Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் கான்கிரீட் சுருங்கி விரிவடையச் செய்கின்றன, இது மெட்டீரியலின் அளவை மாற்றுகிறது. இந்த அளவு மாற்றம் விரிசல் அல்லது உடைப்புக்கு காரணமாக இருக்கலாம்.
எனவே, இதைத் தவிர்க்க, கன்ஸ்ட்ரக்சன் ஜாய்ண்ட்கள் விரிசல் தடுப்பு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. கான்கிரீட்டின் அளவு மற்றும் நீளம் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், கன்ஸ்ட்ரக்சன் ஜாய்ண்ட்களை பயன்படுத்துவது இன்றியமையாததாகிறது. பொதுவாக, குறுகிய நீளம் கொண்ட கான்கிரீட் பயன்பாட்டிற்கு ஜாயிண்ட்கள் தேவையில்லை.
ஏனென்றால், குறுகிய நீள கான்கிரீட்டின் விரிவாக்கத்தில், இறுதிப்புள்ளி நெருக்கமாக இருக்கும் மற்றும் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. கான்கிரீட் இடப்படும் இடத்தின் எல்லை அதிகரித்தால் விரிசல் நிகழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
கன்ஸ்ட்ரக்சன் ஜாய்ண்ட் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அது பல கட்டிட மெட்டீரியல்களை வடிவமைக்கவும் கட்டமைக்கவும் பயன்படுகிறது. பெரும்பாலும், இவை விரிசல் ஏற்படுவதைத் தடுக்க சீரான இடைவெளியில் கான்கிரீட் அடுக்குகள் மற்றும் நடைபாதைகளில் வைக்கப்படுகின்றன.
வெவ்வேறு கான்கிரீட் கன்ஸ்ட்ரக்சன் ஜாயிண்ட்கள் வகைகளைப் பார்ப்போம்:
திட்டத்தின் தேவையின் அடிப்படையில் கட்டுமானத்தில் பல்வேறு வகையான ஜாயிண்ட்கள் நிறுவப்படலாம். சிறந்த எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் ஒரு குறிப்பிட்ட கான்கிரீட் ஸ்லாப்பில் வெவ்வேறு கன்ஸ்ட்ரக்சன் ஜாயிண்ட்களை வைக்கலாம்.
நீங்கள் நிறுவக்கூடிய பல்வேறு கான்கிரீட் ஜாயிண்ட் வகைகள்:
பொதுவாக தனிப்பட்ட இடங்களின் அளவைக் கண்டுபிடிக்க கன்ஸ்ட்ரக்சன் ஜாயிண்ட்கள் கான்கிரீட் அடுக்குகளில் நிறுவப்படுகின்றன. அவை பொதுவாக ஸ்லாப்பின் இருபுறமும் இடப்பெயர்ச்சியை அனுமதிக்கும் வகையிலும் மேலும் ஸ்லாப்பில் வெளிப்புற சுமைகளால் ஏற்படும் நெகிழ்வு அழுத்தங்களை மாற்றும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன.
பொதுவாக, இந்த ஜாயிண்ட்கள் ஏற்கனவே நிலையான ஜாயிண்ட் அமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.
கான்கிரீட்டின் அளவு மாறும் சூழ்நிலைகளில், அழுத்தத்தைப் போக்க ஜாயிண்ட்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு கட்டிடத்தின் பகுதிகளுக்கு இடையில் இடைவெளியை உருவாக்க விரிவாக்க ஜாயிண்ட்கள் வைக்கப்படுகின்றன.
45 மீட்டருக்கும் அதிகமான நீளமான கட்டிடம் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட விரிவாக்க ஜாயிண்ட்களுடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் c/c இடைவெளி பொதுவாக 30மீ அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
கான்கிரீட் கன்ஸ்ட்ரக்சன் ஜாயிண்ட்கள் பொதுவாக ஒரு நேர் கோட்டில் வலுவிழந்த இடத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட கான்கிரீட் அடுக்குகளில் வெட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட அல்லது காடி வெட்டப்பட்ட பள்ளங்களாக இருக்கும். இது நடைபாதைகளில் பயன்படுத்தப்படும் பொதுவான ஜாயிண்ட் வகை ஆகும்.
ஸ்லாப்பில் பரிமாண மாற்றங்கள் மூலம், இது விரிசல்களின் இருப்பிடத்தை ஒழுங்குபடுத்துகிறது. கட்டுப்பாடற்ற விரிசல்கள் வளரும் மற்றும் கரடுமுரடான மேற்பரப்பு, நீர் ஊடுருவல், மேற்பரப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, சுருக்க ஜாயிண்ட்கள் ஸ்லாப்கலில் வைக்கப்படுகின்றன.
பெயரே விவரிக்கும் வகையில் இவை தனியே உருவாக்கப்படும் ஜாயிண்ட்கள்: கான்கிரீட் ஸ்லாப்பை வேறொன்றிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன. சுவர், காலமன் அல்லது டிரைன் பைப் போன்ற இடங்களில் கான்கிரீட் தனிமைப்படுத்தும் ஜாயிண்ட்கள் அனைத்திலிருந்தும் ஸ்லாப்பை தனிமைப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஜாயிண்ட்கள் ஸ்லாப் ஊற்றுவதற்கு முன் சுவர், ஸ்டாண்ட்பைப் அல்லது காலமனுக்கு அருகில் முன்னர் தீர்மானிக்கப்பட்ட ஜாய்ண்ட் மெட்டீரியலை வைப்பதன் மூலம் நிறுவப்படுகின்றன
இந்த ஜாய்ண்ட்களை நிறுவும் போது அதிக அளவு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் தேவைப்படுகிறது. ஜாய்ண்ட்கள் ஸ்லாப்பின் மேற்பரப்பில் 1/4 வது பகுதியை மட்டுமே ஊடுருவுகின்றன. ஸ்லாப்பின் ஸ்திரத்தன்மை தேவைப்படுவதால் அலங்கார ஸ்டாம்பிங் ஆழமாக செல்லாது.
ஸ்டாம்ப் டிசைன் பேட்டர்ன் மீது கட் செய்ய வேண்டும், எனவே கிராக்கிங் கட்டுப்படுத்தப்பட்டு ஜாய்ண்ட்கள் கண்ணுக்கு தெரியாததாகிடும்.
கான்கிரீட் மேற்பரப்பு விரிசல் விளிம்பில் இருக்கும் சூழ்நிலையில் அழுத்தம் காரணமாக பலவீனமான பகுதியில் முதலில் விரிசல் ஏற்படுகிறது. பில்டிங் ஜாய்ண்ட்கள் அல்லது கன்ஸ்ட்ரக்ஷன் ஜாய்ண்ட்களைப் பயன்படுத்துவது,அழுத்தத்தை மாற்றுவதன் மூலம் கான்கிரீட்டின் மேற்பரப்பில் விரிசல் ஏற்படுவதை தடுக்கிறது.
கான்கிரீட் ஜாய்ண்ட்கள் செங்குத்து மற்றும் சுழற்சி இயக்கங்களை கட்டுப்படுத்தும் போது கிடைமட்ட இயக்கத்தை செயல்படுத்துகின்றன மற்றும் கான்கிரீட் கட்டுமானம் வீணாவதை தடுக்கிறது.
இதையும் படியுங்கள்: கான்கிரீட்டில் உள்ள விரிசல்களின் வகைகள்
கன்ஸ்ட்ரக்சன் ஜாய்ண்ட்கள் என்றால் என்ன மற்றும் கட்டுமானத்தில் என்ன வகையான ஜாய்ண்ட்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்வது மற்றும் நீங்கள் விரும்பும் இடத்தில் மட்டுமே விரிசல் ஏற்படுவதை உறுதிசெய்வதில் நல்ல திட்டமிடல் உதவும், இது உங்கள் கான்கிரீட் கட்டமைப்பிற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
கன்ஸ்ட்ரக்சன் ஜாய்ண்ட்கள் வடிவமைக்கவும் குறிப்பிடவும் ஸ்ட்ரக்சுரல் எஞ்சினியரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.