வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



போர்சலின் vs செராமிக் டைல்: வேறுபாடு என்ன மற்றும் நீங்கள் எதைத் தேர்வு செய்ய வேண்டும்?

டைல்கள் குழப்பம் ஏற்படுத்துபவையாக இருக்கலாம் ஆனால் அவை ஒவ்வொரு அறையின் ஒருங்கிணைந்த பகுதியாக அமைகின்றன. போர்சலின் vs செராமிக் டைல்ஸ் இடையிலான வேறுபாடுகளைக் கண்டு, உங்களின் அடுத்த திட்டத்திற்கான தகவலறிந்த முடிவை எடுங்கள்.

Share:


உங்களின் வீடு அல்லது அலுவலகத்திற்கான சரியான டைலைத் தேர்வு செய்யும்போது, அதற்கான ஆப்ஷன்கள் உங்களைத் திணறடிக்கச்செய்வதாக இருக்கலாம். போர்சலின் மற்றும் செராமிக் டைல்ஸ் நீடித்து உழைக்கும் தன்மை, பன்முகத் தன்மை மற்றும் அழகியல் தோற்றத்தை வழங்கும் இரண்டு பிரபலமான தேர்வுகள் ஆகும். போர்சலின் vs செராமிக் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது உங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற தகவலறிந்த முடிவை எடுக்க உங்களுக்கு உதவுகிறது. இந்த ப்ளாகில், போர்சலின் மற்றும் செராமிக் டைல்ஸ் இடையிலான பண்புகள் மற்றும் வேறுபாடுகளைக் காண்போம், அவற்றின் தனித்துவமான குணங்களை ஆராய்வோம் மற்றும் இறுதி தேர்வை உங்களிடமே விட்டுவிடுவோம்.



போர்சலின் டைல் என்றால் என்ன?



போர்சலின் டைல் என்பது, அதிக வெப்பநிலையில் சுடப்பட்ட நேர்த்தியான களிமண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வகை செராமிக் டைல் ஆகும். இந்த சுடும் செயல்முறையானது 0.5%-க்கும் குறைவான நீர் உறிஞ்சும் விகிதம் கொண்ட, அடர்த்தியான மற்றும் அதிகம் நீடித்து உழைக்கக்கூடிய டைலை உருவாக்குகிறது. போர்சலின் டைல்ஸின் அடர்த்தியின் காரணமாக அவை கறை, கீறல்கள் மற்றும் ஈரப்பதத்தால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை, இதனால் அவை குளியலறைகள் மற்றும் சமயலறைகள் போன்ற, மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் அல்லது அதிக நீர் பயன்பாடு உள்ள இடங்களில் சிறப்பான தேர்வாக உள்ளது. போர்சலின் டைல்ஸ் பல்வேறு நிறங்கள், பேட்டர்ன்கள் மற்றும் பூச்சுகள் உட்பட, பலவகையான வடிவமைப்பு ஆப்ஷன்களை வழங்குகின்றன.

 

போர்சலின் டைல்ஸின் முக்கியமான நன்மைகளில் ஒன்று அவற்றின் விரிவான பல்வகை வடிவமைப்பு ஆகும். அவை பலவகையான நிறங்களில், பேட்டர்ன்களில் மற்றும் பூச்சுகளில் வருகின்றன, அதனால் உட்புற வடிவமைப்பில் எண்ணிலடங்காத படைப்புத்திறன் சார்ந்த வடிவமைப்புகளை அனுமதிக்கிறது. நேர்த்தியானது மற்றும் பாலிஷ் செய்யப்பட்டது முதல் டெக்ஸ்சர் சேர்க்கப்பட்டது மற்றும் ரஸ்டிக்கானது வரை, போர்சலின் டைல்ஸால் இயற்கையான கல், மரம் அல்லது துணியின் தோற்றத்தைக் கூட கொண்டுவர முடியும், இவ்வாறு உங்களின் இடத்திற்கு விருப்பமான அழகியலை அடை உங்களுக்கு உதவுகிறது. மேலும், கிரவுட்டிங் என்று வரும்போது, போர்சலின் டைல்ஸுடன் எபாக்ஸி கிரவுட் பயன்படுத்துவது மேம்பட்ட நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் கறை எதிர்ப்பு தன்மையை வழங்கி, நீடித்திருக்கும் மற்றும் எளிதாகப் பராமரிக்கக்கூடிய இன்ஸ்டலேஷனை உறுதி செய்கிறது.


செராமிக் டைல் என்றால் என்ன?



"மறுபுறம், செராமிக் டைல்ஸ், களிமண், கனிமங்கள் மற்றும் தண்ணீரின் கலவையிலிருந்து உருவாக்கப்படுகிறது. இவை போர்சலின் டைல்ஸை விட குறைவான வெப்பநிலையில் சுடப்படுவதின் விளைவாக, கொஞ்சம் அடர்த்தி குறைவான மற்றும் நிறைய நுண் துளைகள் உள்ள தயாரிப்பு உருவாகிறது. செராமிக் டைல்ஸ் பொதுவாக 0.5%-க்கும் அதிகமான நீர் உறிஞ்சும் விகிதம் கொண்டதாகும். இவை போர்சலின் டைல்ஸை விட சற்று குறைவான நீடித்துழைக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் தேய்மானம் குறைவாக இருக்கும், அதனால் இவை பெரும்பாலான வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்றவையாகும். செராமிக் டைல்ஸ் பல்வேறு ஸ்டைல்களில், அளவுகளில் மற்றும் டெக்ஸ்சர்களில் வருவதால், உங்களின் இடத்தில் படைப்புத்திறன் சார்ந்த வெளிப்பாடு மற்றும் கஸ்டமைசேஷனுக்கு உதவுகிறது.

 

செராமிக் டைல்ஸ் வெவ்வேறு வடிவமைப்பு விருப்பங்களை வழங்குவதற்காக பல்வேறு ஸ்டைல்கள், அளவுகள் மற்றும் டெக்ஸ்சர்களை வழங்குகிறது. நீங்கள் சுத்தமான மற்றும் குறைந்தபட்ச தோற்றத்தை விரும்பினாலும் அல்லது போல்டான வைப்ரன்ட் தோற்றத்தை விரும்பினாலும், உங்களுக்கு விருப்பமான அழகியலுக்கு பொருந்தும் செராமிக் டைல்ஸ் கிடைக்கும். அவை மேட், க்ளோஸி, டெக்ஸ்சர்டு, மற்றும் பேட்டர்ன் ஆப்ஷன்கள் உட்பட பல்வேறு பூச்சுகளில் காணப்படும்.


போர்சலின் vs செராமிக் டைல்ஸ் இடையே எது சிறந்தது?


போர்சலின் அல்லது செராமிக் டைல் சிறந்ததா என்பதைத் தீர்மானிப்பது உங்களின் குறிப்பிட்ட தேவைகளையும், அந்த டைல்ஸ் இன்ஸ்டால் செய்யப்படும் சுற்றுப்புறத்தையும் சார்ந்ததாகும். ஒவ்வொரு வகைக்கும் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான பண்புகள் இதோ:

 

1. நீடித்து உழைக்கும் தன்மை

போர்சலின் டைல்ஸ், அடர்த்தியானது மற்றும் மிகவும் நீடித்து உழைக்கக்கூடியது என்பதால், சிப்ஸ், ஸ்கிராட்ச்கள் மற்றும் ஈரப்பதத்திற்கு எதிராக அதிக எதிர்ப்புத்திறனைக் கொண்டுள்ளது. செராமிக் டைல்ஸ், கொஞ்சம் குறைவான அடர்த்தியைக் கொண்டிருந்தாலும், அவை நீடித்து உழைக்கக்கூடியதும் பெரும்பாலான வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்றதுமாகும்.

 

2. வாட்டர் ரெசிஸ்டன்ஸ்

போர்சலின் டைல்ஸ் குறைவான தண்ணீர் உறிஞ்சும் விகிதத்தைக் கொண்டுள்ளதால் அதிக நீர் சேதத்தைத் தடுக்கிறது. செராமிக் டைல்ஸ், அதிக நுண் துளை கொண்டவையாக இருந்தாலும், தண்ணீர் பயன்பாடு குறைவாக உள்ள அல்லது நன்கு சீல் செய்யப்பட்ட பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.

 

3. வடிவமைப்பு ஆப்ஷன்கள்

போர்சலின் மற்றும் செராமிக் டைல்ஸ் ஆகிய இரண்டும் பல்வேறு நிறங்கள், பேட்டர்ன்கள் மற்றும் பூச்சுகள் உட்பட, பலவகையான வடிவமைப்பு ஆப்ஷன்களை வழங்குகின்றன. போர்சலின் டைல்ஸ் அதிக சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் செராமிக் டைல்ஸ் வெவ்வேறு அழகியல்களுக்கு பொருத்தமான ஏராளமான தேர்வுகளை வழங்குகிறது.

 

4. விலை

போர்சலின் டைல் அவற்றின் உற்பத்தி செயல்முறை மற்றும் உயர் தரத்தின் காரணமாக செராமிக் டைல்ஸை விட விலை அதிகமானதாக உள்ளது. பொதுவாக, செராமிக் டைல்ஸ் அழகியல் தோற்றத்தை வழங்கும் அதே வேளையில் சிக்கனமானதாகவும் உள்ளது.

 

மொத்தத்தில், போர்சலின் மற்றும் செராமிக் டைல்கள் ஒரே மாதிரியானவையா? இல்லை. அதிகம் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஈரப்பதம் எதிர்ப்பு தேவைப்படும், குளியலறைகள் மற்றும் சமயலறைகள் போன்ற இடங்களுக்கு போர்சலின் டைல்ஸ் சிறந்ததாகும். மறுபுறம், செராமிக் டைல்ஸ், பெரும்பாலான வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்ற பன்முக தன்மை கொண்ட சிக்கனமான ஆப்ஷன் ஆகும். எனவே, செராமிக்கை விட போர்சலின் சிறந்ததா அல்லது போர்சலினை விட செராமிக் சிறந்ததா என்பதை தீர்மானித்து, போர்சலின் vs செராமிக் இடையே இறுதி முடிவை எடுக்கும்போது நீங்கள் மேலே உள்ள காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.



அவை ஃப்ளோரிங் மற்றும் சுவர் இன்ஸ்டலேஷன்களுக்கான பிரபலமான தேர்வு என்பதால், போர்சலின் vs செராமிக் டைல்ஸ் இடையிலான தேர்வு, நீடித்து உழைக்கும் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் வடிவமைப்பு வழங்குதலில் உங்களின் விருப்பங்களைச் சார்ந்ததாகும். போர்சலின் மற்றும் செராமிக் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்ட பிறகு, உங்களின் திட்டத்திற்கான சிறந்த தேர்வை மேற்கொள்வதற்கு உங்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில் கொள்ளவும். டைல் பாப்பிங்கிற்கான காரணங்கள் போன்ற, டைல் சம்பந்தப்பட்ட தலைப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பினால், டைல் பாப்பிங் தொடர்பான எங்களின் ப்ளாகைப் பார்க்கவும்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....