3. காப்பர் பைப்
காப்பர் பைப் அதன் நீடித்து உழைக்கும் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் அழகியல் தோற்றம் காரணமாக பல ஆண்டுகளாகப் ப்ளம்பிங் அமைப்புகளுக்கான பிரபலமான தேர்வாக உள்ளது. காப்பர் பைப்கள் முக்கியமாக இரண்டு வகைகளில் கிடைக்கும்: ரிஜிட் காப்பர் மற்றும் ஃப்ளெக்ஸிபிள் காப்பர்.
காப்பர் பைப்பின் நன்மைகள்
அ) நீண்ட ஆயுள்
காப்பர் பைப்கள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது மற்றும் சரியாக இன்ஸ்டால் செய்யப்பட்டு பராமரிக்கப்படும்போது பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும்.
ஆ) நல்ல வெப்ப எதிர்ப்பு
காப்பர் பைப்களால் அதிக வெப்பநிலைகளைத் தாங்க முடியும் என்பதால், அவை வெந்நீர் சப்ளை பைப்களுக்கு ஏற்றதாகிறது.
இ) அரிமான எதிர்ப்பு
காப்பர் அரிமான எதிர்ப்புத்திறன் கொண்டது என்பதால், மாசு ஏற்படாத சுத்தமான தண்ணீரின் தொடர்ச்சியான ஓட்டத்தை உறுதி செய்கிறது.
ஈ) அழகியல் தோற்றம்
காப்பர் பைப்கள் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பதால், உங்கள் வீட்டிற்கு அழகைச் சேர்க்கிறது.
4. ABS பைப்
ABS (அக்ரிலோனிட்ரைல் பியூட்டாடின் ஸ்டைரீன்) பைப் பொதுவாக நீர் வெளியேற்றம், கழிவு மற்றும் வெண்ட் (DWV) அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது வேதிப்பொருட்களை எதிர்க்கும் திறன் கொண்ட எடை குறைவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் பைப் ஆகும், மேலும் இது அதிக வெப்பநிலைகளைக் கையாளக்கூடியதாகும்.
ABS பைப்பின் நன்மைகள்
அ) குறைவான விலை
ABS பைப் விலை குறைவானதென்பதால், வீட்டு ப்ளம்பிங் திட்டங்களுக்கு பிரபலமான தேர்வாக உள்ளது.
ஆ) வேதிப்பொருள் எதிர்ப்பு
ABS பைப் வேதிப்பொருட்களுக்கு எதிராக அதிக எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருப்பதால், நீர் வெளியேற்றம் மற்றும் கழிவு அமைப்புகள் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு இது ஏற்றதாகிறது.
இ) இரைச்சல் குறைப்பு
ABS பைப் நன்றாக சத்தத்தைக் குறைக்கக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது, நீர் ஓட்டத்தால் ஏற்படும் இரைச்சலைக் குறைத்து, ஒட்டுமொத்த சௌகரியத்தை மேம்படுத்துகிறது.
ஈ) எளிதான இன்ஸ்டலேஷன்
ABS பைப் எடை குறைவானது மற்றும் எளிதாக வெட்டக்கூடியது என்பதால், இன்ஸ்டலேஷனை விரைவானதாகவும் நேரடியானதாகவும் ஆக்குகிறது.
5. ஃப்ளெக்ஸி பைப்
ஃப்ளெக்ஸிபிள் பிரைடட் சப்ளை லைன் என்றும் அழைக்கப்படும் ஃப்ளெக்ஸி பைப், பொதுவாக ஃபாசெட்கள் மற்றும் டாய்லெட்கள் போன்ற ஃபிக்ஸ்சர்களைப் பிரதான தண்ணீர் சப்ளையுடன் இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது வலுவூட்டப்பட்ட ரப்பர் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனதாகும் மற்றும் ஃப்ளெக்ஸிபிளாக இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இன்ஸ்டலேஷன் மற்றும் இணைப்பு எளிதாக உள்ளது.
ஃப்ளெக்ஸி பைப்பின் நன்மைகள்
அ) வளையும் தன்மை
ஃப்ளெக்ஸி பைப்கள் அதிகம் வளையக்கூடியவை என்பதால், குறுகலான இடங்களில் மற்றும் மூலைகளில் அவற்றை எளிதாக இன்ஸ்டால் செய்ய முடியும்.
ஆ) கசிவு எதிர்ப்பு
ஃப்ளெக்ஸி பைப்களின் பிரைடட் வடிவமைப்பு கூடுதல் வலிமையை வழங்குகிறது மற்றும் கசிவுகள் அல்லது வெடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
இ) விரைவான இன்ஸ்டலேஷன்
ஃப்ளெக்ஸி பைப்கள் முன்கூட்டி இணைக்கப்பட்டுள்ள ஃபிட்டிங்ஸுடன் வருகின்றன, இது இன்ஸ்டலேஷனை விரைவானதாகவும் சிக்கலற்றதாகவும் ஆக்குகிறது.
ஈ) பொருந்தும் தன்மை
ஃப்ளெக்ஸி பைப்கள் பல்வேறு ப்ளம்பிங் ஃபிக்ஸ்சர்களுடன் பொருந்தக்கூடியதாகும் மற்றும் வீட்டு பயன்பாடுகளுக்கும் வணிக பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம்.
6. கால்வனைஸ்டு ஸ்டீல் பைப் மற்றும் காஸ்ட் அயர்ன் பைப்
கால்வனைஸ்டு ஸ்டீல் பைப் மற்றும் காஸ்ட் அயர்ன் பைப் என்பது ஒரு காலத்தில் ப்ளம்பிங் அமைப்புகளுக்கான பிரபலமான தேர்வுகள் ஆகும், ஆனால் காலப்போக்கில் அவற்றின் பயன்பாடு குறைந்தது. எனினும், அவற்றை இன்னும் சில பழைய வீடுகளில் காணலாம்.
அ) கால்வனைஸ்டு ஸ்டீல் பைப்
கால்வனைஸ்டு ஸ்டீல் பைப்கள் என்பது அரிமானத்திற்கு எதிராகப் பாதுகாப்பதற்காக ஜிங்க் லேயர் பூசப்பட்ட ஸ்டீல் பைப்கள் ஆகும். அவை பொதுவாக தண்ணீர் சப்ளைப் பைப்களில் மற்றும் வெளிப்புற ப்ளம்பிங் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
1) அரிமான எதிர்ப்பு
ஜிங்க் பூச்சு கொஞ்சம் அரிமான எதிர்ப்பு திறனை வழங்கி, பைப்பின் ஆயுளை அதிகரிக்கிறது.
2) உறுதியான கட்டுமானம்
கால்வனைஸ்டு ஸ்டீல் பைப்கள் உறுதியானவை ஆகும், மேலும் அவற்றால் உயர் அழுத்த தண்ணீர் சப்ளை அமைப்புகளைக் கையாள முடியும்.
ஆ) காஸ்ட் அயர்ன் பைப்
காஸ்ட் அயர்ன் பைப்கள் பழைய வீடுகளில் வடிகால் மற்றும் கழிவு அமைப்புகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அவை நீடித்து உழைக்கக்கூடியவை மற்றும் அதிகமான பாரத்தைத் தாங்கக்கூடியவை என்பதால், செங்குத்தாக வைப்பதற்கு ஏற்றவை ஆகும்.
1) நீடித்து உழைக்கும் தன்மை
காஸ்ட் அயர்ன் பைப்கள் பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.
2) சவுண்ட் இன்சுலேஷன்
காஸ்ட் அயர்ன் பைப்கள் நல்ல சவுண்ட் இன்சுலேஷன் வழங்குகிறது, பைப்களில் ஓடும் தண்ணீரின் சத்தத்தைக் குறைக்கிறது.
7. பாலிப்யூடிலின் பைப்கள்
1970-கள் முதல் 1990-கள் வரை வீட்டு ப்ளம்பிங்கிற்கு பாலிப்யூடிலின் பைப்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், கசிவுகள் மற்றும் உடைப்புகள் போன்ற பிரச்சனைகள் காரணமாக, அவை பயனற்றதாகி, இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பாலிப்யூடிலின் பைப்கள் பாலிப்யூடிலின் என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் ரெசினிலிருந்து தயாரிக்கப்பட்டன மற்றும் தண்ணீர் சப்ளை மற்றும் டிஸ்ட்ரிப்யூஷனுக்கு பயன்படுத்தப்பட்டன.
பாலிப்யூடிலின் பைப்களின் நன்மைகள்
அ) குறைவான விலை
அந்த காலத்தில் இருந்த மற்ற மெட்டீரியல்களுடன் ஒப்பிடும்போது பாலிப்யூடிலின் பைப்கள் விலை குறைவானவை ஆகும்.
ஆ) வளையும் தன்மை
அவற்றின் வளையும் தன்மை காரணமாக அவற்றை எளிதாக இன்ஸ்டால் செய்யலாம், இது கூடுதல் ஃபிட்டிங்கிற்கான தேவையைக் குறைக்கிறது.
இ) அரிமான எதிர்ப்பு
பாலிப்யூடிலின் பைப்கள் அரிக்காது மற்றும் சுத்தமான நீர் ஓட்டத்தை வழங்குகிறது.
எனினும், பாலிப்யூடிலின் பைப்களில் கசிவுகள் மற்றும் உடைப்புகள் ஏற்படும் வரலாறு உள்ளதைக் கருத்தில் கொள்வது முக்கியமாகும், இதனால் தான் அவை ப்ளம்பிங் அமைப்புகளுக்கான சாத்தியமான ஆப்ஷனாக இனி கருதப்படுவதில்லை.
8. கருப்பு இரும்பு பைப்கள்
கருப்பு ஸ்டீல் பைப்கள் என்றும் அழைக்கப்படும் கருப்பு இரும்பு பைப்கள், முக்கியமாக எரிவாயு விநியோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. அவை ஸ்டீல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு கருப்பு அயர்ன் ஆக்ஸைடு பாதுகாப்பு லேயர் பூசப்படுகிறது.
கருப்பு இரும்பு பைப்
அ) வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை
கருப்பு இரும்பு பைப்கள் வலிமையானவை மற்றும் நீடித்து உழைக்கக்கூடியவை ஆகும், மேலும் இவை அதிக அழுத்தங்களையும் பாரங்களையும் தாங்கும் திறன் கொண்டவை ஆகும்.
ஆ) அரிமான எதிர்ப்புத்திறன் கொண்டது
கருப்பு அயர்ன் ஆக்ஸைடு பூச்சு அரிமான எதிர்ப்புத்திறனை வழங்குகிறது.
இ) எரிவாயு விநியோகத்திற்கு ஏற்றது
இவை பொதுவாக அவற்றின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறன் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
எரிவாயு விநியோகத்திற்கு கருப்பு இரும்பு பைப்கள் நம்பகமான ஆப்ஷன் என்றாலும், காப்பர் அல்லது PVC போன்ற மெட்டீரியல்களுடன் ஒப்பிடும்போது அரிமானம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அவை தண்ணீர் சப்ளை அமைப்புகளில் பயன்படுத்தப்படுவதில்லை.