வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


வீடு கட்டுமான நிலைகள்

உங்கள் வீட்டைக் கட்டுவது என்பது உங்கள் வாழ்வின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாகும். உங்கள் வீடு தன் உங்கள் அடையாளம். அதனால் தான் உங்கள் வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு அடியிலும் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பது முக்கியமாகும். உங்களின் வீடு கட்டும் பயணத்தின் பல்வேறு கட்டங்களை அறிந்திருப்பது முக்கியமாகும், எனவே, உங்கள் புது வீட்டின் கட்டுமானத்தை நீங்கள் திட்டமிடலாம் மற்றும் கண்காணிக்கலாம்

logo

Step No.1

உங்கள் வீட்டைக் கட்டுவதற்கான முதல் அடி, ஒரு வலுவான மற்றும் திடமான அடித்தளத்தை அமைப்பதாகும். முதலில், மனையிடத்திலிருந்து பாறைகள் மற்றும் சிதிலங்கள் அகற்றப்படும். தோண்டத் துவங்குவதற்கு முன்பு, அமைவிடத்திட்ட வரைபடக் குறியிடல்கள் திட்டத்தின் படி இருப்பதை உறுதி செய்யவும். உங்களின் கட்டுமானக் குழு மனையிடத்தை மட்டம் செய்து, அடித்தளம் இடுவதற்காகத் துளைகள் மற்றும் குழிகளைத் தோண்டுவார்கள்.

கான்கிரீட் ஊற்றப்பட்ட பின்னர், அது நன்றாகச் செட் ஆவதற்காக விட்டுவிட்டு, பின்னர் முழுமையாகத் தண்ணீர் ஊற்றப்பட வேண்டும். தண்ணீர் ஊற்றிய பின்னர், நீர்காப்பு மற்றும் கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட் செய்வது நல்லது. அல்ட்ராடெக் ILW+ ஓதத்தடுப்புப் பூச்சிற்கு ஏற்றது. பின்னர், அடித்தளச் சுவர்களைச் சுற்றியுள்ள சுவர்களை உங்கள் குழு மண்ணால் மீண்டும் நிரப்ப வேண்டும்.

Step No.2

அடித்தளம் செட் ஆன பின்னர், வீட்டின் அமைப்பை உருவாக்குவது அடுத்த படிநிலை ஆகும். சன்னல்கள் மற்றும் கதவுகளுடன் சேர்த்துப் ப்லிந்த்கள், பீம்கள், தூண்கள், சுவர்கள், கூரை அடுக்குகள் உள்ளிட்டவற்றை நிறுவுவது இதில் அடங்கும். அறைகள் பிரிக்கப்படும், இது புதிதாகக் கட்டப்பட்ட உங்களுடைய வீடு எப்படித் தோற்றமளிக்கும் என்பதைச் சரியாகக் காட்டும். வீட்டைச் சுற்றி உள்ள பீம்கள் மற்றும் தூண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அவை தான் கட்டமைப்பின் பெரும்பாலான சுமையைச் சுமக்கவுள்ளன. இது தான் கட்டுமானத்தின் மிக முக்கியமான கட்டம், இது தான் உங்கள் வீட்டின் வலிமை மற்றும் கட்டமைப்பை முடிவு செய்கிறது. எனவே, உங்கள் புது வீட்டின் கட்டுமானத்திற்கு மேற்பார்வையிடுதல் மிகவும் முக்கியமாகும்.

Step No.3

உங்கள் வீட்டின் கான்கிரீட் கட்டமைப்பு தயாரான பின்னர், நீங்கள் குழாய் மற்றும் மின்சார அமைப்புகளை நிறுவும் வேலையைத் தொடங்கலாம். உள்ளே நுழைந்த பின்னர், மின்சாரப் பலகைகள் மற்றும் ஸ்விட்சுகள் உங்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யவும். மாசுபடுதலைத் தவிர்ப்பதற்காகக் கழிவுநீர் குழாய் எப்போதும் குடிநீர் குழாய்க்குக் கீழே இருக்க வேண்டும். மறைவடக்க மின் வேலைப்பாட்டிற்கு, பிளாஸ்டர் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு வயர்களுடன்கூடிய PVC குழாய்கள் சுவர்களுக்குள் அமைக்கப்படுகின்றன. இது அழகியல் ரீதியாகக் கவர்ச்சியாக மட்டுமில்லாமல், ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் எலிகள் போன்றவற்றிடமிருந்து வயர்களைப் பாதுகாக்கிறது. இது முடிவடைந்ததும், சுவர்களில் பிளாஸ்டர் பூசப்படும்.

Step No.4

சுவர்களில் இறுதி பூச்சு பூசப்பட்டவுடன், கதவுகள் மற்றும் சன்னல்களை நிறுவப்பட வேண்டும். சன்னல்கள் மற்றும் கதவுகள் வெப்பக்காப்பு மற்றும் காற்றோட்டத்தை வழங்குகிறது, எனவே, பயன்படுத்த வேண்டிய சரியான பொருட்கள் குறித்து உங்களின் ஒப்பந்ததாரரிடம் பேசவும்.

Step No.5

இறுதியாக, உங்களின் கட்டுமானக் குழு டைல்களைப் பொருத்துவார்கள், மின்சாரப் பலகைகள், கேபினட்கள், சமையலறை கவுண்டர்டாப்கள், முதலியனவற்றை நிறுவுவார்கள். அனைத்தும் பொருத்தப்பட்டவுடன், உங்கள் வீடு பெயிண்ட் செய்யப்படலாம் அல்லது வால்பேப்பர்களுடன் சேர்த்துப் பிளாஸ்டர் பூசப்படலாம். உங்கள் வீட்டுக்கான இறுதி அலங்காரம் குறித்து உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவும்.

கட்டுரையைப் பகிரவும் :


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....