 

4) வீட்டின் பொதுப் பகுதிகளிலிருந்து பிரிந்து அமைந்திருப்பதால் தனிமை நேரத்தைப் பெற முடியும்.

 

4. L-வடிவ ஃப்ளோர் ப்ளான்



அப்படி என்றால் என்ன?

L என்ற எழுத்தைப்போல், L-வடிவ ஃப்ளோர் ப்ளான், அறைகளை 'L' வடிவத்தில் அமைத்துக் கொடுப்பதால், வீட்டின் பொதுப் பகுதிகள் மற்றும் தனிப்பட்ட பகுதிகளை எளிதாக பிரிக்க முடியும். இந்த வீட்டு வரைபடம் ஒரு வெளிப்புறம் அல்லது படியுடன் எளிதில் உள்ளடக்கிக் கொள்ளும். இது வெளியில் வாழ விரும்பும் வீட்டு உரிமையாளர்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கும். 

 

இதன் பலன்கள் என்ன? 

1) 'L' வடிவம் இயற்கையாகவே மைய வெளியிடத்தை உருவாக்கும். இது புல்வெளி, வெளிப்புறம் அல்லது தோட்டத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.

 

2) 'L' வடிவத்தை பின்பற்றியுள்ள அறைகள் குறைந்தபட்சம் இரு கோணங்களில் இருந்து இயற்கை ஒளியை பெறுகின்றன.

 

3) 'L' வடிவத்தினால், சிறிய வீட்டு ஃப்ளோர் ப்ளானின் இடையே தனிமையை பெற முடியும்.

 

5. டவுன்ஹவுஸ் வடிவமைப்பு



அப்படி என்றால் என்ன?

டவுன்ஹவுஸ் என்பது நகர வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்ட பல மாடி வீடுகள் ஆகும். அவை அகலமான, செங்குத்தான கட்டிடங்களால் வடிவமைக்கப்பட்டவை மற்றும் பக்கத்து கட்டிடங்களுடன் சுவர்களை பகிர்ந்துக்கொள்ளும். இந்த வீட்டு ஃப்ளோர் ப்ளான் டிசைன்கள், பல மாடிகளில் இடத்தை சரியாகப் பயன்படுத்த வலியுறுத்துகிறது. இது, மக்கள் மிக அதிகமாக உள்ள பகுதிகளில் வாழ்வதற்கு உதவுகிறது. உணவிற்காகவும், உறங்குவதற்காகவும் தனித்தனி இடங்களை வழங்க இந்த ப்ளான்  உதவுகிறது.

 

இதன் பலன்கள் என்ன? 

1) மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில், இந்த செங்குத்தான கட்டிடம் கிடைக்கும் அனைத்து இடங்களையும் பயன்படுத்துகிறது.

 

2) பிரிக்கப்பட்ட மாடிகள் இருப்பதால், குடியிருப்பவர்கள் வாழ, வேலை செய்ய, உறங்க தனித்தனியான இடங்களைப் பெறுகின்றனர்.

 

3) மேல்மாடியை ஒரு பயன்பாட்டு இடமாகவோ, ஆல்லது தோட்டமாகவோ அல்லது மொட்டை மாடியாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

 

4) டவுன்ஹவுஸ் வீடுகள் நெருக்கமான அக்கம்பக்கத் தொடர்பு மற்றும் சமூக அனுபவத்தை வழங்கும்.

 

6. பங்கலோ ஸ்டைல்



அப்படி என்றால் என்ன?

பங்கலோ ஸ்டைல் வீடுகள் ஒற்றை மாடி கொண்டவையாக இருக்கும். ஆனால் அவற்றின் கட்டிட பாரம்பரியம் மற்றும் குறிப்பிட்ட வடிவமைப்பு அம்சங்கள் மூலம் வேறுபடுகின்றன. பெரிய திண்ணை, சரிவான கூரைகள், மற்றும் கைவினை பணிக்கு முக்கியத்துவம் ஆகியவை இதில் முக்கியமானதாக இருக்கும். தெற்கு ஆசிய கட்டிடக்கலை மற்றும் மேற்கு இடங்களின் இணைப்பில் உருவான பங்கலோ வீடுகள், ஒழுங்கமைப்பிற்கு மட்டுமல்ல, பழமைவாய்ந்த  சூழலையும் ஏற்படுத்தித்தருகிறது.

 

இதன் பலன்கள் என்ன? 

1) ஒரே மாடியில் அனைத்தும் இருப்பதால், பங்கலோ வீடுகளில் படிகள் அவசியம் இல்லை.

 

2) பங்கலோ வீடுகள் இந்தியாவின் கட்டிட வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

 

3) படிகள் மற்றும் பல மாடிகள் இல்லாததால், விபத்துகள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

 

4) வராண்டா அல்லது தாழ்வாரம் உள்ளதனால் வெளி வாழ்வியல் ஊக்குவிக்கப்படுகிறது.

 

7. சிறு அடுக்குமாடி வீடு



அப்படி என்றால் என்ன?

ஸ்பிளிட்-லெவல் வீட்டில் நிலத்தின் ஏற்றத்தைப் பொருத்து அடுக்குமாடிகள் சரியாக அமைக்கப்படும்.  இந்த வடிவம், படுக்கையறைகள் மற்றும் வாழ்வியல் இடங்கள் போன்ற வாழ்ந்த இடங்களை வெவ்வேறு அடுக்குமாடிகளில் பிரிக்கும். குறுகிய படிக்கட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளதால், இது தனிமையை வழங்குகிறது. மேலும், வீடு முழுவதும் இணைந்த அனுபவத்தை உருவாக்குகிறது.

 

இதன் பலன்கள் என்ன? 

1) இந்த வடிவமைப்பு சரிவான அல்லது சமனிலை இல்லாத நிலத்தில் அமைப்பதற்கு உதவியாக இருக்கும். 

 

2) வெவ்வேறு அடுக்குகள் இருப்பதால், பல இடங்களை வீட்டிற்குள்ளேயே உருவாக்க முடியும். மேலும் இவை நெருக்கத்தில் தான் இருக்கும். அதனால் வசதியான அமைப்பாத இது இருக்கிறது. 

 

3) வீட்டின் பொதுவான இடங்களில் இருந்து விலகி ஒரு அமைதியான இடமும் உருவாக்கப்பட்டிருக்கும். இதனால், பரபரப்பான வீட்டு சூழலிலும் அமைதி கிடைக்கும்.

 

4) வெவ்வேறு மாடிகள், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தனிச்சிறப்பான தோற்றத்தை வழங்குகின்றன.

 

8. டோம் வடிவ வீடு



அப்படி என்றால் என்ன?

டோம் வடிவ வீடுகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. வளைந்த, வட்ட வடிவமைப்புகளுடன் ஒரு சிறப்பான வாழ்வியலை வழங்குகின்றன. வீட்டின் வரைபட வடிவமைப்பு அழகு மட்டும் கொடுக்காது. இது செயல்பாட்டிலும் முக்கியம். இது வீட்டின் சக்தி திறனை மற்றும் கட்டமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. போதுவான, சுற்றுச்சூழலுக்கு தகுந்த வீடு வேண்டும் என்று தேடும்வர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

 

இதன் பலன்கள் என்ன? 

1) வட்ட வடிவம் காற்றின் ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது வெப்பம் மற்றும் குளிரின் தாக்கத்தை குறைக்கிறது.

 

2) தனித்துவமான வட்ட வடிவமுள்ள வீடு தனித்து நிற்கும்.

 

3) வட்ட வடிவமைப்பு, கட்டுப்பாட்டின் அழுத்தத்தை சமமாகப் பகிரும். அதனால், இது மிகவும் வலிமையானது மற்றும் நிலநடுக்கங்களை தாங்கக்கூடியது.

 

4) ஒரு டோமின் எளிய வடிவமைப்பு, தேவையான பொருளின் அளவைக் குறைக்க அதிகமாக உதவும்.

 

9. கொலோனியல் ஸ்டைல் வீடுகள் 



அப்படி என்றால் என்ன?

 கொலோனியல் ஸ்டைல் வீடுகளில், சமச்சீரான முகப்பும் ஒழுங்கான உட்புற அமைப்பும் இருக்கும். பொதுவாக நடுப்பகுதியில் ஒரு பெரிய ஹால் மற்றும் இருபுறமும் சம அளவிலான அறைகள் இருக்கும். இந்த வீடுகள் பொதுவாக இரு மாடி அல்லது அதற்கும் மேல் இருக்கும். மற்றும் வரலாற்று கட்டிடக் கலைப் பாணிகளை பிரதிபலிக்கும் அலங்கார அம்சங்களை கொண்டிருக்கும்.

 

இதன் பலன்கள் என்ன?

1) கொலோனியல் ஸ்டைல் வீடுகள் பெருமை மற்றும் மதிப்பின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

 

2) வீட்டின் சமச்சீர் வடிவமைப்பு சமநிலையை உருவாக்குகிறது. இது காண்பதற்கு மண அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

 

3) இந்த வீடுகள் பெரிய அளவில் இருப்பதால், பெரும்பாலான குடும்பங்கள் வசதியாக வாழ முடியும். 

 

4) ஒரு காலோனிய வீட்டில்,தனிமைக்கான இடங்கள் (பெட்ரூம்கள்) மற்றும் பொது இடங்கள் (லிவிங் ரூம், டைனிங் ரூம்) அனைத்தும் தெளிவாக பிரித்து கட்டமைக்க பட்டிருக்கும்.

 

10 கண்டைனர் வீடு



அப்படி என்றால் என்ன?

கண்டைனர் வீடுகள் ஸ்டீல் ஏற்றுமதி செய்யும் கண்டைனர்களால் உருவாக்கப்பட்டு இருக்கும். இது அவற்றைப் தனிச்சிறப்பான வாழ்விடங்களாக மாற்றும். இந்த வீடுகள் சற்று அரிதானவை தான். ஆனால் அவற்றின் எளிமையான வடிவம் மற்றும் மாடுலர் அமைப்பு புதிதாக இருக்கும்.  நிரந்தர வசிப்பிடங்களாக மட்டுமில்லாமல், கண்டைனர் வீடுகள், கட்டுமான தளத்தில், தற்காலிக அலுவலகங்கள் அல்லது குடியிருப்புகள் அமைக்க பயன்படுத்தப்படுகின்றன. கண்டைனர் வீடுகள் சிறிய மாடி வடிவமைப்புகளை கொண்டிருக்கின்றன. இது வீட்டுப் கட்டுமானத்தின் போது தற்காலிக குடியிருப்புகளாகவும், சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வீடுகளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

 

இதன் பலன்கள் என்ன? 

1) பயன்படுத்திய கண்டைனரை மீண்டும் பயன்படுத்துவதால், இந்த வீடுகள் கட்டுமான கழிவுகளை குறைத்து, வளங்களைச் சேமிக்கிறது.

 

2) கண்டைனர்களை பயன்படுத்துவதால் ஆரம்ப கட்டுமான செலவுகள் மிகவும் குறையும்.

 

3) வீட்டின் அடிப்படை அமைப்பு முன்பே கட்டப்பட்டிருக்கும். கண்டைனர்களை அடுக்கி அதை ஒழுங்குப்படுத்தி வீட்டை அமைப்பர்.

 

4)  பல கண்டைனர்களை வேறு அமைப்புகளில் இணைத்தால், வசதியான வடிவங்கள் உருவாகும்.


எளிய வீட்டு வடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை.

 

1) உங்கள் தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள்   

உங்கள் குடும்பத்தின் அளவு, தினசரி வாழ்க்கை முறைகள், தனியுரிமை தேவைகள் மற்றும் எதிர்கால தேவைகளை மதிப்பீடு செய்து, சில சிறிய வீட்டு வடிவங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

 

2) எளிமை முக்கியம்.

எளிமையான சிக்கலில்லாத வீட்டு வடிவமைப்பை தேர்வு செய்யுங்கள். இது கட்டுமான செயல்முறையை எளிதாக்குவதோடு, செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் கட்டுமான செயல்முறை எளிமையாகிறது, மேலும் செலவுகளை குறைக்கவும் உதவுகிறது.

 

3) அதிக சிக்கலாக்கத்தைத் தவிர்க்கவும்.

முடுக்கமான வடிவமைப்பு அதிக செலவுகளை மற்றும் கட்டுமான சிரமங்களை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செயல்திறன் மற்றும் பட்ஜெட்டிற்கிடையில் நல்ல சமநிலையை பெற எளிமையாக வைத்திருக்கவும். செயல்திறன் மற்றும் பட்ஜெட்டிற்கிடையில் நல்ல சமநிலையைப் பெற இதை எளிமையாக வைத்திருங்கள்.

 

4) தொழில்முறை நிபுணரின் உதவியை நாடுங்கள்  

உங்களுக்கு எப்படி பட்ட வீடு வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளும் கட்டிடக்கலைஞர்கள் அல்லது வடிவமைப்பு நிபுணர்களுடன் வேலை செய்யுங்கள். மேலும் உங்கள் தேவைகளை நிறைவேற்றும் நடைமுறை, எளிய வீட்டு வடிவமைப்பை உருவாக்குங்கள்.

 

5) செலவின்மை

குறுகிய காலம் மட்டும் செலவு கம்மி ஆகாமல், நீண்ட காலத்திற்கும் கம்மி செலவைக் கொடுக்கும் வடிவமைப்புகளை தேர்வு செய்யுங்கள். இதில் ஆற்றல் திறன் மற்றும் பராமரிப்பு செலவுகளை  கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

6) எளிமையான கட்டுமானம்   

சிக்கல்கள் இல்லாமல் கட்டிடக்கலைஞர்களால்எளிதாக செய்யக்கூடிய வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். இது தாமதங்களை தவிர்க்கவும், வேலைச் செலவுகளை குறைக்கவும் உதவுகிறது.

 

இந்த குறிப்புகளை கவனித்து, உங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எளிமையான பயனுள்ள வீட்டு வடிவமைப்பை உருவாக்கலாம்.



இவை நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய எளிய வீட்டு வடிவமைப்புகளின் சில எடுத்துக்காட்டுகள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தேர்வு செய்யும் சிறந்த வடிவமைப்பு இன்று மட்டுமன்றி, எதிர்காலத்திலும் உங்கள் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப சரியானதாக இருக்க வேண்டும். வடிவமைப்பை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் குடும்பத்தின் அளவு, இடத்தின் அளவு, உங்கள் பட்ஜெட் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைக் கவனிக்கவும். சந்தோஷமாக வீடு கட்ட திட்டமிடுங்கள்!



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....