வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வீட்டிற்கான 8 வகையான ஃபால்ஸ் சீலிங்க்ஸ்

உங்கள் வீட்டிற்கான எட்டு வகையான ஃபால்ஸ் சீலிங் அமைப்புகளை ஆராயுங்கள். இவை நவீன வாழ்வுக்கு ஏற்ற எளிமையான, அழகான மற்றும் செயல்பாடுகளால் நிறைந்த சீலிங் அமைப்புகளாகும்.

Share:


உங்கள் வீட்டை நீங்கள் மீண்டும் டிசைன் செய்கிறீர்களா? சரியான ஃபால்ஸ் சீலிங் உங்கள் வீட்டிற்கு அழகு மற்றும் செயல்திறனை கொண்டு வரும். இந்த பதிவில், ஃபால்ஸ் சீலிங்கின் வகைகளைத் தெரிந்துக் கொள்வோம். மேலும், விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப எத்தனை வகைகள் இருக்கிறது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். பொருட்களின் தேர்விலிருந்து ஃபால்ஸ் சீலிங்கின் டிசைன் வரை, உங்கள் வீட்டின் இன்டீரியர் அழகை எளிதாக உயர்த்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் நவீன முறைகளை விரும்பாலும் சரி, பாரம்பரிய முறைகளை விரும்பினாலும் சரி, அனைத்து வகைகளிலும் முன்னணி 8 ஃபால்ஸ் சீலிங் வகைகளை நாங்கள் உங்களுக்காக கூறுகிறோம்.

 

 


வீட்டிற்கு ஃபால்ஸ் சீலிங் ஏன் தேவை?

ஃபால்ஸ் சீலிங்க்ஸ் அமைப்பதனால், அழகு செயல்திறன் என்று பல பயன்கள் உள்ளன.  பல வகையான ஃபால்ஸ் சீலிங் டிசைன் வகைகளை பயன்படுத்துவதன் முக்கிய காரணங்கள் என்னவென்று இங்கே காணலாம்:

 

  • அழகு மேம்பாடு: ஃபால்ஸ் சீலிங்க்ஸ் ஒரு அறையின் தோற்றத்தை பார்வைக்கு ஈர்ப்பாக மாற்றும்.  அழகான மற்றும் சுத்தமான தோற்றத்தை வழங்குகின்றன. மேலும் வீட்டை அலங்கரிக்க பல வகையான ஃபால்ஸ் சீலிங் டிசைன்களையும் வழங்குகிறது.  
 
  • வெப்பநிலைக் கட்டுப்பாடு: ஃபால்ஸ் சீலிங்குகள் அறையின் வெப்பநிலையை பராமரிக்க உதவுகின்றன. இவை ஒரு அறையின் காற்றளவைக் குறைப்பதன் மூலம், குளிர் மற்றும் வெப்ப அளவுகளை சீர்படுத்தும். இதனால் உங்கள் வீடு பல ஆண்டுகளுக்கு வசதியாக இருக்கும். 
 
  • கரண்ட் பில் குறைவு; வெப்பமும் குளிரும் குறைவதனால்,  கரண்ட் பில் குறைவாக வரும். சரியான இன்சுலேஷன் கொடுக்கும் ஃபால்ஸ் சீலிங் பொருட்களைப் பயன்படுத்திய வீடுகளில் தான் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
 
  • சத்தம் குறைவு; பல்வேறு ஃபால்ஸ் சீலிங் வகைகளின் ஒரு முக்கியமான பயன் சத்தம் இன்சுலேஷன் செய்யப்படும். ஃபால்ஸ் சீலிங்குகள் வெளியிலிருந்து வரும் சத்தத்தை குறைத்து, உங்கள் வீட்டை அமைதியான இடமாக மாற்ற உதவுகின்றன.
 
  • வையர்கள் மற்றும் குழாய்களை மறைத்தல்: ஃபால்ஸ் சீலிங்குகள் வையர்கள், குழாய்கள், மற்றும் காற்றோட்ட குழாய்களை ஒழுங்காக மறைக்கின்றன. இதனால் சீலிங் பார்ப்பதற்கு மட்டும் அழகாக இருக்காது. எல்லாம் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதால், பழுது பார்க்கவும் பரிசோதிக்கவும் எளிமையாக இருக்கும்.
 
  • நெருப்பு பாதுகாப்பு: பல வகையான ஃபாசல் சீலிங்கில் பயன்படுத்தப்படும் சில பொருள்கள், நெருப்பை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாக இருக்கும். இதனால் நெருப்பு பிடித்தாலும், வேகமாக பரவாது. 
 
  • ஈரத்தன்மை மற்றும் சுருங்குதலை எதிர்த்தல்: சரியான பொருட்களை வைத்து செய்யப்பட்ட ஃபால்ஸ் சீலிங், ஈரப்பதத்தை எதிர்க்கும். மேலும், எளிதில் சுருங்காது. இதனால் நீண்ட காலம் இது உழைக்கும். 

 

 

8 வகையான ஃபால்ஸ் சீலிங்

 

1. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (POP) ஃபால்ஸ் சீலிங்

பிளாஸ்டர் ஆப் பாரிஸை (POP) தண்ணீரில் கலந்து, வலியூட்டலுக்காக கம்பி வலையில் வேண்டிய வடிவத்தை உருவாக்கி, POP ஃபால்ஸ் சீலிங்க்ஸ்கள் தயாரிக்கப்படும்.  செட் ஆனதும், சீலிங்கில் இதை பொருத்துவார்கள்

 

  • நன்மைகள்: இந்த வகை ஃபால்ஸ் சீலிங்குகளை எளிதாக பல வடிவங்களில் உருவாக்கலாம். மேலும் அவற்றை விருப்பப்படி பெயிண்டிங் செய்யலாம். இது சீரான முடிவைக் கொடுக்கும்.
 
  • குறைபாடுகள்: ஆனால், POP ஈரப்பதத்திற்கு எதிரானது அல்ல. மேலும் ஈரமான சூழலில் இருந்தால், இது காலப்போக்கில் சுருங்கக்கூடும்.

 

2. ஜிப்சம் ஃபால்ஸ் சீலிங்



ஜிப்சம் பேனல்கள், ஜிப்சம் பிளாஸ்டர் மற்றும் நார்ப் பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாக சதுர வடிவத்தில் இருக்கும், மெட்டல் ஃப்ரேம்வொர்க்கில் பொருத்தப்படுகின்றன.

 

  • நன்மைகள்: ஜிப்சம் ஃபால்ஸ் சீலிங்குகள் எடை குறைவானவை, சத்தத்தையும் இன்சுலேட் செய்யும், நெருப்பை எதிர்க்கக் கூடியவை. இவை சீரான தோற்றத்தை வழங்குகின்றன.
 
  • குறைபாடுகள்: ஆனால், ஈரமான சூழலில் இவை சுருங்கிப் போகலாம். எனவே ஈரப்பதத்திற்குப் பொருத்தமானது அல்ல..

 

3. மரம் ஃபால்ஸ் சீலிங்க்ஸ்



மர ஃபால்ஸ் சீலிங்குகள் பிளைவுட், மர வேனியர் அல்லது MDF பயன்படுத்தி கட்டப்படுகின்றன.  இவற்றை பேனல்ஸ் அல்லது சிறு மரத்துண்டுகளாக பயன்படுத்தலாம். 

 

  • நன்மைகள்: மரம் இடத்திற்கு போதுமான வெதுவெதுப்பையும், அழகையும் தரும். மேலும் பல ஃபால்ஸ் சீலிங் வடிவமைப்புகளுடன் பொருந்தும்.
 
  • குறைபாடுகள்: ஆனால், மரம் விலை உயர்ந்தது. கரையான்கள் அறிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதன் தோற்றத்தையும் கவனமாக பராமரிக்க வேண்டும். 

 

4. மெட்டல் ஃபால்ஸ் சீலிங்

மெட்டல் ஃபால்ஸ் சீளிங்க்ஸ் லுமினியம் அல்லது கலவை இரும்பு பேனல்களைப் பயன்படுத்தி செய்யப்படும். இது அப்படியே சீலிங் கட்டமைப்பில் பொருத்தப்படும்.

 

  • நன்மைகள்: மெட்டல் சீலிங்க்ஸ் நீண்ட நாட்களுக்கு உழைத்து நிற்கும், நெருப்பு மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும். மேலும், சுத்தம் செய்யவும், பராமரிக்கவும் எளிது. 
 
  • குறைபாடுகள்: மழை பெய்தால், சத்தம் அதிகமாக கேட்கலாம். மற்ற ஃபால்ஸ் சீலிங் முறைகளுடன் ஒப்பிடும்போது இது மிக விளையுயர்ந்தது.

 

5. ஃபைபர் ஃபால்ஸ் சீலிங்

ஃபைபர் சீலிங்குகள் இயற்கை மற்றும் ஃபைபர்கிளாஸ் போன்ற சிந்தட்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.  இவை பல அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கின்றன.

 

  • நன்மைகள்: இவற்றில் சத்தத்தை அடக்கும் தன்மைகள் உண்டு. மேலும் இவற்றை பொருத்துவதும் எளிது.
 
  • குறைபாடுகள்: டிசைன்கள் அடிப்படையில் பார்க்கும்போது, ஃபால்ஸ் சீலிங்களில் வளைவுத் தன்மை இருக்காது. மேலும், உயர்ந்த தோற்றத்தையும் கொடுக்காது. 

 

6. கண்ணாடி ஃபால்ஸ் சீலிங்க்ஸ்



இந்த வகை சீலிங்கில் கண்ணாடி பலகைகள் பயன்படுத்தப்படும். வெதுப்பிய அல்லது கொஞ்சம் நிறம் இருக்கும் கண்ணாடிகள் பயன்படுத்தப்படும். பெரிதாக இதை காண முடியாது. நவீன வீடுகள் அல்லது வணிக இடங்களில் இத காணலாம். 

 

  • நன்மைகள்: கண்ணாடி தனக்குள் வெளிச்சத்தை அனுமதித்து, இடத்தை வெளிச்சமாக மாற்றும். இது நவீன ஃபால்ஸ் சீலிங் வகை. இதை சுத்தம் செய்வதும் எளிது. 
 
  • குறைபாடுகள்: கண்ணாடி பலவீனமானது, விலை உயர்ந்தது. மேலும், இது வெப்பத்தைத் தடுக்கக் கூடியது அல்ல.

 

7. PVC ஃபால்ஸ் சீலிங்க்ஸ்



PVC அல்லது பாலிவினைல் குளோரைடு பேனல்கள், அலுவலகம் மற்றும் வீட்டிற்கு பொருத்தமானவை. இவை பல நிறங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன.

 

  • நன்மைகள்: இவை நீர்ப்புகா தன்மையுடையவை, பொருத்துவதற்கு எளிதானவை, மற்றும் பராமரிப்பும் குறைவாகவே இருக்கும்.
  • குறைபாடுகள்: PVC பலகைகள் எரிக்கப்படும் போது நச்சுக்களை வெளியேற்றும். அதனால், இவை சுற்றுச்சூழல் நலனுக்கு பொருத்தமானவை அல்ல.

 

8. ஃபேப்ரிக் மற்றும் சிந்தெட்டிக் லெதர் ஃபால்ஸ் சீலிங்

ஒரு ஃப்ரேமின் மேல் ஃபேப்ரிக் அல்லது சிந்தெட்டிக் லெதரை விரித்து இந்த சீலிங் வகை உருவாக்கப்படும். இது மென்மையான தோற்றத்தை உருவாக்கும்.

 

  • நன்மைகள்: இது ஒரு தனித்துவமான அழகிய தோற்றத்தை அளிக்கும். மேலும் சீலிங்கில் உள்ள குறைகளை மறைக்க உதவுகிறது. ஒலிக்கவசம் தன்மையை மேம்படுத்தவும் இதைப் பயன்படுத்தப்படலாம்.
 
  • குறைபாடுகள்: ஆனால், இது பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் சுத்தம் செய்ய சிரமமாக இருக்கும். மற்ற ஃபால்ஸ் சீலிங் வகைகளைவிட இந்த வகை நீடித்த காலம் இருக்காது.

 

 

ஃபால்ஸ் சீலிங்க்ஸ்களின் செலவை பாதிக்கும் காரணிகள்

வீட்டிற்கான ஃபால்ஸ் சீலிங்கின் செலவை கணக்கிடும்போது, பல்வேறு விஷயங்களை சேர்ந்து செலவுகளை கணக்கிட வேண்டும். பல வகையான ஃபால்ஸ் சீலிங்களை அடிப்படையாய் வைத்து அதன் விலையை பார்க்கலாம்: 

 

  • பொருட்கள்: விலையில், பொருட்களை தேர்வு செய்வது முக்கிய பங்கு வகிக்கும். பொதுவாக பயன்படுத்தப்படும் ஃபால்ஸ் சீலிங் பொருட்கள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (POP), ஜிப்சம், மரம், PVC, மற்றும் ஃபைபர்கிளாஸ் ஆகும். ஒவ்வொன்றிற்கும் விலை மாறுபடும்.
 
  • டிசைன்:  சிக்கலான வடிவமைப்புகள் அதிக திறமையான தொழிலாளர்களும் கூடுதல் நேரமும் தேவைப்படும், எனவே அதிக செலவு வரும். நேரான கோடுகள் அதிக செலவை கொடுக்காது. ஆனால் நுணுக்கமான வடிவங்களும் டிசைன்களும் விலையை அதிகரிக்கும். 
 
  • பரப்பளவு: பரப்பளவு பெரியதாக இருந்தால், செலவு அதிகமாக இருக்கும். அதிகப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி கூடினால், அதிகச் செலவுகள் வரும்.
 
  • தொழிலாளர்ளுக்கான கூலி: நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து தொழிலாளர்ளுக்கான செலவுகள் பெரிதும் மாறுபடலாம். சிறிய நகரங்களைவிட பெரிய நகரங்களில் தொழிலாளர்ளுக்கான கூலி அதிகமாக இருக்கும்.

 

 

சிறந்த மதிப்பை பெறுவது

வெறும் அலங்காரத்திற்காக மட்டும் ஃபால்ஸ் சீலிங் அமைப்பதில்லை. உங்கள் வீட்டின் செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் வெளிச்சம், சத்தம், வேப்பம், ஆகியவற்றை இன்சுலேட் செய்யும் வகையில் அவை இருக்க வேண்டும்.  உங்கள் முதலீட்டிற்கான சிறந்த மதிப்பை அடைய:

 

  • உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
 
  • தரமும் செலவும் சமநிலையில் இருக்கும் வகையில், பொருட்களை நியாயமான முறையில் தேர்ந்தெடுங்கள், 
 
  • நீண்டகால பராமரிப்பு மற்றும் உழைத்து நிற்கும் தன்மையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

 

எனினும், ஃபால்ஸ்சீலிங்க்கான செலவு, மேற்கூறிய காரணிகளைப் பொறுத்து மாறுபடும். ஆனால், மிகச் சிறிய பட்ஜெட்டிலும், உங்கள் வீட்டின் அழகை உயர்த்தி, வசதியான சூழலை உருவாக்க பலவிதமான ஃபால்ஸ் சீலிங் வகைகளிலிருந்து ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.




உங்கள் வீட்டிற்கு ஃபால்ஸ் சீலிங் வகைகளைத் தேர்ந்தெடுக்கும் போது, அறையின் நோக்கம், உங்கள் பட்ஜெட் மற்றும் நீங்கள் விரும்பும் அழகான டிசைன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள். பிஓப் மற்றும் ஜிப்சமின் அழகு முதல் PVC மற்றும் ஃபைபரின் நடைமுறைப் பயன்பாடு வரை, ஒவ்வொரு பொருளும் தனித்தன்மையான நன்மைகளை வழங்குகிறது. ஃபால்ஸ் சீலிங் பொருட்களின் வகைகள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் புரிந்து கொண்டால், உங்கள் வீட்டின் இன்டீரியரை அழகாக்க இது உங்களுக்கு உதவியாக இருக்கும். பலவிதமான ஃபால்ஸ் சீலிங் டிசைன் வகைகளை ஆராய்ந்து, உங்களின் தேவைக்கு ஏற்ப, செயல்பாடுகளுக்கு ஏற்ப சரியானதை தேர்வு செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள், சரியான ஃபால்ஸ் சீலிங் உங்கள் இடத்தை மாற்றி, உங்கள் வீட்டுக்கு அழகையும் செயல்பாடையும் சேர்க்கும்.




தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....