வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



உங்கள் வீடு வாஸ்து இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்கான பிரதான கதவு வாஸ்து குறிப்புகள்

வீடு கட்டுவதில் வாஸ்துவின் முக்கியத்துவம், வாழும் இடத்தில் நல்லிணக்கம், நல்வாழ்வு மற்றும் நல்ல ஆற்றல் ஓட்டத்தை ஊக்குவிப்பதில் உள்ளது. பிரதான கதவு வாஸ்து பற்றிய உதவிக்குறிப்புகளுடன் வரவேற்கும் சூழலை உருவாக்கவும்.

Share:


வாஸ்து சாஸ்திரத்தில் மெயின் கதவு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது நல்ல ஆற்றல் மற்றும் செழிப்பிற்கான நுழைவுப் புள்ளியைக் குறிக்கிறது. வாஸ்து கொள்கைகளின்படி, நன்கு வடிவமைக்கப்பட்ட சரியாக வைக்கப்பட்டுள்ள மெயின் வாசல் நல்ல அதிர்வுகளின் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இணக்கமான வாழ்க்கை சூழலைத் தரும். இந்த ப்ளாகில், மெயின் வாசல் வாஸ்துவின் இடம், திசை, அளவு, பொருள், நிறம், பெயர்ப்பலகை, படிகளின் எண்ணிக்கை, வைக்க வேண்டிய கடவுள் சிலைகள் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராயலாம். இந்த வாஸ்து யோசனைகளைச் செயல்படுத்துவதன் மூலம், உங்கள் மெயின் வாசல் வாஸ்து கொள்கைகளுக்கு இணங்கச் செய்து, உங்கள் வீட்டிற்கு நல்ல ஆற்றலை ஈர்க்கலாம்.

 

 


வாஸ்து படி மெயின் கதவு கட்டுவதன் முக்கியத்துவம்



வாஸ்து சாஸ்திரத்தில், நல்ல ஆற்றல் மற்றும் செழிப்புக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுவதால், வீட்டின் மெயின் கதவு ஒரு முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. பிரதான கதவின் சரியான இடம், திசை மற்றும் வடிவமைப்பு ஆகியவை வீட்டிற்குள் இணக்கமான மற்றும் வரவேற்கத்தக்க சூழ்நிலையை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. வாஸ்து வழிகாட்டுதலின்படி மெயின் கதவை அமைப்பது ஏன் முக்கியம் என்பது இங்கே:

 

1. ஆற்றலின் ஓட்டம்

வாஸ்து கொள்கைகளின்படி, மெயின் வாசல் ஆற்றல் நுழைவாயிலாக செயல்படுகிறது, இது நல்ல ஆற்றலை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கிறது. வாஸ்து வழிகாட்டுதல்களுடன் மெயின் வாசல் சீராக இருக்கும் போது, ​​அது வாழும் இடம் முழுவதும் ஆற்றலின் சீரான ஓட்டத்தை எளிதாக்குகிறது, இது ஒரு நன்மையான மற்றும் துடிப்பான சூழலை உருவாக்குகிறது.

 

2.   உறுப்புகளின் சமநிலை

வாஸ்து சாஸ்திரம் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் சமநிலையை வலியுறுத்துகிறது. மெயின் வாசல், சரியாக நிலைநிறுத்தப்பட்டால், இந்த பூதங்களின் இணக்கமான ஒருங்கிணைப்பை அனுமதிக்கிறது, வீட்டிற்குள் ஒரு சீரான ஆற்றல் ஓட்டத்தை உறுதி செய்கிறது.

 

3. செழிப்பை வரவேற்கிறோம்

மெயின் வாசல் செழிப்பு மற்றும் பூரணத்தின் நுழைவாயிலாக நம்பப்படுகிறது. பிரதான கதவுக்கான வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றுவது உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்வுகள் மற்றும் வாய்ப்புகளை ஈர்க்கவும் உதவுகிறது,வீட்டில் குடியிருப்பவர்களின் ஒட்டுமொத்த செழிப்பையும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

 

4. உணர்வியல் நல்வாழ்வு

வாஸ்து வழிகாட்டுதல்களின்படி வடிவமைக்கப்பட்ட ஒரு மெயின் வாசற்படி குடியிருப்பாளர்களின் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குகிறது. ஒரு அழகியல் மற்றும் நன்கு அமைந்துள்ள மெயின் கதவு வீட்டிற்குள் பாதுகாப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சிக்குப் பங்களிக்கும்.

 

 

மெயின் கதவு வாஸ்து குறிப்புகள்

இப்போது, ​​உங்கள் வீட்டின் மெயின் கதவுக்கான இடம், அளவு, பொருள், நிறம், பெயர்ப்பலகை, படிகளின் எண்ணிக்கை, வைக்க வேண்டிய கடவுள் சிலைகள் மற்றும் விளக்குகள் என வரும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்பிட்ட வாஸ்து யோசனைகள் மற்றும் உதவிக்குறிப்புகளை ஆராய்வோம்.

 

1.  நுழைவு திசை



வாஸ்து படி, பிரதான நுழைவாயிலின் திசை முக்கியமானது. கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த மெயின் கதவு திசைகள், வாஸ்துவின் படி, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் பூரணத்துவத்தையும் வரச் செய்து,குடியிருப்போரின் நல்வாழ்வை உறுதி செய்வதாகவும் நம்பப்படுகிறது.

 

2.   கதவு அளவு



மெயின் கதவின் அளவு வீட்டின் ஒட்டுமொத்த அளவிற்கு விகிதாசாரமாக இருத்தல் வேண்டும். மிகவும் சிறியதாகவோ அல்லது பெரிதாகவோ இல்லாத கதவு வீட்டிற்குள் ஆற்றல் ஓட்டத்தின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது வீட்டின் அழகியலுக்கும் பங்களிக்கிறது.

 

3. மெயின் கதவு மெட்டீரியல்



 முடிந்தவரை மரத்தால் ஆன கதவுகளைப் பயன்படுத்துவதை வாஸ்து வலியுறுத்துகிறது. மரக் கதவுகள் ஆற்றல் ஓட்டத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், பலத்த மற்றும் வரவேற்கத்தக்க நுழைவாயிலையும் தரவல்லது. இருப்பினும், மரக் கதவுகள் சாத்தியமற்றதாக இருந்தால், உலோகம் அல்லது ஃபைபர் கண்ணாடி போன்ற பிற பொருட்களை வாஸ்து கோட்பாட்டுடன் இணைக்கும் வண்ணம் பயன்படுத்தலாம்.

 

4. மெயின் கதவின் நிறம்



வாஸ்துவில் மெயின் கதவின் நிறம் முக்கியமானது. நேர்மறை மற்றும் பூர்ணத்துவத்தை குறிக்கும் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும். மஞ்சள், பழுப்பு மற்றும் வெள்ளை ஆகியவை பெரும்பாலும் வாஸ்து படி மெயின் வாசற்கதவின் நிறத்திற்கான நல்ல தேர்வுகளாக கருதப்படுகின்றன. இந்த நிறங்கள் நேர்மறை ஆற்றலை வரவழைப்பதாக நம்பப்படுகிறது, அதே நேரத்தில் கருப்பு போன்ற இருண்ட நிறங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

 

5.  பெயர்ப்பலகை



 வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் செழிப்பையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. அது தெளிவாகவும், காணக்கூடியதாகவும் இருக்க வேண்டும், மேலும் குடியிருப்போரின் பெயர்களைக் காட்டுதல் வேண்டும். இது நுழைவாயிலுக்கு தனிப்பட்ட தொடர்பைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நேர்மறையான சூழலுக்கும் பங்களிக்கிறது.

 

6.  படிகளின் எண்ணிக்கை



வாசலுக்குச் செல்லும் படிகளின் எண்ணிக்கையானது 3, 5 அல்லது 7 போன்ற ஒற்றைப்படை எண்ணாக இருத்தல் வேண்டும். ஒற்றைப்படை எண்கள் வாஸ்து கொள்கைகளின்படி நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றல் ஓட்டத்துடன் தொடர்புடையவை. அவை வெளிப்புறத்திலிருந்து உட்புறத்திற்கு இணக்கமான மாற்றத்தை உருவாக்குவதாக நம்பப்படுகிறது.

 

7.  வைக்க வேண்டிய தெய்வச் சிலைகள்



 பிரதான கதவுக்கு அருகில் தெய்வங்களின் சிலைகள் அல்லது படங்களை வைப்பது ஒரு பொதுவான வாசற்கதவு வாஸ்து நடைமுறையாகும். தடைகளை நீக்குபவர் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமான் இந்த நோக்கத்திற்காக ஒரு பிரபலமான தேர்வாகும். நுழைவாயிலில் அவரது இருப்பு நேர்மறையை அழைப்பதாக நம்பப்படுகிறது, தடைகளை நீக்குகிறது மற்றும் வீட்டிற்குள் ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்கிறது.

 

8.  விளக்குகள் 

பிரதான நுழைவாயிலைச் சுற்றி போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். நன்கு ஒளிரும் நுழைவாயில்கள் வீட்டின் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வரவேற்பு மற்றும் துடிப்பான சூழலை உருவாக்குவதோடு, சரியான பிரதான கதவு வீட்டு வாஸ்துவை உருவாக்குகிறது. பிரதான கதவுக்கு அருகில் சரியான வெளிச்சம் ஒரு நேர்மறையான முதல்-எண்ணப்பதிவை உருவாக்குவதற்கும் நுழைவாயிலின் ஒட்டுமொத்த ஆற்றலை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது.



முடிவாக, இந்த மெயின் வாசல் வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது ஒரு கோர்வையான மற்றும் வரவேற்கத்தக்க இடத்தை உறுதி செய்ய பயனுள்ளதாக இருக்கும். வாஸ்து சாஸ்திரம் ஒரு வழிகாட்டியாகும், மேலும் நீங்கள் அதை உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப திருத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு வாஸ்து நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. வாஸ்து வழிகாட்டுதலின்படி மெயின் வாசற்கதவைக் கட்டுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், வீட்டின் உரிமையாளர்கள் சாதகமான ஆற்றல் ஓட்டத்தை உறுதிசெய்து இணக்கமான வாழ்க்கைச் சூழலை உருவாக்க இயலும். உங்கள் வீட்டில் வாஸ்து சாஸ்திரம் மற்றும் அதன் பயன்பாடு பற்றி மேலும் அறிய, மாஸ்டர் பெட்ரூம் வாஸ்து பற்றிய எங்கள் ப்ளாகைப் பார்க்கவும்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....