கான்கிரீட்டின் வேலைத்திறன் என்பது எளிதாக அதை இடத்தில் வைப்பது, வடிவம் அல்லது அச்சை நிரப்புவதற்கான திறன் இவற்றைக் குறிக்கிறது. பல காரணிகள் இதை பாதிக்கலாம்; அவை:
1)தண்ணீர் -சிமெண்டு விகிதம்
தண்ணீர் -சிமெண்டு விகிதம் கான்கிரீட்டின் வேலைத்திறன் மற்றும் வலிமையை உறுதி செய்ய மிகவும் முக்கியம். கான்கிரீட் கலவையில், நீரின் அளவை சிமெண்ட்டின் அளவுடன் வகுக்கும்போது இந்த விகிதம் கிடைக்கும். இந்த விகிதம் அதிகமாக இருந்தால், அதிக வேலைத்திறனை அடையலாம். ஆனால் வலிமை மற்றும் நீடித்த தன்மை குறைந்துவிடும். குறைந்த விகிதம் அதிக வலிமையைத் தரும். ஆனால் கான்கிரீட்டின் வேலைத்திறன் குறைவாக இருக்கும்.
2) கற்களின் அளவும் வடிவமும்
பயன்படுத்தப்படும் கற்களின் அளவு, வடிவம், மற்றும் மேல்தோற்றம் கூட கான்கிரீட்டின் வேலைத்திறனை பாதிக்கக் கூடும். பொதுவாக, பெரிய கற்கள் வேலைத்திறனை குறைப்பதனால் பெரிய இடைவெளிகள் உருவாகுகின்றன. சீரற்று கோணலாக இருக்கும் கற்களுடன் ஒப்பிடும்போது, வட்டமான மென்மையான கற்கள் வேலைத்திறனை அதிகரிக்கும்.
3) கலவையின் பயன்கள்
கான்கிரீட்டில் கலந்திருக்கும் கலவைகள்வேலைத்திறனை பெரிதும் மாற்றுகிறது. நீர் குறைவு, பிளாஸ்டிசைசர்கள் போன்ற இரசாயன கலவைகள், வலிமையை இழக்கவிடாமல் தண்ணீர் சிமெண்ட் விகிதத்தை குறைத்து வேலைத்திறனை அதிகரிக்கும்.
4) கான்கிரீட் கலவையின் முறைகள்
கலவையை கலக்கும் முறைகள், கலக்கும் நேரம், கலக்கும் வேகம், மற்றும் பயன்படுத்தப்படும் கலவையின் வகை, இவை அனைத்தும் கான்கிரீட்டின் வேலைத்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகமாக கலக்கினால் கற்கள் பிரிந்து விடலாம்.குறைவாக கலக்கினால் கலவை ஒருங்கிணைந்ததாக இருக்காது.
5) கான்கிரீட்டின் தடினமான பகுதி
ஊற்றப்படும் கான்கிரீட் தடிமனாக இருந்தால், அது வேலைத்திறனை பாதிக்கும். மெல்லிய பகுதிகளுக்கு நன்றாக வேலை செய்யும் கான்கிரீட் தேவைப்படும். அப்போழுது தான், எந்த வெற்றிடங்களும் இல்லாமல், கலவை அச்சில் நிரம்புவதை உறுதி செய்ய முடியும்.