தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj


கான்கிரீட்டின் இறுக்க வலிமை குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்

கட்டுமானத்தில், கான்கிரீட்டின் இறுக்க வலிமை முக்கியமான அளவுகோலாக இருந்து, அச்சு பாரங்களைத் தாங்கும் மெட்டீரியலின் திறனை அளவிடுகிறது. கான்கிரீட்டின் இறுக்க வலிமை குறித்த இந்த முக்கியமான ஆய்வு, கட்டமைப்பு உறுதியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், நீடித்து உழைக்கும் மற்றும் மீள்திறன் கொண்ட கட்டிடங்களுக்கான ஃபவுண்டேஷனையும் அமைக்கிறது.

Share:


  இறுக்க வலிமை ஒரு கான்கிரீட்டின் அச்சு பாரங்களைத் தாங்கும் திறனை மதிப்பிட்டு, கட்டமைப்பு மீள்திறனை உறுதி செய்கிறது.

 

  ஆன்-சைட் தரக் கட்டுப்பாட்டிற்கு முக்கியமான சோதனை முறைகளை, தாக்கம், சாத்தியம் மற்றும் துல்லியம் அடிப்படையில் திட்ட மேலாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

 

  நகர்ப்புற மேம்பாட்டில் கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இறுக்க வலிமையைத் தீர்மானிக்க துல்லியமான கணக்கீடுகளையே பொறியாளர்கள் சார்ந்திருப்பார்கள்.


கான்கிரீட்டின் இறுக்க வலிமையைச் சரிபார்ப்பது கட்டுமான திட்டத்தில் ஒரு முக்கியமான படிநிலை ஆகும். கான்கிரீட்டின் மீள்திறனை ஆராய்வது மற்றொரு முக்கியமான அம்சமாகும், ஏனெனில் அது கான்கிரீட் கட்டமைப்பின் நீண்ட ஆயுள் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையைக் கணிசமாகப் பாதிக்கிறது. கான்கிரீட்டின் வலிமையைச் சோதனைச் செய்யும் முறைகளைத் தேர்வு செய்யும்போது, திட்ட மேலாளர் தங்களுடைய அட்டவணையில் ஒவ்வொரு முறையின் தாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். கான்கிரீட்டின் சில இறுக்க வலிமை சோதனைகளை சைட்டிலேயே மேற்கொள்ளலாம், அதே சமயம் மற்றவற்றில் தரவுகளைப் பெறுவதற்கு ஆய்வக வசதிகள் தேவைப்படும் மற்றும் அதிக நேரம் எடுக்கும்.

 

நேரம் எடுப்பதுடன் சேர்த்து, சோதனை முறைகளின் துல்லியத்தையும் மேலாளர்க் கண்காணிக்க வேண்டும். இது கான்கிரீட் கட்டமைப்பின் தரத்தை நேரடியாகப் பாதிப்பதால், சோதனை முறையைத் தீர்மானிப்பதில் இது ஒரு முக்கியமான அளவுருவாகும்.


கான்கிரீட்டின் இறுக்க வலிமை என்பதின் விளக்கம்

கெட்டியான கான்கிரீட்டின் மீள்திறனை அளவிடும் கான்கிரீட் இறுக்க சோதனை, கான்கிரீட்டின் இறுக்க வலிமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. கான்கிரீட்டை இறுக்கும் பாரங்களைத் தாங்கும் கான்கிரீட்டின் திறனை ஆராய்வதன் மூலம் இது அளவிடப்படுகிறது.


கான்கிரீட்டின் வலிமை சோதனையின் முக்கியத்துவம்

சைட்டில் உருவாக்கப்பட்ட கான்கிரீட் கலவை பணிக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான வலிமையைப் பூர்த்தி செய்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக கான்கிரீட்டின் இறுக்க வலிமையைச் சரிபார்ப்பது முக்கியமாகும்.

 

கான்கிரீட் இறுக்க சோதனைகள் மூலம் வலிமை, மாறாத் தன்மை, யூனிட் எடை, காற்று உள்ளடக்கம் மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகள் அளவிடப்படுவதால் கான்கிரீட்டின் பண்புகள் குறித்த யோசனையைத் திட்ட மேலாளர் பெறுகிறார். இந்த சோதனைகளின் மாறாத செயல்திறன் அதன் நீண்ட கால செயல்திறனைப் பாதிக்கக்கூடிய மாற்றங்களைக் கண்டறிய மேலாளருக்கு உதவலாம்.


கான்கிரீட்டின் இறுக்க வலிமை சோதனை முறைகள்

கான்கிரீட்டின் இறுக்க வலிமையைச் சரிபார்க்க மற்ற பல முறைகள் மற்றும் சோதனைகள் உள்ளன. சில அணுகுமுறைகளைக் காண்போம்:


1) ரீபவுண்ட் ஹேமர் அல்லது ஷ்மிட் ஹேமர்



இந்த முறையில், கான்கிரீட்டின் மேற்பரப்பிற்குள் செலுத்துவதற்காக, ஸ்பிரிங் விடுவிப்பு முறை மூலம் ஒரு சுத்தியல் கொண்டு ப்ளஞ்சர் அடிக்கப்படுகிறது. சுத்தியல் மற்றும் கான்கிரீட் மேற்பரப்பிற்கு இடையிலான ரீபவுண்ட் தொலைவிற்கு 10 மற்றும் 100-க்கு இடைப்பட்ட மதிப்பு வழங்கப்படுகிறது. பிறகு கான்கிரீட்டின் வலிமை இந்த அளவீட்டோடு தொடர்புடையதாகிறது.

 

கான்கிரீட்டின் இறுக்க வலிமையைப் பரிசோதிக்கும் இந்த முறை ஒப்பீட்டளவில் பயன்படுத்த எளிதானதாகும். எனினும், துல்லியமான முடிவுகளுக்கு கோர் மாதிரிகளைப் பயன்படுத்தி முன் அளவுத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். எனினும், இதை நேரடியாக ஆன்-சைட்டில் செய்யலாம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த உதவினாலும், மேற்பரப்பு நிலைமைகள் அல்லது மற்ற காரணிகளால் முடிவுகள் தவறாகலாம்.


2) ஊடுருவல் எதிர்ப்புத்திறன் சோதனை

ஊடுருவல் எதிர்ப்புத்திறன் சோதனையைச் செய்து முடிக்க, ஒரு சிறிய ஊசி அல்லது ப்ரோப் ஒரு சாதனம் மூலமாக கான்கிரீட்டின் மேற்பரப்பிற்குள் செலுத்த வேண்டும். இன்-ப்ளேஸ் கான்கிரீட்டில் வலிமை, மேற்பரப்பை துளைக்க தேவையான சக்தி மற்றும் துளையின் ஆழத்துடன் தொடர்புடையதாகும்.

 

கான்கிரீட்டின் இறுக்க வலிமையைச் சோதனை செய்யும் இந்த முறைக்கு, துல்லியமான முடிவுகளை வழங்குவதற்காக பல கான்கிரீட் மாதிரிகளைப் பயன்படுத்தி முன் அளவுத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இது ஆன்-சைட்டில் எளிதாக மேற்கொள்ளப்பட்டாலும், மேற்பரப்பு நிலைமைகளை மற்றும் பயன்படுத்தப்படும் அக்ரிகேட்களின் வடிவங்களால் அளவீடுகள் பாதிக்கப்படுகிறது.


3) அல்ட்ராசோனிக் பல்ஸ் வெலாசிட்டி



இந்த முறை ஸ்லாப் முழுவதுமான அதிர்வு ஆற்றல் துடிப்பின் வேகத்தைக் கணக்கிடுகிறது. இந்த ஆற்றல் எவ்வளவு எளிதாக ஸ்லாபில் கடக்கிறதென்பது, கான்கிரீட்டின் அடர்த்தி, மீள்திறன் மற்றும் உருமாற்றம் அல்லது அழுத்தத்தை எதிர்க்கும் திறன் குறித்த தரவுகளை வழங்குகிறது. பிறகு இந்த தரவுகளைப் பயன்படுத்தி ஸ்லாபின் வலிமைத் தீர்மானிக்கப்படுகிறது.

 

இந்த நுட்பம் கான்கிரீட்டைச் சிதைக்கக்கூடியதல்ல, மேலும் இதனால் கான்கிரீட்டில் உள்ள விரிசல்கள் மற்றும் வெடிப்புகள் போன்ற பழுதுகளை அடையாளம் காண முடியும். எனினும், கான்கிரீட் கூறுகளின் வலுவூட்டல்கள், அக்ரிகேட்கள் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் முடிவுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன மற்றும் பல மாதிரிகளைப் பயன்படுத்தி முன் அளவுத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.


4) புல்அவுட் சோதனை

ஒரு இடத்தில் செருகப்பட்ட அல்லது காஸ்ட் செய்யப்பட்ட ஒரு உலோகக் கம்பியைப் பயன்படுத்தி கான்கிரீட்டை வெளியே இழுப்பதே இந்த சோதனையின் பின்னால் உள்ள அடிப்படை யோசனை ஆகும். கான்கிரீட்டின் இறுக்க வலிமையானது இழுக்கப்பட்ட கூம்பு வடிவத்துடனும், கான்கிரீட்டை வெளியே எடுக்கத் தேவைப்பட்ட ஆற்றலுடனும் தொடர்புடையதாகும்.

 

இந்த முறையைப் பழைய மற்றும் புதிய கட்டுமான சைட்களில் ஒரே மாதிரியாக மேற்கொள்ளலாம் என்றபோதிலும், இதில் கான்கிரீட் சேதப்படுத்தப்படும். கான்கிரீட்டின் இறுக்க வலிமைச் சோதனையில் சரியான முடிவுகளை வழங்க அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் தேவைப்படும்.


5) ட்ரில்டு கோர்

இந்த முறையில், ஊற்றப்படும் இடம் சிலிண்டர் வடிவ அச்சுகளால் கவர் செய்யப்பட்டிருக்கும். ஸ்லாபில் உள்ள இந்த அச்சுகள், புதிய கான்கிரீட் கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த மாதிரிகள் திடமானதும் வலிமைக்காக நீக்கப்பட்டு அழுத்தப்படுகின்றன.

 

களத்தில் கியூர் செய்யப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடும்போது, இன்-ப்ளேஸ் ஸ்லாபின் அதே கியூரிங் சூழ்நிலைகளுக்கு இந்த கான்கிரீட் உட்படுத்தப்பட்டுள்ளதால், இது மிகவும் துல்லியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த வகை கட்டுமானத்தில் ஸ்லாபின் கட்டமைப்பு நிலைத்தன்மையில் சமரசம் செய்யப்படுகிறது மற்றும் ஆய்வகத்திலிருந்து தரவுகள் பெறப்பட வேண்டும். அதன் பிறகு, அந்த ஓட்டைகள் சரி செய்யப்பட வேண்டும்.


6) காஸ்ட்-இன்-ப்ளேஸ் சிலிண்டர்கள்

இந்த முறையில், கோர் ட்ரில் பயன்படுத்தி ஸ்லாப் மேலே இருந்து கெட்டியான கான்கிரீட் நீக்கப்படும். கான்கிரீட்டின் வலிமையை அளவிடுவதற்காக, இந்த மாதிரிகள் அடுத்தடுத்து ஒரு இயந்திரத்தில் கெட்டியாக்கப்படும்.

 

வலிமைக்காகச் சோதனைச் செய்யப்பட்ட கான்கிரீட், இன்-ப்ளேஸ் ஸ்லாபின் அதே வெப்ப வரலாறு மற்றும் கியூரிங் சூழ்நிலைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதால், களத்தில் கியூர் செய்யப்பட்ட மாடல்களை விட இந்த மாதிரிகள் மிகவும் துல்லியமானதாகக் கருதப்படும். எனினும், கான்கிரீட்டின் இறுக்க வலிமையைச் சரிபார்க்கும் இந்த முறை, அழிவுகரமானதுமாகும், மேலும் தரவுகளை அளவிடுவதற்கு ஒரு ஆய்வகம் தேவைப்படும்.


7) வயர்லெஸ் மெச்சுரிட்டி சென்சார்கள்

இந்த முறை, கான்கிரீட் ஹைட்ரேஷனின் வெப்பநிலை வரலாறு கான்கிரீட்டின் தரம் மற்றும் வலிமையுடன் தொடர்புடையது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஊற்றுவதற்கு முன், ரீபாரில் வயர்லெஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டு, கான்கிரீட் ஃபார்ம்வர்க்கிற்குள் செருகப்படும்.

 

சென்சார் வெப்பநிலை தகவல்களைச் சேகரித்து, வயர்லெஸ் முறையில் எதாவது ஸ்மார் டிவைஸுக்கு அனுப்பி, செயலியில் சேமித்து வைக்கப்படும். இந்த தரவுகளின் அடிப்படையில், செயலியில் மெச்சுரிட்டி ஈக்வேஷன் செட் செய்யப்பட்டு, கான்கிரீட்டின் இறுக்க வலிமை கணக்கிடப்படுகிறது.


கான்கிரீட்டின் இறுக்க வலிமை சோதனைக்கான கணக்கீடு

கான்கிரீட்டின் இறுக்க வலிமையைப் புரிந்துகொள்வதில், வலிமை சோதனைக்கான கணக்கீடு முக்கியமானதாகும். இந்த செயல்முறையில், கான்கிரீட் சிலிண்டரை உடைப்பதற்கு தேவைப்படும் ஆற்றலைத் தீர்மானிப்பது அடங்கும், இதன் விளைவாகக் இறுக்க வலிமை மதிப்பு கிடைக்கும். கட்டமைப்புகள் பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக, மெட்டீரியலின் அழுத்தத்தைத் தாங்கும் திறனை மதிப்பிடுவதற்காக துல்லியமான கணித ஃபார்முலாக்களை பொறியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

 

நகரங்கள் வளரும்போது, இந்த வலிமை மதிப்புகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவது கட்டமைப்புகளை பாதுகாப்பானதாகவும், நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு முக்கியமானதாகும். பொறியாளர்கள் மற்றும் பில்டர்கள், நாடு முழுவதும் உள்ள கட்டிடங்கள் அவற்றின் வலிமையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சூழ்நிலைகளைத் தாங்குவதை உறுதி செய்வதற்காக இந்த துல்லியமான கணக்கீடுகளைச் சார்ந்திருக்கிறார்கள்.



கான்கிரீட்டின் இறுக்க வலிமை சோதனையானது, வடிவமைப்பாளர்கள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு பொறியாளர்களால் மிகவும் மதிக்கப்படும் பண்பு ஆகும். அதே நேரத்தில், கான்கிரீட்டின் மீள்திறன் வலிமை என்பது நீண்ட காலத்திற்கு கட்டமைப்புகளின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஃப்ளெக்ஸிபிலிட்டியைக் கணிசமாகப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான அளவுருவாகும். நீங்கள் தேர்வு செய்யும் முறை உங்களுக்குத் தெரிந்த மற்றும் நீங்கள் நன்றாக நம்பும் எளிமையான ஒன்றாக இருக்கலாம். எனினும், துல்லியம், எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் அழிவுறும் தன்மை போன்ற அளவுருக்களைக் கருத்தில் கொள்வது, முடிந்த வரை மிகவும் துல்லியமான முடிவுகளைப் பெறுவதற்கு முக்கியமானதாகும். எனினும், கான்கிரீட்டின் இறுக்க வலிமையைப் பாதிக்கக்கூடியக் காரணிகள் குறித்தத் தகவல்களைப் படிப்பது மற்றும் பெறுவது, தகவலறிந்த முடிவெடுப்பதற்கு உங்களுக்கு உதவுகிறது.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....