கான்கிரீட் செக்ரிகேஷனிற்கான காரணங்கள்
கான்கிரீட் செக்ரிகேஷனை பாதிக்கும் பல காரணிகள் மற்றும் காரணங்கள் உள்ளன.
1. கான்கிரீட் பொருட்களின் சீரற்ற அளவில் கலக்குதல்:
கான்கிரீட் கலவையில் உள்ள பொருட்களின் அளவு விகிதம் ஒரே மாதிரியாக இல்லாவிட்டால், செக்ரிகேஷன் ஏற்படலாம். அதிக அளவு நீரில்-சிமென்ட் சேர்த்த கலவை விகிதமானது, நீரின் அதிக எடையின் காரணமாக எடை மிக்க பொருட்களை கீழே கொண்டு சேர்த்துவிடும்.
2. கான்கிரீட் கலவையினை போதுமான நேரம் வரை கலக்காமல் பயன்படுத்துதல்:
கான்கிரீட் முழுமையாக கலக்கப்படாவிட்டால், கலவையின் சில பகுதிகளில் சில பொருட்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், இது செக்ரிகேஷனை ஏற்படுத்திடும்.
3. கான்கிரீட் கலவையை கையாளுதல்:
கான்கிரீட் கலவையின் தவறான கையாளுதலும் செக்ரிகேஷனை ஏற்படுத்தும். நீங்கள் கான்கிரீட்டை கைமுறையாக கலக்கினால், கலவை உருவாக்குவதில் சீரற்ற தன்மை இருக்கலாம், இது செக்ரிகேஷனை ஏற்படுத்தும்.
4. கான்கிரீட் கலவை இடுதல்:
கான்கிரீட் செக்ரிகேஷன் ஏற்படுவதற்கு கான்கிரீட் இடப்படும் இடத்திற்கு கலவையினை கொண்டு செல்லும் முறை மிகப்பெரிய காரணமாக உள்ளது. கான்கிரீட் கலவை வைக்கப்படும் விதம் முக்கியமானது. கான்கிரீட் உயரத்தில் இருந்து ஊற்றப்பட்டாலோ அல்லது நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலோ, அதில் கனமான பொருட்கள் ஒன்று சேர்ந்து, மீதமுள்ள கலவையிலிருந்து தனியே பிரிந்து விடக் கூடும்.
5. கான்கிரீட்டின் அதிர்வு:
பொதுவாக கான்கிரீட்டில் இருந்து காற்று அடைப்புகளை ஒன்று சேர்க்கவும் அகற்றவும் அதிர்வு முறை பயன்படுத்தப்படுகிறது, அதிகப்படியான அதிர்வுகள் செக்ரிகேஷனை ஏற்படுத்தலாம், இதன் மூலம் கனமான பொருட்களை அடியில் சேர்ந்து மீதமுள்ள கலவையிலிருந்து பிரிந்து விடக் கூடும்.