முதலில், தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் உங்களிடம் இருப்பதை உறுதி செய்யவும். விரிசலடைந்த ஃப்ளோர் டைல்ஸை எப்படி சரி செய்வது என்பது குறித்து இப்போது கலந்துரையாடுவோம்.
1. சுற்றியுள்ள பகுதியைச் சுத்தம் செய்யவும்
அலங்கோலமான இடம் சரி செய்வதை விட அதிக சேதத்தையே ஏற்படுத்தும். சுத்தமான செட்டப்புடன் தொடங்குவதை உறுதி செய்யவும். மென்மையான துணியைப் பயன்படுத்தி சுற்றியுள்ள பகுதியை உலரச்செய்யவும். உடைந்த/விரிசலடைந்த டைல்ஸைச் சரி செய்யும்போது தூசி பறக்கும் என்பதால், பணியைத் தொடங்குவதற்கு முன் ஒரு டஸ்ட் ஷீட்டை விரிக்க வேண்டும். அருகில் ப்ளக் ஓட்டைகள் இருந்தால், தூசி சென்று அடைக்காமல் இருப்பதற்காக அவற்றை மூடவும். இவை டைல் விரிசலைச் சரி செய்வதை உறுதி செய்வதற்கான அடிப்படை ஆரம்ப புள்ளிகள் ஆகும்.
2. கிரவுட்டை நீக்கவும்
விரிசலடைந்த டைல்ஸின் கிரவுட்டை லூஸ் ஆக்க உதவுவதற்காகக் கிரவுட் ரிமூவரைப் பயன்படுத்தவும். டைல்ஸில் உள்ள விரிசலை எப்படி சரி செய்வது என்பதைக் கண்டறிய முயற்சி செய்யும் இந்த செயல்முறையில், சுற்றியுள்ள டைல்ஸை நீங்கள் சேதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும். நீங்கள் தவறுதலாக வழுக்கிச் சென்று மற்றொரு டைல்ஸில் விரிசல் ஏற்படுத்தாமல் இருக்க, சேதமடைந்த டைல்ஸின் நடுவில் மாஸ்கிங் டேப்பைப் பயன்படுத்தவும்.
கிரவுட்டை அகற்றுவது மிகவும் முக்கியமான பணி ஆகும், ஏனெனில் டைல்ஸ் இடையே அப்படியே விடப்படும் மிகுதியான கிரவுட் டைல்ஸைச் சுற்றி இறுக்கத்தை ஏற்படுத்தி விரிசல்களுக்கு வழிவகுக்கலாம்.
3. டைல்ஸை லூஸ் செய்யவும்
விரிசலடைந்த டைல்ஸில் துளையிடுவதற்காக ட்ரில் மிஷினைப் பயன்படுத்தவும். கீழே பொருத்தப்பட்டுள்ள எதாவது பைப்கள் அல்லது கேபிள்களை நீங்கள் சேதப்படுத்தக்கூடும் என்பதால் நீங்கள் வேகமாகத் துளையிடாததை உறுதி செய்யவும். உடைந்த டைல்ஸின் நடு பகுதியில் டேப்பிற்குள் மெதுவாகத் துளையிடத் தொடங்கவும்.
துளையிட்டதும், மேலும் ஆழமாகத் துளையிடுவதற்காக நீங்கள் வேகமாக நகர்த்தலாம்.
4. சேதமடைந்த டைல்ஸின் எச்சங்களை வெட்டி நீக்கவும்
உடைந்த டைல்ஸை எப்படி அகற்றுவது என்பதைப் புரிந்துகொள்ள இந்த படிநிலை உங்களுக்கு உதவும். ட்ரில் செய்யும்போது நீங்கள் உருவாக்கிய துளைகளில் இருந்து டைல்ஸின் துண்டுகளை அகற்ற தொடங்க உளியைப் பயன்படுத்தவும்.
முரட்டுத்தனமாகவும், பொறுமை இல்லாமலும் இதை செய்யக்கூடாது, டைல்ஸின் மையத்திலிருந்து தொடங்கி பக்கங்களை நோக்கி நகரவும். அந்த துண்டுகள் பக்கத்தில் உள்ள டைல்ஸைச் சேதப்படுத்தாத வகையில் கவனமாக இருக்கவும்.
அதில் எதாவது அதெசிவ் மீதமிருந்தால், அதை ட்ரிம்மிங் கத்தியைப் பயன்படுத்தி அகற்றவும்.
5. மாற்று டைல்ஸை செட் செய்யவும்
இது, உடைந்த ஃப்ளோர் டைல்ஸை எப்படி சரி செய்வதென்பது குறித்த செயல்முறையில் மிகவும் முக்கியமான படிநிலைகளில் ஒன்றாகும். முதலில், மாற்று டைல்ஸ் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்ய எந்தவொரு அதெசிவும் இல்லாமல் மாற்று டைல்ஸை வைக்க முயற்ச்சி செய்யவும். அது மற்ற ஃப்ளோர்/சுவர் டைல்ஸுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தால், புதிய டைல்ஸைப் பொருத்துவதற்கு முன் கூடுதலாக உள்ள அதெசிவை அகற்ற வேண்டும்.
செட்டிங் உங்களுக்கு திருப்திகரமானதும், கிரவுட் ஸ்பிரெட்டர் பயன்படுத்தி உங்களின் மாற்று டைல்ஸுக்கு பின்னால் அதெசிவைப் பூசி, புதிய டைல்ஸ் உங்களின் ஃப்ளோரில்/சுவரில் சீராகப் பொருந்துவதும் வகையில் அதை உறுதியாக வைக்கவும்.
6. புதிய டைல்ஸைப் பொருத்தவும்
உடைந்த ஃப்ளோர் டைல்ஸை எப்படி சரி செய்வது என்ற உங்களின் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று, புதிய டைல்ஸைப் பொருத்தியதும், அது அடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டைல்ஸை நீங்கள் கிரவுட் செய்ய வேண்டும். இதை செய்வதற்கு, முதலில், கிரவுட் பொருந்தும் வகையிலும், அதெசிவ் உலர்வதற்கு முன் டைல்ஸ் நகராமல் இருப்பதை உறுதி செய்யவும், இடைவெளியைப் பராமரிப்பதற்காக டைல் ஸ்பேஸர்களைப் பொருத்தவும்.
ஒரு நாளுக்கு பிறகு, நீங்கள் ஸ்பேஸர்களை அகற்றிவிட்டு, மாற்று டைல்ஸைச் சுற்றியுள்ள இடைவெளியில் புதிய கிரவுட்டைச் சேர்க்கலாம்.